
ராஜா பர்த்ருஹரி – நங்கநல்லூர் J K SIVAN
வைராக்ய சதகம் 1-10
1. चूडोत्तंसितचन्द्रचारुकलिकाचञ्चच्छिखाभास्वरो लीलादग्धविलोलकामशलभः श्रेयोदशाग्रे स्फुरन्
अन्तःस्फूर्जदपारमोहतिमिरप्राग्भारमुच्चाटयन्ः चेतःसद्मनि योगिनां विजयते ज्ञानप्रदीपो हरः ॥ १॥
Choodothamsita-chandrachaarukalikaa-chanchachchhikhaabhaaswaro Leelaadagdha-vilola-kaamashalabhah shreyo dishaagre sphuran .Antahsphoorjad-apaara-mohatimira-praagbhaaram-uchchaatayan Chetah sadmani yoginaam vijayate jnaanapradeepo harah :
சூடோ³த்தம்ஸிதசந்த்³ரசாருகலிகாசஞ்சச்சி²கா²பா⁴ஸ்வரோ லீலாத³க்³த⁴விலோலகாமஶலப:⁴ ஶ்ரேயோத³ஶாக்³ரே ஸ்பு²ரந் । அந்த:ஸ்பூ²ர்ஜத³பாரமோஹதிமிரப்ராக்³பா⁴ரமுச்சாடயந்: சேத:ஸத்³மநி யோகி³நாம் விஜயதே ஜ்ஞாநப்ரதீ³போ ஹர: ॥ 1
பரமேஸ்வரனின் சிரத்தில் விரிந்த ஜடாமுடியில் ஆகாச கங்கை ஹோ என்று இறங்கிய கம்பீரம், பௌருஷம், அழகு எப்படி கண்ணைப் பறிக்கிறது. அந்த கருநிற விரித்த செஞ்சடை மேல் பால் நிலவு போன்ற பிறைச் சந்திரன். சிரத்தில் அலை அலையாக ஜடாமுடி பின் கழுத்தில் வழிந்து முதுகை தொடுவது மலைப்பாம்புகள் போல அல்லவா காண்கிறது? பிறை சந்திரன் எவ்வளவு லாகவமாக அந்த ஜடாமுடியை பீடமாக கொண்டு ஒளிவீசி வீற்றிருக்கிறான். தீயை உமிழும் நெற்றிக்கண். மன்மதனையே, திரிபுரங்களையே, எரித்து சாம்பலாக்கிய சக்திவாய்ந்த அக்னி. பரமனின் சர்வ சக்தி மூவுலகும் அறிந்தது. அப்படிப்பட்ட சர்வ சக்தி வாய்ந்த காலகாலன் ,யோகிகள், பக்தர்கள் மனத்தில் கோயில் கொண்டவன். நெற்றியில் இமை மூடிய நெற்றிக்கண் அக்னியில் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாக மன்மதன். இமைக்கும் தருணத்தில் அக்னிப்பொறியில் கருகினது நினைவுக்கு வருகிறது. சிவனை , நினைந்தவர் எவர் தாழ்ந்தார், மறந்தவர் எவர் வாழ்ந்தார்? இருளில் ஒளி போல் அஞ்ஞானத்தை போக்கும் அவனை யோகியர் மனதில் நிறைத்துக்கொள்வது ஞாயம் தான். அவனை வணங்கி உய்வோம் என்ற காப்புச் செய்யுளுடன் பர்த்ருஹரி வைராக்கிய சதகம் துவங்குகிறார்.
உஜ்ஜயினிக்கு பழைய பெயர் அவந்திகா. மால்வா ராஜ்ஜிய தலைநகரம். செல்வ செழிப்புள்ளது. அதன் ராஜா விக்ரமாதித்தன். நமது சரித்திரத்தில் சகாப்தமாக பெயர் பெற்றவன் . பிரபல கெட்டிக்கார ராஜா. ” தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மரத்தில் ஏறி…. என்று ஆரம்பித்து ஒவ்வொரு அருமையான சமயோசித வேதாள கதைகள் எவ்வளவு சொல்லி இருக்கிறேனே. அந்த விக்ரம தித்தன். பர்த்ருஹரியின் தம்பி.
