
everyonefollowme வைராக்ய சதகம் பர்த்ருஹரி – நங்கநல்லூர் J K SIVAN
ஸ்லோகங்கள் 21-30
21. दीना दीनमुखैः सदैव शिशुकैराकृष्टजीर्णाम्बरा क्रोशद्भिः क्षुधितैर्निरन्नविधुरा दृश्या न चेद्गेहिनी । याञ्चाभङ्गभयेन गद्गदगलत्त्रुट्यद्विलीनाक्षरं को देहीति वदेत्स्वदग्धजठरस्यार्थे मनस्वी पुमान् ॥ २१॥
Dīnā dīnamukhaiḥ sadaiva śiśukairākr̥ṣṭajīrṇāmbarā krōśadbhiḥ kṣudhitairnirannavidhurā dr̥ṣyā na cēdgēhinī । yāñcābhaṅgabhayēna gadgadagalattruṭyadvilīnākṣaraṁ kō dēhīti vadētsvadagdhajaṭharasyārthē manasvī pumān ॥
தீ³நா தீ³நமுகை:² ஸதை³வ ஶிஶுகைராக்ருʼஷ்ட ஜீர்ணாம்ப³ரா க்ரோஶத்³பி:⁴ க்ஷுதி⁴தைர்நிரந்நவிது⁴ரா த்³ருʼஶ்யா ந சேத்³கே³ஹிநீ । யாஞ்சாப⁴ங்க³ப⁴யேந க³த்³க³த³க³லத்த்ருட்யத்³விலீநாக்ஷரம் கோ தே³ஹீதி வதே³த்ஸ்வத³க்³த⁴ஜட²ரஸ்யார்தே² மநஸ்வீ புமாந் ॥ 21 ॥
பர்த்ருஹரி அளிக்கும் ஒரு காவிய காட்சி. கண்களில் நீரை பெருக்குகிறது. பாவம் யார் இந்த ஏழைத்தாய்? வறுமையின் அவதாரம், துன்பம், சோகம் எல்லாமே அவள் முகத்தின் ஒவ்வொரு கோட்டிலும் மஹா பாரதமாக தெரிகிறது. பலநாள் பட்டினி. கிழிந்த புடவை, எதை மறைக்கவேண்டுமோ அதை மறைக்க முடியாத ஆடைகளுடன் தவிக்கிறாள். அவளைச்சுற்றி, அந்த கிழிசல் புடவையைப் பிடித்துக் கொண்டு தொங்கியவாறு சில அழும் ஒன்றிரண்டு பசியால் வாடும் குழந்தைகள், தலை எதுவும் நடக்க வில்லை. முடி பரட்டை. எண்ணெயைக் கண்டதேயில்லை. அழுதழுது முகமெல்லாம் கண்ணீர்க் கரை, வாசலில் நிற்கிறாள். ”அம்மா பசிக்குது. சோறு போடுங்க”. அவள் குரல் தீனமாக சக்தியின்றி கேட்கிறது. அவள் வியாதி கணவன் அருகே நின்று பார்க்கிறான். அவனுக்கு குரல் எழுப்ப சக்தியோ த்ராணியோ இல்லை. கையில் கம்பு ஊன்றி அருகே நிற்கிறான். ஒருவேளை அந்த வீட்டு அன்னபூரணி இவளுக்கு உணவு தரா விட்டால்..??. ‘
‘ போ போ” ஒண்ணுமில்லை” …..அவளுக்கு தானம் தர்மம் செய்யாவிட்டால்…..அவள் கதி….?? அப்படிப்பட்ட ஏழையிடமும் ஒருவன் ”எனக்கு கொடு”என்று யாசிப்பவன் எப்படிப்பட்டவன்?? சே.. என்ன உலகமடா இது?
