
விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN
மதன சுந்தரி கதை
வாசக நண்பர்களே ஒவ்வொரு கதை நான் ஆரம்பிக் கும்போதும் பாவம் நமது நண்பன் விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தில் ஏறி கிளையிலிருந்து வேதாளத்தை பிடித்து கீழே இறக்கி தன் தோள் மேல் போட்டுக் கொண்டு நடக்க வேண்டி இருக்கிறது. வேதாளம் சும்மா இருக்காமல் ஏதாவது ஒரு கதை சொல்லும். அதை கேட்டுக் கொண்டே நடக்கும் விக்கிரமாதித்தனை கடைசியில் ஒரு கேள்வி கேட்கும். அதற்கு அவன் பதில் சொன்னவுடன் ஓடி மீண்டும் அடுத்த அல்லது அதற்கு தெரிந்த ஒரே முருங்கை மரத்தின் மேல் ஏறி கிளையில் தொங்கும். அவன் வேறு வழியில்லாமல் அந்த வேதாளத் தைப் பிடித்துக் தோள்மீது சுமந்து கொண்டு வேக மாக நடப்பான்.
அப்படி தான் ஒரு முறை அவன் நடக்கும் போது வேதா ளம் சொன்ன ஒரு கதை இது.
“விக்ரமாதித்தா, நீ அஞ்சா நெஞ்சமும் புத்தி சாதுர்ய மும் உடையவன். ஆகவே, கதை ஒன்று சொல்லுகிறேன்.
கேளுமையா ராஜனே!” சோபாவதி எனும் ஒரு நகரத்தை
யசமகேது எனும் ராஜா ஆண்டான். அந்த ஓர் துர்க்கை ப்ரஸித்தமானவள். துர்க்கை கோயிலிலுக்கு தெற்கே துர்க்கை தீர்த்த குளம். ஆடி மாசம் சுக்லபக்ஷத்தில் பெரிய திருவிழா நடக்கும். நிறைய பக்தர்கள் வந்து வேண்டிக் கொள்வார்கள்.
பிரம்மஸ்தலம் என்ற ஒரு ஊரிலிருந்து தவளன் என்ற வாலிபன் துர்க்கை தரிசனத்துக்கு வந்தான். அங்கே சுத்தப்படன் என்பவன் மகள் மதனசுந்தரியும் வந்திருந் தபோது அவள் அழகில் மயங்கி அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்பட்டான் .
“மகிஷாசுரமர்த்தனி! நான் என் ஆசையை நிறைவேற்று என்று துர்க்கையிடம் பிரார்த்தனை செய்தான். என் ஆசை நிறைவேறினால் அடுத்த முறை உன்னை தரிசிக் க வரும்போது என் தலையை வெட்டி உனக்கு அர்ப்ப ணிக் கிறேன்” என்றும் வேண்டிக்கொண்டு ஊர் திரும் பினான். அவள் நினைவாகவே வாடினான்.
அவன் அப்பா விமலன் மதனசுந்தரி வீட்டுக்கு சென்று கல்யாணத்தை நிச்சயம் பண்ணிவிட்டார். சீக்கிரமே மதனசுந்தரிக்கும் தவலனுக்கும் கல்யாணம் நடந்தது.
சில நாட்கள் கழிந்து ஊரிலிருந்து மதனசுந்தரியின் அண்ணா அவளைப் பார்க்க வந்தான்.
இவ்விதம் விமலனிடம் ”ஐயா எங்கள் ஊரில் துர்க்கை கோயில் உற்சவம் விமரிசையாக நடக்கப்போகிறது. ஆகவே அப்பாவும் அம்மாவும் என் தங்கை மதன சுந்தரியையும் மாப்பிள்ளையையும் அழைத்து வர அனுப்பினார். தரிசனம் பெற அனுப்புங்கள்” என்று சொன்னான்.
மறுநாள் காலைல் தவளன் தன் மனைவி மதன சுந்தரியுடன் மாமனார் வீட்டுக்குக் கிளம்பினான். உரிய சோபாவதி நகர்ப்புறத்திலே துர்க்கையின் பெரிய கோவில் கண்ணில் பட்டதும் தவளன் பக்தி பரவசமானேன். சென்ற முறை துர்க்கை சந்நிதியில் அவன் வேண்டிக்கொண்ட பிரதிக்ஞை நினைவுக்கு
வந்ததது. சாமிக்கு கொடுத்த வாக்கை மீறலாமா?
