
ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீ ஸ்துதி – நங்கநல்லூர் J K SIVAN
அதிசயங்கள் எல்லா சிறந்த மஹான்களாலும் மட்டுமல்ல, பக்தர்களால் கூட நிகழ்த்த முடியும். ஆதி சங்கரர், சிறுவயது பாலகனாக காலடியில் ஒரு ஏழை ப்ராமண ஸ்திரீ வீட்டு வாசலில் டில் ”பவதி பிக்ஷாந்தேஹி ” என குரல் கொடுத்தபோது அவள், பிக்ஷையாக தன்னிடமிருந்த ஒரே ஒரு காய்ந்த வாடிய நெல்லிக்கனியை அளிக்க, அதற்கு ஈடாக, ஸ்ரீ மஹா லக்ஷ்மியை அவர் அவள் ஏழ்மையைப் போக்க வேண்ட ,அவள் ஆதி சங்கரரின் பக்தி பாவ வேண்டுகோளுக்கிணங்கி, தங்க நெல்லிக்கனிகளை மழையாக பொழிந்தாளல்லவா? அதே போல தான் ஸ்வாமிதேசிகனின் ப்ரார்த்தனைக்கும் இணங்கி அவள் காஞ்சியில் பெருந்தேவி தாயாராக ஒரு ஏழை வைணவ வாலிபன் திருமணத்துக்கு தங்கமழை பொழிந்தாள். அந்த 25 ஸ்தோத்ரங்கள் தான் ஸ்ரீ ஸ்துதி.
”யாரப்பா நீ என்ன வேண்டும் உனக்கு? ‘
‘ஸ்வாமி தேசிகன் என்பது நீங்கள் தானே? அப்படியென்றால் உங்களை தரிசிக்க தான் வந்தேன். ஒரு வேண்டுகோள் வைக்க வந்தேன்”
”என்னப்பா என்னிடம் உனக்கு வேண்டுகோள்?”
”நீங்கள் தனவந்தர், கேட்டதெல்லாம் கொடுப்பவர். என் திருமணத்துக்கு பணம் தேவைப்படுகிறது தாங்கள் தான் தந்தருளவேண்டும். நான் யாசகம் கேட்ட இடத்தில் உங்களிடம் கேட்டால் கிடைக்கும் என்று சொல்லி அனுப்பினார்கள்”
”அப்பனே இரவு நேரம் ஆகிவிட்டது. நாளை காலை காஞ்சி ஸ்ரீனிவாச வரதன் ஆலயத்தில் தாயார் சந்நிதியில் நான் உனக்காக காத்திருப்பேன். அங்கே வா இருவரும் உன் கோரிக்கையை தாயாரிடம் வைப்போம்.”
‘மறுநாள் காலை அந்த வைணவன் ஸ்வாமிதேசிகனை தாயார் சந்நிதியில் பார்த்தான் அவனைப் பார்த்த
வுடனே, கண்களில் கண்ணீர் நிரம்பியவாறு, அவர் பெருந்தேவி தாயாரின் கருணைக்கு பிரார்த்தனை செய்த ஸ்லோகம் இது;
1. मानातीतप्रथितविभवां मङ्गलं मङ्गलानां वक्षः पीठं मधुविजयिनो भूषयन्तीं स्वकान्त्या ।
प्रत्यक्षानुश्रविकमहिमप्रार्थिनीनां प्रजानां श्रेयोमूर्तिं श्रियमशरणस्त्वां शरण्यां प्रपद्ये ॥ १॥
Maanaatheeetha prathitha vibhavaam , mangalam mangalaanaam; Vaksha peetim madhu vijayino bhooshayanthim swakanthyaa;
Prathyakshanu sravika mahima prarthaneenaam prajaanaam Sreyo moorthim sriyam asarana thwaam saranyaam prapadhye
எல்லையில்லாமல் வாரி வாரி வழங்கும் தாயே, நல்லவற்றை , மேலும் மேலும் மங்களமாக வாரி வழங்குபவள், மது எனும் ராக்ஷஸனை சம்ஹரித்த மாதவனின் இதயத்தை உனது பீடமாக கொண்டவளே,ஸ்ரீனிவாசன் என்று அவனுக்கு அதால் பெயர் அளித்தவளே, பெருமைக்கு பெருமை தருபவளே, வேதம் புகழும் வேதவல்லி, உன்னை சரணடைந்தேன் அம்மா.