22 अभिमतमहामानग्रन्थिप्रभेदपटीयसी गुरुतरगुणग्रामाम्भोजस्फुटोज्ज्वलचन्द्रिका । विपुलविलसल्लज्जावल्लीवितानकुठारिका जठरपिठरी दुष्पूरेयं करोति विडम्बनम् ॥ २२॥
Abhimatamahāmānagranthiprabhēdapaṭīyasīgurutaraguṇagrāmāmbhōjasphutōjjvalacandrikā। vipulavilasallajjāvallīvitānakuṭhārikā jaṭharapiṭharī duṣpūrēyaṁ karōti viḍambanam ॥ 22
அபி⁴மதமஹாமாநக்³ரந்தி²ப்ரபே⁴த³படீயஸீ கு³ருதரகு³ணக்³ராமாம்போ⁴ஜஸ்பு²டோஜ்ஜ்வலசந்த்³ரிகா ।
விபுலவிலஸல்லஜ்ஜாவல்லீவிதாநகுடா²ரிகா ஜட²ரபிட²ரீ து³ஷ்பூரேயம் கரோதி விட³ம்ப³நம் ॥ 22 ॥
சுய கெளரவம், மரியாதை , சமூக அந்தஸ்து, இந்த முடிச்சுகளை அவிழ்க்க தெரிந்த கெட்டிக்காரன் தான் வைராக்யன். நற்குணங்கள் எனும் தாமரை மலர்களின் மொட்டுகளை அவிழ்க்கும் சந்திரன் தான். ஆம் சந்தேகமே இல்லை. கூரான அரிவாள் எப்படி புதர்கள், கொடிகள், செடிகளை வெட்டிக் கழிக்குமோ அது போல் என் வயிறு என்கிற புற்று இருக்கிறதே அது எதை வேண்டுமானாலும் வாங்கி உண்டு அழிக்கிறது. அடேயப்பா அதை திருப்திசெய்ய அலைவதற்கே வாழ்நாள் போதாது. முடிவில் லாத பசி…. பசி தாகம். இவை தீர வேண்டும்.. ஆமாம். மனிதர்களே, தேவைகள் ஆசைகள் இவற்றை எல்லாம் அழித்தவன், வென்றவன்தான் பரிசுத்தன். புனிதன்.
23. पुण्ये ग्रामे वने वा महति सितपटच्छन्नपालिं कपालिं ह्यादाय न्या यगर्भद्विजहुतहुतभुग्धूमधूम्रोपकण्ठे । द्वारं द्वारं प्रविष्टो वरमुदरदरीपूरणाय क्षुधार्तो
मानी प्राणैः सनाथो न पुनरनुदिनं तुल्यकुल्येषु दीनः ॥ २३॥
Puṇyē grāmē vanē vā mahati sitapaṭacchannapāliṁ kapāliṁ hyādāya nyāyagarbhadvijahutahuta bhugdhūmadhūmrōpakaṇṭhē । dvāraṁ dvāraṁ praviṣṭō varamudaradarīpūraṇāya kṣudhārtō mānī prāṇaiḥ sanāthō na punaranudinaṁ tulyakulyēṣu dīnaḥ ॥ 23॥
புண்யே க்³ராமே வநே வா மஹதி ஸிதபடச்ச²ந்நபாலிம் கபாலிம் ஹ்யாதா³ய ந்யாயக³ர்ப⁴த்³ விஜஹுதஹுத பு⁴க்³தூ⁴மதூ⁴ம்ரோபகண்டே² । த்³வாரம் த்³வாரம் ப்ரவிஷ்டோ வரமுத³ரத³ரீபூரணாய க்ஷுதா⁴ர்தோ மாநீ ப்ராணை: ஸநாதோ² ந புநரநுதி³நம் துல்யகுல்யேஷு தீ³ந: ॥ 23 ॥
நானும் ஒரு பிச்சாண்டி தான். பிக்ஷாடனன். பிக்ஷைக்கு எனக்கு மூன்று வழிகள் உண்டு.ஒன்று என் உறவினர் களிடம்,சுற்றத்தாரிடம்..இன்னொரு வழி காட்டுக்கு சென்று அங்கே ஆரண்யத்தில் இருப்பவர் களிடம் இருப்பதை கேட்டு வாங்கி யாசித்து உண்பது. மூன்றாவது வெண்மையான வஸ்திரம் தரித்து, யாக யஞங்கள் பண்ணி ஹோமப்புகை சூழ்ந்த சிறந்த மனிதர்கள் வீட்டு வாசலில் நின்று ”அம்மா தாயே” என்று யாசிப்பது .மூன்றாவது வழி சிறந்தது என்கிறார் பர்த்ருஹரி.எங்கும் ரிஷிகளின் ஹோம புகை கருப்பு சாயம் பூசி இருக்கிறதே, அந்த பக்கம். கையில் ஒரு திருவோடு. இடையில் எக்காலத் திலோ வெண்மை யைப் பார்த்த கோவண வஸ்திரம். இந்த திருவோடு நிறைந்தால் என் வயிறு நிறை யும் என்ற நிலையோ? பசிக்குப் புசிக்கிறவன் தான் ஞானி. எதையும் உண்ண வேண்டும் என ருசி தேடுபவன் வைராக்யன் இல்லை..
