
சிலையும் புறாவும் – நங்கநல்லூர் J K SIVAN
ஆங்கில எழுத்தாளர்களில் ஆஸ்கார் வைல்ட் எழுத்து எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன வயதிலேயே படித்த அவருடைய ஒரு கதை இன்னும் மறக்கவில்லை.
அது ஜேஜே என்று மக்கள் நகரும் நெரிசல் நகரம். அதன் நடுவில் ஒரு உயரமான பீடத்தில் ஒரு ராஜகுமாரன் சிலை. ”சந்தோஷ ராஜகுமாரன்” என்று பெயர். அவன் முகத்தில் விசேஷமான மனம் கவரும் சந்தோஷ புன்னகை! அந்த கருங்கல் சிலை உடல் பூரா மெல்லிய பொன் தகடுகள் கவசம். ஒளிவிடும் இரு நீல மணிகள் கண்களாக வைத்திருந்தது. சிலையில் இடையில் சிகப்பு கலரில் விலையுயர்ந்த ஒரு ரத்னம் பதித்த வாள் கைப்பிடி. பார்ப்பவர்கள் அந்த சிலையை ரசித்தார்கள். ” இந்த ராஜகுமாரன் நமது நகருக்கு ஒரு சிறந்த அழகு அடையாளம்” என்று ஊர் தலைவர் ஒருவர் பேசினார்.
பிடிவாதம் பிடித்து அழுத குழந்தை ஒன்றின் தாய் ”அதோ பார் அந்த ராஜகுமாரன் எவ்வளவு சந்தோஷமாக சிரிக்கிறான். நீயும் அவனைப்போல் சந்தோஷமாக சிரிக்கணும்’
கொக்கு நாரை புறா வகை பறவைகள் கூட்டமாக ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பருவநிலை மாறும் போது குடியேறுவது வழக்கம். ஒரு சிறு புறா அதன் கூட்டத்தோடு பறந்து அவ்வாறு போகும்போது அதனால் வெகு தூரம் மற்ற பறவைகளைப் போல் பறக்க முடியாததால் பின் தங்கி விட்டது. அதற்கு உட்கார, இரவு தங்க ஒரு இடம் தேவை. எங்கே தங்கலாம் என்று தேடியபோது தான் ராஜகுமாரன் சிலை அதன் கண்ணில் பட்டது. ராஜகுமாரன் சிலையில் கால்களில் பாதங்களுக்கு இடையே கொஞ்சம் அடக்கமாக உட்கார இடம் கண்டு பிடித்து அங்கே சென்று அமர்ந்தது. ‘இங்கே பொன்னாலான படுக்கையில் இரவு நிம்மதியாக தூங்கலாம்” என்று சந்தோஷப்பட்டது. தலையை சிறகுக்குள் வைத்து தூங்கும் சமயம் ஒரு துளி நீர் அதன் மேல் விழுந்தது.” மேலே ஆகாயத்தில் மேகமே இல்லையே, எப்படி மழைத்துளி என்மீது? பயங்கர குளிர் காலம் என்றாலும் மழை இல்லையே” இப்படி யோசித்துக்கொண்டிரும்போதே இன்னொரு துளி நீர் அதன்மேல் விழுந்தது.
”சே இந்த சிலை நம் பாதுகாப்புக்கு பிரயோசனம் இல்லை வேறே எங்காவது தான் இடம் தேடவேண்டும்’.
புறா வெறுத்துப் போய் புறப்படலாம் என்று நினைக்கும்போது மூன்றாவது துளி நீர்… பறவை மேலே சிலையைப் பார்த்தது.
