
என் குருநாதர் – நங்கநல்லூர் J.K. SIVANசுவாமி விவேகானந்தர்.
பதிவு 4
வாழ்க்கையே சொற்ப கால சமாச்சாரம். செல்வந்தன், ராஜா, பிச்சைக்காரன் யாராயிருந்தாலும் இதில் வேறுபாடு கிடையாது. உடல் ஆரோக்யமாக இருந்தாலும் சரி, வியாதியஸ்தனாக இருந்தாலும் சரி, நல்லவன் கெட்டவன், யாராக இருந்தாலும் ஒன்று தான். இருக்கும் வரை அதை ஆனந்தமாக வாழ்பவன் அதிர்ஷ்டக்காரன். இதில் கடவுள் என்ற ஒன்று இருப்பதை உணர்ந்தால் கடவுளை அனுபவிக்க முடியும். கடவுளைத் தேடுபவன் அடைவான்.
கல்கத்தாவில் ஒரு சிறுவன் காளி கோவிலில் பூசாரியானான் அல்லவா? அவன் மனம் அந்த காளியையே சுற்றி சுற்றி வந்தது. அவளையே மனமார தேடி ”நீ என் முன் வா, உன்னைக் காணவேண்டும்” என்று அழுதான், அவளோடு பேசினான்.
”அம்மா நீ இருப்பது உண்மையா? வெறும் ஸ்தோத்ரத்தில் மட்டும் தான் நீ இருக்கிறாயா? ”அவன் புத்தகத்தை நம்பி இல்லை, முழு மனதோடு அந்த விக்ரஹத்தை அவளாகவே பார்த்தான். அவன் கல்லூரிக்கு சென்று பல விஷயங்களை நம்மைப்போல் மனதில் அடைத்துக் கொள்ளாத பரிசுத்தன். அவளை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்பதிலேயே அவன் மனம் லயித்ததால், வேளாவேளைக்கு மற்றவர்கள் போல் அவனால் பூஜைகளை விதி ப்ரஹாரம் செய்ய இயலவில்லை. காளிக்கு நைவேத்தியம் வைப்பதையே மறந்துவிட்டான். அவன் சிந்தை பூரா ஒரே எண்ணம். ‘அம்மா, நீ இருப்பது உண்மையா? நீ ஏன் இன்னும் என்னிடம் பேசவில்லை? நீ இறந்து விட்டாயா?”
நாம் அடிக்கடி எல்லாவற்றையும் துறந்து வெறுப்படைகிறோம். எதுவுமே பிடிக்கவில்லை. சே என்ன வாழ்க்கை இது என்று சலிப்படைகிறோம் அல்லவா? அது போல் அவனும் அவளைக் காணாத வாழ்க்கை வியர்த்தம் என்ற நிலை அடைந்தான். இருட்டில் தடுமாறும் எனக்கு யாராவது ஒளி காட்டமாட்டார்களா ?என்ற ஏக்கம்.” ஏனிந்த பாராமுகம்? நீ வரவில்லை என்றால் உன் சார்பில் யாரையாவது அனுப்பேன்? நான் உன்னையே நம்பி வாழும் சிறு குழந்தை அல்லவா, தாயே நீ வா”
அவனால் கோவிலில் பூசாரி வேலை செய்ய முடியவில்லை. கோவிலை விட்டு வெளியேறினான். அருகே ஒரு மரம் சூழ்ந்த வனம் . அதில் போய் இருந்தான். சூரிய உதயம், அஸ்தமனம் எதுவும் அவனுக்கு தெரியவில்லை. எப்படி வாழ்கிறோம் என்ற எண்ணமும் இல்லை. அன்ன ஆகாரம் எதுவுமில்லை. யாரோ பார்த்துவிட்டு வாயில் ஏதாவது உணவை அடைத்தால் மிஷின் மாதிரி விழுங்கினான். இரவு பகல் வித்தியாசமில்லாமல் இப்படி இருந்தான். கோவில் மணி அடித்தால் ”அம்மா அம்மா வா” என்று கதறுவான். எல்லாவற்றையும் உதறித் தள்ளினால் தான் அவள் கிடைப்பாள் என்று நம்பினான். வீடு வாசல் சொந்தம் பந்தம் எல்லாம் துறந்தான். பணத்தை தொடவே இல்லை. ஆசை, பேராசை எதுவுமே எதிரி. மனிதன் என்றால் ஆத்மா மட்டும் தான். ஆண் பெண் வித்யாசமற்றது. இதை உணர்ந்தால் அம்மா தெரிவாள் என்று நம்பினான். பெண் உருவம் எல்லாமே அம்மா தான் அவனுக்கு. அவளை வேறு எப்படி பார்க்க முடியும் என்னால்?” என்பான். அவன் வாழ்க்கை இவ்வாறே சென்றது. இப்படிப்பட்ட உன்னத புருஷர் தான் என் குருநாதர். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்கிறார் சுவாமி விவேகானந்தா.
என் குருநாதர் என்னிடம் சொன்ன ஒரு வார்த்தை இன்னும் விடாமல் என் காதில் ஒலிக்கிறது. ”ஒரு அறையில் பாளம் பாளமாக தங்கக் கட்டிகள் இருக்கிறது. அடுத்த அறையில் இருக்கும் திருடனுக்கு இது தெரியும். அவனால் தூங்க முடியுமா? முடியாதே. அவன் மனம் பூரா எப்படி அந்த தங்கத்தை அபகரிப்பது என்பதல்லேயே இருக்கும் அல்லவா?” பகவான் என்பது பிறப்பு இறப்பு அற்றவன், பேரானந்த ஸ்வரூபி, அவனை அடையவேண்டும் என்ற ஒரே எண்ணம் என் குருநாதரின் மனதில் நிரம்பி இருந்தது. அந்த ஆசை ஒன்றே அவரை பைத்யமாக்கியது. நாள், வாரம், மதம் வருஷம் என்று அவரை விடாமல் ஏங்க வைத்தது. மூடியிருந்த திரைகள் ஒவ்வொன்றாக மெதுவாக விலகியது. அன்னை காளிகாம்பிகா அவருக்கு குருவானாள் . அம்பாள் படித்தவள்அல்ல. கல்வி, ஞானத்தின் மொத்த உரு. அஞ்ஞானத்தில் உழலும் பிரபஞ்சத்தில் அவள் ஞான தேவி. சன்யாசினி. என் தடுமாற்றத்தை கண்டு இரக்கம் கொண்டு என்னை கைதூக்கி விட்டவள் என்பார்.
”மகனே, என் மீது இத்தனை ஆர்வம் ஆசை கொண்ட உன்னை எனக்கு பிடிக்கிறது என்றாள் உலகமே பிரபஞ்சமே இதன் பின்னோ நிழலைத்தேடி பைத்தியமாக ஓடுகிறது.அதை விட்டு என்றும் சாஸ்வதமான தெய்வத்தை நோக்கி ஒருவனை பைத்தியம் என்கிறது. இப்படிப்பட்டவர்கள் உலகில் ஒரு சிலரே என்கிறார் சுவாமி விவேகானந்தா.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