24. गङ्गातरङ्गकणशीकरशीतलानि विद्याधराध्युषितचारुशिलातलानि । स्थानानि किं हिमवतः प्रलयं गतानि यत्सावमानपरपिण्डरता मनुष्याः ॥ २४॥
Gaṅgātaraṅgakaṇaśīkaraśītalānividyādharādhyuṣitacāruśilātalāni। sthānāni kiṁ himavataḥ pralayaṁ gatāni yatsāvamānapara piṇḍaratā manuṣyāḥ ॥ 24॥
க³ங்கா³தரங்க³கணஶீகரஶீதலாநி வித்³யாத⁴ராத்⁴ யுஷிதசாருஶிலாதலாநி । ஸ்தா²நாநி கிம் ஹிமவத: ப்ரலயம் க³தாநி யத்ஸாவமாநபரபிண்ட³ரதா மநுஷ்யா: ॥ 24 ॥
எதையும் தன் மடியில் இருந்து அள்ளித்தரும் ஹிமாசல மலைகள், கங்கையின் ப்ரவாஹ அலைகள் உறைந்து போய் பனியாக படர்ந்து பசி தாகம் எல்லாம் மறக்கச் செய்யும் அற்புத அமைதி நிறைந்த சூழ்நிலை, வளமையான இந்த மலைச்சரிவு பள்ளத்தாக்கில் தான் எத்தனை மஹநீ யர்கள் தேவர்கள், கந்தர்வ கானம் பொழிந்துள்ளனர். அவை எல்லாம் மறைந்து போய் விட்டதா? உறைந்து போனதா? ஒன்றுமில்லாத மனிதர்களின் தயவிலா இனி அடுத்த வேளை உணவிற்கு கையேந்தி நின்று வாழவேண்டும்?