‘அட இதென்ன ஆச்சர்யம். ராஜகுமாரன் சிலையில் கண்களிலிருந்து அல்லவோ கண்ணீர் சுரந்து விழுகிறது.அழகான ராஜகுமாரன் ஏன் அழுகிறான்? புறாவுக்கு வருத்தம்”” ஏ சிலையே நீ யார்?””என்னை சந்தோஷமான ராஜகுமாரன் என்பார்கள்””சந்தோஷமான ராஜகுமாரன் என்கிறாய், பின் எதற்காக அழுகிறாய்? உன் மூன்று சொட்டு கண்ணீரே என்னை ஈரமாக்கி விட்டது பார்த்தாயா?””நான் உயிரோடு இருந்தபோது எனக்கு இதயம் இருந்தது. எனக்கு கண்ணீர் என்றால் என்ன என்றே தெரியாது. என் அரண்மனையில் துன்பம், துயரம் எதுவுமே இல்லை. இரவும் பகலும் விளையாட்டு, சந்தோஷம் .அரண்மனைக்கு வெளியே நடப்பது எதுவும் தெரியாது. அப்படியே வாழ்ந்தேன் இறந்தேன் . என்னை சிலையாக இங்கே நிற்க வைத்து விட்டார்கள். உலகத்தின் துன்பங்கள் துயரங்கள் எல்லாம் இப்போது எனக்கு நன்றாக தெரிகிறது. ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் அவர்களுக்காக அழுகிறேன்.. என் நண்பா புறா, எனக்கு நீ ஒரு சின்ன உதவி செயகிறாயா?”
”சொல் என்ன செய்யவேண்டும்?’ ”அதோ பார் நேரே ஒரு வளைந்த தெரு அதில் முதல் வீட்டில் ஒரு ஜன்னல் திறந்து இருக்கிறது பார், உள்ளே ஒரு ஏழைப்பெண் துணி தைக்கிறாள். அடுத்த வாரம் ஒரு பணக்காரிக்கு பிறந்த நாளுக்கு உடை தைக்கிறாள். அவள் அருகே பார் ஒரு பெஞ்சில் ஒரு சிறுவன். அவள் ஒரே மகன் ஜுரத்தோடு படுத்திருக் கிறான். அவன் ஆப்பிள் கேட்கிறான். அவளிடம் காசில்லை. வெறும் தண்ணீர் தான் அவனுக்கு தருகிறாள். இங்கே பார் என் இடுப்பில் வாளில் ஒரு சிவப்பு நிற விலை உயர்ந்த ரத்னம் பாதித்திருக்கிறது. அதை கொண்டு போய் அவளிடம் கொடு.என்னால் நகரமுடியாதே””நண்பா, நான் பறந்து வெகு தூரம் எகிப்து வரை போகவேண்டும் என் உறவு புறாக்களோடு சேரவேண்டும்””புறாவே, ஒரு நாள் இரவு இங்கே என்னோடு இரேன்.. பாவம் அந்த பையன் அவனுக்கு உதவ விரும்புகிறேன்””சரி உனக்காக ஒரு நாள் இரவு இங்கே உன்னோடு இருக்கிறேன்”குளிரில் வெட வெட என்று நடுங்கிக்கொண்டே புறா வாயில் அந்த சிவப்பு கல்லை கவ்விக்கொண்டு எப்படியோ அந்த பையன் இருக்கும் வீட்டுக்குள் போனது. பையன் குளிரில் நடுங்க, அவன் தாய் அருகில் தூங்க, எதிரே ஒரு மேஜையின் மேல் சத்தமில்லாமல் அந்த சிவப்பு கல்லை வைத்துவிட்டு குளிரின் மீண்டும் பறந்து புறா ராஜகுமாரன் அருகே வந்தது. நடந்ததை சொன்னபோது ராஜகுமாரன் மகிழ்ந்தான்.
