SADHANA GOSALA J K SIVAN

1.5.2025  சாதனா  கோ சாலா.
அடுத்ததாக நாம்  விஜயம் செய்யப்போவது  சாதனா கோசாலா.. காஞ்சிபுரம் மஹா பெரியவா துவங்கி வைத்து 37 வருஷங்களாக பல நல்ல உள்ளங்களின்  ஆதரவோடு அற்புதமாக  இயங்கி வரும் கோ சாலை. கிட்டத்தட்ட  700 பசுக்களும், 100 கன்றுகள் , எருமை ,காளை மாடுகள்  இங்கே உயிர் வாழ்கின்றன.  முக்கியமான விஷயம்  இவை  அனைத்தும் கொலையிலிருந்து, வெட்டப்படுவதிலிருந்து காக்கப்பட்டு  மீட்டு எடுக்கப்பட்ட, வயதான , கறவை நின்ற, நோயுற்ற மாடுகள் ஆகும்.

இந்த கோசாலை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சாதனா ராவ் லண்டனில் படித்து . இந்தியா திரும்பியவுடன்  வீட்டிலேயே கறவை நின்ற மாடுகளை வாங்கி  பாதுகாக்க துவங்கினார். இது மகா பெரியவர் அருளாசியுடன் தான் நடந்தது .”மனிதர்களை கவனித்துக் கொள்ள  நிறைய பேர்கள் இருக்கிறார்கள். நீ இந்த கை விடப்பட்ட பசுக்களை பாதுகாக்க வேண்டும்” என்று  பரமாச்சாரியார் நேரில் ஆசி வழங்கியதை  பெட்ரா புண்யசாலி டாக்டர் சாதனா ராவ். இதே  சாதனாவுக்கு வேத வாக்காக ஒலித்தது.  தன்னார்வலர்கள் , கொடை உள்ளம்   கொண்டவர்கள் , பிராணிகளை நேசிப்பவர்கள் மனமுவந்து  தரும்   நன்கொடை மூலம் தான் இந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறார்கள். சென்னையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் ஊத்துக்கோட்டை அருகில் வேங்கடாபுரம்   என்ற கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கோசாலையில்  60க்கு மேற்பட்டோர் மாடுகளை கவனித்துக் கொள்கிறார்கள். . மாதத்திற்கு சுமார் ரூ.18 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை செலவு ஆகிறது. இதில் சுமார்  ரு. 15  லட்சம் தீவனத்திற்கும் , வைக்கோல் மற்றும் , மருத்துவ செலவிற்கும் செலவிடப்படுகிறது.  இவர்களிடம் அடைக்கலம் புகும்  மாடுகளை  அவற்றின்  கடைசி மூச்சு வரை பாதுகாப்பதே  இந்த கோசாலையின் லக்ஷியம். நல்ல சத்தான தீனி கொடுத்து நல்ல ஆரோகியத்துடன்  பாதுகாக்கிறார்கள்.எண்ணற்ற குழந்தைகள், உயிர்கள் வாழ பால் தானம் பண்ணுபவை காமதேனு எனப்படும் பசுக்கள் தான். ஆகவே தான் அவற்றை கோமாதா, குலமாதா  என வணங்குகிறோம்.
பசுக்களின் பாலை  உட்கொள்கிறோமே  நாம்,  அந்த பசுக்களின்  பால்  வற்றியவுடன் ஏன் நமக்கு அந்த பசுக்கள் வேண்டாத ஒன்று ஆகி விடுகிறது?  பால் கொடுப்பவள் அம்மா அல்லவா? அம்மாவை எங்கிருந்தாலும் காப்பது நம் கடமை அல்லவா? வெட்டுக்கு அனுப்புவது மகா மகா  பாவம் அல்லவா? அதை தடுப்பதை மனதில் கொண்டு உதவுபவர்கள் தான் இது போன்ற கோசாலைகள்  உருவாக உதவுபவர்கள். நாமும் அதில் சேர்ந்து கொள்வோம். எங்கு இப்படிப்பட்ட கோசாலை இருக்கிறதோ அங்கு சென்று  நம்மால்  ஆன சேவை , நன்கொடை செய்வோம்.  வாழ்வில் நிம்மதி கிடைக்கும் . நம்மை தொடரும் ஜென்ம ஜன்மாந்தர பாவங்கள்  விலகும்.

இன்று நாம் அனைவரும் ஒரு குடும்பமாக வந்து நமது  கைகளால்  பசுக்களுக்கும் இதர மாடுகளுக்கும்  உணவு கொடுக்கிறோம்.  நல்ல மன நிறைவு  கிடைக்கும் . வாழ்வில் நலம் பெறுவோம். . நன்கொடையை  பணமாக கொடுக்காமல் , காசோலையாகவோ  அல்லது வஙகி கணக்கில் பணம்  கட்டியோ செலுத்துவோம். . தீவனங்கள் , கீரை , வாழைப்பழம் , காய் கறிகள், வெல்லம் , சப்பாத்தி இவைகளையும் நீங்கள் வரும்போது கொண்டு வரலாம்.

இப்போது ;இதை நிர்வகித்து வரும்   சகோதரி  திருமதி  கமலா ராமமூர்த்தியிடம் (Chairperson ,  Sadhana Goshala ,9840456623)  பேசி இந்த கோசாலை  பற்றி அறிந்த பிறகு தான் இந்த  புனித பயணத்தை மனதில் உருவாக்கினேன்.    இங்கே  ரெண்டு ஆர்த்தி  ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பசுக்கள் அருகே அமர்ந்து சொல்ல உத்தேசம். அவரவர் முடிந்தால் விஷ்ணு சஹஸ்ரநாமம் புத்தகம் கொண்டுவாருங்கள். நானும் 20 புத்தகங்கள் கொண்டுவருகிறேன்.  நம்முடன் வரும் நண்பர்  ஸ்ரீ   கிரி என்பவர் பூஜை பண்ணுவார். நாம் பாராயணம் பண்ணுவோம். பசுக்களுக்கு மாடுகளுக்கு ஆகாரம்  நமது கைகளால் மனது திருப்தியோடு கொடுப்போம்.

இந்த கோசாலைக்கு நன்கொடை வழங்க ;  Indian Institute of Animal Welfare, Andhra Bank, Neelangarai Branch,  SB A/c No. 132710100033564, IFSC: ANDB0001327..  நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு உண்டு.  நீங்கள் உங்கள் கைகளாலேயே அங்கே  CHEQUE   GPAY  NEFT  TRANSFER பண்ணலாம்.  இங்கே தான் நாம் கொண்டுவந்த  மத்தியான உணவை சாப்பிட்டு முடித்து  சற்று  ஒய்வு எடுத்துவிட்டு பிற்பகல் ஆலய தர்சனம் தொடர்வோம். 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;