
சட்” என கேள்வி. ”பட்” என பதில். – நங்கநல்லூர் J K SIVAN
யக்ஷப்ரஸ்னம் 101-120
யக்ஷன் யுதிஷ்டிரனைக் கேள்விகள் கேட்பது பொழுது போக்குக்காக இல்லை. இது ”கௌன் பனேகா க்ரோர் பதி” மாதிரி ஒத்தையா ரெட்டையா சமாசாரம் இல்லை. பரிக்ஷையில் மார்க்குக்காக சொல்கிற பதிலும் அல்ல. வாழ்க்கையின் பிரதிபலிப்பு. யுதிஷ்டிரனின் பதிலில் தான் அவனது வீராதி வீர நாலு சகோதரர்களின் உயிர் தொக்கி நிற்கிறது. மேலும் அவனே மரண தாகத்தில் இருக்கிறான். இன்னும் அவன் தாகத்திற்கு பருக நீர் கிடைக்க வில்லை. சரியான பதில் சொன்னால் தான் அவனுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்கும். இப்படிப்பட்ட சங்கடமான நேரத்திலும் நிதானம் இழக்காமல் யக்ஷன் கேட்கும் அநேக கேள்விகளுக்கு யுதிஷ்டிரன் பதில் சொல்கிறான்.
இந்த கேள்விகளும் பதில்களும் , ஒரு பக்கம் டிவியில் ரெண்டு மாமிகள் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டை போட அதை வாயைப் பிளந்து கொண்டு ஆர்வமாக பார்த்துக்கொண்டு தினத் தந்தி படிக்கும் ரசிகர்கள் விஷயமில்லை. கச முசா விஷயம் எதையாவது விகடன் குமுதங்களில் படிப்பதுபோல் ஊஞ்சலில் காலை ஆட்டிக்கொண்டு தெரிந்துகொள்ளும் நிகழ்வும் இல்லை.
யக்ஷனின் கேள்விகளும் யுதிஷ்டிரன் பதிலும் ஒவ்வொரு வார்த்தையின் பின்னும், சொல்லின் பின்னும் உள்ள அர்த்தத்தை உள் வாங்கி படிக்க வேண்டும். இப்போது புரியா விட்டாலும் பசுவைப் போல் முதலில் கிடைத்த புல்லைத் தின்று பின்னால் அசைபோடும்போது புரியும். ருசிக்கும் பயன் தரும்.
101. எதை ஒருவன்செய்யும்போது அதை சிறந்த தர்மம் எனலாம்?
மற்றவரைக் காத்து ரக்ஷிப்பது
102. எவன் உண்மையிலேயே கற்றுணர்ந்தவன்?
தர்மத்தை அறிந்தவன், புரிந்தவன்.
103. எது நாத்திகம்?
தன்னையே அறியாமல் , நம்பாமல் , இயற்கையின் ரகசியத்தை, உண்மையை ஒருபோதும் புரிந்துகொள்ளாமல் . சிந்திக்காமல், எவனோ சொல்வதை ஏற்றுக்கொண்டு தனக்கும் எல்லாம் தெரிந்தமாதிரி கனவு காண்பது.
104 . எதை ஒருவனின் ஆர்வம் எனலாம்?
எதன்மூலம் ஒருவன் அடுத்தடுத்து பிறப்பு இறப்பு அடைய நேரிடுகிறதோ அதை.
105. எதை செய்வதை |ஒவ்வாத போட்டி மனப்பான்மை என்கிறோம்?
எதைச்செய்ய நினைத்தாலும், செய்தாலும், மனதை அடுத்தவர் செய்வதிலேயே செலுத்தி, மனதைப்
பாழ்படுத்திக்கொள்வதை.
106. எது டம்பம்?
அறியாமை.
107. எவனிடம் செல்வம் சேரும்? இறைவனிடம் மனப்பூர்வ பக்தி கொண்டவனிடம் .
108. எவனை ஏளனத்துடன் பார்க்கிறோம் ?
நான் மட்டுமே தர்மத்தைக் கடைப்பிடிப்பவன் என்று டமாரம் அடிப்பவனை.
