KRISHNA’S DIPLOMACY J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர்
ராஜ தந்திரம் – நங்கநல்லூர் J K SIVAN
குழந்தைகளே நீங்கள் அமைதியாக எல்லோரும் இங்கே கதை கேட்க வந்து உட்கார்ந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இன்றும் நீங்கள் கேட்டது போல் கிருஷ்ணன் கதை தான் சொல்லப்போகிறேன். அதுவும் உங்களுக்கு பிடித்த மஹாபாரத யுத்தம் சம்பந்தப்பட்ட விஷயம். திருப்தியா. இதோ கதைக்குள் செல்வோமா?
கௌரவர்களின் ராஜா துரியோதனன் அரண்மனையில் ஒரே களேபரம். எல்லாருமே அவர்கள் அபிப்ராயத்தை சொல்லி விவாதிக்கிறார்கள். துர்யோதனன் ராஜ சபை நமது சட்டசபை மாதிரி அமளி துமளியாக உரத்த குரலில் சப்தங்களோடு ஒலித்தது. ஆமாம் ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்னால் நம்முடைய பார்லிமென்டின் தாத்தா அங்கே இருந்திருக்கிறது.
ஹஸ்தினாபுர மக்களுக்கு விஷயம் போய் சேர்ந்து எல்லோருக்கும் கிருஷ்ணன் துவாரகையிலிருந்து பாண்டவர்களுக்காக சமாதான தூது பேச வந்திருக்கிறான். அவர்கள் உரிமையை யுத்தமில்லாமலே, சமாதானமாக பெற முயற்சிக்கிறான். ஆனால் பிரச்னை தீரவில்லை. யுத்தம் ஒன்று தான் முடிவு என்று ஆகி விட்டது. ஆகவே கிருஷ்ணன் தூது தோல்வியடைந் தது என்று சொல்லலாமா?
அங்கேதான் சூக்ஷ்மம் இருக்கிறது. கிருஷ்ணன் சமாதான தூதுக்கு வந்தானே தவிர இந்த யுத்தம் நடைபெற வேண்டும் அதில் பாண்டவர்கள் வெற்றி பெற்று தர்மம் நீதி நிலைக்க வேண்டும் என்பது தானே அவன் நோக்கம். அதற்குத்தான் அவன் அவதாரமும் எடுத்தான்.
கிருஷ்ணன் தூது தோல்வியில் முடிந்த உடன் பாண்டவர்கள் ஆவலாக முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் விராட நகருக்கு திரும்புகிறான்.
கிருஷ்ணனின் தேரோட்டி தாருகன் கிருஷ்ணனை நன்றாக அறிந்தவன் அல்லவா? தேரை கடகடவென்று வேகமாக ஓட்டிக்கொண்டே கிருஷ்ணனிடம் பேச்சு கொடுக்கிறான்.
“பிரபு, நீங்கள் துரியோதனன் அரண்மனையில் தங்காமல் விதுரனை முதலில் சந்தித்து அவர் ஆஸ்ரமத்தில் தங்கியதால் கௌரவர்கள் கொந்தளித்துள்ளார்கள் என்பதை கவனித்தேன். நிறைய பேர் இதைப் பற்றி பேசுவதையும் கேட்டேன். கௌரவர்கள் இதை சபையில் உங்களிடம் வெளிப்படுத்தினார்களா?
கிருஷ்ணன் முகத்தில் புன்னகை.
”ஆம் தாருகா, நான் எதிர்பார்த்தபடியே அவர்களுக்கு என் செய்கையில் ரொம்ப ஆத்திரம்”
”நீங்கள் ஏன் அவ்வாறு செயதீர்கள்?. உங்களுக்கு தான் துரியோதனன் அவன் அரண்மனையிலேயே வசதியாக தங்க நல்ல ஏற்பாடுகள் செய்திருந்தானே.
”தாருகா, நான் யோசிக்காமல் எதையாவது செய்வேனா?
”என்ன காரணம் பிரபு,எனக்கும் சொல்லுங்களேன்”
”ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் விஷயம் தான் அது”
“ப்ரபு , நான் உங்களைப் போல் ஞானியோ ராஜ தந்திரியோ இல்லையே. எனக்கும் புரியும்படியாகவே சொல்லலாமே.”
