
நிச்சயதார்த்தம் நடக்கிறது. – நங்கநல்லூர் J K SIVAN
அறுபது வருஷங்களுக்கு முன்பு கிராமத்தில் ஒருவர் வீட்டில் கல்யாணம் என்றால் ஊரில் எல்லோருக்கும் சந்தோஷம். வீட்டிலேயே தெருவை மடக்கி பந்தல் போட்டு பிரமாதமாக நடக்கும்.
எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சிக்களை. ஆளாளுக்கு ஒரு பொறுப்பை சுமந்து அதை சிரத்தையாக நிறைவேற்று வார்கள். இப்படிதான் கிராமங்களில் அப்போது கல்யாணம் நடந்தது. ஐந்து நாள் குறையாமல் கல்யாணம் நடைபெறும்.கல்யாணம் நடைமுறை எப்படி தெரியுமா”
முதலில் பெண்ணோ பிள்ளையோ கண்டுபிடித்து, (முக்காவாசி கல்யாண பெண்கள் பிள்ளைகள் ஏதாவது ஒரு கல்யாணத்தில் உறவினர் நண்பர்கள் மூலம் தான் கண்டுபிடிப்பார்கள். அப்போது மாப்பிள்ளை பெண் விளம்பரங்கள் கிடையாது. கல்யாண பீரோக்கள் இல்லை, வாய் வார்த்தையாக சொல்லி கேள்விப்பட்டு நிச்சயம் பண்ணுவார்கள். பிள்ளை பெண் ஜாதகம் முதலில் பொருந்தி இருக்கவேண்டும். அப்புறம் , பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பிடித்து , எல்லோர் மனதிற்கும் த்ருப்தி ஏற்பட்ட பின் ,சம்பந்தம் கொள்வது என்று உறுதியானபின் , பிள்ளை வீட்டில் பாக்கு வெற்றிலை மாற்றி கொள்வது வழக்கம். அந்த காலத்தில் வாய் வார்த்தையின் நம்பிக்கையில் கல்யாணங்கள் நிச்சயிக்கப்பட்டது.
ஜாதகம் பொருந்தி, பிள்ளை வீட்டாரை, பிள்ளையை பிடித்துவிட்டால், பெண் வீட்டார் ஒரு புதிய சம்படத்தில் திரட்டி பால் 500 கிராம்,, பருப்பு தேங்காய் ஒரு ஜோடி, ஏதோ ஒரு வகை இனிப்பு 31;வெற்றிலை, பாக்கு, புஷ்பம், மாலை, கல்கண்டு, சந்தனம், குங்குமம். , மஞ்சள் தூள், ஆப்பிள், ஆரஞ்ச், பைன் ஆப்பிள், பன்னீர் திராட்சை , கொய்யா, மாதுளை, வாழை பழம், பலா பழம், மாம்பழம் (கிடைக்கும் சீசனில்) வகைக்கு ஒரு டஜனும், வாதாம் பருப்பு, பேரீச்சை, பிஸ்தா பருப்பு, வால்னட்,கிஸ்மிஸ் பழம், முந்த்ரி பருப்பு வகைக்கு ஒரு கிலோவும்; சக்கரை பொம்மைகள்;சர்க்கரை, அதில் கலர் பெப்ப்ர் மின்டால் பெயர்கள் எழுதி வைத்து .ட்ரேகளில் எல்லாம் வைத்து அலங்கரித்து நிச்சயதார்த்தம் நடைபெறும்.
மணமகனுக்கு பேண்ட், ஷர்ட். டை; ஷூ மணமகள் வீட்டார் வாங்கி செல்ல வேண்டும்.
திருமணதிற்கென வைக்க இருக்கும், வெள்ளி சந்தன பேலா, குங்கும சிமிழ், இவற்றை இந்த வைபவத்தின் போது பிள்ளை வீட்டாரிடம் சேர்ப்பிக்க வேண்டும். கல்யாண தினதன்று இவைகளை பிள்ளை வீட்டார் கல்யாண மணடபதிற்கு கொண்டு வருவார்கள். இதை முன் கூட்டியே பேசி கொள்ளலாம். பெண் வீட்டு புரோஹிதரும், பிள்ளை வீட்டு ப்ரோஹிதரும் இந்த வைபவத்திற்கு வருவார்கள்.
