RAJA BECOMING RECLUSE J K SIVAN

நாட்டு ராஜாவா  காட்டு ராஜாவா? நங்கநல்லூர் J K  SIVAN
திடீரென்று முடிவானது  ராமன் பட்டாபிஷேகம்.  தசரதன் மனதில் எத்தனையோ காரணங்கள் இருந்திருக்கலாம் அதற்கு. நமக்கு எப்படி தெரியும்.  இத்தனைக்கும்  பரத  சத்ருக்னர்கள் அயோத்தியில் இல்லை. கேகய நாட்டிற்கு  மாமன் வீட்டுக்கு சென்றிருந்த நேரம்.  சக்ரவர்த்தி முடிவெடுத்துவிட்டார், வசிஷ்டர் மகுடம் சூட்டப்போகிறார். தசரதரின் முடிவு  நாடெங்கும் அறிவிக்கப்பட்டது.  ஊரே  கோலாகலத்தில்  அமிழ்ந்து. ஒவ்வொருவர் அவரவர் வீட்டு விழா போல  தெரு, வீடு எங்கும் சிங்காரித்தனர்.  அயோத்தி நகரத்தை அப்போது பார்க்க கொடுத்து வைத்திருந்தவர்கள்  பாக்யசாலிகள்.
நமக்கு முன்பிறவி ஞாபகம் தான் இல்லையே. ஒருவேளை ஏதோ ஒரு ஜென்மத்தில் அயோத்தி வாசியாக இருந்திருந்தால் அதன் புண்யம் இப்போதாவது தொடரட்டும்.  எவ்வளவு நேரத்தில் ராமனின்  யுவராஜா பட்டாபிஷேகம் நடக்க ஏற்பாடானதோ அவ்வளவு சீக்கிரம் அதன் விளைவு வேறுவிதமாக  மாறிவிட்டது.  பட்டாபிஷேகம் நடைபெற சில மணித்துளிகள் இருக்கும்போதே விளைவு பூதாகாரமாக வெடித்துவிட்டது.  கைகேயியை வரம் கேட்க மந்தரை   சூழ்ச்சி செய்து தூண்டி விட்டாள் . ராமனின் பெற்ற தாய் கோசலையை விட ராமன் மேல் பாசம் கொண்ட கைகேயி க்ஷண நேரத்தில் தனது வரங்கள் மூலம் ராமனை நாடிழந்து,  மரவுரி தரித்த  காட்டுவாசியாக்கி விட்டாள் . ஒருநாள் இரு நாள் அல்ல. பதினான்கு வருஷங்கள்.   இந்த கட்டளை தந்தையுடையதாக  அவள்  ராமனுக்கு  அறிவிக்க  கூப்பிட்டனுப்பியதும் ராமன்  அவளை மரியாதையோடு வணங்கி துளியும் அதிர்ச்சி அடையாமல் சந்தோஷமாக  ஏற்று அவ்வாறே சில மணித்துளிகளில் காட்டுக்கு புறப்பட தயாராகிவிட்டான். காட்டுக்குப்   போகு  முன் தனது தாய்  கோசலையை சந்தித்து வணங்கி விடை பெற அவள் அந்தப்புரம் சென்றான்.
கோசலை பூஜை செய்து முடித்து தியானம் பண்ணிக் கொண்டிருந்தவள் ண் திறந்தாள்.  எ திரே  ராமன். கட்டித் தழுவி மடியில் அமர்த்தினாள். ”பசிக்கிறதா  ராமா,  எதாவது தரட்டுமா சாப்பிடுகிறாயா?”
”இல்லை அம்மா. நான்  சொல்வதைக்  கவனமாகக்  கொஞ்சம் கேள்.  அப்பா,  கைகேயி  அம்மாவுக்கு  கொடுத்த  வாக்குப் படி  இனி  பரதன்  தான் இந்த  நாட்டின்  இளவரசன்.    நான்  இன்றுமுதல்  14 வருஷம்  காட்டுக்கு போகப்போகிறேன். உன்னிடம்  சொல்லிக் கொள்ளத்  தான் வந்தேன். வனவாசம் முடிந்து நிச்சயம்  வருவேன்.  கவலை வேண்டாம்”

”என்னடா சொல்கிறாய்  ராமா?  நான் காண்பது கனவா, நினைவா?  என்  காது  என்ன  சொற்களைக்  கேட்டது இப்போது?  பேசியது  என்  ராமனா?”  திடுக்கிட்ட  கோசலை   இந்த  பேரிடி தாங்க முடியாமல்   துடித்தாள்.  கதறினாள.

