RAMANAANANDHAM J K SIVAN

ரமணானந்தம் –   நங்கநல்லூர்  J K  SIVAN
ரமணரைச்சுற்றி மனிதர்கள் மட்டுமல்ல  அநேக  விலங்குகளும் பக்ஷிகளும்  கூட  கொஞ்சமும் பயமின்றி சந்தோஷமாக இருப்பதை  பக்தர்கள் பார்த்திருக்கிறார்கள். உலகத்தையும் அதன் ஈர்ப்புகளையும் முற்றிலும் வெறுத்து விட்ட ஆத்மஞானிக்கு இத்தனை உறவுகளா  என்று ஆச்சர்யமாக இருக்கும்.
பல பக்தர்கள் தங்கள் குறையைச் சொல்லி ஆறுதல் கேட்க  வருவார்கள். யாரையும் விரட்ட மாட்டார். அவரவருக்கு தகுந்த உபதேசங்களை அருள்வார்.
ஒருநாள் ஒரு பக்தர்  அழுத முகத்தோடு மகரிஷியை பார்க்க காத்திருந்தார். சந்தர்ப்பம் கிட்டியபோது  மகரிஷி அருகே உட்கார்ந்து குமுறி குமுறி அழுதார்.  பொறுமையாக அவர் அழுது முடிக்க காத்திருந்து மகரிஷி ” என்னை எதற்குபார்க்க வந்தாய்/” என்று கேட்டார். ”என் ஒரே மகன் இறந்து விட்டான் சுவாமி.எனக்கு உங்களிடம் சொல்லி ஆறுதல் கிடைக்கும் என்று தான் வந்தேன்”பகவான் அந்த பக்தர் சொல்லி முடிக்கும் வரை காத்திருந்தார். ”சரி எனக்கு துக்கம், அழுகிறேன் என்கிறாயே, யார் நீ, யாருக்கு அந்த துக்கம் சம்பவித்தது என்று யோசித்தாயா?”அந்த பக்தருக்கு புரியவில்லை. அவர் சோகமும் குறையவில்லை என்பதால் மகரிஷி ”நான் உனக்கு  ஒரு சம்பவம் சொல்கிறேன் கேட்கிறாயா?” என்கிறார் பக்தர் கண்ணைத்துடைத்துக்கொண்டு கைகட்டி தலையாட்டினார். ”இது விசார சாகரம் என்கிற நூலில் இருந்து சொல்கிற சம்பவம்.  ரெண்டு பிரம்மச்சாரிகள்,  நண்பர்கள்.  ராமன், கிருஷ்ணன் என்ற பேர் கொண்டவர்கள்  ஒரே ஊரிலிருந்து  வடதேசம் போகிறார்கள். தங்களுடைய  அப்பா அம்மாவுடைய ஆசிகளோடு அந்த ரெண்டு பெரும் வடக்கே போய்   சரியான குருவிடம் கல்வி கற்று உத்யோகம் செய்து சம்பாதிக்க செல்கிறார்கள். சில காலம் ஓடியது.  ரெண்டு பேரில் ஒருவன் இறந்து விட்டான். மற்றவன் கல்வி கற்று உத்யோகத்தில் பொருள் ஈட்டி சௌகர்யமாக வாழ்ந்திருந்தான்.  அவன் ஒரு நாள் யாரோ ஒரு வியாபாரி தனது சொந்த ஊருக்கு வியாபார விஷயமாக செல்வதை அறிந்து அவனிடம் தனது பெற்றோர்களையும், இறந்து போனவன் பெற்றோர்களையும்  சந்தித்து தான் சந்தோஷமாக இருப்பதையும்  மற்றவன் இறந்து விட்டதையும் தெரிவிக்க கேட்டுக்கொண்டான்.
அந்த வியாபாரி தவறுதலாக  இறந்து போனவன் பெற்றோரிடம் அவர்கள் பையன் நன்றாக சம்பாதித்து சௌக்யமாக இருப்பதாகவும், உயிரோடு இருப்பவன் பெற்றோரிடம் அவர்கள் மகன் இறந்து விட்டததாகவும் சொல்லி விடுகிறான். இதனால் என்ன ஆச்சு என்றால், இறந்து போனவன் பெற்றோர்கள் தங்கள் மகன் வசதியோடு வாழ்கிறான், என்றாவது ஒருநாள் சீக்கிரமே திரும்பி வருவான் என்றும் மகிழ்ந்தார்கள். அதே சமயம், சொல்லி அனுப்பிய  உயிரோடு இருக்கும் ப்ரம்மச்சாரியின் அப்பா அம்மா தங்கள் மகன் இறந்துவிட்ட சேத்தி கேட்டு சோகத்தில் ஆழ்ந்தனர்.  ரெண்டு பெற்றோர்களும் உண்மையில் தங்கள் பிள்ளைகளை நேரில் பார்க்கவில்லை, யாரோ சொன்ன ஒரு செயதி மட்டுமே அவர்களை மகிழ்வித்தும், துக்கத்தில் ஆழ்த்தியும் ஆட்டி படைத்தது.
நாமும் அப்படித்தான் அப்பா. எதையும் நம்பிவிடுகிறோம், மனதில் உணர்ச்சிகளை ஏற்றுக்கொள்கிறோம். அதன் ஆக்கிரமிப்பில் மகிழ்கிறோம், அல்லது வருந்துகிறோம். இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாததாகவும் நினைக்கிறோம்.  மனதை மதிக்காமல் அதன் தாக்கத்தை தவிர்த்து, ஹ்ருதயத்தில் அந்த பிள்ளை இருப்பதை உணர்ந்தோமானால் சதா  ஆனந்தம் தான்.  வெளியே  அந்த  பிள்ளையை பார்க்க வேண்டியதேயில்லை.”
ரமணர் சொன்ன இந்த கதையை உன்னிப்பாக  கேட்டு மனதில் வாங்கிக்கொண்ட அந்த பக்தர் தனது மகன் இறக்காமல் தன்னுள்ளே இருப்பதை அனுபவிக்க தொடங்கினார். மகரிஷியை வணங்கிவிட்டு  ஊருக்கு நடந்தார். 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;