
விக்கிரமாதித்தன் வேதாள கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN
விக்ரமாதித்தன் கதைகளை படிக்கும் நண்பர்களே, மறவாதீர்கள், என்னால் முடிந்தவரை சுவாரஸ்யமாக இந்த கதைகளை அளிக்கிறேன். இது நெவ்ர் எண்டிங் ஸ்டோரி never ending story போன்றது. விறுவிறுப்பான திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். நீங்கள் வேதாளமாக மாறும் வரப்பிற்கு சொல்லிக்கொண்டே இருப்பேன். உஷார்.
அதி தீரன், சாமர்த்தியசாலி, தைர்யவான், மஹா வீரன், அதி புத்திசாலி உஜ்ஜயினி மன்னன் விக்ரமாதித்தன் அமர்ந்த தங்க சிம்மாசனம் போஜராஜனுக்கு கிடைக்கிறது. அதில் அமர அவன் முயற்சிக்கும்போது அந்த சிம்மாசனத்தின் 32 படிகளில் உள்ள பெண் வடிவ பதுமைகள் அவனை தடுத்து ஒவ்வொன்றும் நீ விக்கிரமாதித்தனுக்கு சமமாகிவிடுவாயா சொல் என்று விக்கிரமாதித்தனை பற்றிய கதை ஒன்று சொல்கிறது. அதை கேட்ட போஜன் நிச்சயம் நான் விக்ரமாதித்தன் இல்லை என்று திரும்பி போகிறான்.
ஒவ்வொரு படி பொம்மை சொல்லும் கதைகளில் மூன்று பொம்மைகள் சொல்லிய கதை கேட்டீர்கள். இன்று நான்காவது படி பொம்மை சொல்லும் கதை;
மறுநாள் அந்த சாமியார் பழம் கொண்டுவரும்போது அவனை அழைத்து வர சொன்னான்.
”சாமியாரே, நீங்கள் யார், எதற்கு தினமும் இப்படி விலையில்லா மாணிக்கங்களை கொண்ட மாதுளை பழங்களை தினமும் எனக்கு கொண்டு தருகிறீர்கள்.உமக்கு எண்ணவேண்டும் சொல்லும்” என்று கேட்டான்.
”விக்ரமாதித்த மஹாராஜா, உங்கள் மேல் எனக்கு அளவு கடந்த அன்பு, மரியாதை. எனக்கு ஒரே ஒரு ஆசை . நான் நம்ம ஊர் காளிகோவிலில் இருப்பவன். நாளை இரவு நடு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு காளி
கோவிலுக்கு தனியாக நீங்கள் மட்டும் வரவேண்டும்.”
விக்ரமாதித்தன் ”சரி நான் வருகிறேன்” என்றான். மறுநாள் இரவு பன்னிரண்டு மணிக்கு விக்ரமாதித்தன் காளிகோவில் சென்றபோது அங்கே பேய்கள் பிசாசுகள் ஆடிக்கொண்டிருந்ததை பார்த்தான். மஹா வீரன், தைரியசாலியான அவனுக்கு ஒரு பயமும் இல்லை. இருட்டில் இருந்து சாமியார் வந்தார்.
”மஹாராஜா, வாருங்கள். அதோ அந்த சுடுகாட்டில் இருக்கும் முருங்கை மரத்தில் ஒரு பிணம் தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கிறதே, உடனே எனக்காக கொஞ்சம், அதை எடுத்துக் கொண்டு வாருங்கள்” என்கிறார்.
விக்ரமாதித்தன் மயானத்தில் இருந்த முருங்கைமரம் ஏறி, அதன் கிளையில் கட்டி இருந்த பிணத்தின் கயிறுகளை வாளால் வெட்டி வீழ்த்தினான் . தொப்பென்று அது கீழே விழுந்தது. ஆச்சர்யம் என்னவென்றால் அது மீண்டும் மரத்தில் ஏறி ஒரு கிளையில் உட்கார்ந்து கொண்டது. . மீண்டும் மரம் ஏறி அதை பிடித்து தோளில் போட்டு கெட்டியாக பிடித்துக் கொண்டு காளி கோவிலுக்கு நடந்தான் விக்ரமாதித்தன். அப்போது அந்த பிணத்தில் இருந்த வேதாளம் பேசியது.
