MAYIL RAVANAN 4 J K SIVAN

மயில் ராவணன் – 4   –    நங்கநல்லூர்   J K  SIVAN 4
 மச்சவல்லபனுக்கு  ஆனந்தம், அதே நேரம் இன்ப அதிர்ச்சி  ;  ‘‘ நீரா என் தந்தை? நீங்கள் தான் அந்த மஹா வீரர் ஹனுமானா? உங்களோடா  நான்  இத்தனை மணி நேரம் யுத்தம் செய்தேன் . உங்கள் பலத்தை எனக்கும் தரவேண்டும் என்று  வாயு பகவானிடம் கேட்டதால் அல்லவோ உயிர் பிழைத்தேன்..”என்று ஹனுமனை வணங்க,  ஹனுமான் அவனை வாரி எடுத்து உச்சி மோர்ந்து தலையைக் கோதி விட்டபடி கண்ணீர் விட்டார்,
 ‘குமரா, நான் உன்னை இந்தக் கையாலா அடித்து விட்டேனடா  ரொம்ம வலிக்கிறதா  மகனே? ’ என ஆறுதல் கூறினார். அதன் பின் இருவரும் குசலம் பரிமாறிக் கொண்டு தத்தம் கதையைக் கூறிக் கொண்டப் பின்னர் அங்கு தான் வந்த  கதைக்கான காரணத்தையும்  ஹனுமான்   மச்சவல்லபனுக்கு சொல்லத் தொடங்கினார்.

‘என் பிள்ளாய்….நான் உனக்கொரு உண்மையை சொல்றேன். கேள் . நான் வணங்கும் நாயகன் ஸ்ரீ ராமன்  மனைவியை பத்து தலை ராவணன் தூக்கிப் போய் சிறையில் வைத்தான். அவளை விடுதலை செய்து அழைத்துப் போக ராமன் தன் சகோதரன் லஷ்மணனையும் சுக்ரீவன் சேனையையும் அழைத்து வந்து இலங்கையில் யுத்தம் செய்தார். அதிலே பத்து தலை ராவணனின் சைனியங்கள் நிர்மூலமாகி, அவன் சந்ததியினரும் அழிந்து போக, அவனும் தனது தாயாதியான மயில் ராவணனின் உதவியை நாடினான். மயில் ராவணனும் தன் தாயாதிக்கு அநீதி வந்துதுட்டதென நினைத்து ராம லஷ்மணர்களை கொன்று பழி வாங்குவதாக சபதமும் செய்து, அவர்களை வஞ்சகமாக இங்கே கொண்டு வந்துட்டான். அவர்களை காளிக்கும் பலி தரப்போறானாம். நியாயமில்லாத, நேர்மை இல்லாத பத்து தலை ராவணனுக்காக அவன் தாயாதி மயில் ராவணன் ராம லஷ்மணர்களை கொல்வதும் நியாயமில்லையே. ஒருவன் மனைவியை இன்னொருத்தன் அபகரிப்பது தர்ம சாஸ்திரத்திலுண்டா? நீயே சொல் என்  பிள்ளாய்………தர்மம் பேசும் நீயே சொல். அதனால்  தான் உள்ளே போய் மயில் ராவணனைக் கொன்று ராம லஷ்மணர்களை மீட்க வந்திருக்கிறேன்.  என்னை தடுப்பது உனக்கே நியாயமாக ப்படுகிறதா?.

மச்சவல்லபனும் நிலை குலைந்து போனான். ‘என் தந்தையே,  நீங்கள் சொன்னது  என் மனதுக்கு புரிகிறது. ஆனால் என் நிலையைப் பாருங்கள். நானும் தர்மம் காப்பவன். அதை மீறாதவன். என்னை பெற்றெடுத்தவள் என்னை சமுத்ரகரையிலே விட்டு சென்ற  பின்னே சமுத்ரத்தைத் தாண்டி வேட்டையாட வந்த மயில் ராவணன் என்னைப் பார்த்தார். அவருக்கோ ஒருவரைப்  பார்த்த மட்டிலேயே ஜாதகம் பூராவும் புரிந்திடும். அத்தனை வித்தை, அத்தனை சக்தி உள்ளவர்  என்னைப் பார்த்ததும் ‘அடே பொடிப்பயலே…… உன்னை யாரும் ஒண்ணும் பண்ணிவிட முடியாது. நீயொரு பராக்கிரமசாலி, உன்னை யாரும் ஜெயித்திட முடியாது’ என்று கூறியவன் நான் சிறுவனென்றும் பார்க்காமல் என் முன்னே தண்டனிட்டு அமர்ந்து என் காலையும் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு வரம் ஒண்ணு கேட்டான்.

