
வைராக்ய சதகம் – நங்கநல்லூர் J K SIVAN
ராஜா பர்த்ருஹரி
ஸ்லோகங்கள் – 48–51
48. न ध्यातं पदमीश्वरस्य विधिवत्संसारविच्छित्तये स्वर्गद्वारकवाटपाटनपटुर्धर्मोऽपि नोपार्जितः । नारी पीनपयोधरोरुयुगलं स्वप्नेऽपि नालिङ्गितं मातुः केवलमेव यौवनवनच्छेदे कुठारा वयम् ॥ ४५॥
ந த்⁴யாதம் பத³மீஶ்வரஸ்ய விதி⁴வத்ஸம்ஸாரவிச்சி²த்தயே ஸ்வர்க³த்³வாரகவாடபாடநபடுர்த⁴ர்மோऽபி நோபார்ஜித: । நாரீ பீநபயோத⁴ரோருயுக³ளம் ஸ்வப்நேऽபி நாலிங்கி³தம் மாது: கேவலமேவ யௌவநவநச்சே²தே³ குடா²ரா வயம் ॥ 45॥ \\
நமக்கு தெரியும், எத்தனையோ முறை பல பல வேதாந்த புத்தகங்களில் படித்தும், பிரசங்கங்கள் கேட்டும், இந்த உலக பந்தத்திலிருந்து விடுதலை பெற, பகவானின் திருவடிகளை நினைப்பதில்லை,ஆத்மாவை ப்ரம்மம் என்று உணர முடியவில்லை, ஆத்மா என்பது என்ன என்று விசாரம் செய்ய முயற்சிக்க வில்லை. உலக ஈர்ப்புகள் கனவுகளிலும் நம்மை ஆக்கிரமித்து அடிமையாக்குகிறது. ஆசை நாளுக்கு நாள் அதிகமாகிறதே தவிர குறைவதாக இல்லை.
49. नाभ्यस्ता प्रतिवादिवृन्ददमनी विद्या विनीतोचिता खड्गाग्रैः करिकुम्भपीठदलनैर्नाकं न नीतं यशः । कान्ताकोमलपल्लवाधररसः पीतो न चन्द्रोदये तारुण्यं गतमेव निष्फलमहो शून्यालये दीपवत् ॥ ४६॥
நாப்⁴யஸ்தா ப்ரதிவாதி³வ்ரு’ந்த³த³மநீ வித்³யா விநீதோசிதா க²ட்³கா³க்³ரை: கரிகும்ப⁴பீட²த³லநைர்நாகம் ந நீதம் யஶ: । காந்தாகோமலபல்லவாத⁴ரரஸ: பீதோ ந சந்த்³ரோத³யே தாருண்யம் க³தமேவ நிஷ்ப²லமஹோ ஶூந்யாலயே தீ³பவத் ॥ 46॥
அதிகம் கற்கவில்லை. வாதத்தில் தர்க்கத்தில் எவரையும் வெல்லும் ஞானம் எதுவும் கிடையாது. பேரோ புகழோ இல்லாத பாமர பிரஜை. உடலிலும் பலமில்லை, உள்ளத்திலும் ஆசையும், பயமும் தான் அதிகம். ஒருவருக்கும் உபயோகமில்லாத ஒரு ஜீவன்.
50. विद्या नाधिगता कलङ्करहिता वित्तं च नोपार्जितं शुश्रूषापि समाहितेन मनसा पित्रोर्न सम्पादिता । आलोलायतलोचनाः प्रियतमाः स्वप्नेऽपि नालिङ्गिताः कालोऽयं परपिण्डलोलुपतया काकैरिव प्रेर्यते ॥ ४७॥
வித்³யா நாதி⁴க³தா கலங்கரஹிதா வித்தம் ச நோபார்ஜிதம் ஶுஶ்ரூஷாபி ஸமாஹிதேந மநஸா பித்ரோர்ந ஸம்பாதி³தா । ஆலோலாயதலோசநா: ப்ரியதமா: ஸ்வப்நேऽபி நாலிங்கி³தா: காலோऽயம் பரபிண்ட³லோலுபதயா காகைரிவ ப்ரேர்யதே ॥
47॥
குறையில்லாத அறிவும், ஞானம் எதுவும் பெறவில்லை. தனமும் சேமிக்கவில்லை, சரஸ்வதி லட்சுமி இருவரின் கடாக்ஷம் எப்போதும் கிடையாது. பெற்றோரை தெய்வமாக மதித்து வணங்கி ஆசி பெறாத ஜென்மம். எப்போதும் உலகத்தில், எதையோ தேடி, அலுத்து, ஏமாந்து, களைத்து விழுந்து கிடைக்கும்ஆசைகள் நிறைவேறாத மூடனாக தான் வாழ்கிறேன்.
51.वयं येभ्यो जाताश्चिरपरिचिता एव खलु ते समं यैः संवृद्धाः स्मृतिविषयतां तेऽपि गमिताः । इदानीमेते स्मः प्रतिदिवसमासन्नपतना गतास्तुल्यावस्थां सिकतिलनदीतीरतरुभिः ॥ ४८॥
வயம் யேப்⁴யோ ஜாதாஶ்சிரபரிசிதா ஏவ க²லு தே ஸமம் யை: ஸம்வ்ரு’த்³தா:⁴ ஸ்ம்ரு’திவிஷயதாம் தேऽபி க³மிதா: । இதா³நீமேதே ஸ்ம: ப்ரதிதி³வஸமாஸந்நபதநா க³தாஸ்துல்யாவஸ்தா²ம் ஸிகதிலநதீ³தீரதருபி:⁴ ॥ 48॥
என் நிலையை ஒரு க்ஷணம் யோசித்து பார்க்கிறேன். என்னைப் பெற்ற அருமைத்தாய், தந்தை இந்த மண்ணை மறந்து காணாமல் போய் எத்தனை வருஷம் ஆகிவிட்டதே. பகவான் திருவடியில் என்னை மறந்து ஆனந்தமாக இருக்கிறார்களோ? என்னோடு உடன் பிறந்த ஜீவன்களும் எங்கே போய்விட்டார்கள்? வெறும் எண்ணத்தில், மனத்திரையில் சித்திரமாக தோன்றி மறைபவர்களாகி விட்டார்கள். நான்? இப்போது வ்ருத்தாப்யன். சக்தி இழந்தவன். முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பவன். என் நிலை என்ன தெரியுமா? ஆற்றங்கரை மண்ணில் வேர்ப் பதித்து நிற்கும் மரம். எப்போது ஆற்றில் வெள்ளம் வருமோ? வெள்ள நீர் பலமாக என்னை வேரோடு கிளப்பி அடித்துக் கொண்டு போகுமோ?
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