ராஜா பர்த்ருஹரி சமஸ்க்ரிதத்தில் மஹா பண்டிதன். அவன் எழுதிய 300 ஸ்லோகங்கள் த்ரிசதி. சுபாஷிதம், எனப்படும். நூறு நீதி சதகம். நூறு வைராக்கிய சதகம். இன்னும் நூறு ஸ்ருங்கார சதகம்.
முதலில் வைராக்ய சதகத்தை ரசிப்போம் . பர்த்ருஹரி நீதிமான். தனது அழகிய ஆசை மனைவி அரண்மனை தேரோட்டி மீது காதல் கொண்டவள் என்று அறிந்து நாட்டை அரச போகத்தை எல்லாம் வெறுத்து துறந்து சன்யாசியானவன். பல வருஷம் காட்டில் தவம் புரிந்து சந்நியாசியாக ஊர் எல்லாம் சுற்றியவன் பர்த்ருஹரி. முதலில் கோரக்நாத் யோகியின் சிஷ்யன்.அப்புறம் தெற்கே வந்து பட்டினத்தார் சிஷ்யன் பத்ரகிரியாரானவன்.
2, भ्रान्तं देशमनेकदुर्गविषमं प्राप्तं न किञ्चित्फलं त्यक्त्वा जातिकुलाभिमानमखिलं सेवा कृता निष्फला । भुक्तं मानविवर्जितं परगृहेष्वाशंकया काकवत् तृष्णे जृंभसि पापकर्मनिरते नाद्यापि संतुष्यसि॥
Bhraantam desamanekadurgavishamam praaptam na kinchitphalam Tyaktwaa jaatikulaabhimaanamakhilam seva kritaa nishphalaa
Bhuktam maanavivarjitam paragriheshwaashankaya kaakavat Trishne jrimbhasi paapakarmanirate naadyaapi santushyasi
ப்⁴ராந்தம் தே³ஶமநேகது³ர்க³விஷமம் ப்ராப்தம் ந கிஞ்சித்ப²லம் த்யக்த்வா ஜாதிகுலாபி⁴மாநமுசிதம் ஸேவா க்ருʼதா நிஷ்ப²லா ।
பு⁴க்தம் மாநவிவர்ஜிதம் பரக்³ருʼஹேஷ்வாஶங்கயா காகவத் த்ருʼஷ்ணே ஜ்ருʼம்ப⁴ஸி பாபகர்மபிஶுநே நாத்³யாபி ஸந்துஷ்யஸி ॥ 2 ॥
‘ஒவ்வொருவகுக்கும் என்ன ஹ தோன்றுகிறது . ‘நான் சுற்றாத இடம் கிடையாது. எங்கெல்லாமோ அலைந்தேன். கல், முள், பள்ளம், மேடு, காடு, நாடு ஒன்று பாக்கி இல்லை. சுற்றி சுற்றி அலைந்து என்னத்தைக் கண்டேன்? என்ன பிரயோஜனம்? என்ன சொன்னாலும் தட்டாமல் இரவு பகல் பார்க்காமல் வீடு, மானம் மரியாதை எதுவும் பார்க்காமல் அடிமையாக ராஜாவுக்கு சேவை, முதலாளி, எஜமானன், பணக்காரர்களுக்கு எல்லாம் ஸலாம் போட்டுக்கொண்டு உழைத்தேன், சே, இதனால் என்ன பலன் அடைந்தேன்? தன்னை யாராவது ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயத்தோடு காக்கை அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு பயந்து கொண்டு சாப்பிடுவது போல் சோற்றை உண்டேன். ”ஏ பேராசையே , என்னுள் இருந்து கொண்டு என்னை இப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க ஆட்டுவிக்கிறாய். தப்பு தப்பாக ஒவ்வொன்றையும் செய்ய வைக்கிறாய். இன்னுமா உனக்கு திருப்தி இல்லை?”