25. किं कन्दाः कन्दरेभ्यः प्रलयमुपगता निर्झरा वा गिरिभ्यः प्रध्वस्ता वा तरुभ्यः सरसफलभृतो वल्कलिन्यश्च शाखाः । वीक्ष्यन्ते यन्मुखानि प्रसभमपगत प्रश्रयाणां खलानां दुःखाप्तस्वल्पवित्तस्मयपवनवशान्नर्तितभ्रूलतानि ॥ २५॥
kiṁ kandāḥ kandarēbhyaḥ pralayamupagatā nirjharā vā giribhyaḥ pradhvastā vā tarubhyaḥ sarasaphalabhr̥tō valkalinyaśca śākhāḥ । vīkṣyantē yanmukhāni prasabhamapagatapraśrayāṇāṁ khalānāṁ duḥkhāptasvalpa vittasmayapavana vaśānnartitabhrūlatāni ॥ 25॥
கிம் கந்தா:³ கந்த³ரேப்⁴ய: ப்ரலயமுபக³தா நிர்ஜ²ரா வா கி³ரிப்⁴ய: ப்ரத்⁴வஸ்தா வா தருப்⁴ய: ஸரஸப²லப்⁴ருʼதோ வல்கலிந்யஶ்ச ஶாகா:² । வீக்ஷ்யந்தே யந்முகா²நி ப்ரஸப⁴மபக³தப்ரஶ்ரயாணாம் க²லாநாம் து:³கா²ப்த ஸ்வல்ப வித்தஸ்மயபவந வஶாந்நர்திதப்⁴ரூலதாநி ॥ 25 ॥
என்ன ஆச்சு? குகைகளில் அடர்ந்திருக்கும் மரக்கி ழங்குகள், வேர்கள், மூலிகைகள் எல்லாமே எங்கோ காணாமல் போய்விட்டனவோ? மலைகளில் ஆங்காங்கே குளிர்ந்த இனிய சுவையான நீரூற்றுகள், வளைந்து அழகாய் ஓவுமே அருவிகள், சுனைகள், இருக்குமே எதையுமே காணோமா? இனிய சுவையான பழங்கள் தரும் மரங்களை, சுவையான பட்டைகள் கொண்ட மரங்கள் எல்லாவற்றையும் யார் வெட்டி னார்கள்? இல்லை எதுவும் நடக்கவில்லை. இதெல் லாம் என்றும் நடுக்காட்டில் உண்டு. இதை விட்டு எதற்காக அற்பர்களின், சுயநலவாதிகள் துஷ்டர்களின் அசையும் முகங்களை பெரியோர்க பார்க்க வேண்டும். என்ன அவசியம் இருக்கிறது?
26. पुण्यैर्मूलफलैस्तथा प्रणयिनीं वृत्तिं कुरुष्वाधुना भूशय्यां नवपल्लवैरकृपणैरुत्तिष्ठ यावो वनम् ।क्षुद्राणामविवेकमूढमनसां यत्रेश्वराणां सदा
वित्तव्याधिविका रविह्वलगिरां नामापि न श्रूयते ॥
puNyairmuulaphalaistathaa praNayinii.n vR^itti.n kurushhva adhunaa bhuushayyaa.n navapallavaira kR^ipaNairuttishhTha yaavo vanam.h . xudraaNaamavivekamuuDha manasaa.n yatreshvaraaNaa.n sadaa vittavyaadhivikaaravivhalagiraa.n naamaapi na shruuyate
புண்யைர்மூலப²லைஸ்ததா² ப்ரணயிநீம் வ்ரு’த்திம் குருஷ்வாது⁴நா பூ⁴ஶய்யாம் நவபல்லவைரக்ரு’
பணைருத்திஷ்ட² யாவோ வநம் । க்ஷுத்³ராணாம விவேகமூட⁴மநஸாம் யத்ரேஶ்வராணாம் ஸதா³ வித்தவ்யாதி⁴விகாரவிஹ்வலகி³ராம் நாமாபி ந ஶ்ரூயதே ॥ 26॥
வைராக்கியம் தேடுபவன், வைராக்கியம் கொண்டவன், வனத்தை தேடி செல்கிறான். அவனது ஆகாரம் காய் கிழங்கு, வேர்கள், பச்சிலைகள் . அவன் படுக்கை மரங்களின் இலைகளை மெத்து மெத்துவென்று பரப்பி அதா மேல் ஒரு மரக்கட்டையை தலைகாணியாக வைத்து படுப்பது. மனதில் உலக சிந்தனையோ, பணமோ, பணக்காரனோ, அவனுடைய சில்லறை புத்தியோ எதுவும் தோன்றவில்லை. அறிவற்ற, தெளிவற்ற அவர்கள் பெயரோ, நினைப்போ எதற்கு? வா என்னோடு, அடர்ந்த அந்த அடவிக்குள் செல்வோம். தவமிருப்போம். அவர்களை விட்டு தூர சென்றுவிட்டு வோம். அற்ப பணத்தை ஆராதிப்பவர்கள் நாம ரூபம் கூட நம் கண்ணில் காணவேண்டாம். கருத்தில் புக வேண்டாம்.நமது மனம் அவர்களது எண்ணங்களால் பாழ்ப்படவேண்டாம்.
