

கண்ணன் காட்டிய வழி – நங்கநல்லூர் J K SIVAN
ஒரு விஷயம் சொல்லட்டுமா? எனக்கு என் மேல் அலுப்பு ஏற்பட்டதே இல்லை. ஏற்படவே படாது. நான் ஒவ்வொரு நிமிஷத்தையும் எனக்கு பிடித்த விதத்தில் அனுபவிக்கிறேன்.
என் வாழ்க்கை 85 வருஷ வேஸ்ட் என்ற எண்ணம் கிருஷ்ணன் கிருபையால் இது வரை தோன்றவே இல்லை. இன்னும் நேரம் கொடு, உன்னையே நினைத்து, படிக்கிறேன், பாடுகிறேன், எழுதுகிறேன், பேசுகிறேன் என்று அவனிடம் கேட்கத்தான் மனது அலைகிறது. அவனும் என் தேவைக்கேற்றபடி படி அளந்து கொண்டு தான் இருக்கிறான்.
நான் பிறக்க ஒரு நல்ல குடும்பம் தந்தான். இளமையை வறுமை யோடிருந்தாலும் ஆனந்தமாக அவனருளால் கழித்தேன், அந்த நினைவுகள் இன்னும் எனக்கு உற்சா கத்தை புதிதுணர்ச்சியை, புது தெம்பை, கொடுக்கிறது. பள்ளியில் பல வருஷங்கள் படித்தேன். மக்கு பிளாஸ் திரி இல்லை. அசகாய சூரனுமில்லை. நல்ல உத்யோகம் எவர் சிபாரிசும் இல்லாமல் என் திறமையால் கிடைத் தது . கிடைத்த வாய்ப்புகளை அவன் அருளால் வீணாக் காமல் பயன்படுத்திக் கொண்டேன். வேண்டியதைச் சம்பாதித்தேன். உலக வாழ்க்கை இன்பங்கள் ஓரளவு என் வரம்புக்கேற்றபடி அனுபவித்தேன்.
நேரம் வந்த போது ஒய்வு பெற்றேன். அவற்றிலிருந்து விலகி விட்டேன். இப்போது அவனோடு இணைந்து விட்டேன். ஒவ்வொரு வினாடியும் என்னைப்போல் ஆனந்தமாக அனுபவிப்பன் எவனையும் இன்னும் நான் பார்க்கவில்லை. என்னால் எத்தனையோ பேருக்கு பல விதத்தில் உதவ முடிந்தது என்று சந்தோஷம் நிறைய இருக்கிறது.
இப்போது ஞான தானத்தில் முழு முயற்சியோடு ஈடுபடு கி றேன் . அள்ள அள்ள வற்றாத புதையல், சுரங்கங்கள் நிறைய இருக்கிறது.
உலகம் முழுதும் ஆயிரக்கணக்கான நண்பர்கள் தினமும் என் எழுத்துக்கு காத்திருப்பதை உணரும் போது என் பொறுப்பு இன்னும் உற்சாகத்தோடு அதிக ரிக் கிறது. ஒவ்வொரு நாளும் பத்து வருஷங்களுக்கு மேலாக 17 மணிநேரத்துக்கு மேல் படித்து எழுதுகி றேன். போதுமே இன்னும் என்ன பாக்கி இருக்கிறது.
ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு சென்று அவனை தரிசனம் பண்ணியாகிவிட்டது. எத்தனையோ பேரை வசதி யோடு அழைத்துக்கொண்டு போயாச்சு. காசு சம்பாதிக்க இதை செய்யவே இல்லை.
இலவசமாக விலையில்லாத புத்தகங்கள் ஆயிரக்கணக் கில் அச்சடித்து வழங்கி ஆயிற்று. இந்த விலையில்லாத புத்தகங்கள் பிரசுரித்து அச்சடித்து விநியோகிக்க எண்ணற்றோர் நிதி உதவி அளிக்கிறார்கள். இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனக்கு என்ன கஷ்டம் இதில். என் நண்பர்களை,உறவுகளை நான் மறக்கவே இல்லை. நெருங்கி பழகவும் இல்லை.
என் பாதை தனித்து விட்டது. ஒவ்வொருவரும் என் வாழ்வின் பல கட்டங்களில் எனக்கு உதவியதற்கு கிருஷ்ணனிடம் நன்றி சொல்லி அவர்கள் க்ஷேமத்துக்கு மனப்பூர்வமாக வேண்டுகிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு புத்தம் புது நாளாக விடிகிறது. மகிழ்ச்சி ஊட்டு கிறது. உடலை நினைக்காததால் தேஹ அசௌகரியங் கள் எதுவுமே மனதை தொடவில்லை. தொந்தரவு செய்யவில்லை. நான் ஒவ்வொரு வினாடியிலும் சுகமாக வாழ்பவன்.