3. उत्खातं निधिशङ्कया क्षितितलं ध्माता गिरेर्धातवो निस्तीर्णस्सरितांपतिर्नृपतयो यत्नेन संभाविताः ।
मन्त्राराधनतत्परेण मनसा नीताः श्मशाने निशाः प्राप्तः काणवराटकोऽपि न मया तृष्णेऽधुना मुञ्च माम् ॥
Utkhaatam nidhishankayaa kshititalam dhmaataa girerdhaatavo Nisteernah saritampatirnripatayo yatnena santoshitaah
Mantraaraadhanatatparena manasaa neetaah shmashaane nishaah Praaptah kaanavaraatako’pi na mayaa trishne ‘dhunaa muncha maam
உத்கா²தம் நிதி⁴ஶங்கயா க்ஷிதிதலம் த்⁴மாதா கி³ரேர்தா⁴தவோ நிஸ்தீர்ண: ஸரிதாம் பதிர்ந்ருʼபதயோ யத்நேந ஸந்தோஷிதா: ।
மந்த்ராராத⁴நதத்பரேண மநஸா நீதா: ஶ்மஶாநே நிஶா: ப்ராப்த: காணவராடகோঽபி ந மயா த்ருʼஷ்ணே ஸகாமா ப⁴வ ॥ 3 ॥
”ஆசை எவனை விட்டது? பூமியை முதுகு ஓடிய ஆழமாகத் தோண்டுகிறான். மலையைக் குடை கிறான். எதற்கு? அதற்குள் இருக்கும் விலையுயர்ந்த கனிம பொருள், வைரம், தங்கம் கிடைக்காதா என்று தானே. அதையெல்லாம் எடுத்து அலசி, உருக்கி பாடுபடுகிறான் . கடல் கடந்து வெளிநாடுகளில் போய் ஆதாயம் தேடுகிறான். ராஜாக்களை வாழ்த்தி புகழ்ந்து பாடி ஆடி ஆதரவு நாடுகிறான். இரவெல்லாம் ஸ்மசானத்தில் அமர்ந்து பூஜைகள் புரிந்து மந்திரங்கள் ஜெபித்து துர் தேவதைகள் உதவியையும் நாடுகிறான். தகரத்தைத் தங்கமாக்கும் வித்தை தெரிந்து கொள்ள துடிக்கிறான். நானும் இதெல்லாம் செய்தவன் தான். இதனால் என்ன பயன் பெற்றேன். செல்லாக்காசும் பெறவில்லை. வேண்டவே வேண்டாம். பேராசையே என்னைவிட்டு ஓடு.ஓடிவிடு ”
4. खलालापाः सोढाः कथमपि तदाराधनपरैः निगृह्यान्तर्बाष्पं हसितमपि शून्येन मनसा । कृतो वित्तस्तम्भप्रतिहतधियामञ्जलिरपि त्वमाशे मोघाशे किमपरमतो नर्तयसि माम् ॥ ४॥
khalaalaapaaH soDhaaH kathamapi tadaaraadhanaparaiH nigR^ihyaantarbaashhpa.n hasitamapi shuunyena manasaa .
kR^ito vittastambhapratihatadhiyaamaJNjalirapi tvamaashe moghaashe kimaparamato nartayasi maam.h .. 4..
க²லாலாபா: ஸோடா:⁴ கத²மபி ததா³ராத⁴நபரை: நிக்³ரு’ஹ்யாந்தர்பா³ஷ்பம் ஹஸிதமபி ஶூந்யேந மநஸா । க்ரு’தோ வித்தஸ்தம்ப⁴ப்ரதிஹததி⁴யாமஞ்ஜலிரபி த்வமாஶே மோகா⁴ஶே கிமபரமதோ நர்தயஸி மாம் ॥ 4॥
மோசமான, தப்பான எஜமானனுக்கு சேவகம் செய்யும்போது அவர்களுடைய கேவலமான குணத்தை யும், நடவடிக்கையையும் பொறுத்துக் கொண்டு தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு பணி புரி கிறோம் , உள்ளூர அழுகை வந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரிக்கிறோம். எல்லாம் பணம் செய்யும் மாயை. அதன் மேல் நமக்குண்டான ஆசை. வெறுத்து ஒதுக்கும் வைராக்யம் எங்கே போயிற்று.?