27. फलं स्वेच्छालभ्यं प्रतिवनमखेदं क्षितिरुहां पयः स्थाने स्थाने शिशिरमधुरं पुण्यसरिताम् ।मृदुस्पर्शा शय्या सुललितलतापल्लवमयी सहन्ते सन्तापं तदपि धनिनां द्वारि कृपणाः ॥ २७॥
phalam svecchalabhyam prativanamakhedam ksitiruham payah sthane sthane sisiramadhuram punyasaritam ।
mrdusparsa sayya sulalitalatapallavamayi sahante santapam tadapi dhaninam dvari krpanah ॥ 27 ॥
ப²லம் ஸ்வேச்சா²லப்⁴யம் ப்ரதிவநமகே²த³ம் க்ஷிதிருஹாம் பய: ஸ்தா²நே ஸ்தா²நே ஶிஶிரமது⁴ரம் புண்யஸரிதாம் । ம்ரு’து³ஸ்பர்ஶா ஶய்யா ஸுலலிதலதாபல்லவமயீ ஸஹந்தே ஸந்தாபம் தத³பி த⁴நிநாம் த்³வாரி க்ரு’பணா: ॥ 27॥
வனம் என்றாலே அடர்ந்த மரங்கள், அதில் கனி தரும் வகைகள் அதிகம். ஆகவே வைராக்கியம் தேடுபவனுக்கு அளவில்லாமல் காய்கள்,கனிகள் விதவிதமாக ஆகாரமாக கிடைக்குமே. குளிர்ந்த சுத்தமான நீர் அருவிகளிலும் சுனைகளிலும் நீரோடைகளிலும் கிடைக்கும். வேறென்ன வேண்டும். ஏன், எதற்கு, கால் கடுக்க பணத்தைத் தேடி, யாசிக்க, முட்டாள்கள் வீட்டு வாசலில் காத்திருக்க வேண்டும்? வைராக்கியவானுக்கு இது அவசியமே இல்லை.
28 . ये वर्तन्ते धनपतिपुरः प्रार्थनादुःखभाजो ये चाल्पत्वं दधति विषयाक्षेपपर्याप्तबुद्धेः । तेषामन्तःस्फुरितहसितं वासराणि स्मरेयं ध्यानच्छेदे शिखरिकुहरग्रावशय्यानिषण्णः ॥ २८॥
ye vartantee dhanapati purau praarthanaa duhkha bhaajo yee ca alpatvaa dadhati vishayaaksheepa paryaapta buddheehe
teeshaam antah sphurita hasitam vaasaraan`i smareeyam dhyaana ccheedee s`ikhari kuhara graava s`ayyaa nishan`n`aha.28
யே வர்தந்தே த⁴நபதிபுர: ப்ரார்த²நாது:³க²பா⁴ஜோ யே சால்பத்வம் த³த⁴தி விஷயாக்ஷேப பர்யாப்தபு³த்³தே:⁴ । தேஷாமந்த:ஸ்பு²ரிதஹஸிதம் வாஸராணி ஸ்மரேயம் த்⁴யாநச்சே²தே³ ஶிக²ரிகுஹரக்³ராவஶய்யாநிஷண்ண.
காட்டில் வழக்கமான வைராகியவான்வீடு மலையில் உள்ள குகை. அவன் அமரும் சிம்மாசனம் எது தெரியுமா? வழுவழுப்பான ஒரு அகலமான பாறை, அதில் அமர்ந்து தான் தியானம் புரிவான். சில சமயம் அதுவே படுக்க கட்டில். இடையிடையே, அவன் மனதில் நகரத்தில் உள்ள பணக்காரர்கள் வீட்டு வாசலில் யாசகமெடுக்கும் மக்களை பற்றிய ஞாபகம் வரும். அவர்கள் அஞ்ஞானம், அதனால் அவர்கள் தானே வரவழைத்துக் கொள்ளும் துன்பங்களும் மனதில் தோன்றி சிரிப்பும் வரும்.
