
விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN
மூன்று ரசிகர்கள் கதை
ரொம்பநாளாகிவிட்டது. விக்ரமாதித்தனையும் வேதாளத்தையும் உங்களிடம் காட்டாமல் பிரித்து விட்டேன். இன்று மீண்டும் அறிமுகமாகிறார்கள்.
வழக்கம் போல விக்கிரமாதித்தன் முருங்கை மரம் ஏறி வேதாளத்தை பிடித்து இறக்கி தோளில் போட்டுக் கொண்டு நடந்தான்.
வேதாளம் பேசத்தொடங்கியது;
அங்க தேசத்திலே, ஒரு பிராமண அக்ரஹாரம். விருக்ஷ் கடம் என்று பெயர். அதில் விஷ்ணுஸ்வாமி என்று ஒருவன் வசித்தான்.அவனுக்கு நல்ல குணங்கள் நிறைந் த ஒரு மனைவி, மூன்று பிள்ளைகள். பிறவியிலிருந்தே மூன்று பிள்ளைகளும் நல்ல ரசிகர்கள். அப்பா விஷ்ணுஸ்வாமி ஒரு யாகம் பண்ணினான். ”கடலுக்கு சென்று ஒரு ஆமையை பிடித்துக்கொண்டு வா அதற்கு பூஜை பண்ண வேண்டும்”என்று மூன்று பிள்ளைகளையும் அனுப்பினான். மூவரும் கடலுக்குச் சென்று ஒரு ஆமையைப் பார்த்தார்கள்.
முதல் பிள்ளை; “இந்த ஆமையின் உடம்பை பார்த்தீர் களா ரொம்ப வழவழ வென்று இருக்கிறது.என்னால் அதை தொட முடியாது. உங்களில் யாராவது தொட்டு தூக்குங்கள்’
‘2வது பையன்; ”அண்ணா. நீ அதைத் தொடுவதற்கு யோசித்தால் நாங்கள் மட்டும் தொடுவோமா?”
மூத்தவன், ” அப்படிச் சொல்லாதீர்கள், நீங்கள்தான் இதை எடுத்துக் கொண்டு வரவேண்டும். இல்லா விட்டால், நம் அப்பா செய்ய இருக்கும் யாகத்தை தடை செய்த பாபம் உங்களுக்குச் சம்பவிக்கும். தவிர, அந்தப் பாபம் அவரையும் பாதிக்கும்!”
இரண்டு தம்பிகளும் கலகலவென்று சிரித்தார்கள்.
“அண்ணா, எங்களுடைய கடமை என்ன என்பதைப் பற்றி கூறும் நீ உன் கடமையை மறந்துவிட்டாயே? அதே கடமை உனக்கும் இல்லையா?”
“என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? நான் எப்படிப்பட்ட ரஸிகன் என்பது உங்களுக்குத் தெரியாதா? சாப்பா ட்டை அதன் வாசனையிலிருந்தே அறிந்து சொல்வதில் நான் சமர்த்தனாயிற்றே? அருவருப்பான ஒரு வஸ்து வை நான் எப்படித் தொடுவேன்?” என்று மூத்தவன் கேட்டான்.
நடுவில் பிறந்தவன்,: “பெண்களின் தராதரத்தை அறிந்து சொல்லக் கூடிய சாமர்த்தியம் வாய்ந்த நான் உன்னைக் காட்டிலும் உயர்ந்த ரஸிகன் ஆவேன்”
“அப்படியானால் கடைசித் தம்பி இந்த ஆமையை எடுத்துப் போகட்டும்”
கடைசி பையன்; ”நான் படுக்கையின் சுகம் அறிந்த வன். ஆகவே, உங்கள் இருவரைக் காட்டிலும் நான் தான் உயர்ந்தவன்“
இவ்விதம் மூவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்தார்கள். மமதை அதிகமாயி ருந்ததால், யாரும் தாழ்ந்து போவதாக இல்லை. ஆகவே அவர்கள் ஆமையைஅப்படியே போட்டுவிட்டு. விவாதத்தை அவ்வூர் அரசனிடம் தெரிவித்து முடிவைப் பெறக் கிளம்பினார்கள்.
அந்த நாட்டு ராஜாவான பிரசேனஜித் என்பவன் தன் நலைநகரான விடங்கபுரியில் இருந்தான். அங்குள்ள அரண்மனையை ரஸிகர்கள் மூவரும் அடைந்து. அரசனிடம் தங்கள் விவாதத்தை முறை யிட்டுக் கொண்டார் கள். அதைக் கேட்ட ராஜனும்
“சரி. இவ்விடத்தில் தங்கியிருங்கள். ஒவ்வொருவரையும் பரீக்ஷித்துப் பார்க்கி றேன் என்றான். அவர்களும் சம்மதித்து அங்கேயே தங்கினார்கள்.