5. अमीषां प्राणानां तुलितबिसिनीपत्रपयसां कृते किं नास्माभिर्विगलितविवेकैर्व्यवसितम् । यदाढ्यानामग्रे द्रविणमदनिःसंज्ञमनसां कृतं वीतव्रीडैर्निजगुणकथापातकमपि ॥ ५॥
amiishhaaM praaNaanaa.n tulitabisiniipatrapayasaa.n kR^ite ki.n naasmaabhirvigalitavivekairvyavasitam.h .
yadaaDhyaanaamagre draviNamadaniHsa.nGYamanasaa.n kR^ita.n viitavriiDairnijaguNakathaapaatakamapi .. 5..
அமீஷாம் ப்ராணாநாம் துலிதபி³ஸிநீபத்ரபயஸாம் க்ருʼதே கிம் நாஸ்மாபி⁴ர் விக³லித விவேகைர்வ்யவஸிதம். யதா³ட்⁴யாநாமக்³ரே த்³ரவிணமத³நி:ஸம்ஜ்ஞமநஸாம் க்ருʼதம் வீதவ்ரீடை³ர் நிஜகு³ணகதா²பாதகமபி ॥ 5 ॥
நம்முடைய பலம், சக்தி எல்லாம் வானளாவியது என்ற மூட நம்பிக்கை தான் நமக்கு முதல் எதிரி. அடேய், அது தாமரை இலைத் தண்ணீரடா. எந்த கணமும் உன்னை விட்டு ஒட்டாமல் வழிந்து ஒரே ஓட்டம் ஓடிவிடும் என்று புரியவில்லையே! யோசிக்காமல், ஆற அமர்ந்து சிந்திக்காமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருந்து செத்து மடியுமிந்த விட்டில் பூச்சி வாழ்க்கையை யாரும் புரிந்து கொள்ளவில்லையே. ஏதோ கொஞ்சம் பணம் சொத்து இருக்கிறதென்ற கர்வத்தில், மமதையில், அதுவே என்றும் நிலைக்கும் என்ற தவறான எண்ணத்தில், மற்றவன் என்னை புகழ் பாட, நான் தான் ஏகாதிபத்திய சக்ரவர்த்தி, சர்வ சக்தி, இந்திரன் சந்திரன் என்று பகல் கனவில் காலம் கழித்து விட் டேனே.
6 क्षान्तं न क्षमया गृहोचितसुखं त्यक्तं न संतोषतः सोढा दुःसहशीतवाततपनक्लेशा न तप्तं तपः । ध्यातं वित्तमहर्निशं नियमितप्राणैर्न शम्भोः पदं
तत्तत्कर्म कृतं यदेव मुनिभिस्तैस्तैः फलैर्वञ्चिताः ॥ ६॥
Kshaantam na kshamayaa grihochitasukham tyaktam na santoshatah Soddhaah dussahasheetavaatatapanakleshaah na taptam tapah Dhyaatam vittamaharnisham niyamitapraanairna shambhoh padam Tattatkarma kritam yadeva munibhistaistaih phalairvanchitaah.