“சில காரியங்கள் எப்போதும் தக்க காலம் வரும்போது தான் புரியும். ஆகவே நீயும் பொறுத்திரு, காத்திரு”
துரியோதனன் ராஜசபையில் கிருஷ்ணனின் சமாதான தூது தோல்வி அடைந்து கிருஷ்ணன் சென்ற பிறகு காரசாரமாக விவாதம் தொடர்ந்தது என்று சொன்னேன் அல்லவா?.
துரியோதனன் எப்போதுமே எல்லோரையும் விட அதிக பொறாமையும் சந்தேகமும் கொண்டவன் ஆயிற்றே. அதிலும் கிருஷ்ணன் விதுரனின் எளிய குடிலில் ஒரு இரவு தங்கி அவனுடன் இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தான் என்று ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்டான் .
வழக்கம் போலவே அதனால் ரெண்டும் ரெண்டும் நாலு அல்ல நாப்பது என்று கணக்கு போட்டு விதுரன் பாண்டவர் களுக்கு எப்படி யெல்லாம் வெற்றி கிடைக்க வழியோ அதெல்லாம் கிருஷ்ணனுடன் பேசி முடித்து விட்டான் என்று சந்தேகப்பட்டான். விதுரன் பச்சை துரோகி என்ற பட்டம் கொடுத்தான்.
பாண்டவருடன் யுத்தம் நிச்சயம் என்று தான் ஆகிவிட்டதே!!. யார் யார் என்ன என்ன பதவியில் சேனாதிபதிகளாக, வியூக தலைமை மஹா ரதர்களோ எந்தந்தபகுதிக்கு யார் யார் தலைவர், மொத்தத்தில் தலைமை சேனாதிபதியின் அறிவுரைப்படி எப்படி போர் புரிய வேண்டும்? என்று தலைவர்களின் காரசாரமான விவாதம் நடந்தது.
துரியோதனன் கடும் கோபத்தில் இருந்தான் விதுரன் மேல். துரோணர், கர்ணன், பீஷ்மன் கிருபர் ஆகியோருக் கெல்லாம் யுத்தத்தில் தலைமைப் பதவி அதிகாரம் அங்கீகாரம் நியமனம் நடந்து கொண்டிருந்தது.
பிதாமகர் பீஷ்மரின் குரல் உரக்க ஒலித்தது. ” துரியோதனா, விதுரரை விட்டுவிட்டாயே? அவர் பராக்ரமம் பிரசித்தம். மஹா வீரர். அவர் தலைமையை அறிவுரைகளை யுத்தத்தில் சரியானபடி பயன்படுத்திக் கொள். மிகவும் உங்களுக்கு உதவும்” என்று பீஷ்மர் விதுரரின் பராக்கிரமத்தை விவரித்தார்.
“தாத்தா, போதும், நிறுத்துங்கள்”. விதுரருக்கு எந்த தலைமை பொறுப்பும் கிடையாது.’
இதைக்கேட்ட விதுரர் கோபம் கொண்டார். எவ்வளவு தான் அவமரியாதையை அலக்ஷ்யத்தை , சபையில் எல்லோர் எதிரிலும் ஒருவர் தனக்கு நேர்ந்த அவமதிப்பை பொறுத்துக் கொள்ள முடியும்.
”துரியோதனா, என்னைப் புண்படுத்துவதில் உனக்கு தனி சந்தோஷம் எப்போதுமே. வரப்போகும் யுத்தத்தில் நீ கொடுத்தாலும் எந்த பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. என்னையும் என் வீரத்தையும் நன்றி யுணர்ச்சியும் அவமானபடுத்திய உனக்காக நான் போர் புரிய மாட்டேன். இது சத்யம்”
விதுரன் ராஜசபையில் எழுந்து சபதம் செய்த போது சபையில் எல்லோரும் திடுக்கிட்டார்கள். தொடர்ந்து ‘படார் ”என்று பெரிதாக ஒரு சப்தம் கேட்டது. தன்னுடைய பெரிய வில்லையும் அங்கேயே உடைத்து கீழே எறிந்து விட்டு விதுரன் வெளியே நடந்தார்.