அன்றைக்கு ராஜா சாப்பிடப் போகும் சமயத்தில் அம் மூவரையும் தன்னுடன் உட்கார வைத்து உபசரித்து
அறுசுவையுடன் ராஜபோஜனம் அளித்தான். மற்ற எல்லோரும் சம்பிரமாகக் சாபபிட்டுக் கொண்டிருக்கும் போது சாப்பாட்டு ரஸிகன் மட்டும் எதையும் சாப்பிடா மல் அருவருப்புடன் முகத்தைச் சுளித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். சமையல் நிரம்ப ருசியாக இருந்தும் அவன் ஏன் சாப்பிடவில்லையென்று
அரசனே கேட்டபோது, “இந்த சாதத்தில் பிணத்தின் வாடை வீசுகிறது. ஆகவே சாப்பாடு எவ்வளவுதான் ருசி யாக இருந்தாலும் என்னால் அதைச் சாப்பிட முடிய வில்லையே” என்று பதில்அளித்தான் போஜன சுகம் அறிவதில் நிபுணனானவன் .
சாப்பிட்டுக் கொண்டிருந்த அத்தனை பேர் எதிரிலும் அவன் அப்படிச் சொன்னவுடன், அரசன் உத்தரவுப்படி அவர்கள் ஒவ்வொருவரும் சாதத்தை எடுத்து முகர்ந்து பார்த்தார்கள். பிறகு, அவர்கள் அனைவரும்
“வெண்மையான அரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த உணவு நல்ல மணம் உள்ளதாகவே இருக்கிறது” என்றனர். ஆனால் போஜன சுகம் அறிந்த அவனோ மூக்கைப் பிடித்துக் கொண்டு சாப்பிடவே மறுத்து விட்டான்.
அரசன் விசாரித்த போது, அன்றைக்கு சமைத்திருந்த அரிசி ஏதோவொரு கிராமத்தின் சுடுகாட்டுக்குப் பக்கத்தில் இருந்த நிலத்தில் விளைந்தது என்ற உண்மை தெரிய வந்தது. இதையறிந்த மன்னன் ஆச்சரியத்தால் திகைத்துவிட்டான். உ டனே மூத்தவனைப் பார்த்து, “உண்மையிலேயே நீ போஜன சுகத்தையறிந்த ரஸிகன் தான். அதிலே உன்னை வெல்லக்கூடிய நிபுணர்கள் இந்தப் பூ லோகத்தில் இல்லை! ஆகவே, வேறு ஆகாரம் உட்கொள்ள வேண்டும்” என்று சொல்லி உபசரித்தான்.
சாப்பாடு முடிந்த பிறகு அரசன் அந்த ரஸிகர்களை அவர்கள் விடுதிக்கு அனுப்பிவிட்டான்.
அஸ்தமித்தவுடன் தன் பரிவாரத்திலே மிக்க அழகுள்ள வளாக இருந்த கணிகை ஒருத்தியைப் பொறுக்கி எடுத்து அதிலாவண்யமாக அவளைச் சிங்காரித்து, அவளை ஸ்திர் சுகம் அறியும் ரஸிகனான இரண்டாவது சகோதரன் விடுதிக்கு அனுப்பினான். பூர்ண சந்திரன் போன்ற முகப்பொலிவுடன் அந்தப் பெண் அவன் அறை யிலே நுழைந்தபோது, அவன் தன் மூக்கைப் பிடித்துக் கொண்டு இடது கையால் ஜாடை காட்டி அவளை வெளியே அழைத்துச் செல்லுமாறு உடன் வந்த ராஜ சேவகர்களுக்குத் தெரிவித்தான்.
“அவளை அழைத்துச் செல்லுங்கள். உடனே செல்லா விட்டால், நான் இறந்து விடுவேன். அவளிடமிருந்து வெள்ளாட்டு நாற்றம் வீசுகிறது” என்றான் ஸ்திரீ சுகம் அறிவதில் நிபுணன்.
அவர்கள் உடனே கணிகையை மன்னனிடம் அழைத் துச் சென்று நடந்ததை எடுத்துச் சொன்னார்கள். அரசன் தந்திரமான கேள்வி களால் அந்தக் கணிகையி டமிருந் தே அவளுடைய ஆதிப்பிறப்பு விருத்தாந்தத்தை விசாரித்த போது அவள் குழந்தையாக இருந்தபோது தாயும், செவிலியும் இல்லாமல் வெள்ளாட்டுப் பாலால் வளர்ந்தவள் என்பது தெரிய வந்தது. மன்னனுக்கு மலைப்பு இன்னும் அதிகமாயிற்று. “இவனையும்விடச் சமர்த்தன் சப்தலோகங்களிலும் உண்டா?” என்று மன்னன் ஆச்சர்யத்துடன் ஸ்திரீ சுகம் அறிவதில்
நிபுணனைப் புகழ்ந்தான்.
