
கொஞ்சம் சிந்திப்போம். – நங்கநல்லூர் J K SIVAN
வாழ்க்கையில் எது வசதி? பணமா, மனமா? எது நிறைந்திருக்க வேண்டும் ? பணம் நிறைய இருந்தால் திருப்தி தருமா? ஆசைக்கோர் அளவில்லை, மேலும் மேலும் அது பெருக வழி தேடுகிறோமே. பணம் சேர்ந்து விட்டால் குணம் அடியோடு மாறி விடுகிறதே. இல்லாத ஒரு கௌரவம் அந்தஸ்து நம்மை ஆக்கிரமித்து ஏழை எளியோர் உறவை, நட்பை தூர ஓதுக்குகிறதே .
யாராவது நெருங்கினால் நம்மிடம் பணம் பெறுவதற்கு அடிபோடுகிறானோ என்ற சந்தேகம். பயம். அவனை விலக்கி , துண்டித்து விடுகிறோம். சமூகத்தில் பெரிய மனிதர்களாக காட்டிக்கொள்ள படாடோபம், கார், பங்களா, நகைகள் தேவைப்படுகிறது. இல்லாதவன் எவனாவது திருட முயற்சிக்கும்போது பாது காப்பு தேவையாகிறது. பெயர் தெரியாத வியாதிகள் எல்லாம் உடலில் இருப்பதாக பயத்தில் அடிக்கடி ஆஸ்பத்திரி சென்று பரிசோதனை செய்கிறோம்.
பொய் பித்தலாட்டம், தற்பெருமை மிதமிஞ்சிப்போய் உண்மை ஸ்வரூபம் காணாமல் போகிறதே.
கோவிலுக்கு சென்றால் கூட மற்ற பக்தர்கள் போல் வரிசையாக அமைதியாக தரிசனம் செய்ய மறுத்து சீக்கிரம் நிறைய பணம் கொடுத்து ஸ்பெஷலாக vip தரிசனம் செய்ய பணம் கட்டுகிறோம். எவர் கையிலாவது பணத்தை அழுத்தி உள்ளே தனியாக அழைத்து செல்ல வழி தேடுகிறோம்.
ஆகவே பணம் மனிதனை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை மாற்றிவிடுகிறது. குணம் வேறு படுகிறது.
முன்பெல்லாம் பணம் இல்லாவிட்டாலும் பெரிய கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தோம். உறவுகள் வருவோரும் போவோருமாக இருந்தனர். அவரவர் தம்மிடம் உள்ளதை பங்கிட்டுக் கொண்டனர்.
டாம்பீகம் இல்லை. இருப்பதை எளிமையோடு ஒருவரோடு ஒருவர் பரிமாறிக்கொண்டு அவரவர் ஐஸ்வர்யத்தை ஒப்பிடாமல் சந்தோஷமாக வாழ்ந்தனர். உறவு வலுத்தது. இப்போது உறவுகள் குறுகிவிட்டது.
மனம் திருப்தி அடைய பணம் தேவை இல்லை. இருப்பதை சந்தோஷமாக ஏற்று அதற்குள் வாழ கற்றுக் கொண்டால் வாழ்க்கை நிம்மதி பெறுகிறது. எல்லோரிடமும் சரி சமமாக பழக பணம் தேவை இல்லை நட்பு மனதால் வளர்வது. வளர்த்து படிக்க வைத்த தந்தையின் அறிவையே கேலி செய்யும் பிள்ளை அப்போது இல்லை, படிக்காத தாயை உதாசீனம் செய்யும் பிள்ளை இல்லை. தனது உடமைகளை எல்லாம் அடகு வைத்து தியாகம் செய்து அமெரிக்கா அனுப்பிய அப்பாக்களை வெறுக்கும் பிள்ளை அப்போது இல்லை.
காலம் என்பது திரும்ப திரும்ப சுழலும் வட்டம். உலகம் போல தான் அதுவும். இரண்டும் இணை புரியாதது. காலம் இடம் எல்லாம் மாறிக்கொண்டே வரும்போது வெள்ளத்தில் மிதக்கும் சருகும் மிதந்து கொண்டே தான் வேகமாக இழுத்துச் செல்லப்படுகிறது. நிதானம், விவேகம் எல்லாம் அறியப்படாமல் வாழ்வது ஆடையில்லாமல் திரிவது போல. வெட்கப்படவேண்டிய விஷயம்.
உலகத்தில் எல்லோரும் சில காலம் மட்டுமே வாழ உரிமை, அனுமதி பெற்றவர்கள். எவரும் சாஸ்வதம் இல்லை என்பது மறந்து போகிறது. பிறப்பு இறப்பை நோக்கி செல்கிறது. இறப்பு மீண்டும் பிறப்பை தரும் பாதை. இதை புரிந்து கொண்டு இருக்கும் சில நாட்களை ஏன் சந்தோஷமாக ஒற்றுமையாக வாழ கற்றுக்கொள்ளவில்லை.? எதிர்காலம் ஏன் பயமுறுத்த வேண்டும்? எதற்கு அதற்காக சேமிப்பு. இப்போதைய வாழ்நாளே முன்னாளின் எதிர்காலம் தானே?
பாட்டி முன்பே பாடிஇருக்கிறாளே: பாடுபட்டுத் தேடிப் பணத்தைச் சேகரிக்கும் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள். கூடு விட்டு இங்கே ஆவி போனபின் யாரை அந்த பணம் சேரப்போகிறதோ? த்ரிப்தியாக அதை நல்ல வழியில் செலவழியுங்கள், பிற்கால நினைப்பு தற்காலத்தை இழக்க செய்ய வேண்டாமே. உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க முதலில் மனம் த்ரிப்தியாக இருக்கவேண்டும். * நல்வாழ்வுக்குத் தேவையான தியானம், எல்லோரிடமும் அன்பு அவசியம். நல்லோர் நட்பு நலம் தரும் . அல்ப சிநேகிதம் பிராண சங்கடம்.
60 க்கு மேல் ஒவ்வொரு வருஷமும், 70க்கு க்கு மேல் ஒவ்வொரு மாசமும், 80 க்கு மேல் ஒவ்வொரு கிழமையும், 90 க்கு மேல் ஒவ்வொரு நாளும், 100 க்கு மேல் ஒவ்வொரு மணியும், பகவான் கொடுத்த ‘போனஸ்’ என்பது புரியட்டும்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