ராமனின்  சொற்கள்  திரும்பத்  திரும்ப அவள்  காதில்  ரீங்காரம் செய்த  போது  கலங்கினாள் . நிலை  தடுமாறினாள் .  ‘ராமா, என்னையும்  உன்னோடு அழைத்துப்போ”.  தாய்ப்பசு கன்றை விட்டு  அகலுமா?  

 ”பரதன்  ஆளட்டுமே . அதற்கு  நீ  எதற்காக  காட்டுக்கு போகவேண்டும்? நீ  யாருக்கு  என்ன  தவறு செய்தாய்? எதற்கு இப்படி ஒரு வரம்  கைகேயி  கேட்டாள். எதற்கு தசரதர்  அதை  கொடுத்தார்? ”

 இதைக்கேட்டு   அருகிலிருந்த லக்ஷ்மணன் கடுங்கோபம் கொண்டான். ”அண்ணா, இக்கணமே, தசரதரை கயிற்றால்  பிணைத்து,  பரதன், அவன்  உறவினர்கள் அனைவரையும்  கொன்று விடப்போகிறேன். என் சக்தி என்ன என்பதை  புரிந்துகொள்ளட்டும் .  நீ  பட்டாபிஷேகத்துக்கு   தயாராகு.  தடுப்பவரை  எமனுலகு அனுப்புகிறேன்.”
ராமன்  லக்ஷ்மணனை  அணைத்துக்கொண்டான். ” லக்ஷ்மணா, நீ மஹா வீரன். சொன்னதை செய்யக் கூடியவன். காணும்  யாவும்  மாயை.  நிலையற்றவை. ஆத்மா நிரந்தரமானது.   லோகாயத இன்பங்களை அனுபவிக்காது. உறவெல்லாம்  சந்தையில் கூட்டம். மனிதர்கள்  காலையில்  தோன்றி  மாலையில் மறையும் அற்ப ஜீவன்கள்.   காலையில் உதித்து மாலையில் அஸ்தமிக்கும் சூரியனைப் பார்த்தும்  யாரும் அநித்யத்தை  உணர்வதில்லை.  லக்ஷ்மணா,  நீ  எந்த  அடிப்படையில்  உலகை  அழிக்க  முயல்கிறாய்? உலகப்பற்று கொண்டவர்களிடம்  தான்  குறைகள் தோன்றும். கோபத்துக்கு  அடிமையானவன் நண்பர்  உறவினரை க்கூட  மாய்த்து விடுவான். கோபம்  மனிதனின்  எதிரி.  அமைதியாயிரு.  இயல்பாகவே தூய  உள்ளங்கொண்ட உன்னை கர்மம் ஒட்டாது”   என  ராமன்  அறிவுரை கூறினான்.
கோசலையை  நோக்கி  ராமன்  ”அம்மா  இதுவரை  நான்  சொன்னதை  நீயும்  கவனத்தில் வைத்துக் கொள். நான்  திரும்பி வரும்  நாளை  மகிழ்ச்சியோடு ஏற்றுக்  கொள்ளுங்கள். 14 வருஷம்  அரை நொடியில்  ஓடிப் போய்விடும். இதற்கு முன் எத்தனையோ யுகம் ஓடிப்போயிருக்கிறது.  துயரத்தை  ஒதுக்கிவிட்டு,  எனக்கு விடை கொடுங்கள்.  நேரமாகிறது. உங்கள்  அனுமதி  ஆசியோடு  நான்  காட்டில் இன்பமாக  பொழுதைக்  கழிப்பேன்.”  தாயின் பாதங்களில்  ராமன்  விழுந்து வணங்கினான்.
கோசலை கண்ணைத் துடைத்துக் கொண்டாள் . ஆயினும் நெஞ்சில் விம்மலை அடக்க முடியவில்லை. பேச்சு திணறியது. தட்டுத் தடுமாறி திக்கி திக்கி  உயிரினும் மேலான பிள்ளை ராமனை வாழ்த்தினாள்; ‘  என் பிரிய ராமா,   சகல  தேவர்களும்  பிரம்மா விஷ்ணு  சிவன்  அனைவரும்  உன்னைக் காக்கட்டும்”  விஷ்ணுவைக்  காப்பாற்ற  விஷ் ணுவிடமே வேண்டிக்கொண்ட அபலை அவள்.
லக்ஷ்மணன்  ராமனை ஆலிங்கனம் செய்துகொண்டு   ”அண்ணா  என்  உள்ளம்  அமைதியுற்றது இப்போது.  நானும்  தங்களுடன் வர  அனுமதிக்க வேண்டும். ”
புன்னகைத்து  ராமன் ஒப்புக்கொண்டான். ”சரி  லக்ஷ்மணா நீயும்   என்னோடு புறப்படு ”