பிறகு நித்துரை சுகம் அறிவதில் வல்லவன் என்று கூறிய மூன்றாவது சகோதரனைக் கூப்பிட்டு, அவனுடைய ரஸிகத் தன்மையையும் பரீட்சிக்க முற்பட்டான். நன்றாக அலங்கரிக்கப்பட்ட பள்ளி யறையிலே அவன் விருப்பப்படியே ஒரு கட்டிலில் மிக மிருதுவான ஏழு மெத்தைகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு அவனைப் படுக்க வைத்தான்
மன்னன். ஆயினும் பாதி ஜாமம் கழிவதற்குள்ளாகவே அந்த ரஸிகன் எழுந்து வலி பொறுக்க முடியாமல் அலழினான். பக்கத்தில் காவல் இருந்த அரசாங்க அதிகாரிகள் அவன் விலாவிலே ஒரு மயிர் பதிந்து அழுத்தியது போன்ற வளைந்த அடையாளம் ஒன்று இருக்கக் கண்டார்கள். உடனே அவர்கள் மகாராஜனிடம் ஓடிச் சென்று செய்தியை அறிவித்தார்கள்.
அரசனும் மெத்தைகளின் அடியில் ஏதாவது இருக்கிறதா என்று பரிசோதிக்க உத்திரவு அளித்தான். அவர்கள் அவ்விதமே ஒவ்வொரு மெத்தையாக எடுத்துச் சோதித்து வரும்போது ஒரு புஷ்பத்தோடு ஓட்டி க்கொண்டு ஒரு கேசம் இருப்பதைக் கண்டார்கள். அதை எடுத்துக் கொண்டு, அவர்கள் அந்த ரஸிக னையும் . அழைத்துச் சென்று அரசனிடம் காட்டி னார்கள். அவன் உடலிலே கேசத்தின் அடையாளத்தைக் கண்ட ராஜா திகைத்துப் போனான். ஏழு மெத்தைக ளுக்கு அடியிலிருந்த கேசம் ஏழு மெத்தைகளையும் தாண்டி எப்படி அவன் உடலில் அழுந்தி இருக்க முடியும் என்பதை எண்ணி எண்ணி அரசன் அன்றிரவு முழுவதும் சரியாகத் தூங்கவில்லை.
மறுநாள் காலையில் அவன் அம்மூவருக்கும் அவர்களு டைய ரஸிகத்தன்மையை மெச்சி மூன்று லக்ஷம் பொன் சன்மானம் வழங்கினான். அவர்களும் ஆமையை மறந்து அரசன் சபையிலேயே தங்கி விட்டார்கள். தங்கள் தகப்பனார் செய்ய வேண்டிய யாகத்தைத் தடை செய்த தோஷம் தங்களுக்குக் கிட்டியதே என்றும் அவர்கள் கவலைப்படவில்லை.
இவ்விதம் வேதாளம் கதையை சொல்லி விட்டு விக்கிரமாதித்தனைப் பார்த்து, “ஓ! ராஜனே! போஜன சுகம், ஸ்திரீ ஈகம், நித்திரை சுகம், ஆகிய இம்மூன்றிலும் முறையே சமத்தர்களான இம்மூவருள் எவனுடைய ரஸிகத்தன்மை அதிகமானது? எவன் அசகாய நிபுணன்?” என்று கேட்டது. சரியான பதிலை கூறா விட்டால் உன் தலை நூறு சுக்கல் சுக்களாக உடைந்து விடும் என்பது ஞாபகம் இருக்கட்டும்” என்றது.
அதற்கு விக்கிரமாதித்த மகாராஜன் பின்வருமாறு பதில் சொன்னான்:
“போஜன சுகம் அறிந்தவனும். ஸ்திரீ சுகம் அறிந்த வனும் ஐம்புலன்களும் விழித்திருக்கும் நேரத்தில் புத்தியினாலே சொன்னார்கள். சுயபுத்தி இல்லாமல் தூங்கும் போது அனுபவித்ததைச் சொன்ன நித்திரை சுக ரஸிகனே அசகாய நிபுணன்!”
இதைக் கேட்ட வேதாளம் முன் போலவே கட்டவிழ்த் துக் கொண்டு முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