”இதென்னடா, இவன் போய் என் காலில் விழுகிறானே, என்னிடம் போய் வரமும் கேட்கிறானே ‘என்றெண்ணி ‘ஐயா பெரியவரே சிறுவன் என் காலில் நீர் ஏன் விழுகிறீர்?’ என கேட்டேன்.
 ‘நான் ஆளும் பாதாள இலங்கையை பாதுகாக்க பராக்கிரமசாலி ஒருவனைத்  தேடினேன். வாயு பகவான் ஆசிர்வாதம் கொடுத்த நீ  தானப்பா அதற்கு ஏற்ற ஆள் என என் மனது கூறுகிறது.  நீ வந்து என் அரண்மனையை பாது காக்க வேண்டும்”  என்று கேட்க நானும் இங்கு வந்து சிறு வயது முதலே என் சேவகத்தை மயில் ராவணனுக்கு செய்கிறேன். அதனால்  தான் இதுவரை என் முகம் கோணாமல், எனக்கு வலி இல்லாமல், நோவு இல்லாமல், சோறு போட்டு வளர்த்தவனுக்கு நன்றியோடு இருக்கிறேன்.  உம்மை எப்படி ஐயா  என் தந்தையாக இருந்தும் நான் உள்ளே விடமுடியும்? அது என் மன சாட்சிக்கு விரோதம் இல்லையா? தர்ம நெறிக்கு முரணானது இல்லையா? நான் உயிருடன் இருக்கும்போது எனக்கு சோறு போட்டவனுக்கு துரோகம் செய்வது சரியா?’ என்றும் கூற இருவரும் இருவர் பக்கமும் நியாயம் இருந்ததால், இருவரும் தர்ம நெறியை மீறக் கூடாது என்பதால் வேறென்ன வழி?

 ‘பிதாவே, உங்களுக்கு அபகீர்த்தி என்றால் எனக்கும் அது வந்து சேருமல்லவா. நான் உயிரோடு இருக்கும் வரையில் மயில் ராவணனுக்கு துரோகம் செய்ய மாட்டேன். அதை செய்வது தர்ம நெறிக்கு முரணானது. மயில் ராவணனது அந்தரங்க விஷயங்களை நான் கூறுவது அதை விட பெரிய துரோகம், அதை விட பெரும் பாபமாகும். தாமரை மலர்த்தண்டில் நீர் புகுந்து வந்தபோது அதைக் காத்து நின்ற  இரண்டரை லட்சம் அசுரர்களை கொன்று விட்டுத்தானே இங்கு வந்தீர்கள். ஆனால்  இங்கு நானினிருக்கும் வரை என்னையும் உம்மால் கொல்லவும் முடியாதென்பதற்கு காரணம் எம் பாட்டனாரும் உம் பிதாவும் ஆன் வாயு பகவான் கொடுத்த வரமல்லவா. அதனாலே உம்மால் என்னை  ஜெயிக்க முடியாது.   நானும் உங்களை வெல்ல முடியாது. இருவருக்கும் சமபலம்.    ஒரு காரியம் பண்ணினால்   நீங்கள் கோட்டைக்குள் நுழைய முடியும். என்  உயிர் நிலை நடு மார்பில்தான் உள்ளது. ஆகவே ஓங்கி ஒரு குத்து என் நடு மார்பில் விட்டால் நான் மூர்ச்சை ஆகி விடுவேன். அதன் பின் நீங்கள் சாவகாசமாக உள்ளே சென்று காரியத்தை முடிக்கலாம். அதை தடுக்க நானும் இருக்க மாட்டேன்’ என்று கூற அனுமான்  கண்ணில் நீர் கொட்டியது