ராமன்  சீதை இருக்குமிடம் சென்றான். ”நாதா, தாங்கள்  ஏன்  இன்னும்   யுவராஜ பட்டாபிஷேகத்துக்கு  தயாராகவில்லை?. தனியாக வந்திருக்கிறீர்கள். ”

”சீதா  நான்  என் தந்தை ஆக்னைப்படி இப்போது  வனவாசம்  செல்கிறேன். 14 வருஷம் கழித்து மீண்டு வருவேன். அதுவரை  நீ  இங்கிருந்து என் தாய்  தந்தையருக்கு  பணிவிடை செய்வாயாக. ”  

சீதை திடுக்கிட்டாள். ”பிராணநாதா  என்ன உளளருகிறீர்கள் நீங்கள்?  நாடாள  வேண்டிய நீங்கள்  எதற்கு காடாள வேண்டும் என்ற கட்டளை என்கிறீர்கள் ?”

”சீதா,   இது  தந்தை  கைகேயி அன்னைக்கு  கொடுத்த  வாக்கு.  பரதனுக்கு  நாடு,  எனக்கு  காடு. தந்தையின் கட்டளை இது என்பதால் துளியும் நான்  மீறமாட்டேன். என்னைத்  தடுக்காதே”

‘நாதா,   நான்  யார்  தடுக்க,  எதற்கு  தடுக்கவேண்டும்.  நான்  தான்  உங்களுக்கு  முன்னால்  காட்டுக்கு  நடக்கப் போகிறேனே. நீங்கள் என்  பின்னால் தானே வரப்போகிறீர்கள்”

”வேண்டாம்  சீதா,  காட்டில்  மிகக் கொடிய  விலங்குகள்  உண்டு.  அரக்கர்கள் ராக்ஷசர்களும்  உலவுவார்களே.  உன்னை  எப்படி அழைத்துப் போவது?  காய்  கனி, கிழங்கு, இலைகள்  இவற்றை மட்டுமே உண்டு  ஜீவிக்க  வேண்டும்.  உனக்கு  அது பழக்கமில்லை. உனக்கு ஒத்து வராது. நீ  இங்கேயே இருப்பது தான் உசிதம்.  புத்திசாலித்தனம்.’

”இல்லை.  நான்  அக்னி சாட்சியாக  உங்களை கைப்பிடித்த  பதிவ்ரதை.  நான்  உங்கள்  நிழல்.  நீங்கள்  அருகே இருக்க எனக்கு  நாடும் காடும் பஞ்சும் புல்லும், காட்டிலும் கல் .பாறையும் ஒன்று.  எனக்கு  எந்த பயமும் உங்கள் இருக்கும்போது  தேவையில்லை.  ஒரு ஆபத்தும்  என்னை அணுக முடியாது. நீங்கள்  புசிக்கும்  கிழங்கு, காய் கனி  எனக்கும் போதும்.  சேர்ந்தே ரசித்து உண்போம்.  உங்களுக்கு நான்  உறுதுணையாக  இருப்பேன்.   உங்களுக்கு  ஒரு விஷயம் சொல்லட்டுமா.  என்  ஜாதகத்தை பார்த்த  ஒருவர்  என்னிடம்  ”நீ   கொடிய  கானகத்தில்  உன் கணவருடன்  வாழப்போகிறாய்”  என்று  ஒரு தடவை சொல்லியிருக்கிறார்.  சீதையில்லாமல்  ராமன் காட்டுக்கு  போனதாக  ராமாயணம்  கிடையாது”

”சீதா, என் கண்ணே,  நீ  தைரியசாலி. எனக்கு   மிக்க மகிழ்ச்சி.   நீயும்   என்னோடு  காட்டுக்கு வா.  விரைவில்  புறப்படு.”