”மதன சுந்தரி, அண்ணா, நீங்க ரெண்டு பேத்தும் நீங்கள் இங்கேயே குளக்கரையில் நிழலில் இளைப் பாறுங்கள். நான் துர்க்கை அம்மா சந்நிதிக்கு போய் வணங்கிவிட்டு வருகிறேன்.
”மைத்துனா! இது இரவு வேளை. யாருமே இல்லை. நிர்மானுஷ்யமான ஆலயத்தில் உக்கிரமாக இருக்கும் துர்க்கையை மதன சுந்தரி உன் தங்கை பார்த்தால் மிகவும் பயப்படுவான்! அவளுக்குத் துணையாக நீ இங்கேயே இரு!” என்று சொல்லிவிட்டு ஆலயத்துக் குள் தவளன் ஓடினான்.
மஹிஷாசுரனைக் கீழே தள்ளி மிதித்த காலையும், தானவர்களை வென்ற பதினெட்டு கரங்களையும் கொண்டு பயங்கரமாக விளங்கிய துர்க்கா தேவியை அவன் வழிபட்டு வணங்கிப் பிரார்த்தித்தான். அவன் செய்த ப்ரதிஞை மனதில் வைராக்கியச் சித்தமாக உதித்தது.
“தேவியின் அருளைப்பெற பக்தர்கள் பலவித உயிர்பலி கொடுக்கிறார்களே. தேவியைத் திருப்தி செய்து பரகதி யில் உய்வதற்காக ஏன் அவளுக்கு நான் வாக்கு கொடு த்த படி என்னை பலி கொடுக்க கூடாது? அவன் கண்ணில் யாரோ காணிக்கை செலுத்திய வாள் தெரிந்ததும் அதை எடுத்தான். தன் தலை குடுமியை சந்நிதி மணி தொங்கியகயிறில் முடிந்தான். கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டான். குடுமி கட்டு அறுந்து. தலை வேறு உடல் வீராக ரெண்டு துண்டானது.
வெளியே வெகு நேரமாகக் காத்திருந்த மைத்துனன்
”ஏன் இன்னும் மாப்பிள்ளை வெளியே வரவில்லை என்று யோசித்தான். .”மதனசுந்தரி நீ இங்கேயே இரு! நான் போய் மாப்பிள்ளையை அழைத்து வருகிறேன்” என்று அவளிடம் சொல்லிவிட்டு கோவிலுக்குள் சென்றவன் துர்க்கை சந்நிதியில் தவளன் தலை வேறு உடல் வேறாக ரத்தத்தில் மிதந்து கிடப்பதைக் கண்டு திருக்கிட்டான்.
“ஐயோ இதை நான் எப்படி என் அருமை தங்கையிடம் போய் சொல்வேன். அவள் எப்படி சகிப்பாள்?”என்னால் முடியாது. நானும் மடிந்து போகிறேன். என்று அந்த கத்தியை எடுத்து தனது கழுத்தையும் வெட்டிக்கொண்டு, தலை வேறு உடல் வேறாகக் கிடந்தான்.
நேரம் ஓடியது. இருளில் வெகுநேரம் அண்ணனுக்கா
கவும் கணவனுக்காகவும் வெளியே காத்திருந்த மதனசுந்தரி ஏன் அவர்கள் இருவரையும் காணோம் என்று கவலையோடு உள்ளே சென்றாள் . உள்ளே துர்க்கை எதிரே தரையில் தன் கணவனும் அண்ணனும் தலை இழந்து இறந்து கிடந்த நிலையை பார்த்தவுடனே நிலைகலங்கிப் கீழே விழுந்து புரண்டாள்.
“ஐயோ! இது என்ன? என் வாழ்க்கை பாழாப் போய்
விட்டதே ” என மதனசுந்தரி அலறினாள்.திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தாள் .
