VAIRAGYA SATHAKAM BARTHRUHARI 21-25 J K SIVAN

வைராக்கிய சதகம்    – நங்கநல்லூர்  J K  SIVAN
ராஜா  பர்த்ருஹரி

ஸ்லோகங்கள்   21-25

21.  दीना दीनमुखैः सदैव शिशुकैराकृष्टजीर्णाम्बरा  क्रोशद्भिः क्षुधितैर्निरन्नविधुरा दृश्या न चेद्गेहिनी । याञ्चाभङ्गभयेन गद्गदगलत्त्रुट्यद्विलीनाक्षरं  को देहीति वदेत्स्वदग्धजठरस्यार्थे मनस्वी पुमान् ॥ २१॥

 
 Dīnā dīnamukhaiḥ sadaiva śiśukairākr̥ṣṭajīrṇāmbarā krōśadbhiḥ kṣudhitairnirannavidhurā dr̥ṣyā na cēdgēhinī । yāñcābhaṅgabhayēna gadgadagalattruṭyadvilīnākṣaraṁ kō dēhīti vadētsvadagdhajaṭharasyārthē manasvī pumān ॥ 

தீ³நா தீ³நமுகை:² ஸதை³வ ஶிஶுகைராக்ருʼஷ்டஜீர்ணாம்ப³ரா க்ரோஶத்³பி:⁴ க்ஷுதி⁴தைர்நிரந்நவிது⁴ரா த்³ருʼஶ்யா ந சேத்³கே³ஹிநீ ।  யாஞ்சாப⁴ங்க³ப⁴யேந க³த்³க³த³க³லத்த்ருட்யத்³விலீநாக்ஷரம் கோ தே³ஹீதி வதே³த்ஸ்வத³க்³த⁴ஜட²ரஸ்யார்தே² மநஸ்வீ புமாந் ॥ 21 ॥

பர்த்ருஹரி  காட்டும்  ஒரு  காட்சி. கண்களில் நீரை பெருக்குகிறது.  பாவம் யார் இந்த ஏழைத்தாய்?  வறுமையின்  அவதாரம், துன்பம்,  சோகம்  முகத்தின் ஒவ்வொரு கோட்டிலும் மஹா பாரதமாக தெரிகிறது. பலநாள்  பட்டினி அவள். கிழிந்த புடவை, எதை மறைக்கவேண்டுமோ அதை மறைக்க முடியாத ஆடைகளுடன்  தவிக்கிறாள்.அவளைச்சுற்றி, அந்த  கிழிசல் புடவையைப் பிடித்துக்கொண்டு தொங்கியவாறு சில  அழும்  ஒன்றிரண்டு  குழந்தைகள்,  தலை எண்ணெயைக் கண்டதேயில்லை. பசி, முக மெல்லாம்   அழுதழுது கண்ணீர்க்  கரை, வாசலில் நிற்கிறாள்.     ”அம்மா பசிக்குது. சோறு போடுங்க”   அவள் குரல்  தீனமாக சக்தியின்றி  கேட்கிறது. அவள்  வியாதி கணவன் அருகே நின்று பார்க்கிறான். அவனுக்கு குரல் எழுப்ப சக்தியோ த்ராணியோ இல்லை. கையில் கம்பு ஊன்றி  அருகே நிற்கிறான்.  ஒருவேளை  அந்த வீட்டு அன்னபூரணி   இவளுக்கு  உணவு தரா விட்டால்..??. ” போ போ”  ஒண்ணுமில்லை”  …..அவளுக்கு  தானம் தர்மம் செய்யாவிட்டால்…..அவள் கதி….?? அவளிடமும்  ”எனக்கு கொடு”என்று யாசிப்பவன் எப்படிப்பட்டவன்?? சே.. என்ன உலகமடா இது?

22.  अभिमतमहामानग्रन्थिप्रभेदपटीयसी गुरुतरगुणग्रामाम्भोजस्फुटोज्ज्वलचन्द्रिका । विपुलविलसल्लज्जावल्लीवितानकुठारिका
जठरपिठरी दुष्पूरेयं करोति विडम्बनम् ॥ २२॥

 
Abhimatamahāmānagranthiprabhēdapaṭīyasīgurutaraguṇagrāmāmbhōjasphutōjjvalacandrikā। vipulavilasallajjāvallīvitānakuṭhārikā jaṭharapiṭharī duṣpūrēyaṁ karōti viḍambanam ॥ 22    