109. எதை அதிர்ஷ்ட தேவதை என்கிறோம்?
நாம் செய்யும் தான தர்ம பலனை.
110. எதை துர்க்குணம் என்கிறோம் ?
மற்றவரிடம் குறை காண்பதை. அபாண்டமாக பேசுவதை.
111. செல்வம், ஆசை, தர்மம் இவை எப்போது ஒன்று கூடமுடியும்?
இல்லற வாழ்வில் கணவன் மனைவி இருவருமே ஒரே நோக்கோடு பரோபகார சிந்தனையோடு ஒருமித்து சேவை செய்யும்போது எதிர்மறையானவை கூட ஒன்று கூடிவிடும்..
112. மீள முடியாத நரகத்துக்கு எவன் செல்வான்?.
மீள முடியாத நரகமே அடுத்தடுத்து பிறப்பது தான். ஒரு ஏழையை வலியச்சென்று உசுப்பி விட்டு, அவனுக்கு நிறைய தானம் செய்வதாக ஆசை காட்டி ஏமாற்றுபவன், வேதம் சொல்லும் விதிப்படி அனுசரிக்காமல் பொய்யுரைப்பவன், தானும் அனுபவிக்காமல் பிறர்க்கும் உதவாத செல்வமுடைய கருமி.
— இது போன்றவர்கள் கட்டாயம் செல்வதற்காக இந்த மீளா நரகம் உள்ளது..
113. பிராமணன், பிராமணீயம் என்கிறோமே அது எதால் உருவானது? ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறப்பதாலா, குணத்தின் அடிப்படையிலா, வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்பதாலா?
” யார் வீட்டிலோ பிறப்பதாலோ, எதையோ படிப்பதாலோ ஒருவன் பிராமணன் ஆகமாட்டான். அவனது அடிப்படை நல்ல குணமே, நல்ல எண்ணமே, நற்செய்கையே பிராமணீயம், அதைக் கடைப்பிடிப்பவனே பிராமணன். எவன் வேதங்களை அறிந்து அதன் படி நடக்கிறானோ, நல்ல பண்புகளை உடையவனோ, புலனடக்கம் கொண்டவனோ, அவன் தான் பிராமணன்.
114. இனிய வார்த்தைகளையே பேசுபவன் என்ன பெறுகிறான்?
அவனை அனைவரும் நாடுகிறார்கள், மதிக்கிறார்கள். அவனுக்கு பெருமை சேர்க்கிறார்களே .அது போதாதா?
115. எதையும் ஆலோசித்து செயல்புரிகிறவன் என்ன அடைகிறான்?
எதிலும் வெற்றி அவனை அடைகிறது.
116. நண்பர்கள் நிறைய உள்ளவன் வாழ்க்கை எப்படி இருக்கும்?
அவனைப்போல் சந்தோஷமானவன் வேறு யாரும் இல்லை.
117.தர்மத்தை கடைபிடித்தால் என்ன கிடைக்கிறது
முக்தி கிட்டும்
118. எவனுக்கு சந்தோஷம் கிடைக்கிறது.?
எவனுக்கு கடனே கிடையாதோ, எவன் வெளி தேசங்களுக்கு செல்லாதிருக்கிறானோ, எவன் பச்சிலையையே சமைத்து உண்கிறானோ, அவனே உண்மையில் சுகவாசி. சந்ஷதோஷமானவன்.
119. எவன் முட்டாள்?
அன்றாடம் அருகிலிருந்தோர், அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் எல்லாருமே ஒருவர் பின் ஒருவராய் இறப்பதைக் கண்டும், தாங்கள் எப்போதும் சாஸ்வதமாக வாழ்வோம் என்று நினைப்பவர்கள் வடிகட்டின முட்டாள்களே.
120. எதை புரிந்துகொள்ளமுடியாது.?
தர்மத்தையும் வேதங்கள் சொல்வதையும் ரிஷிகள் விளக்குவதையும் தவிர்த்து தான் எதையோ புரிந்து கொண்டு விளக்குபவனைப் புரிந்து கொள்ளவே முடியாது. ரொம்ப டேஞ்சரான ஆசாமிகள் அவர்கள்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

