

நண்பர் விஜயம் – நங்கநல்லூர் J K SIVAN
26.2.2025 மஹா சிவராத்ரி. வீட்டுக்கு அருகே அருள்மிகு திருமால் மருகன் ஆலயத்திலிருந்து அர்ச்சனை, ஸ்தோத்திரங்கள் சிவ நாமாவளிகள் காதில் விழுந்து கொண்டே இருக்க, நானும் ஸ்ரீ ருத்ரம் சமகம் மந்த்ரங்கள் சொல்லிக்கொண்டே இருந்த போது ஒரு போன் கால்.
”சிவன் பேசுகிறேன்”’நான் உமா அபர்ணா ஸார், நங்கநல்லூரில் இருக்கிறேன் இன்னும் அரைமணி நேரத்தில் உங்கள் வீட்டுக்கு வருகிறேன். உமா அபர்ணாவை நான் அறிவேன். விடாமல் தொந்தரவு கொடுக்கும் உடல் நல பாதிப்புகளை பொருட்படுத்தாது, மேலும் மேலும் உற்சாகத்தோடு உலவும் மிக சுறுசுறுப்பானவர். தேனீ மலர்களைத்தேடி தேன் சேகரிப்பது போல் வண்டாக வேகமாக சென்று பல திறமைசாலி பெண்களை சந்தித்து, அவர்களை எழுத வைத்து புத்தகம் தயாரித்து வெளியிடுபவர். அவரது பேக்கிடெர்ம் நிறுவனம் மூலம் வெளிச்சம் காட்டப்பட்ட அற்புத பெண் எழுத்தாளர்கள் பலரை நான் அறிவேன். உயர்ந்த பதவிகள் வகித்து ஒய்வு பெற்றவர்கள், குடும்ப தலைவிகள் என்றாலும் சிறந்த சிந்திக்கும் திறன், எழுத்து ஆளுமை உள்ளவர்களை எழுத வைத்து உமா அபர்ணா எழுத்துலகத்துக்கு பல மேன்மையான பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.
உமாவால் அரைமணி நேரம் கூட என்னோடு நேரம் செலவழிக்க முடியவில்லை. அதற்குள் பல அலை பேசி அழைப்புகள். ஒரே ஒரு டம்பளர் வெந்நீர் மட்டும் என்னிடம் பெற்றுக் கொண்டு என்னையும் என் மனைவியையும் நமஸ்கரித்து விட்டு அவருடைய சகோதரியோடு புறப்பட்டுவிட்டார். தியாகராயநகரில் யாரோ காத்திருக்கிறார்களே .
அவரது சகோதரிகளில் ஒருவர் திருமதி கீதா வீரராகவன் தனது பெண் வீட்டுக்கு நங்கநல்லூர் வந்ததால் இரு சகோதரிகளும் என்னை சந்தித்தனர். கீதா வீரராகவன் கூட ஒரு சிறந்த எழுத்தாளர். சின்மயா பள்ளியில் பல வருஷம் ஆசிரியை அனுபவம் கொண்டு ஸ்ரீ ரங்கத்தில் வாழ்பவர்.
தனது வாழ்க்கையை எழுத்துலகத்துக்கு அர்பணித்துக் கொண்டுள்ள திருமதி உமா அபர்ணாவை நேரில் சந்தித்த போது தான், அவரது, அசையாத, வளரும், தன்னம்பிக்கை, எண்ணியவற்றை எண்ணியாங்கு செயல் படும் தைர்யம், துணிவு, உழைப்பு எப்படி பலன் தரும் என்பதற்கு உதாரணமான அன்றாட வாழ்க்கை, சமூகத்தின் மேல் உள்ள அக்கறை, பெண்களை உயர்த்திக் காட்ட உன்னத முயற்சிகள், புத்தகம் உருவாக்கி வெளியிட தேவையான திறமை, பொறுமை, விடா முயற்சி, வெற்றிமேல் வெற்றி தரும் அயராத உழைப்பு லக்ஷிய பெண்மணி என்பதை விட, எல்லாவற்றிற்கும் மேலான ஆழ்ந்த இறைபக்தி கொண்டவர் என்று எல்லாம் சுலபத்தில் உணர முடிந்தது.
திருமதி உமா அபர்ணாவுக்கு என்னுடைய ”ஐந்தாம் வேதம் இரு பாகங்கள் புத்தகத்தை பரிசளித்ததில் பெருமை அடைந்தேன். திருமதி உமா அபர்ணா என்னுடைய ”பழைய ஞாபகங்கள்” என்ற புத்தகத்தை விரைவில் வெளியிடப் போகிறார். அதில் என் பழைய ஞாபகங்கள் நான் பால்யத்தில் வாழ்ந்த சூளைமேடு, திருவல்லிக்கேணி, கோமளீஸ்வரன் , ஆழ்வார்பேட்டை வாடகை வீடுகள் பற்றிய அனுபவங்களைத் தவிர அறுபது ஆண்டுகளுக்கு முன் நான் நங்கநல்லூரில் ஒரு மனை வாங்கி ஒரு சிறிய வீடு கட்டிக்கொண்டு குடியேறிய அனுபவங்களை எல்லாம் எழுதியுள்ளேன்.
அடிக்கடி நண்பர்களை இதுபோல் நேரில் சந்திக்கும்போது வெறும் எழுக்தில் பெயர் மட்டுமே தெரிந்தவர்கள், போனில் பேசுபவர்களை எல்லாம் வெகு நன்றாக சந்தோஷத்தோடு கண்ணால் பார்த்து பேசி, நட்பை வளர்த்துக் கொள்ள முடிகிறது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