க்ஷாந்தம் ந க்ஷமயா க்³ருʼஹோசிதஸுக²ம் த்யக்தம் ந ஸந்தோஷத: ஸோடா⁴ து:³ஸஹஶீதவாததபநக்லேஶா ந தப்தம் தப: । த்⁴யாதம் வித்தமஹர்நிஶம் நியமிதப்ராணைர்ந ஶம்போ:⁴ பத³ம் ;தத்தத்கர்ம க்ருʼதம் யதே³வ முநிபி⁴ஸ்தைஸ்தை: ப²லைர்வஞ்சிதா: ॥ 6 ॥
‘அதை விடுங்கள், மறந்து விடுங்கள், மறந்துவிட்டேன் மன்னித்து விட்டேன்…. என்கிறோமே, உண்மை யில் நாம் அவ்வளவு உயர்ந்த குணம் உடையவர்களா? இல்லவே இல்லை. வேறு வழியில்லை நமக்கு. எதெதையோ உத்தேசித்து பொறுத்துக் கொள்கிறோம். குளிர் உஷ்ணம் எல்லாம் பொறுத்துக் கொள்ள வில்லையா. தவமா செய்தோம்? இரவும் பகலும் பணம் ஒன்றே தானே நம் எண்ணத்தை வியாபித்தது! மூச்சை அடக்கி சிவ தியானம் ஒருநாளாவது??? ஹுஹும்… ரிஷிகளைபோல தவம், விரதம், தியாகம் செய்ய முயற்சித்தாலும் ரிஷிகளாகிவிடுவோமா? அவர்கள் அடைந்ததை துளியாவது பெறுவோமா? அசல் வேறு நகல் வேறு.
இந்த உலகத்தில் உழைக்காமல் எவனும் சுகமடைய முடியாது. தான் உழைக்க வில்லை யென்றாலும் அவன் அப்பன் பாட்டன் உழைத்து சேர்த்து வைத்த சொத்து பலனைத் தருவது வழக்கமாகிவிட்டது. அவர்கள் அந்த உழைப்பின் பலனைத் தாம் துய்க் காமல் விட்டுக்கொடுப்பதில் எவ்வளவு கஷ்டங் களை, துன்பங்களைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது என்று உழைத்தவர்களுக்கு தான் தெரியும். உலக இன்பங்களில் மட்டும் அல்ல, ஆத்ம ஞான இன்பத்தை அடையவும் ஒருவன் ரொம்ப பிரயாசைப்பட்டால் தான் முடியும். இந்த இரண்டு இன்பங்களில் ஸ்ரேஷ்டமானது ஆத்ம ஞான இன்பம் தான். உலக இன்பத்தை அனுபவிப்பதில் திருப்தி கிடையாது. மேலும் மேலும் தேவைகளை
மனம் தேடும். நாடத் துடிக்கும்.
மனதில் ஆசைகளுக்கு எல்லையோ முடிவோ கிடையாது. எப்போதும் வளர்வது. அதைத் தேடியே வாழ்க்கை முடிந்துவிடும். ஆசை தான் துன்பத்துக்கு ஆதாரம். ஆத்ம ஞான இன்பம் அப்படியல்ல. அதிருப்தியிலிருந்து திருப்தியான மனநிலைக்கு அழைத்துச் செல்கிறது.
யாக்ஞவல்கியர் தனது செல்வங்களையெல்லாம் சமமாக இரண்டாக பிரித்து தனது இரண்டு மனைவி களான மைத்ரேயி, காத்யாயினி கொடுக்கும் போது, இரண்டாவது மனைவி மிகவும் சந்தோஷத்தோடு தனது பங்கை பெற்றுக் கொண்டு சென்று விட்டாள். ஆனால் முதல் மனைவியான மைத்ரேயி அதை வாங்குவதற்கு முன் ஒரு கேள்வி கேட்டாள்.
”இந்த செல்வம் எனக்கு முழுமனதிருப்தியை கொடுக்குமா?
”இல்லை மைத்ரேயி, கொடுக்காது. மேலும் உலகத்திலுள்ள அனைத்தும் உடலுக்குத்தான் சுகத்தைக் கொடுக்கும், மனதுக்கு சுகத்தை கொடுக்கும் சக்தி கிடையாது. மனதை நிறைக்கும் சக்தி அவைகளுக்கு கிடையாது”
”குருநாதா, மனநிறைவை கொடுக்கும் சக்தியற்ற இந்த செல்வங்களை யார் நாடுவார்?. எனக்கு மன நிறைவை கொடுக்கின்ற செல்வம்தான் வேண்டும். எனவே நீங்கள் குருவாக இருந்து மனநிறைவை கொடுக்கவல்ல உபாயத்தை உபதேசிக்க வேண்டும்.” என்றாள் மைத்ரேயி.