”ஆஹா வாரும் பிள்ளாய், ஹே , வீர ராஜ விக்ரமாதித்தா, நான் ஒரு பலம் மிகுந்த, சக்தி வாய்ந்த வேதாளம். என்னை நீ தூக்கிக் கொண்டு போவதானால் ஒரு நிபந்தனை.போகும் வழியில் ஒரு கதை உனக்கு சொல்வேன். அதன் முடிவில் ஒரு கேள்வி கேட்பேன். அதற்கு உனக்கு சரியான விடை தெரிந்து நீ சொல்லாவிட்டால், உன் தலை ஆயிரம் சுக்கலாக வெடித்து விடும். நீ சரியான பதில் சொன்னால், நான் உன்னிடமிருந்து தப்பி மீண்டும் எனது வாசமாகிய முருங்கை மரம் சென்று விடுவேன். சம்மதமா?” என்றது வேதாளம்.
”என்னடா இது, தப்பாக சொன்னால் என் தலை வெடித்து நான் காணாமல் போகிவிடுவேன். சரியாக சொன்னால் வேதாளம் காணாமல் போய் முருங்கை மரத்தில் போய் ஏறிக்கொண்டு விடும்.. என்ன செய்வது? சரி என்று சொல்வதை விட வேறு வழியில்லை’ என்று உணர்ந்தான்.
”சரி வேதாளமே நீ உன் கதையை ஆரம்பி” என்றான் விக்ரமாதித்தன். வேதாளம் முதல் கதையை ஆரம்பித்தது.
நான்காவது முறையாக போஜன் அந்த அழகிய தங்க சிம்மாசனத்தில் ஏறி அமர படியில் காலெடுத்து வைக்கிறான். நான்காம் படி நிறுத்துகிறது. யார் என்று பார்த்த போது அந்த படியில் இருந்த பெண் பதுமை பேசுகிறது.
”நில் போஜா, நான் கேட்பதற்கு பதில் சொல்?
இதோ பார் பெண் பொம்மையே உனக்கு முன்னால் மூன்று பொம்மைகள் என்னை கேட்ட அதே கேள்வி தான் நீயும் கேட்கப்போகிறாய் என்று எனக்கு பழக்கமாகிவிட்டது. நிச்சயம் நான் விக்ரமாதித்தன் ஆகமுடியாது என்பது எனக்கே தெரியும். ஆனாலும் நீ சொல்ல வந்த விக்ரமாதித்தன் கதையை கேட்க ஆவலாக இருக்கிறேன் சொல்.” என்கிறான் போஜன்.
நான்காவது படியில் உள்ள மங்கள கல்யாண வல்லி எனும் அந்த பெண் பொம்மை சொல்லும் கதை.
”அஹோ வாரும் பிள்ளாய் (விக்ரமாதித்தன் கதையில் அடிக்கடி வரும் ஒரு விசித்திர வார்த்தை) நான் சொல்லப்போவது சம்பகவல்லி பற்றிய கதை. கேள், சொல்கிறேன்.குறுக்கே பேசாதே.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை விக்ரமாதித்தன் தனது தம்பியும் மந்திரியுமான பட்டி யோடு காட்டுக்கு செல்வான். வேதாளத்தை சந்திப்பான். அதை சுமப்பான். அது கதை சொல்லும்.
ஒரு சமயம் இப்படி காட்டுக்கு போகும்போது, வழியில் ஒரு சௌகரியமான சத்திரம், விடுதி யில் தங்குகிறான். அதை அடுத்து ஒரு தூய்மையான குளம் தென்படுகிறது. விக்கிரமாதித்தனும் பட்டியும் அதில் நீராடி குளித்து களைப்பு நீங்கினார்கள் .எங்கிருந்தோ நறுமணத்தோடு கம்மென்று சம்பக மலர் வாசனை மூக்கை துளைத்தது.