அபி⁴மதமஹாமாநக்³ரந்தி²ப்ரபே⁴த³படீயஸீ கு³ருதரகு³ணக்³ராமாம்போ⁴ஜஸ்பு²டோஜ்ஜ்வலசந்த்³ரிகா ।
விபுலவிலஸல்லஜ்ஜாவல்லீவிதாநகுடா²ரிகா ஜட²ரபிட²ரீ து³ஷ்பூரேயம் கரோதி விட³ம்ப³நம் ॥ 22 ॥

 
சுய கெளரவம், மரியாதை , சமூக அந்தஸ்து, இந்த  முடிச்சுகளை  அவிழ்க்க  தெரிந்த கெட்டிக்காரன் தான் வைராக்யன். .  நற்குணங்கள் எனும் தாமரை மலர்களின் மொட்டுகளை அவிழ்க்கும்  சந்திரன் தான். ஆம்  சந்தேகமே இல்லை.  கூரான அரிவாள் எப்படி புதர்கள், கொடிகள், செடிகளை வெட்டிக் கழிக்குமோ அது போல் என் வயிறு என்கிற  புற்று இருக்கிறதே  அது  எதை வேண்டுமானாலும்  வாங்கி உண்டு அழிக்கிறது.  அடேயப்பா அதை திருப்திசெய்ய அலைவதற்கே வாழ்நாள் போதாது. முடிவில்லாத  பசி…. பசி தாகம். இவை தீர வேண்டும்..  ஆமாம். மனிதர்களே,  தேவைகள் ஆசைகள்  இவற்றை எல்லாம் அழித்தவன், வென்றவன்தான்  பரிசுத்தன். புனிதன்.

23. पुण्ये ग्रामे वने वा महति सितपटच्छन्नपालिं कपालिं ह्यादाय न्या  यगर्भद्विजहुतहुतभुग्धूमधूम्रोपकण्ठे । द्वारं द्वारं प्रविष्टो वरमुदरदरीपूरणाय क्षुधार्तो

मानी प्राणैः सनाथो न पुनरनुदिनं तुल्यकुल्येषु दीनः ॥ २३॥ 
 
Puṇyē grāmē vanē vā mahati sitapaṭacchannapāliṁ kapāliṁ hyādāya nyāyagarbhadvijahutahutabhugdhūmadhūmrōpakaṇṭhē । dvāraṁ dvāraṁ praviṣṭō varamudaradarīpūraṇāya kṣudhārtō mānī prāṇaiḥ sanāthō na punaranudinaṁ tulyakulyēṣu dīnaḥ ॥ 23॥ 

புண்யே க்³ராமே வநே வா மஹதி ஸிதபடச்ச²ந்நபாலிம் கபாலிம் ஹ்யாதா³ய ந்யாயக³ர்ப⁴த்³ விஜஹுதஹுதபு⁴க்³தூ⁴மதூ⁴ம்ரோபகண்டே² । த்³வாரம் த்³வாரம் ப்ரவிஷ்டோ வரமுத³ரத³ரீபூரணாய க்ஷுதா⁴ர்தோ மாநீ ப்ராணை: ஸநாதோ² ந புநரநுதி³நம் துல்யகுல்யேஷு தீ³ந: ॥ 23 ॥

நானும் ஒரு பிச்சாண்டி தான்.  பிக்ஷாடனன். பிக்ஷைக்கு  எனக்கு  மூன்று வழிகள் உண்டு.ஒன்று  என் உறவினர்களிடம், மற்றும்  சுற்றத்தாரிடம்… இன்னொரு வழி காட்டுக்கு சென்று அங்கே ஆரண்யத்தில் இருப்பவர்களிடம் இருப்பதை கேட்டு வாங்கி யாசித்து  உண்பது.  மூன்றாவது வெண்மையான வஸ்திரம் தரித்து,  யாக யஞங்கள்  பண்ணி  ஹோமப்புகை சூழ்ந்த  சிறந்த மனிதர்கள் வீட்டு  வாசலில் நின்று அம்மா தாயே என்று  யாசிப்பது .மூன்றாவது வழி சிறந்தது என்கிறார்  பர்த்ருஹரி.எங்கும் ரிஷிகளின் ஹோம புகை  கருப்பு சாயம்  பூசி இருக்கிறதே, அந்த பக்கம்.      கையில்  ஒரு திருவோடு.  இடையில்  எக்காலத்திலோ  வெண்மையைப் பார்த்த  கோவண வஸ்திரம்.  இந்த திருவோடு நிறைந்தால் என் வயிறு நிறையும் என்ற நிலையோ?  பசிக்குப் புசிக்கிறவன் தான் ஞானி. எதையும்  உண்ண வேண்டும்  என  ருசி  தேடுபவன் அல்ல வைராக்யன் .