பிள்ளை வீட்டார் அவர்களது வீட்டில் பெரிய கூடம் இருந்தால் அதிலோ, அல்லது வீட்டில் மொட்டை மாடியில் இடமிருந்தால் அங்கே ஷாமியா னா போட்டு, டேபிள், நாற்காலி போட்டு, தண்ணீர், ப்ளாஸ்டிக் டம்ப்ளர்கள் வாங்கி கேடரர் இடம் சொல்லி டிபனோ அல்லது சாப்பாடோ சமயத்திற்கு ஏற்றாற் போல் போட்டு, தாம்பூல பையில் தாம்பூலம், பழம் அல்லது தேங்காய், பரிசு பொருள், பணம் போட்டு கொடுப்பார்கள். பெண்களுக்கு இத்துடன் ரவிக்கை துண்டு கொடுப்பது வழக்கம். . சாப்பாடு அல்லது டிபன், காபி, தாம்பூல பை இவைகள் பிள்ளை வீட்டார் ஏற்பாடு பண்ணுவார்கள்.
நிகழ்ச்சி நடத்த வீட்டில் இடமில்லா விட்டால் பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு கல்யாண மண்டபத்தை ஏற்பாடு செய்வார்கள். இதுவும் பிள்ளை வீட்டார் சிலவு.
முதலில் பெண் வீட்டார் விக்னேஸ்வர பூஜை; கிரஹ ப்ரீதி செய்து வாங் நிச்சய பத்திரிக்கை
வைத்து தாம்பூலம், பழம், தேங்காய் புஷ்பம் உள்ள தாம்பாலத்தை பிள்ளை வீட்டு தலைவரிடம் கொடுப்பார்
பிறகு பிள்ளை வீட்டு தலைவரும் பெண் வீட்டு தலைவரிடம் பத்ரிக்கை, தாம்பூலம், பழம், புஷ்பம் தேங்காய் கொடுப்பார். வந்திருக்கும் அனைவருக்கும் சக்கரை, கற்கண்டு, சந்தனம் கொடுப்பார்கள்.
மண மகனையும், மண மகளையும் தனி தனியே கிழக்கு நோக்கி உட்கார வைத்து , பிள்ளைக்கு பெண்ணீன் தந்தையும், பெண்ணிற்கு பிள்ளையின் சகோதரியுமாக சந்தனம் கொடுத்து, , பெண்ணுக்கு குங்குமமும், பூவும் கொடுத்து பிள்ளைக்கு பெண் வீட்டார் டிரஸ் அளித்து அதை அணிந்து வந்த பிறகு, மாலை போட்டு, அதே போல் பெண்ணிற்கு பிள்ளை வீட்டார் வாங்கி கொடுத்த , புடவையை கட்டிக்கொண்டு வந்தபின் பெண்ணிற்கும் மாலை போடுவார்கள். வசதி உள்ளவர்கள் பிள்ளை வீட்டார் பெண்ணிற்கு நகையும், பெண் வீட்டார் பிள்ளைக்கு கை கடிகாரம், மோதிரம், மைனர் செயின் ,ப்ரேஸ்லெட் இத்யாதிகளில் ஏதோ ஒன்று வாங்கி போடுவார்கள்.
பெண்ணின் பெற்றோர்கள் பிள்ளையின் பெற்றோர்களுக்கு புடவை, வேட்டி, துண்டு வாங்கி கொடுப்பார்கள்.
பிள்ளையின் பெற்றோர்கள் பெண்ணின் பெற்றோர்களுக்கு வேட்டி, துண்டு, புடவை வாங்கி தருவார்கள்.
அதன் பின்னர் ஆரத்தி எடுப்பார்கள். பெண் வீட்டு உறவுகாரர்களை பிள்ளைக்கும், பிள்ளை வீட்டோருக்கும், பிள்ளை வீட்டு உறவுகாரர்களை பெண்ணுக்கும் பெண் வீட்டோருக்கும் அறிமுகம் செய்து வைப்பார்கள்.
பிள்ளை வீட்டிலேயே நிச்சயதார்த்தம் சில குடும்பங்களில் நடப்பதுண்டு. குத்து விளக்கு, திரி நூல், எண்ணெய், கற்பூரம்,தீபெட்டி, ஊதுபத்தி, பஞ்ச பாத்திர உத்திரிணி ஆசன பலகை தயார் செய்து விடுவார்கள். கல்யாண மண்டபம் என்றால் பெண் வீட்டார் தடுக்கு, பஞ்ச பாத்திர உத்திரிணி, குத்து விளக்கு, எண்ணெய், திரி நூல், தீப்பெட்டி, ஊதுவத்தி, கற்பூரம், கற்பூர கரண்டி முதலியவை எடுத்து செல்வது வழக்கம்..
திருமணம் இன்னும் ஆகாததால் பெண்ணும் பிள்ளையும் சேர்ந்து நமஸ்காரம் பண்ண மாட்டார்கள். பெண் தனியாகவும், பிறகு பிள்ளை தனியாகவும் நமஸ்காரம் செய்ய வேண்டும். இரு தரப்பினரும் வாக்கு மாறாமல் இருப்பதற்காக இந்த வாங் நிச்சயம் செய்ய படுகிறது. நிச்சயதார்த்த பத்திரிகை என்ற ஒப்பந்தம் தனித்தனியே பெண் வீட்டார் பிள்ளை வீட்டார் சார்பில் வாத்யார் வாசிப்பார்.