‘அடாடா,  என் புத்திசாலிப் புத்ரனே, நான் என்ன சொல்வதென்று எனக்கே புரியவில்லை. உன்னை நான் எப்படிடா மகனே  கொல்வேன்? புத்ர சோகம் மகா சோகம் அல்லவா ? நன்னெறியை கடைபிடிக்கும் தர்ம துரையான பிள்ளையை தகப்பன் கொல்லலாமா? இது தர்மமாகுமா’
 மச்சவல்லபன்:  ‘பிதாவே, தர்மமும் நியாயமும் பேசும் நேரமல்ல இது. அதனாலேதான் கூறுகிறேன்  இப்போது அது நடைமுறைக்கு ஆகாது. நீர் நேரம் கடத்தினால் நீர் வந்த காரியமும் ஆகாது. இப்போ மயில் ராவணன் ராம லஷ்மணர்களை பலி தர ஏற்பாடுகளை செய்யவும் ஆரம்பித் திருப்பான்.  மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு என் நடு மார்பிலே குத்துவீராக. அப்படிக் குத்தினால் நான் இறந்து போக மாட்டேன். ஐம்பது ஜாமமும் மயங்கி மட்டுமே கிடப்பேன். அதன் பின் பாதாள இலங்கைக்குச் சென்று ராம லஷ்மணர்களை காப்பாற்றும்’
ஹனுமான்  மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு தனது  முஷ்டியை மடக்கி  ஓங்கி  பலமாக மச்சவல்லபனின் நடு மார்பில்  குத்தியவுடன் அவன்  அப்படியே மயங்கி சாய்ந்தான்.
இனி அடுத்த ஐம்பது ஜாமத்துக்கும் அவன் விழிக்கவே மாட்டான். மயங்கியே கிடப்பான். மயங்கிக் கிடந்த மச்சவல்லபனும் மனதுக்குள்ளேயே நினைத்தான் ‘நான் முழிக்கும் முன்னேயே மயில் ராவணனை வதம் பண்ணி, ராம லஷ்மணர்களை மீட்டுக் கொண்டு என் தந்தை  வந்துடலாம். அப்படி வரும்போது நானும் அவர்களுடைய ஆசிகளை பெற்றுக் கொண்டு இத்தனை   நாளும் நான் செய்த பாவத்துக்கெல்லாம் பரிகாரமும் பெறலாம்’.
மச்சவல்லபனை மயக்கமடையச் செய்த பின்னால் அடுத்து அவன் காவல் காத்திருந்த கோட்டைக்குள் ஹனுமான்  குதிக்க அந்தக் கோட்டையோ செங்கலினால் கட்டப்பட்டு இருந்ததைக் கண்டார். ‘அட….இது வெறும் வெறும் செங்கல் கோட்டைத்தானே இது என நினைத்து அதன் அருகில் சென்றால் அதை சுற்றி நாலாயிரம் லக்ஷ வீரர்கள் காவலில் இருந்ததைக் கண்டார். அத்தனை பேரையும் ஒரேடியாகக் கண்ட அனுமானுக்கு வேர்த்து வியர்த்தது. ‘இதென்னடா, இத்தனை பேரையும் சமாளித்து உள்ளே போவதற்குள்  நேரம்  கடந்து போகுமே,    போகும் காரியம் கெடுமே ’ என நினைத்தவர் கண்ணில் அரண்மனை உயரத்துக்கு அங்கிருந்த பிரும்மாண்டமான பெரிய மரம் ஒன்று கண்ணில் பட்டது. ‘இது போதும் நமக்கு’ என எண்ணிக் கொண்டே விஸ்வரூபம் எடுத்து அந்த மரத்தை வேரோடு பிடுங்கி அசுரர்கள் சுதாரிக்கும் முன்னேயே அவர்களை அதைக் கொண்டு அவர்களை தாக்கத் துவங்க அங்கிருந்த பாதி அசுரர்களும் அடுத்தகணமே மாய்ந்து வீழ்ந்தார்கள். மிச்சமிருந்த அசுரர்கள் வாளையும், கதையையும், ஈட்டியையும் கொண்டு வந்து அனுமானை தாக்கத் துவங்க அத்தனை பேரையும் அந்த மரத்தாலேயே நாலு பக்கமும் தாக்கிக் தாக்கி அழித்தார். அவர்களை சமாளிப்பதற்குள் அறுபது லட்சம் யானை, அறுபது லட்சம் குதிரை, நூறாயிரம் லட்சம் சேனைகள் என பலதும் கடல் அலைப் போல வந்து கொண்டே இருக்க நாலு பக்கமும் சுழன்று, சுழன்று மரத்தாலே அடித்த அடியில் அத்தனைபேரும் கொத்துக் கொத்தாய் செத்து விழுந்தார்கள். எங்கிருந்து வந்ததோ பலம் அனுமனுக்கு! அத்தனை வேகமாக சுற்றி, சுற்றி ஒரு சூறாவளிக் காற்றுப் போல அடிக்க அடிக்க அனைவரும் செத்து விழுந்தார்கள். அவர்கள் அனைவரும்
இந்த ஸ்வாரஸ்யமான இடத்தில் மறுபடியும் கதையை  நிறுத்த வேண்டி இருக்கிறதே  நான் என்ன செய்வேன்.. நீளமாக ஹனுமார் வால் மாதிரியே போகிறது மயில்ராவணன் கதை.. 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;