”பட்டி நீ போய் எங்கிருந்து இந்த நறுமணம் வருகிறது என்று கண்டுபிடி.” என அனுப்பினான் விக்ரமாதித்தன். பட்டி தேடினான் யாரையெல்லாமோ கேட்டான். தெரியவில்லை. பிறகு இருவரும் சேர்ந்து காட்டில் சுற்றி தேடினார்கள்.
நாலு வழிப்போக்கர்களை கண்டபோது அவர்கள் இந்த இருவரையும் நெடுந்தூரம் கூட்டிச் சென்று அதோ தெரிகிறது பார் ஒரு நகரம் அது தான் விஜயநகரம். அதன் ராஜா தான் விஜயரங்கன். அவன் அழகிய மகள் தான் சம்பகவல்லி. பிறக்கும்போதே கம்மென்று ஷண்பக மலர் வாசனையோடு பிறந்ததால் அந்த பெயர். இப்போது 22 வயதாகிறது. பன்னிரண்டு வருஷங்களாக அவள் ஒரு தவம் செயகிறாள். எந்த ஆண் வாசனையும் அவளை நெருங்கக் கூடாது என்று.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நீ குளித்தாயே அந்த குளத்துக்கு வருவாள். தடாகத்தில் ஆயிரம் நண்பிகளோடு நீராடி மகிழ்ந்து சத்திரத்தில் தங்கி திரும்புவாள். இது அவள் வழக்கம். அவள் குளத்துக்கு வரும் முதல் நாள் ராஜா தண்டோரா போ ட்டு விடுவான். எந்த ஆணும் அவள் வரும் நாளில் அந்த பக்கமே வரக்கூடாது, குளத்தில் குளிக்கக்கூடாது, சத்திரத்தில் தலை காட்டக்கூடாது.. மீறினால் தலை இருக்காது” என்று. அவள் தங்குவதே நாலாபுறமும் எழுப்பிய மதில் சுவர்களுக்கு இடையே உள்ள கோட்டை அந்தப்புரத்தில் தனது தோழிகளுடன் தான். ஆகவே நீங்கள் இருவரும் இங்கிருந்து சீக்கிரம் திரும்பி போய்விடுங்கள். ராஜாவின் ஆட்கள் பார்த்தால் உங்கள் தலைகள் காணாமல் போய்விடும்” என்கிறார்கள் அந்த வழிப்போக்கர்கள்.
பட்டிக்கு ஆர்வம் அதிகமாயிற்று. எப்படியாவது அந்த பெண்ணை விக்கிரமாதித்தனுக்கு திருமணம் செய் து விடவேண்டும் என்று. பட்டி விஜயநகர ராஜாவின் மந்திரியை போய் சந்திக்கிறான். தனது விருப்பத்தை சொல்கிறான். மந்திரி ராஜா விஜயரங்கனிடம் விஷயத்தை சொல்ல ஏற்கனவே ராஜா ஒரு ரகசியம் புரியாமல் தவித்தவன்.