பெண் வீட்டுக்காரர் நிச்சயதார்த்த பத்திரிகை என்ன சொல்லும்?
நிகழும் மங்களகரமான ——– வருஷம் ——மாதம் —— தேதி —– கிழமை —– திதி —-நக்ஷத்திரம் ——– யோகம் கூடிய ஶுப தினத்தில் உதயாதி நாழிகை —– மேல் —– குள் ——- ( ஊரின் பெயர் ) ——— கோத்ரம் ——–
பேரனும் ——— குமாரனுமான சிரஞ்சீவி ——ஊர் —— கோத்ரம் ——— பெளத்ரியும் ——- குமாரியுமான ———- யை பகவத் க்ருபையுடன் ——– தேதி நிச்சயமானால்) ——- வருஷம் ——- மாதம் ——– தேதி அன்று
சுப முஹூர்த்தத்தில் கன்னிகா தானம் செய்து கொடுப்பதாய் இரு பக்கத்தாரின் ஸம்மதத்துடன்
பெரியோர்களால் நிச்சயிக்க பட்டது
இடம் ——— இப்படிக்கு.
தேதி ——–
பிள்ளை வீட்டுக்காரர் நிச்சயதார்த்த பத்திரிகை :
நிகழும் மங்களகரமான ——– வருஷம் —- மாதம் —— தேதி —– கிழமை —– திதி — நக்ஷத்திரம் கூடிய ——– யோகம் கூடிய ஶுப தினத்தில் உத்யாதி நாழிகை —– மேல் —– குள் ——- ( ஊரின் பெயர் ) ——— கோத்ரம் ——–
பேரனும் ——— குமாரனுமான சிரஞ்சீவி ——– ஊர் —— கோத்ரம் ——— பெளத்ரியும் —– குமாரியுமான ———- யை பகவத் க்ருபையுடன் ——– தேதி நிச்சயமானால்) ——- வருஷம் ——- மாதம் ——– தேதி அன்று
சுப முஹூர்த்தத்தில் பாணி க்ரஹணம் செய்து கொள்வதாய் இரு பக்கத்தாரின் ஸம்மதத்துடன்
பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்டது
இடம் ——— இப்படிக்கு.
தேதி ——–
நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவி வீட்டுக்கு லெபெரியவர் தலைமையில் அவர் கை எழுத்திட்டு கவரில் போட்டு கொடுக்கவும். இதை தாம்பாளத்தில் வைத்து பழம், புஷ்பம், இரு தேங்காய் களுடன் கொடுக்கும் போது ஶோபனம், ஶோபனம் என்று சொல்லி கொண்டு இரு தரப்பினரும் பெற வேண்டும்.
ஒரு தேங்காயை பிள்ளையாருக்கு சதுர் தேங்காயாக உடைப்பார்கள். திருமணத்திற்கு நாள் தள்ளிப்போவதாக இருந்தால் பெண்ணின் தகப்பனார் ஆசமனம் செய்து, சுக்லாம்பரதரம் சொல்லி, ப்ராணாயாமம் செய்து ஸங்கல்பத்தில் சுபே சோபனே முஹூர்த்தே —–சுப திதெள ———நக்ஷத்ரே ——– ராசெள —— ஜாதாயாஹா ——— நாமின்யாஹா அஸ்ய: மம குமார்யாஹா ——– வத்வாஹா—————— நக்ஷத்ரே ——– ராசெள ——-ஜாதஸ்ய ——— சர்மன: அஸ்ய வரஸ்ய அனயோஹோ வதூ வரயோ: உத்வாஹார்த்தம் வாங்க் நிச்சயம் கரிஷ்யே. ததங்கம் க்ரஹ ப்ரீதி தானம் ச கரிஷ்யே. அப உபஸ்பர்ஸ்ய. என்று மந்திரம் சொல்வார். பிறகு பிள்ளையார் பூஜை. பிறகு யதா ஸ்தானம். பிள்ளையாரை சிறிது வடக்கே நகர்த்தவும். க்ஷேமாய புணராகமனாய ச. என்று சொல்லவும். புஷ்பத்தை கர்த்தாவின் மனைவி தலையில் வைத்து கொள்ளலாம்.
கிரஹ ப்ரீதி: ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஶாந்திம் ப்ரயஸ்சமே.
