
என் கதை பிடிக்குதா? — நங்கநல்லூர் J K SIVAN
”சொல்றதை நல்லா கேளுங்க. அது தானுங்க . எழுதறதை கவனமாக படிங்க.
நான் யாரு என்பது முக்கியமில்லை ஸார். என் வாழ்க்கை பிரயாணம் உங்களுக்கு லட்டு மாதிரி இனிக்கும். என்னை மாதிரி அனுபவங்களை கொஞ்சம் ஞாபகம் வைத்துக்கொண்டு இதுவரை சொல்லிய வர்கள் எத்தனை பேர்? விரல் விட்டு எண்ணிடலாம். நான் சொல்றது பேத்தல் என்று யாராவது சொன்னீர் களானால் எனக்கு காது கேட்காது.
நான் பிறந்தது வடக்கே எங்கேயோ ஒரு ஊர்லே. தரை மேலே உங்கள் மாதிரி வீட்டில் இல்லை. பூமிக்கு கீழே. என்னை பிடிச்சு எடுத்து நெருப்பிலே போட்டு வாட்டி அடிச்சு… அப்பப்பா நான் பட்ட கஷ்டம் யாருமே பட வேண்டாம். உண்மையிலேயே உங்களெப் போல் ஒருத்தர் இப்படி பண்ணினதாலே தான் எனக்கு பெரிய மதிப்பு. எல்லோரும் என்னைத் தேடினாங்க. விட மனசில்லாமே அவங்க கிட்டே இருந்து பிரிஞ்சேன். எத்தனை பேர் என்னைப் பார்த்தாங்க, நான் யார் யார் கிட்டே இருந்தேன், — இதை எல்லாம் சொல்லி மாளாது. கொஞ்சம் மட்டும் சொல்றேன். பொறுமையா படிங்க.
என் உடம்பு உங்க மாதிரி இல்லே. கை காலுல்லாம் கிடையாது.முன்னாலே பின்னாலே ரெண்டே பக்கம். . ஒரு பக்கம் மொட்டைத்தலை வெள்ளைக்கார ராஜா. இன்னொரு பக்கம் சிங்காரம், பூவெல்லாம் வரைஞ்சு ஒண்ணு ன்னு எழுதி, நம்பர் போட்டு… அதுக்கு கீழே நான் பிறந்த வருஷம் போட்டிருப்பாங்க. நான் பார்க்காத ஊரில்லை, ஆளில்லை.
ரயில்லே, கப்பல்லே, ஏரோபிளேன், நடந்து, மோட்டார், குதிரை வண்டி, ஒரு அழுக்கு கழுதை மேலே.. இப்படி யெல் லாம் நிறைய பிரயாணம் செய்தவன். என் வயசு என்னன்னு நினைக்கிறீங்க. உங்க கொள்ளுத் தாத்தா வுக்கு எள்ளு தாத்தா வயசு.
எனக்கு ஜெயில் தண்டனை கூட நான் ஒரு தப்பும் பண்ணாமலேயே கிடைச்சுது. ஒரு கிழட்டு பயல், ரொம்ப நாள் என்னை ஒரு தகர டப்பாவில் அமுக்கி மூச்சு விடமுடியாமல் ஆறு வருஷம் இருட்டில அடைச்சு வச்சான்? அந்த ஆறு வருஷம் நான் சூரிய னை பாக்கவே இல்லை. எப்படியோ ஒரு சின்னப் பையன், அவன் நல்லா இருக்கட்டும்.. ஒருநாள் அந்த டப்பாவிலிலிருந்து என்னை எடுத்து விடுதலை செஞ்சான்.
ஒரு நடு வயசு செட்டியார் என்னை பூட்டியே வச்சிருந் தார். என் போல நிறைய பேரை பார்த்தா பிடிச்சு வச்சிப் பார். தினமும் தடவி தடவி கொடுத்து வெளியே எடுத்து பார்ப்பார். எதுக்கு எங்களை சேக்கணும் . எண்ணணும் , ஆயிரம் ஆனதும் சாப்பிடப் போறாரா?
குப்பம்மா பேரனுக்கு ஜுரம் . ஆஸ்பத்திரில சேக்கற துக்கு, மருந்து வாங்கறதுக்கு நான் தான் வெள்ளக்கார டாக்டரம்மா, மருந்துக்கடைக்கு எல்லாம் போனேன்.
ஆடு வாங்க என்னை ஒருத்தன் யூஸ் பண்ணினான். அடப்பாவி அந்த ஆட்டை வெட்டின பூசாரி வீட்டுக்கு போனேன். அவன் பொண்டாட்டி என்னை பிடிச்சு குதிரை வண்டிக்காரன் கிட்டே கொடுத்து ரெண்டு பட்டணம் போனேன்.
ஒரு பையன் என்னை கிணத்துல போட்டுட்டு அடி வாங்கினான் பாவம். நல்லவேளை ஒரு மாசம் கூட ஆகலே கிணத்திலே வெயில் காலம் தண்ணி இல்லன்னு கவுண்டர் ஒருத்தர் உள்ளே இறங்கி என்னை வெளியே மண்ணோடு சேறோடு எடுத்து போட்டார். அந்த ஆளு என்னைப் பாக்கலே.