”ஏன் சம்பகவல்லி இப்படி ஆண் வாசனையே நெருங்கக்கூடாது என்று ஒரு நிபந்தனை போட்டு தவம் இருக்கிறாள்.இதை தெரிந்துகொள்ள விக்ரமாதித்தன் உதவுவான் என்று தோன்றுகிறது.பட்டி விஜயநகரத்திலிருந்து திரும்புகிறான். வரும் வழியில் பட்டி களைத்து போய் காட்டில் ஒரு பெரிய நிழல் தரும் ஆல மரத்தடியே படுக்கிறான். அங்கே வாழ்ந்து வந்த ஒரு முனிவர்
”யார் இவன் இவ்வளவு அழகான வாலிபன் என்று ஆச்சர்யப்படுகிறார். அவன் அழகில் எங்கே தனது மனைவி மயங்கி விடுவாளோ” என்று பயம் வந்துவிடுகிறது. தனது கையில் இருந்த ஒரு தர்ப்பையை அவன் மீது போடுகிறார். உடனே, பட்டி ஒரு அழகிய பெண்ணாகிறான். முனிவர் சந்தோஷமாக போய்விடுகிறார். சற்று நேரத்தில் அவர் மனைவி அங்கே வருகிறாள். பட்டி அழகிய பெண்ணாக தூங்குகிறான். ”அடே, இவ்வளவு அழகிய ஒரு பெண் இந்த காட்டில் எப்படி வந்தாள்? தனது கணவர் முனிவர் கண்ணில் இந்த அழகிய பெண் பட்டால் அவர் மனம் கிலேசமடையுமோ என்று யோசிக்கிறாள். அருகே ஒரு புல்லை பறித்து மந்திரம் சொல்லி அவன் மீது வீச பட்டி மீண்டும் ஆணாகிறான். அவள் சென்ற பிறகு பட்டி முனிவர், அவர் மனைவி இருவரும் தன மீது போட்ட ரெண்டு தர்ப்பைகளையும் ஜாக்கிரதையாக எடுத்து வைத்துக் கொள்கிறான்.
விக்கிரமாதித்தனை சந்தித்து விஷயம் சொல்கிறான். பட்டி ராஜாவாக வேஷம் தரித்து விக்கிரமாதித்தனை பெண்ணாக்கி விஜயநகரம் போகிறார்கள். விஜயரங்கன் அவர்களை வரவேற்கிறான்.
”நான் சால்ய தேசத்து ராஜா இது என் மனைவி, உஜ்ஜயினி ராஜா விக்ரமாதித்தன் தங்கை ” என்று ராஜாவிடம் அறிமுகம் செயது கொள்கிறான் பட்டி.
”ஆஹா ராஜா விக்ரமாதித்தன் மைத்துனனா நீங்கள்?”
”ஆமாம் ராஜா, ஆனால் என்ன பிரயோஜனம். என்னிடம் கப்பம் கேட்கிறான்.வருஷா வருஷம் ஆயிரம் பொற்காசுகள் கட்டவேண்டுமே. எங்கள் ராஜ்யத்தில் இப்போது பஞ்சமும் வறட்சியாக இருக்கிறது. எப்படி கப்பம் கட்டுவது? விக்ரமாதித்தன் ரொம்ப கெடுபிடி. ஆகவே ஒரு யோசனை. உங்களிடம் ஆயிரம் பொற்காசுகள் கடனாக வாங்கி திருப்பி தரும் வரை என் மனைவி உங்கள் மகள் அரண்மனையில் இருக்கட்டும். விரைவில் உங்கள் கடனை அடைத்து அவளை திரும்ப அழைத்துக் கொண்டு போகிறேன்”
”மனைவியை அடமானம் எல்லாம் வைக்கவேண்டாம். நான் தாராளமாக பொற்காசுகள் தருகிறேன்” — விஜயரங்கன்.
”அது முறையில்லை ராஜா, என் மனைவி உங்கள் மகளோடு சேர்ந்து இருக்கட்டுமே. அவளுக்கும் நெடுநாளாக ஒரு ஆசை சண்பகவல்லியை சந்திக்க” என்றான் பட்டி. திரும்பும் வழியில் விஜயரங்கன் கொடுத்த பொற்காசுகளை ஒரு இடத்தில் புதைத்து வைக்கிறான். அவன் மகன் வேதாளம் துணையுடன் அங்கே ஒரு வண்டாக மாறி சம்பகவல்லி அந்தப்புரத்தில் மேலே ஒரு இடத்தில் இருந்து தினமும் அங்கே நடப்பதை கவனிக்கிறான்.சம்பகாவுக்கு விக்ரமியை ரொம்ப பிடித்துவிட்டது. எவ்வளவு சாதுர்யமான பெண். நெருங்கிய நண்பி யாகிறாள். ஒருநாள் விக்ரமி ”ஏன் சம்பகா, எப்போதும் சோக வடிவமாக இருக்கிறாய் ? என்னிடம் உன் மனதை பகிரக்கூடாதா? என்கிறான் விக்ரமியான விக்ரமாதித்தன்.