‘இனி நான் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? அம்பிகே! மக்களின் நல்வாழ்க்கை, மாங்கல்யம், சம்பத்து ஆகிய
வற்றை காத்து ரக்ஷிக்கும் தேவி நீதான்! மாதர்களுக்கு
உன்னையன்றி புகலிடம் வேறு உண்டோ? உன் கணவ ரான சிவபெருமானை உன் உடல் பாதியிலேயே கொண் டிருக்கிறாய். வ்விதம் இருந்தும் நீ என்னுடைய கணவ னையும். சகோதரனையும் அபகரித்து விட்டாய். நான் சதா உன்னையே நம்பி வழிபட்டு வருகிறேன். எதற்கும் அருகதையற்ற இந்த உடம்பை உன் சந்நிதியிலே இப்போதே தியாகம் செய்யப் போகிறேன்.அடுத்த ஜென்மம் எனக்கு எதுவாக இருந்தாலும் சரி, அம்மா நீ தான் இந்த ரெண்டு பேத்தையும் என் புருசனாகவும் அண்ணனாகவும் மறுபடியும் அடைய வரம் தர வேண்டும் ”
மதனசுந்தரி துர்க்கையை வேண்டிக்கொண்டு பக்கத்
தி லிருந்த கொடியைக் கொண்டு சுருக்கு தயார் செய்த
அதை ஓர் அசோக மரத்தில் கட்டினாள். தன் கழுத்தை நீட்டி அந்தச் சுருக்கை போட்டுக் கொள்ளும் சமயத்தில் ஆகாசத்தில் ஓர் அசரீரி வாக்கு கேட்டது.
“அவசரப்படாதே குழந்தாய். நீ சிறுசானாலும் உன்னு டைய மன உறுதியை மெச்சுகிறேன். இதை சுருக்கு கு இப்படியே இருக்கட்டும். நீ உள்ளே போய் உன் கணவன் அண்ணாத்தை ரெண்டு பேரின் தலைகளை அவர்கள் உடம்போடு சேர்த்துவிடு. என் அருளால் அவர்கள் ரெண்டு பேரும் மறுபடியும் உயிர்பெற்று எழுவார்கள்”
அசரீரி சொன்னதைக் கேட்ட மதனசுந்தரி சந்தோஷ மாக அந்தச் சுருக்கை விட்டுக் கீழே குதித்து, தலை யறுபட்டு கிடக்கும் முண்டங்களை நோக்கி வேகமாக ஓடினாள். அவளுக்கிருந்த பதற்றத்தில், தான் என்ன செய்கிறோம் என்பதையறியாமல், கை தவறி அவள் தன் கணவனின் தலையைத் தமையனின் உடவிலும், தமையனின் தலையைக் கணவன் உடலிலும் மாறு பாடாகப் பொருத்திவிட்டாள்.
அசரீரியின் வாக்குப் பிரகாரம் அவ்விருவரும் உடனே உயிர் பெற்றெழுந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் அளவளாவித் தங்களுக்கு நேரிட்ட புனர் ஜன்மத்தைக் கேட்டுச் சந்தோஷம் அடைந்தார்கள்.
துர்க்கா தேவியை வழிபட்டு மூவரும் மேற்கொண்டு தங்கள் பிரயாணத்தைத் தொடங்கினார்கள். நடற்து செல்லும்போது தலைகளை மாற்றி வைத்துவிட்டதை, மதனசுந்தரி அறிந்து ஏமாற்றம் அடைந்து கலக்கம் அடைந்தாள். என்ன செய்வேன்?”கணவன் தலையோடு அண்ணன், அண்ணன் உடலோடு கணவன் !
”இந்த ரெண்டு பேத்தில் எது மதனசுந்தரி புருசன்?எவன் அண்ணன்? ”
விக்ரமாதித்தா, நீ கெட்டிக்காரன், புத்திசாலி, சரியான விடையை நீ சொல். தப்பாக சொன்னால் உன் தலை நூறு அல்ல ஆயிரம் சுக்கலாக சிதறி உடையும். ஜாக்ரதை” என்று வழக்கம்போல் பயமுறுத்தியது வேதாளம்.
“ஹே , வேதாளமே, அந்த இரண்டு உருவங்களில் எவன் மதன சுந்தரியைத் தன் மனைவி நினைப்பில் பார்க்கிறனோ அவன்தான் அவளுடைய புருஷன். எண் சாண் உடம்புக்கு சிரசே ப்ரதானம். மனிதரைத் தலையைக் கொண்டு தான் அடையாளம் காண்கி றோம். ஆகவே தவளன் தலையைக் கொண்ட வனே அவளுடைய புருஷன்.
”அப்படின்னா சரி” என்று பெருமூச்சு விட்டுவிட்டு வேதாளம் மறுபடியும் விக்ரமாதித்தன் தோளை விட்டு பறந்து முருங்கை மரத்தின் கிளைமேல் ஏறிக் கொண் டது. அதை அடுத்த கதையில் சந்திப்போம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