நாயைப் பிடிச்சுக்கிட்டு ஒரு மாமா வந்தப் போ அவர் கண்ணுலே பட்டேன் . என்னை தொடறதுக்கு முன்னாடி அங்கேயும் இங்கேயும் யாராவது பாக்கறாங்களா என்று அந்த நாய் ஆசாமி ஏன் பார்க்கணும்?
பள்ளிக்கூடத்திலே பாலசுப்ரமணியை படிக்க வச்சாங் களே அப்போ என்னை ஒரு அழகான சுருக்கு பையிலே போட்டு அந்த பையன் கையாலே ஒரு வாத்தியாருக்கு கொடுத்தாங்க. வாத்யார் வரதாச்சாரி, கிழவர்,. நல்லவர். அப்படியே கொண்டு போய் என்னை ராமர் படத்துக்கு கீழே காலடிலே வச்சார். முதல் முதல்லே அவர் தான் என்னை கடவுள் கிட்டே கொண்டு போய் சேர்த்தது. அவர் இப்போ என்னவா பொறந்திருக்காரோ? நல்லா இருக்கணும்.
வாத்யார் குடி இருந்த வீட்டுக்காரன் வந்து கத்தினான் பாக்கி வாடகை தரலேன்னு. வாத்தியார் சம்சாரம் அழுது கிட்டே என்னை ராமர் கிட்டேருந்து மீட்டு ஜோசப் கையிலே கொடுத்தது. வீட்டு ஓனர் ஜோசப் கோழி வளர்க்கிறவரு. அவர் கும்பிடுற சர்ச்லே கிருஸ்மஸ் பண்டிகை வந்தது. அதுக்கு செலவுக்குனு பாதிரியார் கிட்டே என்னை கொடுத்துட்டார்.
பாதிரியார் வெள்ளைக்கலர் நீள கவுன் போடுவாரு. அதிலே ஒரு பாக்கெட் அதிலே என்னை போட்டுக் கிட்டாரு . அவர் துரதிஷ்டமோ என் நல்ல காலமோ நான் பாக்கெட்ல இருந்த ஓட்டை வழியாக ஒரு சாயங்காலம் கீழே குதிச்சுட்டேன். அவருக்கு தெரியாது. சர்ச்லே போய் ஜான் என்கிற பையனை தொமே தொமே ன்னு ”ஏண்டா திருடினே” ன்னு அடிச்சாரு. ” நான் திருடலே, பாக்கலே சாமி , எடுக்கலே ஏசு மேலே சத்தியமா”…பையன் கத்துனான் . முதுகிலே பதினைஞ் சு அடி சவுக்கு கொம்பாலே அடிச்சார். வாங்கினான். நான் இதெல்லாம் எங்கேருந்து பார்த்தேன் தெரியுமா?, வாசலுக்கு வெளியே மல்லிப்பூ செடிக்கு கீழே….அதை ஒட்டி தான் பாதிரியார் ரூம். அங்கேதான் அவர் பாக்கெட் ஓட்டை யிலேருந்து கீழே குதிச்சேன்.
ஒரு ஐந்து வயசு பொண்ணு மல்லிப்பூ பறிக்க பத்து நாள் கழிச்சு வந்தது.. ஒரு பூ கீழே என் கிட்டே விழுந்துச்சு.. பூவோட என்னையும் எடுத்து ” அம்மா அம்மா இதோ பாரு” ன்னு கொடுத்துது. அந்த அம்மா வேக வேகமாக பூவை கீழே போட்டுட்டு குழந்தையையும் என்னையும் தூக்கிக்கிட்டு ஊட்டுக்கு ஓடிடுச்சு. ” சர்ச் போற வழியி லே வழிலே நம்ம குழந்தை ரோஸ் மேரிக்கு கிடைச்சுது. போய் நல்ல வளையல் ஜோடி வாங்கி வாங்க” ன்னு அவ புருசன் ஜார்ஜ் கிட்டே என்னை கொடுத்துது அந்த அம்மா. அவ புருஷன், அந்த படுபாவி குடிகாரன், திருச்சினாப் பள்ளிலே ஒரு சாராயக்கடைலே என்னைக் கொடுத்து நிறைய குடிச்சான். வீட்டுக்கு வந்து வளையல் எங்கே ன்னு பொண்டாட்டி கேட்ட போது வழியிலே யாரோ திருடிட்டாங்க ன்னான்.
சாராயக் கடைக்காரன் அவன் கடைக்கு பெயிண்ட் அடிச்சான். அவனாலே நான் பெயிண்ட் கடைக்கு போனேன். கடைக்கார சாயபு,மெக்காவுக்கு யாரோ போறாங்கன்னு என்னை ஒரு பாய் அம்மா வீட்டிலே கொடுத்துட்டான். கொஞ்ச நாள் அங்கே அவங்க பாஷை கேட்டுக்கிட்டு இருந்தேனா கவுச்சு, மீனு சுடர நாற்றம் வயிற்றை குமட்டும். ஒருநாள் அந்த வீடு பத்திக்கிச்சி. எல்லாத்தையும் எடுத்து டப் டப் ன்னு வெளியே வீசினபோது நான் உருண்டு கிட்டே போய் ஒரு பள்ளத்துலே விழுந்திட்டேன். கொஞ்ச நாள்லே நல்லா மழை பெஞ்சிது. கீழே மறுபடியும் மண்ணிலே சுகமா கொஞ்சகாலம் தூங்கினேன். எத்தனை மாசம் வருஷம்னு தெரியலே.
