
ஒரு வைணிக முன்னோடி – நங்கநல்லூர் J K SIVAN
இறைவன் எப்போதுமே பாரபக்ஷமில்லாத படைப்பாளி. ஒவ்வொரு ஜீவனுக்கும் ஏதாவதொரு தனித் திறமையைத் தனது பரிசாக அளித்து தான் பூமிக்கு அனுப்புகிறான். சங்கீதம் ஒரு கடல். அதில் சங்கம மமாகும் ஒரு ஜீவநதி கர்நாடக இசை. அதன் பல உபநதிகளில் ஒன்று வாத்ய இசை. அதன் கிளைகளில் ஒன்று தான் வீணை இசை. வீணை வித்வான்க ளில் பலர் இருந்தாலும் முன்னோடியாக நமக்கு இசைவானில் ஜொலிப்பவர் வீணா வாணி தனம்மாள். 71 வருஷங்கள் வாழ்ந்து நான் பிறப்பதற்கு ஒருவருஷம் முன்பே 1938ல் மறைந்தவர் என்பதால் அவரைப் பற்றி நான் அறிந்த விஷயங்கள் ரொம்ப சொற்பம். வீணை வாசிப்பில் தனக்கென ஒரு தனி பாணியை “தனம்மாள் பாணி” என தோற்றுவித்தவர் தனம்மாள். அவர் வீணை வாசிக்கும் போதே மென்மையாக பாடவும் செய்பவர்.
அவர் அம்மா சாந்தம்மாள் சிறந்த பாடகி. இசைக்கு தம்மை அர்ப்பணித்த வம்சம். எளிமையாக , ராகங்களை அப்படியே வீணைக் கம்பிகளில் தூக்கி வந்து ‘ இந்தா ருசித்து அனுபவி” என்று சங்கீத ரசிகர்களுக்கு தந்தவர் தனம்மாள். ஆகவே அவரது வீணையும் வாய்ப்பாட்டும் மிக மென்மையாகவும், ஸுஸ்வரமாக , உணர்வுபூர்வமாக இருந்து அவருக்கு புகழைத் தேடி தந்தது. ஸ்வரங்களை மிகவும் துல்லியமான கையாண்டு இசை தேவதையோடு விளையாடியவர் . அம்மா தான் அவருக்கு முதல் குரு.
வீணை தனம்மாளுக்கு பல இசை வாரிசுகள் உண்டு என்றாலும் முக்கியமான எனக்கு தெரிந்த பெயர்கள் டி. பல்லவி (T. Brinda) – டி. முக்தா (T. Muktha) – பேத்திகள்.
நமக்கு ஒரு பெருமை என்ன வென்றால் தனம்மாள் சென்னையில் அப்போது மெட்றாஸ் ஜார்ஜ் டவுனில் பிறந்தவர்.
2010 – நமது பாரத தேச அஞ்சல் துறை அவர் நினைவாக ஒரு ஐந்து ரூபாய் தபால் தலை ஸ்டாம்ப் வெளியிட்டதை பார்த்த பிறகு தான் அவரைப் பற்றி புரிந்து கொண்டேன். இன்னொரு சுகமான செய்தி. யூட்யூபில் வீணை தனம்மாள் இசை இன்னும் கேட்க முடிகிறது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