கிருஷ்ணனின் கீதோபதேசத்தின் சாரம் மேலே சொன்னது…எல்லோருக்கும் அவரவர்களுக்கு அவர்கள் விரும்பியபடி இந்த ஆனந்த வாழ்க்கை ரஹஸ்யமாக அமைந்து பயனளிக்கட்டும்.
சில வரிகள் ஞாபகத்துக்கு :
1.கிருஷ்ணன் அருளால் நீ சக்திமான் என்று புரிந்து கொள். உன்னால் எதுவும் முடியும்.
2. இந்த உலகம் நீ சந்தோஷமாக வாழ கொடுக்கப்பட் டுள்ளது. எதுவும் உனதல்ல. அனுபவிக்க மட்டுமே உனக்கு உரிமை. மாற்ற, அழிக்க அல்ல. பூக்கள் பார்க்கில் அழகாக பார்த்து ரசிக்க மட்டுமே. தொட்டு கிள்ளி பறிக்க அல்ல. . ”பூக்களை பறிக்காதே” என்று அட்டை பெரிய எழுத்தோடு தொங்கவில்லையா? உலக வாழ்க்கையும் அவ்வாறே.
3. நீ மனிதன் என்ற உயர்ந்த உன்னத பிறவி. மனித நேயம், அன்பு, பணிவு மட்டுமே உன் உருவம்.குணம். நான் டாக்டர் என்ஜினீயர், ஆடிட்டர், நடிகன் அரசியல் வாதி, வைதிக பிராம்மணன் எல்லாம் நாம் போடும் வேஷங்கள் . அது மேடையில் நடிக்கும்போது மட்டுமே பொருந்தும். நிஜ வாழ்க்கையில் நடிக்க முடியாது. கூடாது. .அது நீயல்ல. ஆத்மா தான் நீ. அது இயல்பா கவே ரமணர் சொன்னபடி சதானந்தத்தில் திளைப்பது. கோபம் தாபம், பொறாமை, இதெல்லாம் வேஷங்கள். ஒட்டிக்கொள்ள அனுமதிக்ககூடாதவை.
4.உனக்கு தேவையானது மட்டுமே உனக்கு கொடுக்கப் பட்டுள்ளது. மற்றவரை ஓப்பிடாதே. இருப்பதை நன்றி யோடு ஏற்றுக்கொண்டு போதும் என்று திருப்தியாக வாழக் கற்றுக்கொள். பிறரை நோக்காதே.உன்னைப் பார்த்து பெருமூச்சு விடுபவர்கள் எத்தனை பேர் என்று உனக்குத் தெரியாது
4. பொய் பேசுவது சாமர்த்தியமோ, கெட்டிக்காரத்த னமோ இல்லை. முட்டாள் தனம். உன் தவறுகள் உன்னை திருத் தட்டும். உன் வெற்றிக்கு அவன் காரணம். அவனை விடாமல் நன்றியோடு நினை. வணங்கு. அமைதியாக இரு. பேச்சைக் குறை. தைரியமாக இரு. எதற்கும் பயம் வேண்டாம்.
5.உன் செயல்களுக்கு நீயே பொறுப்பு. மற்றவர் மேல் பாரம் சுமத்தாதே . உன் தன்னம்பிக்கையை அது தின்றுவிடும்.
6. இக்கரைக்கு அக்கரை பச்சை. துன்பம் இல்லாதவன் எவனுமில்லை. வெளிப்பகட்டில் மயங்காதே. அது மாயத்தோற்றம். ஆட்டுக்கு வால் அளந்து தான் பகவான் வைத்திருக்கிறான்.
7.உன்னை நீ முதலில் புரிந்து கொள் . உன் குறிக்கோள் என்ன என்று தெளிந்து அதை நிறைவேற்ற உழைப்பாய் .உன்னை நீ முதலில் விரும்ப தெரிந்துகொள். காரணம் உன்னுள் அவன் இருக்கிறானே. நீ நீயாகவே இரு.8 உன் பிரயாணம் ஆனந்தமாக தொடர நீ தான் திட்டம் தீட்டிக்கொள்ளவேண்டும். பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பிறகு அதில் பிரயாணம் தொடங்கு.
கடந்த பாதை உனக்கு இனி உனக்கு சொந்தமில்லை. எதிரே இருப்பது நிச்சயமில்லை. இந்த கணம் நீ நடப்பது தான் உன் வாழ்க்கை பாதை. அவன் உன்னை செலுத்து வதை உணர்ந்து நன்றியோடு நட. அவனல்லால் ஒரு அணுவும் அசையாது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