சகல  சம்பத்துகளையும்  ராமனும்  சீதையும்   மற்றோருக்கு தானம் செய்துவிட்டு கிளம்பினர்.  இதற்கிடையே  சுமித்ரா தேவியிடம்  விஷயம் சொல்லி  அவளைத்  தேற்றி,  லக்ஷ்மணனும் வில்லெடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.  ராமன், லக்ஷ்மணன் சீதை மூவரும்  தசரதர்  இருந்த இடம் சென்றார்கள்.  வழியெல்லாம்  எண்ணற்ற  நாட்டு மக்கள்  ஆர்வத்தோடு பட்டாபிஷேக  வைபவங்களைக்கண்டு  களிக்க திரள் திரளாக  கூடியிருப்பதைப்   பார்த்துக்கொண்டே தசரதர்  மாளிகை அடைந்தனர். அப்பாவிடம் சொல்லாமல் அவரை வணங்காமலா ராமன் செல்வான்

 செய்தி  எப்படியோ கசிந்து  அயோத்தி  முழுதும் அதிர்ச்சி மட்டுமல்ல  ஆத்திரமும்  அடைந்தது.  பேரானந்தம்  ஒரு கணத்தில் பேரதிர்ச்சியாக மாறிவிட்டால்  எப்படி அதை மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியும்?.  தசரதன் மீது  கோபம் ஒரு பக்கம்,  எப்பேர்ப்பட்டவன்  ராமன், அவன் பாதசாரியாக  மரவுரியுடன் காட்டுக்கா?  சீதை வேறு  செல்கிறாளா? எவ்வளவு சிறந்தவன் அந்த லக்ஷ்மணன்  அவனுமா  செல்கிறான்? இந்த கைகேயி  பெண்ணா,  பேயா?  என்னென்னவோ  பேசினார்கள் மக்கள்.  விதி வலியது,  மனிதனின்  எண்ணங்கள்  திட்டங்களுக்  கெல்லாம்  அப்பாற்பட்டது என்று  சிலர்  வருந்தினர்.  கூட்டத்தில்  வாமதேவர்   இருந்தாரே,    அவர்   ”மக்களே  வருந்தாதீர்கள்,  ஸ்ரீ  ராமன்  மகாவிஷ்ணு, சீதை  யோகமாயா, மஹாலக்ஷ்மி,  லக்ஷ்மணன்  ஆதிசேஷன்.  ராமன்  விஷ்ணுவின் ஒரு  அவதாரம், முன்பு  மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ஹ வாமன, பரசுராமனாக அவதரித்தவர்.  ராவண சம்ஹார  காரியமாக  இப்போது இந்த அவதாரம். ராவணன்  சக்தி வாய்ந்தவன்,  பலம் மிக்கவன்,   சிவபக்தன்,  சாஸ்திர வல்லுனன்,  அவனுக்கு  மானுடன் ஒருவனாலேயே  முடிவு என்பதால்  ராமன்  தன்னை  அந்த  பொறுப்பில் ஈடுபட்டிருக்கிறான்.  எனவே   எந்த  விதத்திலும்   கைகேயியோ  தசரதரோ  ராமன்  கானகம்  செல்வதில் காரணமாக மாட்டார்கள். விசனம் வேண்டாம்”  என்று  விளக்கினார்.  இருந்த போதிலும்  மக்களின்  கொதிப்பு  முழுதுமாக  அடங்கவில்லை.  ஒரு பாதி துக்கும்  மறு பாதி கோபமுமாக திண்டாடினர்.
வாமதேவர்  மேலும்   மக்களுக்கு ஆறுதல் சொல்கிறார்;நேற்று  தான்   நாரதர்  வந்திருந்தார். ”பூமியின்  பாரத்தை  குறைக்கும்  நேரம் வந்துவிட்டது  பிரபோ”   என்றார்.  ஸ்ரீ  ராமன்  ”நான்   நாளையே தண்ட காரண்யம்  செல்கிறேன்”  என்று  வாக்கு  கொடுத்தார்.  ‘ராம  ராம”  என்று  உச்சரியுங்கள், ஒரு துன்பமும்  உங்களை  அணுகாது. அப்படியிருக்க   ராமனுக்கே துன்பமா  என்று  கவலை  வேண்டாம்.”.
ஒருவழியாக  வாம தேவர் கூறிய  உண்மைகள்  மக்களை  ஆசுவாச படுத்தியது.  கொஞ்சம்  அமைதி யுற்றார்கள். அனைவருமே  ”ஸ்ரீ  ராமா  ராமா”  என்று   உரக்கக்  கூவினார்கள்,  மெதுவாக  தத்தம்  இருப்பிடம்  திரும்பினார்கள். பலர்   நாங்கள்   ராமனோடு  காட்டுக்கு   செல்வோம்  என்றும்   முடிவெடுத்தார்கள்.