24. गङ्गातरङ्गकणशीकरशीतलानि विद्याधराध्युषितचारुशिलातलानि ।  स्थानानि किं हिमवतः प्रलयं गतानि यत्सावमानपरपिण्डरता मनुष्याः ॥ २४॥

Gaṅgātaraṅgakaṇaśīkaraśītalānividyādharādhyuṣitacāruśilātalāni। sthānāni kiṁ himavataḥ pralayaṁ gatāni yatsāvamānaparapiṇḍaratā manuṣyāḥ ॥ 24॥  


க³ங்கா³தரங்க³கணஶீகரஶீதலாநி  வித்³யாத⁴ராத்⁴யுஷிதசாருஶிலாதலாநி । ஸ்தா²நாநி கிம் ஹிமவத: ப்ரலயம் க³தாநி யத்ஸாவமாநபரபிண்ட³ரதா மநுஷ்யா: ॥ 24 ॥

எதையும் தன் மடியில் இருந்து  அள்ளித்தரும்  ஹிமாசல  மலைகள், கங்கையின் ப்ரவாஹ அலைகள் உறைந்து போய்  பனியாக படர்ந்து பசி தாகம் எல்லாம் மறக்கச்செய்யும்  அற்புத  அமைதி நிறைந்த  சூழ்நிலை,   வளமையான இந்த  மலைச்சரிவு   பள்ளத்தாக்கில் தான் எத்தனை  மஹநீயர்கள்  தேவர்கள்,  கந்தர்வ கானம் பொழிந்துள்ளனர்.   அவை எல்லாம் மறைந்து போய் விட்டதா? உறைந்து போனதா?    ஒன்றுமில்லாத  மனிதர்களின் தயவிலா  இனி  அடுத்த  வேளை  உணவிற்கு  கையேந்தி நின்று வாழவேண்டும்?  


25.
 किं कन्दाः कन्दरेभ्यः प्रलयमुपगता निर्झरा वा गिरिभ्यः   प्रध्वस्ता वा तरुभ्यः सरसफलभृतो वल्कलिन्यश्च शाखाः ।वीक्ष्यन्ते यन्मुखानि  प्रसभमपग 
तप्रश्रयाणां खलानां    दुःखाप्तस्वल्पवित्तस्मयपवनवशान्नर्तितभ्रूलतानि ॥ २५॥

 kiṁ kandāḥ kandarēbhyaḥ pralayamupagatā nirjharā vā giribhyaḥ pradhvastā vā tarubhyaḥ sarasaphalabhr̥tō valkalinyaśca śākhāḥ । vīkṣyantē yanmukhāni prasabhamapagatapraśrayāṇāṁ khalānāṁ duḥkhāptasvalpa vittasmayapavana vaśānnartitabhrūlatāni ॥ 25॥  

25,  கந்த³ரேப்⁴ய: ப்ரலயமுபக³தா நிர்ஜ²ரா வா கி³ரிப்⁴ய: ப்ரத்⁴வஸ்தா வா தருப்⁴ய: ஸரஸப²லப்⁴ரு’தோ வல்கலிந்யஶ்ச ஶாகா:² । வீக்ஷ்யந்தே யந்முகா²நி ப்ரஸப⁴மபக³தப்ரஶ்ரயாணாம் க²லாநாம் து:³கா²ப்தஸ்வல்பவித்தஸ்மயபவநவஶாந்நர்திதப்⁴ரூலதாநி ॥ 25॥
ஹே   மூலிகை வேர்களே, கொடிகளே , யாரும் நெருங்கவொண்ணா உயர்ந்த மலைக்குகையில் இத்தனை காலமாக இருந்தவர்களே, இப்போது காணோமே  எங்கே மறைந்தீர்கள்?   மலையுச்சியிலிருந்து  மேகத்தி லிருந்து இறங்கிய நீராக வீழ்ந்து ஆறாக  ஓடும் நதிகளே, எங்கே  உங்களைக்  காணோம்?   சூரிய ஒளி கூட புக முடியாத  அடர்ந்த கனி குலுங்கும் மரங்களே, எங்கே  வேரோடு சாய்ந்து அழிந்தீர்கள்?  இனி நல்லதெல்லாம் மறைந்து விடுமோ?  கொடியவர்கள் தீமைகள் மட்டுமே எங்கும்  நிறையுமா?  இனிமேல் இது தான் நிலையா? இது தான் கலியா?   அற்பர்களிடம்,   சன்யாசிகள் கூட  கையேந்தி தான் வாழ வேண்டுமா. இயற்கையை நம்பிய காலம் மலையேறிவிட்டதா? இப்படி ஒரு  வாழ்க்கை அவசியமா?
 
தொடரும் 
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;