யாக்ஞவல்கியர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தனக்கு ஒரு தகுதியான சிஷ்யை கிடைத்ததில் மகிழ்ந்தார். மனநிறைவை வெளியிலுள்ள எதைக் கொண்டும் அடைய முடியாது. ஜீவனுடைய இயல்பே எப்பொழுதும் மனநிறைவுடன் இருப்பது.
7. भोगा न भुक्ताः वयमेव भुक्ता: तपो न तप्तं व्यमेव तप्ताः कालो न यातो वयमेव यातास्तृष्णा न जीर्णा व्यमेव जीर्णाः
Bhogaa na bhuktaa vayameva bhuktaastapo na taptam vayameva taptaah Kalo na yaato vayameva yaataastrishnaa na jeernaa vayameva jeernaah
போ⁴கா³ ந பு⁴க்தா வயமேவ பு⁴க்தா: தபோ ந தப்தம் வயமேவ தப்தா: । காலோ ந யாதோ வயமேவ யாதா-ஸ்த்ருʼஷ்ணா ந ஜீர்ணா வயமேவ ஜீர்ணா: ॥
உண்மையை சொல்லப்போனால் ஆஹா, இந்த உலக வாழ்க்கை எனக்கு சுகத்தை கொடுத்தது என்பதே தவறு. நம்மை அப்படியே உருட்டி லபக்கென்று இந்த உலக மாயை தான் சாப்பிட்டு சுகமடைந்தது. பெரிதாக நாம் எந்த தவமும் செய்யவில்லை. எந்த தவச்சூடும் தஹிக்கவில்லை .
மாறாக இந்த உலக மாயை நம்மை வறுத்து எடுத்து விட்டது. இன்னொரு விஷயம். நாம் காலத்தை செலவழிக்கவில்லை. காலத்தின் போக்கில் நாம் தடுமாறி விழுந்து மீளவில்லை.நாமாகவா முதியவர் களானோம்?. யாராவது ஒருவராவது கிழவன் கிழவியாக விரும்பினோமா? காலம் தானே மாற்றுகிறது. நமது பேராசைக்கு மட்டும் வயதாகவில்லையே , என்றும் அதேபோல் இருக்கிறதே!!
என்ன அதிசய உலகமடா இது? எதை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணி அதைத் தேடி ஓடுகிறோம். ஆனால் இன்பத்தை துய்ப்பதற்கு பதில் நாம் தேர்ந்தெடுத்து தேடிய அந்த அல்ப ஆனந்தம் தரும் வஸ்துவை அனுபவித்து சக்கையாக உறிஞ்சி நம்மை துப்பி வெளியே தள்ளிவிவிடுகிறது.
எதெல்லாம் உண்டு களிக்க எண்ணுகிறோமோ அது எல்லாமே நம்மை உண்டுவிடுகிறது. தவம் செய்ய போனவனை தவம் சுட்டெரித்து காயப் படுத்தி அனுப்பி விட்டது தான் மிச்சம். ஓடும் காலத்தை அவன் அனுபவிக்கிறோம் என்று எண்ணினானே தவிர காலம் அவனை விழுங்கி விட்டது என்று எவனும்
உணரவில்லை. அவன் பேராசை பழசாக வில்லை.அவன் தான் மூப்பு எய்து இன்னும் அந்த பேராசையின் வசம் சிக்கிக்கொண்டு தவிக்கிறான். அது அப்படியே இருக்கிறதே. ஆசைகள் அதிக மாகிக் கொண்டே செல்கிறது. ஆனால் அவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய சக்தியும், காலமும் குறைந்து கொண்டே செல்கின்றது. எனவே நிறைவேறாத ஆசைகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றது. வயதான காலத்தில் இந்த ஆசைகளின் பிடியிலிருந்து நம்மால் மீள முடியாது. நம் கவனத்தை வேறு வழியில் செலுத்துவதற்கு தேவையான சக்தியும் நம்மிடம் இருக்காது. நமக்கு உறுதுணையாகவும் யாருமே இருக்க மாட்டார்கள். ஆறுதலாகவும் யாரும் இருக்கமாட்டார்கள். ஆசை, காலம் இவைகளின் உடும்புப் பிடியிலிருந்து நாம் தப்பவேண்டும். காலம் ஓடுவதில்லை. நாம் தான் அதை விட்டு ஓடுகிறோம். அது என்றும் நிரந்தரமாக இருந்து கொண்டே இருக்கிறது. ரயிலில் போகும் போது ஜன்னல் வழியாக பார்த்தால் மரங்கள் வீடுகள் எல்லாம் எதிர் பக்கம் நோக்கி வேகமாக ஓடுமே அது போல.. நாம் தான் ஓடிக்கொண்டே இருக்கிறோம். மறைகிறோம்.