வதூவரயோ: உத்வாஹா வாங் நிச்சய முஹூர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யாதீனாம் நவானாம் க்ரஹானாம் ஆனுகூல்ய ஸித்தியர்த்தம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதா ப்ரீத்யர்த்தம் இதம் ஹிரண்யம் ப்ராஹ்மணேப்ய:
ஸம்ப்ரததே ந மம. என்று சொல்லி ஜலத்தை கீழே விட்டு தக்ஷிணையை ப்ராஹ்மணர்களுக்கு கொடுப்பது சம்ப்ரதாயம். .இரு பக்கத்து வாத்யார்களுக்கும் ஸம்பாவனை கொடுப்பார்கள்.
பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் கொடுத்த பழங்கள், உலர் பழங்கள்; ஸ்வீட், இத்யாதிகளை காலி அட்டை பெட்டிகளில் மாற்றி கொண்டு தனது வீட்டிற்கு எடுத்து செல்வார்கள். தனது உறவினர்களுக்கு அதை பகிர்ந்து கொடுப்பார்கள்.
பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் அவரவர் வீடுகளில் சமாராதனை; ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்வார்கள்.
பிள்ளை வீட்டார் சிலர் ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்வார்கள். ஒரு நல்ல நேரத்தில் ஒரு மஞ்சள் துணியில் பத்து ரூபாய் நாணயம் வைத்து முடிந்து ஸுமங்கலி ப்ரார்த்தனை மறுமகள் வந்த பிறகு செய்கிறேன் என்று வேண்டி கொண்டு பிறகு செய்யலாம். வருடத்திற்கு ஒரு முறை தான் ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்ய முடியும்.
கல்யாண பத்திரிக்கை அடித்து வந்தவுடன் குல தெய்வம் கோயிலுக்கு சென்று அபிஷேகம், அர்ச்சனை செய்து வஸ்த்ரம் வாங்கி சாற்றி, கோயிலுக்கு காணிக்கை செலுத்தி பத்ரிக்கை கோயிலுக்கு கொடுத்து நல்ல படியாக கல்யாணம் நடக்க வேண்டும் என வேண்டி கொண்டு வருவது வழக்கம். பிறகு காஞ்சி அல்லது சிருங்கேரி அல்லது உங்கள் மடாதிபதியிடம் வெற்றிலைபாக்கு, பழம், புஷ்பம் பத்ரிக்கை தக்ஷிணை வைத்து ஆசீர்வாதம் பெற்று வர வேண்டும்.
பிறகு நெருங்கிய உறவினர்களுக்கு தாம்பூலம், பழம், புஷ்பம், தேங்காய், மஞ்சள், குங்குமம் , பத்ரிக்கையும் வைத்து கல்யாணத்தை வந்து நடத்தி கொடுக்கும் படியாக வீடு வீடாக சென்று மரியாதையோடு கூப்பிட வேண்டும்.
அப்போது கல்யாண பத்திரிகைகள் வாட்சப்பில்,மெயிலில் வரவில்லை. வெளியூர்க்கார்களுக்கு தபாலில் நாலுபக்கம் மஞ்சள் குங்குமம் தடவி வருவது வழக்கம். உறவினர்களுக்கு ஜவுளி வாங்க வேண்டிய லிஸ்ட் தயார் செய்து புடவை,ரவிக்கை துண்டு, சுடிதார்; வேட்டி, துண்டு, பேன்ட், ஷர்ட் இத்யாதிகள் வாங்கி அவரவர் பெயர் கவர் மேல் எழுதி வைத்து கொள்ள வேண்டும்.
கட்டு சாத கூடை வரையில் நாதஸ்வர கோஷ்டி வாசிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் மேளத்திற்கு அட்வான்ஸ் , சமையல்காரருக்கு அட்வான்ஸ் கொடுப்பார்கள். ஆரம்பம் முதல் சத்திரம் காலி பண்ணும் வரை இப்போதெல்லாம் கல்யாண காண்ட்ராக்ட் எடுத்டுவிடுகிறார்கள். அப்போது அதெல்லாம் கிடையாது. மாப்பிள்ளை ஜான வாஸ குடை, பாத ரக்ஷை, தடி கம்பு, பரதேச கோல துண்டு, சோப்பு, சீப்பு,கண்ணாடி, ஷேவிங் செட்; பற்பசை; டூத் ப்ரஷ்; துண்டு , மண மக்கள் பெயரிட்ட பட்டு பாய் இவைகளும் கேட்டரர் வாங்கி கொடுத்து விடுகிறார். பர தேச கோல துண்டில் அரிசியும், பருப்பும் போட்டு கட்டி வைக்க வேண்டும். ஊஞ்சல் புஷ்ப அலங்காரம், மண மேடை புஷ்ப அலங்காரம் இவைகளும் இப்போது காண்ட்ராக்ட் இருக்கிறது. கேடெரெர் ஒட்டு மொத்தமாக எல்லாவற்றுக்கும் எஸ்டிமேட் கொடுக்கிறார்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


