RAJA HARISCHANDRA J K SIVAN

சத்யமேவ ஜெயதே — நங்கநல்லூர் J K SIVAN
”அந்த பயல் கோவிந்தசாமி, அவன் சொல்ற பொய்கள் அனைத்தும் சொல்லி ”நான் சொல்றது உண்மை தான் ஸார் ” என்கிறான். அவன் என்ன பெரிய ஹரிச்சந் திரனா?” என்கிறோம்.
இதிலிருந்து யாரோ ஒருத்தன் ஹரிச்சந்திரன் என்ற பெயரில் இருந்திருக்கிறான். அவன் உண்மை, உண்மை, உண்மை, தவிர எனக்கு வேறெதுவும் எனக்கு தெரியாது என்று சொல்பவனாக இருந்திருக்கிறான் என்று புரிகிறது. அதனால் அவனுக்கு என்ன பலன் விளைந் தது? மேலும் மேலும் கஷ்டங்கள், துயரங்கள். நஷ்டங்கள். இருந்தும் அந்த வைராக்ய புருஷன் உண்மை தான் சத்யம் என்று உணர்ந்தவனாக வைராக்யமாக வாழ்ந்தான். சகலமும் அதனால் இழந்தும் அவன் மனம் தளரவில்லை. அதனால் தான் என்றும் நமது மனதில் ஈடு இணையற்ற சத்யவானாக நினைவிலிருக்கிறான்.எங்களுக்கு சின்ன வயதில் ஹரிச்சந்திரன் கதை சொல்லிக்கொடுத்ததால் இன்னும் ஞாபகம் இருக்கிறது. இக்காலத்தில் அவனைப்பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? அவனைப் போல் பொய்யே பேசாதவன் எவனாவது இருக்கிறானா? இருக்க முடியுமா? அதுவும் கடவுள் தலையிலேயே கல்பூரம் ஏற்றி, கீதைமேல் அடித்து கூசாமல் பொய் சொல்லும் இந்த காலத்தில் ! ஆகவே இன்று அரிச்சந்திரன் பற்றி எல்லோருக்கும் சொல்ல ஒரு ஆசை. தெரியாவிட்டால் நீங்களும் தெரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளுக்கும் கதையாக சொல்லுங்கள் . குழதைகள் பொய் பேசாமல் வளர்க்கப்பட வேண்டும் .
++
காசி (பனாரஸ்), வாரணாசி எனப்படும் புண்ய க்ஷேத்ரத்தில் அநேக ஹிந்துக்கள் இறந்தவர்கள் உடலை கங்கைக் கரையில் அரிச்சந்திர மயானத்தில் எரித்தால் அவர்கள் சொர்க்கலோகம் அடைவார்கள் என்கிற நம்பிக்கை இதை நான் எழுதும் வரை உள்ளது. அப்புறமும் இருக்கும். ஹரிச்சந்திரா காட் எனப்படும் ஹரிச்சந்திர மயானத்தில் உடலை கொளுத்தி அஸ்தியை கங்கையில் கரைக்கும் வழக்கம் பல்லா யிரம் வருஷங்களாக உள்ளது. ஹரிச்சந்திரன் காசி மயானத்தின் காவலனாக இருந்து படாத கஷ்டங்கள் பட்டு கடைசியில் காசி விஸ்வநாதர் அனுக்ரஹத்தோடு மோக்ஷம் அடைந்ததால் மயானங்களில் ஹரிச்சந்தி ரன் சிலைகள் காணப்படும். அவன் அனுமதி பெற்ற பிறகே மயானத்துக்குள் நுழைந்து இறந்த உடலுக்கு ஈமச்சடங்குகள் செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது.
காசியில் நடப்பது போல ஒவ்வொரு ஊரிலும் சடலத்தை எரித்து சாம்பலை சமுத்ரத்திலோ, ஆற்றிலோ கரைக்கிறோம். ஆற்றங்கரையில் தான் அக்காலத்தில் மயான பூமி இருந்தது. அங்கே தான் ஊரில் பிணங்கள் எரிக்கப்படும்.
ஹரிச்சந்திரன் சூரிய குலத்தின் 28 வது ராஜா. மஹாத்மா காந்தியை சின்ன வயதிலிருந்தே மனம் கவர்ந்த உண்மை பேசுபவன். மஹாத்மா ”சத்ய சோதனை” எழுத காரணமானவன். அவர் அம்மா கதை சொல்லி தெரிந்து கொள்ளப் பட்டவன்.