29. ये सन्तोषनिरन्तरप्रमुदितास्तेषां न भिन्ना मुदो ये त्वन्ये धनलुब्धसंकुलधियस्तेषां न तृष्णा हता ।इत्थं कस्य कृते कृतः स विधिना कीदृक्पदं सम्पदां
स्वात्मन्येव समाप्तहेममहिमा मेरुर्न मे रोचते ॥ २९॥
யே ஸந்தோஷநிரந்தரப்ரமுதி³தாஸ்தேஷாம் ந பி⁴ந்நா முதோ³ யே த்வந்யே த⁴நலுப்³த⁴ஸங் குலதி⁴யஸ் தேஷாம் ந த்ரு’ஷ்ணா ஹதா । இத்த²ம் கஸ்ய க்ரு’தே க்ரு’த: ஸ விதி⁴நா கீத்³ரு’க்பத³ம் ஸம்பதா³ம் ஸ்வாத்மந்யேவ ஸமாப்தஹேமமஹிமா மேருர்ந மே ரோசதே ॥ 29॥
எதிலும் பற்றற்ற ஞானி, வைராக்கியவான் ஆனந்தமாக திருப்தியோடு இருக்கிறான் . பணத்தை தேடுபவனோ, பேராசைக்காரனோ, நிம்மதி இழந்து, பயத்தில் வாடி, ஒவ்வொரு நிமிஷமும் வாழ்க்கையில் துன்பம டைகிறான். எதற்காக மனிதனுக்கு இப்படி மலையளவு பணத்தின் மேல் ஆசை கடவுள் வைத்தான்? உண்மையில் கடவுளா ஆசையை வைத்தான்? தான் செய்யும் காரியங்களுக்கு அடுத்தவனை, ஆண்டவனை அல்லவோ குறை சொல்கிறோம்..
30. भिक्षाहारमदैन्यमप्रतिसुखं भीतिच्छिदं सर्वतो दुर्मात्सर्यमदाभिमानमथनं दुःखौघविध्वंसनम् । सर्वत्रान्वहमप्रयत्नसुलभं साधुप्रियं पावनं शम्भोः सत्रमवार्यमक्षयनिधिं शंसन्ति योगीश्वराः ॥
bhikshaahaaram adainyam apratisukhaa bhiiti cchidam sarvataha durmaatsarya madaabhimaana mathanam duhkhaugha vidhvamsanam sarvatraan vaham aprayatna sulabham saadhu priyam paavanam s`ambhooho satram avaaryam akshaya nidhim s`amsanti yogiis`varaaha.30
பி⁴க்ஷாஹாரமதை³ந்யமப்ரதிஸுக²ம் பீ⁴திச்சி²த³ம் ஸர்வதோ து³ர்மாத்ஸர்யமதா³பி⁴மாநமத²நம் து:³கௌ²க⁴வித்⁴வம்ஸநம் । ஸர்வத்ராந்வ ஹமப்ரயத்நஸுலப⁴ம் ஸாது⁴ப்ரியம் பாவநம் ஶம்போ:⁴ ஸத்ரமவார்யமக்ஷயநிதி⁴ம் ஶம்ஸந்தி யோகீ³ஶ்வரா: ॥
சகலமும் துறந்த யோகி, எப்படி சுகமாக வாழ்கிறான் பார். ஒருவேளை பிக்ஷை கிடைத்தால் போதும். அடுத்தவேளைக்கு சேமிக்க தேவையில்லை. கிடைத்ததை உண்பான். இல்லையேல் இருக்கவே இருக்கிறது காற்றும் நீரும். யாரிடமும் எதையும் எதிர்பார்க்க தேவையில்லை. எவரிடமும் எதனிடமும் பயமில்லை. யாருக்கும் எதற்கும் அடிமையில்லை.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