2.आविर्भावः कलशजलधावध्वरे वाऽपि यस्याः स्थानं यस्याः सरसिजवनं विष्णुवक्षःस्थलं वा ।
भूमा यस्या भुवनमखिलं देवि दिव्यं पदं वा स्तोकप्रज्ञैरनवधिगुणा स्तूयसे सा कथं त्वम् ॥ २
Aavirbhava kalasa jaladhow, adhware vaapi yasyaa Sthaanam yasyaa sarasijavanam Vishnu vaksha sthalam vaa
Bhoomaa yasyaa bhuvanamakhilam Devi, dhivyam padham vaa Sthoka prajnair anavidha gunaa sthooyase saa kadham thwam
அம்மா, நீயோ பாற்கடலில் உதித்தவள் , யாகத்தில் தோன்றுபவள், தாமரைக்காட்டின் அரசி, மஹாவிஷ்ணு வக்ஷஸ்தல நாயகி, ப்ரபஞ்ச அறிவிற் சிறியேன் என்னால் உன்னை முழுதுமுணர்ந்து பிரார்த்திக்க முடியும்?லோகங்களுக்கெல்லாம் ராணி.
3.स्तोतव्यत्वं दिशति भवती देहिभिः स्तूयमाना तामेव त्वामनितरगतिः स्तोतुमाशंसमानः ।
सिद्धारम्भः सकलभुवनश्लाघनीयो भवेयं सेवापेक्षा तव चरणयोः श्रेयसे कस्य न स्यात् ॥ ३॥
Sthothavyathwam dhisathi bhavathi dehibhi sthooyamaanaa,Thaamevathwaam anithara gathisthothum aasamsamaanaa
Sidhaarambha sakala bhuvana slaaghaneeyo bhaveyam, Sevaapekshaa thava charanayo, sreyase kasya na syaath?
அம்மா ஸ்ரீதேவி உனக்கு ஒன்று தெரியுமா? உன்மேல் உணர்வுள்ள பக்தர்கள் உன்னைப் போற்றி புகழ்ந்து பாடும்போது அவர்கள் பக்தியை மற்றவர்கள் மரியாதையோடு கொண்டாடுகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் உன்மேல் கொண்ட பக்தி என்பதை விட, உனது பெருமை, மஹிமை, தான் மிகவாக உணரப்படுகிறது. நீ தானே அவர்களை அதை உணரச்செய்பவள். எனக்கு உன்னைவிட்டால் வேறு யாரம்மா கதி?உன்னைச் சரணடைந்து தொழுவதினால் என்னையுமல்லவா உலகம் கௌரவிக்கும். உன் திருவடியைப்பிடித்தோர்க்கு சகலமும் கைகூடுமே . இதிலென்ன ஆச்சர்யம்? உன் மஹிமை பூரா அறியும் ஞானம் இல்லாவிட்டாலும் எனக்கு அந்த சக்தியை அளிப்பவள் நீயல்லவா?