விசுவாமித்திர ரிஷி ஒருநாள் ராஜா ஹரிசந்திரனிடம் வந்தார். அவரை வரவேற்று உபசரிக்கிறான்.
”ஹரிச்சந்திரா நான் எதற்கு உன்னிடம் வந்தேன் தெரியுமா/”
”சொல்லுங்கள் சுவாமி”
”நேற்று என் கனவில் உன்னை கண்டேன். நீ ”மகரிஷி, இந்தாருங்கள் என் ராஜ்ஜியம், இனி இது உங்களது’ என்று வாக்களித்தாய். நீ சொன்ன சொல் தவராதவன், பொய் சொல்லாதவன் என்று எனக்கு தெரியும்” என்கிறார் ரிஷி.
”ஆஹா அப்படியே சந்தோஷமாக நடக்கட்டும் குருவே”
ராஜா ஹரிச்சந்திரன் கட்டின துணியோடு, மனைவி சந்திரமதி, மகன் லோகிதாசனோடு , ராஜ்யத்தை விஸ்வாமித்ரருக்கு அளித்துவிட்டு நடக்கிறான்.
”நில் ஹரிச்சந்திரா”.
நிற்கிறான் மன்னன்.
”குரு ஒருவர் வந்தால் அவருக்கு தானம் அளிப்பதோடு குரு தக்ஷணை கொடுக்கும் வழக்கம் உனக்கு தெரியாதா?”
”அடாடா, மன்னிக்க வேண்டும் சுவாமி”
அவனிடம் தக்ஷணை ஒடுக்க சல்லிக்காசும் இல்லையே. ஆகவே யோசித்து தனது மனைவியையும் பிள்ளை யையும் ஒரு பிராமணனுக்கு அடிமையாக விற்று விட்டு அந்த காசை விஸ்வாமித்ர ரிஷிக்கு அளிக்கிறான்.
”ஹரிச்சந்திரா நீ கொடுத்த தக்ஷணை ரொம்ப ரொம்ப குறைவாக இருக்கிறதே”
”சுவாமி என்னையும் யாருக்காவது விற்று அந்த பணத்தை தருகிறேன். மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். ”
ஹரிச்சந்திரன் காசியில் சுடுகாட்டில் பிணம் எரிக்கும் ஒருவனுக்கு அடிமையாக தன்னை விற்றுக்கொண்டு அந்த பணத்தை விஸ்வாமித்ரரிடம் அளித்து வணங்கிச் செல்கிறான்.
பிராமணன் வீட்டில் வேலைக்காரியாகிவிட்ட ராணி சந்திரமதியும் ராஜகுமாரன் லோகிதாசனும் ரொம்ப கஷ்டப்படு கிறார்கள். ஒருநாள் எஜமானருக்கு பூஜைக்கு புஷ்பம் பறிக்க சென்ற லோகிதாசனை ஒரு நாகம் தீண்டி அவன் இறக் கிறான். எந்த உதவியும் இல்லாத ஏழை சந்திரமதி பிள்ளையின் சடலத்தை தானே சுமந்து காசி மயானம் செல்கிறாள்.
ஹரிச்சந்திரன் தான் அங்கே பிணம் எரிக்கும் வேலை யில் இருக்கிறான். அவனிடம் பிணத்தை எரிக்க உதவி கேட்கிறாள். இருவருமே ஒருவரை ஒருவர் அடையாளம் தெரிந்து கொள்ளமுடியாமல் மாறி போயிருந்தனர்.
”அம்மா, என் எஜமானருக்கு இங்கே பிணத்தை எரிக்க நான் காசு வசூலித்து கொடுக்கவேண்டும். பணம் கொடு ”
”ஐயா, என்னிடம் சலிக்காசு கூட இல்லாத பரம ஏழை. என் மகன் நாகம் தீண்டி இறந்துவிட்டான். நான் ஒரு அடிமை. எப்படியாவது இவன் உடலை எரிக்க உதவுங் களேன்” என்று அழுகிறாள் ”
அப்போது தான் ஹரிச்சந்திரன் கண்ண்ணுக்கு சந்திர மதியின் கழுத்தில் உள்ள தங்க தாலி தெரிகிறது.”