மறுநாள் புறா பறக்க தயாரானபோது ராஜகுமாரன் ”புறாவே இன்னும் ஒருநாள் இரவு என்னோடு இரேன்?” என்றான்.”ஏன் இன்னொரு கல் கொண்டுபோய் அந்த பையன் வீட்டில் போடவேண்டுமா? முடியாது. இருந்தாலும் என்னவோ எனக்கு உன்னை பிடித்துவிட்டது. இன்று இரவு மட்டும் இங்கே உன்னோடு இருக்கிறேன்.” என்றது புறா. ‘அதோ அந்த நீல நிற வீட்டில் குளிரில் ஒரு வயதான நாடகாசிரியன் பசியோடு துடிக்கிறான் பார். பாவம் நாளைக்குள் அவன் ஒரு நாடகம் எழுதி கொடுக்கவேண்டும். அவனால் எழுத முடியவில்லை. குளிர் பசி ரெண்டும் அவனை வாட்டுகிறது பார். என்னிடம் சிவப்புக் கல் இல்லை. ஆனால் ரெண்டு கண்களில் நீலக் கற்கள் பதித்து இருக்கிறது. ஒரு நீலக் கல்லை எடுத்துக் கொண்டு போய் அவனிடம் சேர். அதை விற்று அவன் வாழட்டும்.”
‘ராஜ குமாரா உன்னை எனக்கு பிடிக்கிறது. நீ எவ்வளவு நல்ல இதயம் படைத்தவன். உனக்காக இன்றிரவு தங்குகிறேன். நீ சொல்வதைச் செய்கிறேன்’புறா ஒரு நீலக்கல்லை கண்ணிலிருந்து பெயர்த்து வாயில் கவ்வியவாறு அந்த எழுத்தாளன் வீட்டில் நுழைந்தது மறுநாள் புறா ”ராஜகுமாரா நான் போகிறேன். என் கூட்டத்தோடு சீக்கிரம் சேரவேண்டும்”ராஜகுமாரன் அழுதான். ”அழாதே என் மனம் தாங்காது. சொல் எதற்கு அழுகிறாய்?”’இன்னும் ஒரே ஒரு நாள் என்னோடு தாங்குவாயா நண்பா. எனக்கு உன்னை விட்டால் யாருமே இல்லை ””கடும் குளிர் நான் இனியும் இந்த ஊரில் இருந்தால் இறந்து விடுவேன். எப்படியாவது நான் வெகுதூரம் பறந்து என் குடும்பத்தோடு சேர்ந்தால் தான் வாழ முடியும் . குளிரில் வெகு நேரம் வெகு தூரம் நான் பறக்க முடியாது. இப்போதே சீக்கிரம் நான் போயாகவே வேண்டும். அடுத்த முறை இங்கே வரும்போது நீ இழந்த நீலக்கல், சிவப்புக் கல்லுக்கு மாறாக நான் நல்ல கற்களை கொண்டு வந்து உனக்கு பரிசளிக்கிறேன்’
”ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணு . அதோ எதிரே உள்ள தெருமுனையில் ஒரு சிறுமி அழுகிறாள் பார். அவள் தந்தை நெருப்பு பெட்டிகள் செய்து விற்பவன். அவளிடம் சில பெட்டிகள் கொடுத்து விற்க சொன்னான். அந்த பெண் அதைத் தூக்கிக்கொண்டு நடக்கும்போது வாராவதி மேல் கால் தடுக்கி விழுந்து அத்தனை நெருப்பு பெட்டிகளும் கீழே நீரில் விழுந்து விட்டது. அவள் அப்பா குடிகாரன் அவளை அடிப்பான். நீ என் இன்னொரு கண்ணில் இருக்கும் நீலக்கல்லையும் எடுத்து அவளிடம் போட்டுவிடு. அவள் அப்பா அதை விற்று அவளை அடிக்காமல் தடுப்போம். ”