4. यत्सङ्कल्पाद्भवति कमले यत्र देहिन्यमीषां जन्मस्थेमप्रलयरचना जङ्गमाजङ्गमानाम् ।
तत्कल्याणं किमपि यमिनामेकलक्ष्यं समाधौ पूर्णं तेजः स्फुरति भवतीपादलाक्षारसाङ्कम् ॥ ४॥
Yath sankalpaath bhavathi kamale yathra dehinyameeshaam, Janma sthema pralaya rachanaa jangama jangamaanam
Thath kalyaanam kimapiyaminaam yeka lakshyam samadhou,Poornam theja sphurathi bhvathee padha lakshaara saangam
மஹா தேவி, கமலே, உனது நாதன் ஸ்ரீனிவாசன் எண்ணற்ற விபவங்களை உடையவன். அந்த விஸ்வரூபனின் சரீரமே உணர்வுள்ளவை, உணர்வில்லாதவை கலந்ததுஅவற்றுள் அவன் அந்தராத்மாவாக வசிப்பவன். அவன் சங்கல்பமே பிரபஞ்சத்தில் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் அனைத்தும்.சகலத்துக்கும் புனிதம், அந்த புனிதனே, அவன் மங்கள ஸ்வரூபமே எங்கும் புனிதத்தை பரவச்செய்கிறது. அவன் அனுக்ரஹத்தால் தானே யோகிகளும் அவர்கள் உணர்வுகளை கட்டுப்பாட்டில் வைப்பவர்கள். அஷ்டாங்க யோகமும் அடைபவர்கள். அவனை ஹ்ருதய கமலத்தில் ஸ்தாபித்து போற்றி வணங்குபவர்கள். சர்வ வியாபி அந்த பரிபூர்ண நம்பி. சகல கல்யாண குணங்களும் கொண்டவன். அவனது ஹ்ருதயத்தில் ஒரு கணமும் அவனை விட்டு நீங்காதவள் நீ. நாராயண ஹ்ருதயவாஸினி. அந்த செங்கண்மாலின் செந்நிறம் உன் திருவடியில் பளபளக்கிறது. அழகை மேலும் கூட்டுகிறது. அந்த லக்ஷணம் அல்லவோ உபநிஷதங்கள் மேன் மேலும் ஞானத்தைப் பெற்று பரமாத்மனின் சத்யஸ்வரூபத்தை பிரதிபலிக்கிறது.
5. निष्प्रत्यूहप्रणयघटितं देवि नित्यानपायं विष्णुस्त्वं चेत्यनवधिगुणं द्वन्द्वमन्योन्यलक्ष्यम् ।
शेषश्चित्तं विमलमनसां मौलयश्च श्रुतीनां सम्पद्यन्ते विहरणविधौ यस्य शय्याविशेषाः ॥ ५॥
Nishprathyuha prana gatitham devi, nithyaanapaayam Vishnu sthwam chethya navathi gunam dhwandhwam anyonya lakshyam
SEshaschitham vimala manasaam moulayascha srutheenaam, SAmpadhyanthe viharana vidhou yasya sayyaa viseshaa
ஆஹா, பெருந்தேவி எனப்படும் பெரிய பிராட்டியே, ஸ்ரீ நீயும், ஸ்ரீனிவாசன் உன் நாதனும் இணை பிரியாத வர்கள். ஒப்பற்றவர்கள்.உங்கள் பிரேமை பிரகாசம், அன்பு, எள்ளளவும் குறையாதவை. ஸாஸ்வத தம்பதிகள் நீங்கள். உங்கள் ஒவ்வொருவரின் கல்யாணகுணங்களை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. உங்களை பிரார்த்திக்கும் என் போன்ற பக்தர்கள் கூட உங்களை எப்படி அடையாளம் காண்கிறோம் தெரியுமா? ஸ்ரீமன் நாராயணனை வணங்கும்போது ”ஸ்ரீயின் பத்தி, ஸ்ரீயப்பதே, என்கிறோம். உன்னை ”விஷ்ணு பத்னி” என்று தான் பிரார்த்திக்கும் பெயரில் கூட உங்களை பிரிக்க முடியாதே. உங்களுடைய நித்ரா யோகத்துக்கு தக்க இடமாக நான் அறிபவை 1. ஆதிசேஷன் சயனம், 2. யோகிகளின் ஹ்ரிதய கமலம். 3. உபநிஷதங்கள் சாரம். இவையே உங்கள் விபவத்தை உணர்த்துபவை.
\\\\\\\\\\\\\\\\
ஸ்வாமி தேசிகர் அந்த வைணவ வாலிபனோடு பெருந்தேவி தாயார் சந்நிதியில் சில நிமிஷங்களில் 25 ஸ்லோகங்களை பாடி முடித்து விட்டார். அவரால் முடியும். எனக்கு அவற்றை உங்களுக்கு எடுத்து எழுத மூன்று நாள் தேவைப்படுகிறதே. முதல் ஐந்து ஸ்தோத்ரங்களை இந்த பதிவில் இடுகிறேன். மற்றவை அடுத்தடுத்து.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