8. वलीभिर्मुखमाक्रान्तं पलितेनाङ्कितं शिरः । गात्राणि शिथिलायन्ते तृष्णैका तरुणायते ॥ ८॥
balibhir mukham aakraantam paliteenaamkitaa s`irau |gaatraan`i s`ithilaayantee trishn`aikaa tarun`aayatee 8
வலீபி4ர்முக2மாக்ராந்தம் பலீதேனாங்கிதம் ஶிர: | கா3த்ராணி ஶிதி2லாயந்தே த்ருஷ்ணௌகா தருணாயதே.
“ஒன்றே ஒன்றுதான் நம்முடைய கண்ட்ரோல் ஆதிக்கம், விருப்பு, வெறுப்பு ஒன்றுமில்லாமல் தானாகவே நம்முடைய தேகத்தில், மனதில் வளர்ந்து கொண்டிருக்கிறது, அதுதான் ஆசை, மற்றதெல்லாம் சக்தியிழந்து கொண்டேயிருக்கும். முகம், உடல் இவைகளில் தோல் சுருக்கம் வரும், தலைமுடி நரைக்கத் தொடங்கும். ”என்னடா சிவா, இப்படி மாறிட்டே? தலை தும்பைப்பூவா நரைச்சு, பஞ்சு மூட்டையா போய்டுத்தே உன் பல்லெல்லாம் ஒண்ணையும் காணோம். கசங்கிப் போன நியூஸ்பேப்பர் மாதிரி சுருக்கமா இருக்கு முகம். முதுகு வளைஞ்சுடுத்து. கூன் பாண்டியனாயிட்டியே? நான் ஒண்ணு கேட்டால் நீ ஒண்ணு பதில் சொல்றே. காது டமாரம்” என்கிறார்களே உன்னிடம் பேசவே பிடிக்காமல் ஓடுகிறார்களே. இது தான் வாழ்க்கை. உலகம்.
வயதான காலத்தில் இந்த அறிவுடன் இருந்துவிட்டால் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கலாம் இந்தக் காலத்தில் தான் நிதித்யாஸன தியானத்தை யாருடைய தொந்தரவு இல்லாமல் நன்றாக செய்யமுடியும். ஆனால் அறிவில்லா தவர்கள், மற்றவர்கள் தன்னுடன் பேசாமல் இருந்துவிட்டால் தன்னை ஒதுக்குகி றார்கள், அவமதிக்கிறார்கள் என்ற வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்களேயானால் காலத்தை நன்றாக உபயோகிக்க தெரியாதவர்கள் ஆவார்கள்.