” மாட்டேன் உன் ஒரே கண்ணில் இருக்கும் கல்லையும் எடுத்துவிட்டால் நீ குருடனாகிவிடுவாய். என் மனது ஒப்புக்கொள்ளாது . உன்னை குருடனாக விட மாட்டேன்.””தயவு செயது நான் சொன்னபடி செய் என் நண்பா”புறாவால் நண்பன் வார்த்தையைத் தட்ட முடியவில்லை. நீல க்கல்லை கொண்டு போய் அந்த பெண்ணின் கையில் போட்டுவிட்டு வந்தது. அவள் ஓடிப்போய் அப்பாவிடம் கொடுக்க அவன் விற்று நிறைய பணம் பண்ணி அவளை சந்தோஷமாக அணைத்தான். புறா சிலையிடம் திரும்பியபோது அவனைக் குருடனாக பார்க்க முடியாமல் நின்றதை கண்டு மனம் ஒடிந்து போய் விட்டது.”நண்பா நீ பிறருக்குதவி குருடனானவன். உன் தயாள மனது என்னை கட்டிப்போட்டுவிட்டது. கடும் குளிரில் நானும் உன்னோடு இங்கேயே இருக்கப்போகிறேன். உன்னை விட்டு என்னால் போகமுடியாது.””வேண்டாம் புறா , நீ உடனே பறந்து போய் எகிப்தில் உன் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு சந்தோஷமாக இரு. என்னைப் பற்றிய கவலை வேண்டாம்””மாட்டவே மாட்டேன். உனைப் பிரிந்து போகமாட்டேன்.”புறா அவன் கை.மேல் உட்கார்ந்து கொண்டு அவனோடு இரவெல்லாம் தனது பல அனுபவங்களை சொல்லியது. அவனும் சந்தோஷமாக கேட்டான். அங்கேயே படுத்துக் கொண்டது. மறுநாள் காலை புறா பறந்து சென்று ஊர் சுற்றியது. ஏழைகள் படும் கஷ்டம் எல்லாம் சிலைக்கு சொன்னது. ராஜகுமாரன் அழுதான். அவனால் பார்க்க முடியாததால் புறா மூலம் நாட்டில் நடப்பதை அறிந்து கொண்டான்.
”என் மேல் இருக்கும் பொன் தகடுகளை பிய்த்து அந்த ஏழைகள் இருக்கும் இடங்களில் போடு. அதை விற் று அவர்கள் பசியாறட்டும் ”புறா அவ்வாறே செய்ததில் ஏழைகள் குடும்பம் பசியாறியது. கடும் குளிர் அதிகமாகியது. புறாவால் குளிர் காலத்தை சமாளிக்க முடியவில்லை. எங்கும் வெள்ளையாக பனிக்கட்டி. மூச்சு திணற ஆரம்பித்தது. ”நண்பா இனி என்னால் பிழைக்க முடியாது என்று தோன்றுகிறது. உனக்கு ஒரு முத்தம் கொடுக்கட்டுமா, அப்புறம் அதுவும் முடியாமல் போய்விடும்”சரி புறா, உடனே நீ பறந்து உன் கூட்டத்தை தேடி எகிப்து நகரம் போ. போகுமுன் என் உதட்டில் முத்தமிடு. நான் உன்னை பார்க்க கண்ணற்றவன்””நான் எகிப்து ,போகவில்லை நண்பா. நான் யமலோகம் தான் போகப்போகிறேன். அதற்கு முன் உனக்கு என் முத்தம்”மறுநாள் காலை அந்த ஊர் அதிகாரி சிலை பக்கம் வந்தபோது சிலை மார்பு பிளந்திருந்தது. ஓஹோ, கடுங்குளிரில் சிலை விரிசல் விட்டிருக்கிறது. கண்ணைக் காணோம். இடுப்பில் வாள் மீது சிவப்புக் கல்லைக் காணோம். அவலக்ஷணமான சிலை, தங்கத்தோல் உறிந்து கருப்பும் மஞ்சளுமாக அசிங்கமாக இருக்கிறது இதை அப்புறப்படுத்தவேண்டும்.
”சே, ஒரு புறா வேறு செத்து கிடக்கிறது. சிலையை உடைத்து எறிந்த இடத்தில் அதன் இதயம் அருகே புறாவும் அதை அணைத்துக்கொண்டு இறந்து கிடந்தது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