‘அம்மா உன் கழுத்தில் தங்க மாங்கல்யம் உள்ளதே அதை விற்றாவது காசு கட்டலாமே. என் எஜமானனுக்கு வரி செலுத்திவிட்டு உங்கள் மகனை எரிக்கிறேன் ”
இங்கே ஒரு அதிசய, அற்புத விஷயம் சொல்ல வேண் டும். பிறந்தபோதே சந்திரமதி\யின் கழுத்தில் ஒரு தாலி இருந்தது. அதைப் பற்றி பலரிடம் அவள் பெற்றோர்கள் விசாரித்து அறிந்தனர். பிரபல ஜோசியர்கள் ”இது தெய்வ குழந்தை. இந்த தாலி பெற்றோர் உங்களைத் தவிர இந்த பெண்ணின் கணவனாக எவன் வருவானோ அவன் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்கள் கண்ணுக்கு இது தெரியவே தெரியாது ” என்றார் கள்.
இது சந்திரமதிக்கும் தெரியுமே. அதனால் எதிரே பேசும் வெட்டியான் தான் ராஜா ஹரிச்சந்திரன், தனது கணவன், என்று அறிகிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு அழுகிறார்கள். தன்மகன் இறந்த துக்கத்தில் ஹரிச்சந்திரன் அழுதாலும் அவன் பிணத்தை எரிக்க மறுத்துவிட்டான். ஏற்கனவே சந்திரமதி தான் கட்டியிருந்த,அவளிடமிருந்து ஒரே சேலையில் பாதியை கிழித்து இறந்து போன லோகி தாசன் மேல் போர்த்தி இருந்தாள் . மற்ற பாதியை இடுப்பில் கோணா மாணா வென சுற்றி இருந்தாள்
”அதையாவது அவிழ்த்து கொடு சந்திரமதி, பிணம் எரிக்க வரியாக அதை எஜமானனிடம் கொடுத்த்து கெஞ்சி நமது பிள்ளையை எரிக்க அனுமதி கேட்டு கெஞ்சுகிறேன் ” என்கிறான் ஹரிச்சந்திரன்.
சந்திரமதி இடுப்பில் உள்ள பாதி சேலையை அவிழ்க் கிறாள். அவளுடைய கிழிந்த புடவை அவிழும் முன்பு எதிரே விஷ்ணு, தேவர்கள், விஸ்வாமித்ர ரிஷி எல்லோரு ம் தோன்றுகிறார்கள். எல்லோரும் ஹரிச்சந்திரனின் நேர்மையை, சத்தியத்தை, நற்குணத்தைப் போற்றி பாராட்டி, லோகிதாசனை உயிர்ப்பித்து ஹரிச்சந்தி ரனை மீண்டும் காசி ராஜாவாக்குகிறார்கள். நீங்கள் எங்களோடு ஸ்வர்கத்துக்கு வரவேண்டும் என்று அழைக்கிறார்கள்.
ஹரிச்சந்திரன் அவர்களை வணங்கி ”ராஜ்யபதவி வேண்டாம், தான் மட்டும் குடும்பத்தோடு ஸ்வர்கம் வர மனது ஒப்புக்கொள்ள வில்லை. என் நாட்டு மக்கள் அனைவருமே ஸ்வர்க பதவி பெறவேண்டும்” என வேண்டு கிறான்.
”ஹரிச்சந்திரா, ஒவ்வொருவரும் அவரவர் வினைப் பயன் விளைவாகவே சுவர்க்கம் செல்ல முடியும். நீ செய்த தர்ம சத்ய பலனால் உனக்கும் உன் குடும்பத் துக்கும் ஸ்வர்கம் கிடைத்தது.”
”பகவானே, அப்படியென்றால் எனது தான, சத்ய ,புண்ய பலன் அனைத்தையும் என் குடிமக்களுக்கு அளித்துவிடு கிறேன் அவர்களை மட்டுமாவது ஏற்றுக்கொள்ளுங்கள் ” என வணங்குகிறான் ஹரிச்சந்திரன்.
விஸ்வாமித்ரர் இதைக் கேட்டு மனமகிழ்ந்து ”என் சோதனையில் ஹரிச்சந்திரா, நீ ஜெயித்தாய் நான் தோற்று விட்டேன் ஹரிச்சந்திரா, இந்த சோதனை எதற்கு என்றால் உலகத்தில் ஒருவர் விடாமல் அனை வரும் ஹரிச்சந்திரன் எப்படிப்பட்ட சத்யவான், உண்மைக்காக உயிரையே கொடுப்பவன் என்று புரிந்து கொள்வதற்காகவே. ஆகவே உன் வேண்டுகோள் படி இங்கே வாழும் எல்லோருக்கும் ஸ்வர்க பதவி உண்டு” என வாழ்த்துகிறார்.
சுபம் சுபம் சுபம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;