பீஷ்மர் அதிர்ச்சியில் துடித்துப் போனார்.
“ முட்டாளே துரியோதனா, என்ன காரியம் செய்துவிட்டாய்? எவ்வளவு புரிய நஷ்டத்தை விலை கொடுத்து வாங்கிவிட்டாய். உன்னுடைய பலத்தில் பெரும்பங்கை உன் அறியாமையால், உன் மடமையால் இழந்துவிட்டாயே.”
”தாத்தா, என்ன சொல்கிறீர்கள் நீங்கள் ?” உறுமினான் துரியோதனன்.
” ஆமாம், நீ முட்டாள் என்று நிரூபித்து விட்டாயே. மாயாவி கிருஷ்ணன் போட்ட திட்டத்தில் வகையாக சிக்கி பாண்டவர் களுக்கு லட்டு மாதிரி உதவி விட்டாயே ” என்றார் பீஷ்மர் .
“என்ன தாத்தா புதிர் போடுகிறீர்கள், கிருஷ்ணன் போட்ட திட்டமா? அது என்ன தாத்தா புதுசாக ஒரு பூதத்தைக் கிளப்பி விடுகிறீர்கள்?”என்றான் துரியோதனன்.
”போதும் நிறுத்துங்கள் தாத்தா, அந்த கிழ விதுரன் போர்பு ரியாவிட்டால் அப்படி என்ன பெரிய நஷ்டம் நமக்கு ?” என்று ஹாஹா என சிரித்தான் கர்ணன்.
ஒரு பழங்கதையை நீங்கள் இப்போது தெரிந்து கொள்வது இப்போது அவசியமாகிவிட்டதே.
மாண்டவ்ய ரிஷி தான் செய்யாத பாபத்திற்கு தர்ம தேவதை தண்டனை கொடுத்தது என்று கோபித்து தர்ம தேவதைக்கே ஒரு சாபமிட்டார்
“தர்ம தேவா, நீ பூமியில் மனிதனாக பிறந்து நீ செய்யாதவற்றுக்கெல்லாம் பழி ஏற்று தவிப்பாயாக”
தர்மதேவதை விதுரனாக பிறந்தான். சிறந்த வீரன், வில் வித்தையில் நிபுணன். அவனை எதிர்கொள்வது மிகவும் கடினம். இதை உணர்ந்த கிருஷ்ணன் துரியோதனனுக்கு விதுரன் மீது சந்தேகம் ஏற்பட விதுரன் வீட்டில் தங்கி அவன் அளித்த உணவை உண்டான். அதனால் கிருஷ்ணன் எதிர்பார்த்தபடியே துரியோதனன் விதுரனை சந்தேகித்து அவன் துரோகி என்று முடிவு கட்டி போரில் அவனுக்கு மரியாதையோ, தலைமை பதவியோ கிடையாது என்று சபையில் அனைவர் முன்னிலையில் அவமதித்தான். விதுரன் தான் ஒரு தவறும் துரோகமும் செய்யாதபோதே இந்த அவச்சொல் அவமரியாதை தனக்கு நேர்ந்ததால் போரில் பங்கேற்க மாட்டேன் என்று சபதம் செய்தார் , எவரும் எதிர்த்து வெல்லமுடியாத வில்லையும் உடைத்து எறிந்தார். அது பாண்டவர்களுக்கு ரொம்பவும் சாதகமாக போய்விட்டது.
இதைத் தான் தாருகனுக்கு கிருஷ்ணன் “காலம் காரணத்தைச் சொல்லும் பொறுத்திரு” என்று சுட்டிக் காட்டினானோ?
”குழந்தைகளே மழை தூத்தல் ஆரம்பித்து விட்டது. வீட்டுக்குப் போங்கள். நாம் அடுத்த கதையில் சந்திப்போம்.” என்று உள்ளே ஓடினார் சிவா தாத்தா. அப்போதெல்லாம் நங்கநல்லூரில் ஒரு சிறு மழை கொஞ்சநேரம் விடாமல் பொழிந்தால் தெருவெல்லாம் வெள்ளம் ஓடும்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;