  ராமன், சீதை ,  லக்ஷ்மணன் ஆகியோர்  தசரதர்  மாளிகையில் நுழைந்தார்கள்.  கைகேயி  எதிர்பட்டாள். அவளை  ராமன்  வணங்கி ”  தாயே  நாங்கள்  கானகம்   செல்லத்  தயாராக வந்துள்ளோம் .  நீங்களும்  தந்தையும்  விடை கொடுத்தருள வேண்டும். ”என்றான்.  கைகேயி  உள்ளே சென்று தயாராக வைத்திருந்த  மரவுரிகளைத்   தானே அவர்களுக்கு வழங்கினாள்.  ராம லக்ஷ்மணர்கள்  அவற்றை  அணிந்து  கொள்ள, சீதைக்கோ  அதை   எப்படி அணியவேண்டும்  என்று தெரியாததால், ராமனே  அவளுக்கு  அதை  அவளுக்கு  உடுத்தினான்.  அநேக மக்கள்  இவர்களைக் கண்டு  அழுதனர்.  வசிஷ்டர்  கைகேயி  எதற்கு சீதைக்கு  மரவுரி அளித்தாய். அவள் உன் வரத்தில் கட்டுப்பட்டவள்  அல்லவே.  வழக்கமான ஆடை அணிகலன்களுடன் பதி வ்ரதையாக கணவனுடன் செல்லட்டுமே”  என்றார்.   தசரதர்  இதெல்லாம்   கண்டு கலங்கி நின்றார்.
 ”சுமந்திரா  தேரையாவது கொண்டுவாயேன்,  குழந்தைகள்  நடந்து போகாமல்  தேரிலாவது செல்லட்டுமே”   விம்மல்  பேச்சை அடைத்தது. தசரதன் தூண்டில் புழுவாக துடித்தார். அவரால் எதுவும் தடுத்து  பேச வழியில்லை. அவர் அடிமை. அகதி.  சக்தி, சுதந்திரம்  இழந்த, பாசம் மட்டும் கொள்ளைக்கில்லையாக  இல்லாத பாசம் மட்டும் கொள்ளையாக ராமன் மேல் உயிராக வாழும்  தந்தை. துயரம் தாளாமல் நினைவிழந்து  தரையில்  விழுந்தார்.  அவர் உயிரான ராமன் அவரைப் பிரிந்தால்  அவர் உயிரும் பிரியாமல் இருக்குமோ?

இரண்டு  வாள், வில்,  அம்பறாத்துணியோடு,  லக்ஷ்மணன்  தேரில்  ஏறினான்,   ராமனும் சீதையும்  தந்தையை வலம் வந்து வணங்கிவிட்டு, தேரில்  ஏறினர்.

”சுமந்திரா  புறப்படு”  என்றதும்  தேர் பறந்தது.  தசரதரோ  ‘ நில்  நில்”  என்று  கதறினார்.  கடந்து சென்ற தேர் கண்ணை விட்டு மறையும்  வரை  கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த  தசரதர்  மீண்டும்  மயங்கி விழுந்தார்.  மக்கள்  பலர்  வேகமாக சென்ற தேரைத்  தொடர்ந்து  ஓடினார்கள். வெகுநேரம் கழித்து  கண்  விழித்த  தசரதர்  தன்னை  கோசலையிடம்  கொண்டு செல்ல வேண்டினார். ” இனி என்  வாழ்நாள்  சில நாள்  தான்”  என்று தசரதர்  திரும்ப திரும்ப தனக்குள்  சொல்லிக்கொண்டார். தசரதர் கண்கள் கோசலையை சந்திக்கமுடியாமல் தடுமாறின.  பேச முடியாமல்  மீண்டும்  மயங்கி விழுந்தார்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;