அதை ஏன் கேட்கிறாய். ஒரு கதை சொல்கிறேன் கேள்; சதுரகிரிக்கு ஒரு ராஜா சைந்தவன். அவன் பிள்ளை தான் சித்திரசேனன். காட்டில் ஒரு முனிவரிடம் குருகுலவாசம் செய்து கல்வி கற்கும்போது அவனுக்கு வில்லிய சிங்கன் எனும் ஒரு வேடன் நண்பனாகிறான்.நெருங்கிய நண்பனாகிறான்.
”வில்லிய சிங்கா , உனக்கு எப்போது கஷ்டம் ஏதாவது நேர்ந்தாலும் என்னிடம் வா” என்றதால் பலமுறை வில்லியசிங்கன் சென்றபோதும் ராஜாவாகிவிட்ட சித்ரசேனனை பார்க்க அனுமதி கிடைக்க வில்லை. பலநாள் அரண்மனை கோட்டை வாசலில் நிற்பான். சித்திரசேனன் அவனை கண்டுகொள்ளவே இல்லை. வில்லிய சிங்கன் ஒரு வேடனாகவே பரம்பரை தொழிலில் ஈடுபட்டான். அடர்ந்த காட்டில் ஒருநாள் வழி தெரியாமல் உள்ளே எங்கோ சென்று விட்டான் வில்லிய சிங்கன். அங்கே ஒரு குகை. அதற்குள் சென்ற வில்லிய சிங்கன் அங்கே ஒரு கிழ அருவருப்பான ஒரு முனிவர் ஒரு இளம் அழகிய பெண்ணின் மடியில் படுத்துறங்குவதை பார்த்தான். அந்த பெண் ஜாடையில் உடனே இங்கிருந்து போய்விடு. விழித்துக் கொண்டால் முனிவர் நம் இருவரையும் சேர்த்து கொன்றுவிடுவார் ‘ என்று வில்லியசிங்கனுக்கு அவசர ஜாடை கட்டளையிடுகிறாள். எப்படியோ வில்லியசிங்கன் ஊர் திரும்பி ஒரு நாள் சித்ரசேனனை சந்திக்கிறான்.பால்ய நண்பனை அடையாளம் புரிந்துகொள்கிறான் சித்திரசேனன். அப்போது காட்டில் சந்தித்த முனிவர் இளம் பெண் விஷயம் சித்திரசேனன் காதுக்கு போகிறது. ”ஓஹோ அவ்வளவு அழகா அந்த பெண். அவளை கட்டாயம் சந்திக்க வேண்டும்” என்று சித்திரசேனன் முடிவெடுத்தான். இருவரும் காட்டுக்குள் அந்த குகைக்கு செல்கிறார்கள்.
அங்கே வழக்கம்போல் முனிவர் அந்த அழகிய பெண் மடியில் தலைவைத்து தூங்கும்போது ”வில்லிய சிங்கா , நீ மெதுவாக அந்த முனிவர் தலையை எடுத்து உன் மடியில் வைத்துக்கொள் நான் அந்த பெண்ணை காப்பாற்றுகிறேன்” என சொல்ல, அவ்வாறே அவனும் செய்ய, சித்திரசேனன் அந்த பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடி, அடுத்த ஊரில் அவளை மணந்துகொண்டு அவள் அவன் மனைவியாகிறாள். வெகு நேரம் கழித்து முனிவர் கண் திறந்து பார்த்து கடும் கோபம் கொண்டு வில்லியசிங்கன் மூலம் விஷயம் அறிகிறார்.
‘அடே வில்லியசிங்கா, நல்ல நண்பன் என கருதி அந்த சித்திரசேனன் நட்பை நம்பி இந்த காரியம் செய் தாய். உண்மையான நெருங்கிய நட்பு பற்றி ஒரு கதை சொல்கிறேன் கேள் என்று ஒரு கதை ஆரம்பிக்கிறார் முனிவர்”
தொடரும்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