பள்ளிக்கூடம் கட்ட அந்த இடத்தை எல்லாம் தோண்டி னப் போ சித்தாள் கந்தசாமி தான் என்னை முதல்லே பார்த்து எடுத்தான். ”முதலாளி இது கிடைச்சுது’
பில்டர் பாலு ரெட்டி பணக்காரன். என்னைப்போல் ரொம்ப பேரு அவன் கிட்டே வச்சிருப்பான்.. அப்போ ரொம்ப சிமெண்ட் கிடையாது. காரை சுண்ணாம்புலே தான் கட்டிடம் கட்டுவாங்க. சுண்ணாம்பு வாங்க சௌகர்யம் என்று என்னை தூக்கி வைச்சுக்குனு குதிரை மேலே ஏறி வந்தான். வரும்போது காட்டுப் பாதையில் அவனை மடக்கி கொள்ளைக்கூட்டம் ஒண்ணு அவன் கிட்டே இருந்து என்னை பிரிச்சுடுத்து.
வெள்ளைக்கார போலீஸை மட்டமா நினைக்காதீங்க. அந்த கொள்ளைக்கார நரிக் குறவன் நாகுவை பிடிச்சு அடிச்சு என்னை அவன் கிட்டே இருந்து எடுத்துப் பார்த் தாங்க. என்னென்னமோ இங்கிலீஷ்லே பேசிட்டு என்னைக் கொண்டு போய் மன்றோ கிட்டே கொடுத் துட் டாங்க. மன்றோ தெரியுமில்ல, ஐலண்ட் கிரௌ ண்ட் லே இப்போ கூட குதிரைமேலே உட்கார்ந்துக்குனு
இருக்காரே அவரே தான். அவராண்டே இருக்கறதுக்கு நான் ரொம்ப பெருமை பட்டேன். அவரு என்ன செய்தார் தெரியுமா?.
அப்போ திருப்பதி வெங்கடேச பெருமாள் மேலே ரொம்ப பக்தி மன்றோ துரைக்கு. கோவில்லே நிறைய வேலை பாக்கி இருக்குது. அதுக்கு நான் உபயோகம் படுவேன்னுட்டு ராகவாச்சாரி பட்டரை கூப்பிட்டு பொங்கலுக்கு நெய் வாங்க என்னை அனுப்பிச்சாரு.
ஆந்திராவில் ஒரு கிராமம். நிறைய பசு மாடு. அதை ஒரு நாயுடு கவனிச்சிக்கிட்டு பால் தயிர் வெண்ணை நெய்யின்னு விப்பாரு . திருப்பதி கோவிலுக்குன்னா காசு வாங்க மாட்டாரு. வருஷம் ஒரு தடவை சடை தாடி எல்லாம் வளர்த்துக்கிட்டு ”திருப்பதி ஏடு கொண்டல வாடா ” ன்னு உளுந்து புரண்டு மொட்டை போட்டு முடி இறக்குவாரு.
திருப்பதி வெங்கடேசன் உண்டியிலே நாய்டு என்னை கொண்டு போட்டாரு. கோவில்காரங்க என்னைப்போல நிறைய பேரை பிரிச்சு எண்ணி மூட்டை கட்டி மன்றோ அனுப்பிச்ச ஆளுங்க வந்து தூக்கிட்டு போய்ட்டாங்க. அடடே, நான் மறுபடியும் மன்றோ கிட்ட வந்துட்டேனே .
அப்போ கடல் கடந்து கப்பல்லே ஒரு வெள்ளையா செவத்த ஆளு வந்திருந்தார். வெள்ளக்கார ராஜா வுடைய ஆளு. அவர் என்னை பார்த்துட்டு ”அட”ன்னு எடுத்து வச்சிக்கிட்டாரா? அவரோட கப்பல்லே நான் கடல் கடந்து வெளிதேசம் போய்ட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு என்னை மறுபடியும் உருக்கிட்டாங்க நான் அப்புறம் வேறே . என் ஒரு பக்கம் வேறே முகம், வேறே நம்பர்… அதெல்லாம் இன்னும் சொல்லிக்கிட்டே போனா முடிவேது….அப்பறம் தட்டாயிட்டேன், ஒரு தடவை கூஜா, அப்புறம் ஒரு பொண்ணு காலிலே கொலுசு…… ????
இவ்வளவு தூரம் பேசினேனே நான் யாருன்னு சொல்ல மறந்துட்டேன் பார்த்தீங்களா
?(ஒரு ஏழாம் எட்வர்ட் காலத்து வெள்ளி ரூபாய் இதெல் லாம் வாய் திறந்து பேசியது…)
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