9. निवृत्ता भोगेच्छा पुरुषबहुमानोऽपि गलितः समानाः स्वर्याताः सपदि सुहृदो जीवितसमाः । शनैर्यष्ट्युत्थानं घनतिमिररुद्धे च नयने अहो मूढः कायस्तदपि मरणापायचकितः ॥ ९॥
nivrittaa bhogeecchaa purusha-bahu-maano’pi galita samaanausvar-yaatau sapadi suhrido jiivita-samaha|
s`anair yasht`y utthaanaa ghana-timira-ruddhee ca nayanee aho muud`haha kaayas tad api maran`aapaaya-cakitaha. 9
நிவ்ரு’த்தா போ⁴கே³ச்சா² புருஷப³ஹுமாநோऽபி க³லித: ஸமாநா: ஸ்வர்யாதா: ஸபதி³ ஸுஹ்ரு’தோ³ ஜீவிதஸமா: । ஶநைர்யஷ்ட்யுத்தா²நம் க⁴நதிமிரருத்³தே⁴ ச நயநே அஹோ மூட:⁴ காயஸ்தத³பி மரணாபாயசகித: ॥ 9
இந்த உலக இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற என்னமோ, ஆசையோ வெறுத்து விட்டது. அலுத்து விட்டது.சலித்து விட்டது. என் அகம்பாவம் என்னை விட்டொழிந்தது. என் சுய கௌரவம், தலைக்கனம் இப்போது காணோம். என்னுடைய நண்பர்கள் எங்கோ போய்விட்டார்கள். குச்சி,கம்பு ஊன்றாமல் எழுந்திருக்க முடியாதவன் நான். கண் பார்வை மங்கல். எதிரே எருமை மாடு நிற்பது புகைமண்டலமாக தெரிகிறது. கண்ணில் நீர் கோர்த்துக் கொள்கிறது. அப்படியும் மரணம் என்றால் எனோ இந்த தேகத்துக்கு ஒரு பயம். ஆச்சர்யம்…
10. आशा नाम नदी मनोरथजला तृष्णातरङ्गाकुला रागग्राहवती वितर्कविहगा धैर्यद्रुमध्वंसिनी । मोहावर्तसुदुस्तरातिगहना प्रोत्तुङ्गचिन्तातटी
तस्याः पारगता विशुद्धमनसो नन्दन्ति योगीश्वराः
Aaasa naama nadii manoratha-jalaa trishn`aa-taramgaakulaa raaga-graahavatii vitarka-vihagaa dhairya-druma-dhvaasinii |
mohaavarta-sudustaraatigahanaa prottumga-cintaa-tat`ii tasyaupara-gataa vis`uddham alaso nandanti yogiis`varau 10
ஆஶா நாம நதீ³ மநோரத²ஜலா த்ரு’ஷ்ணாதரங்கா³குலா ராக³க்³ராஹவதீ விதர்கவிஹகா³ தை⁴ர்யத்³ருமத்⁴வம்ஸிநீ । மோஹாவர்தஸுது³ஸ்தராதிக³ஹநா ப்ரோத்துங்க³சிந்தாதடீ தஸ்யா: பாரக³தா விஶுத்³த⁴மநஸோ நந்த³ந்தி யோகீ³ஶ்வரா: ॥ 10॥
என் எதிர்பார்ப்பு ஒரு நீளமான நதி. அதில் என் கற்பனை எண்ணங்கள் தான் ஜலம் .ஆசைகள் தான் அலைகள். ‘ஆசையே அலைபோல.” எதெல்லாம் கண்ணில் படுகிறதோ அதன்மேல் எல்லாம் எனக்கு ஆசை. அதை உடனே துய்க்கவேண்டும் என்ற பசிக்கு ஆகாரம் தேடுகிறேன். என் எண்ணமலைகளைப் பார்த்தாயா? அதெல்லாம் பேராசையால் சேர்ந்தவை. அறியாமையில் மூழ்கி இருப்பவன் நான். ஆழமான சம்சார சாகரத்தை கடக்க முடியாதவன். உயரமான ஏறவே முடியாத கரைச்சுவர்கள். அவை தான் என் தாபங்கள். நான் யோகியாக இருந்தால் பற்றற்றவனாக இருந்தால் எப்போதோ இதெல்லாம் கடந்திருக்க முடியும். அதற்கு பகவான் அனுக்கிரஹம் வேண்டுமே நான் எங்கே போவேன்? அது இருந்தால் என் மனத்தை அடக்கி இருப்பேனே.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



