
சோழனின் பாப லிஸ்ட். – நங்கநல்லூர் J K SIVAN
யாராவது தப்பு செய்வதாக தோன்றினால் நாம் ”அடப்பாவி!” என்கிறோமே. பாபங்கள் பற்றி நமக்கு முழுசாக தெரியுமா? நாம் நல்லவர்களா? தயை, காருண்யம் இரக்கம், நேர்மை, நியாய, மனசாட்சி உண்டா? இதெல்லாம் பற்றி எப்போதாவது சுய பரிசோதனை செய்து கொள்கிறோமா?
இது எனக்கு தோன்றிய எண்ணம் இல்லை. ஒரு சோழ ராஜா மனு நீதி சோழனுக்கு இந்த எண்ணம் மனதில் தோன்றியது. அவனது மகன் வீதி விடங்கன் வேகமாக தேரை ஒட்டி ஒரு பசுவின் கன்றுக்குட்டி யை கொன்று விட்டான்.
மனு நீதி சோழன் தனது அரண்மனை வாயிலில் ஒரு மணி கட்டி தொங்கவிட்டு,யாருக்காவது எப்போதாவது நீதி கிடைக்க வேண்டுமானால் அந்த மணியை அடித் தால் ராஜா உடனே ஓடிவந்து விசாரித்து தக்க நீதி வழங்குவான். அக்காலத்தில் ராஜா தான் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்.
கன்றுக்குட்டியை இழந்த தாய்ப்பசு கண்ணீர் மல்க பேச இயலாமல் அரசனின் அரண்மனை அருகே பொது இடத்தில் கட்டி இருந்த ஆராய்ச்சி மணிக்கயிறை வாயால் கவ்வி டாங் டாங் என்று அடித்தது. அரசன் வெளியே ஓடி வந்து யார் நீதி கேட்டு வந்தது என்று பார்க்கிறான். திருவாரூர் சென்றால் இந்த மண்டபத்தை பார்க்கலாம். எளிதில் கண்ணில் படாமல் மறைத்து, பார்க்க காசு வாங்குகிறார்கள் என்று ஞாபகம். நான் போய் பார்த்து எத்தனை வருஷங்களாகிவிட்டது.
தேரை நமது காரைப்போல உடனே SUDDEN brake பிரேக் போட்டு நிறுத்த முடியாது. குதிரையின் இஷ்டம் போல் தான் தேர் நிற்கும். அப்படித்தான் இளவரசன் தேர் நிற்பதற்குள் கன்றுக்குட்டி அடிபட்டு அரைபட்டு இறந்துவிட்டது. தாய்ப் பசுவுக்கு அதன் குட்டியின் உயிரை திருப்பி தரமுடியாதே .
”நான் அதைக் கொன்றதால் என் மகன் உயிரை பலியாக தருகிறேன்” என்று மனுநீதி சோழன் தனது மகனைத் தேர்க்காலில் இட்டு கொன்றான்.
பாவம் மனுநீதி சோழன். அப்போது அவன் மனம் வாடியது.கண்ணீர் அழுதான். நான் என்னென்ன பாவங்கள் செய்தேனோ அதன் பயனாக குட்டியை இழந்த பசுவைப்போல என் மகனை இழந்து தவிக்கி றேன் ஒருவேளை இப்படி ஏதாவது பாபம் செய்தி ருப்பேனோ என்று சில பாபங்களை லிஸ்ட் போடுகிறான்:
(அடே, சோழா நீ ஒரு அப்பாவி. கலங்காதே, உன் பாப லிஸ்டுடன் நாங்கள் செய்வதையும் சொல்கிறேன் .கவலைப்படாதே.கண்ணைத் துடைத்துக் கொள்.)
+++
”நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!-”
(நல்லவர் மனதை கஷ்டப்படுத்துவது நாம் அநேகர் இப்போது நிறைய செய்வது தானே.)
”வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!-‘ (பொய்க்கேசு போட்டு நீதி மன்ற நேரத்தை கெடுப்பது தொடர்ந்து நடக்கிறதா இல்லையா?)
”தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!”
( தான் கொடுக்காவிட்டாலும் கொடுப்பதை தடுக்கும் கைகளும் வாய்களும் இன்னும் இருக்கிறதே)’கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!”
(நண்பர்களுக்கிடையே துரோகம் செய்யக்கூடாது. நாம் அப்படி செய்வதில்லை என்று நம்புவோம்)
”மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
( நட்புக்கு வஞ்சகம் செய்திருக்கிறோமா?யோசிப்போம்)
‘குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!’
( பொதுமக்களுக்கு அடிக்கடி வரி விதிக்கக் கூடாது
என்று எந்த அரசாங்கம் நினைக்கிறது?).
”ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!’
( ஏழைகளா, யார் அவர்கள்? இதுவே தெரியாத ஆள்ப
வர்கள் இருக்கிறார்களா?இல்லையா?)
”மன்றோறம் பேசி வாழ்வழித்தேனோ”
(பொய் சாட்சி பூதலிங்கமாக வக்கீல்களே பெரும் பெயர் பெற்றவர்கள் இருக்கிறார்களா இல்லையா?)’
‘உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தே
னோ?”
(வெட்டுபவனுக்கு கத்தி தீட்டிக் கொடுப்பதற்கு என்றே பலர் பிழைக்கிறார்களா ,இல்லையா?)’
‘களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ”
( யார் வீட்டில் பணம் திருடலாம் என்று ஐடியா கொடுப்ப
வர்கள் ஒரு கூட்டமாக உள்ளார்களா இல்லையா ?)
”பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!”
(வேண்டாத பொருளுக்கு ஆசைப்பட்டே காலம் ஓடிவிடு கிறதா இல்லையா?)’
‘ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!’
(ஏமாற்றுவதில் கில்லாடிகளை கெட்டிக்காரர்கள் என்று புகழ்கிறவர்கள் உள்ளார்களா இல்லையா?)
”வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ””
(பொது வழியை தடுத்து ஆக்கிரமித்ததாக எத்தனை கேஸ்கள் இன்னும் நீதிக்கு காத்திருக்கிறது தெரியுமா?)
”வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!”
( நிறைய வேலை வாங்கி கொஞ்சம் சம்பளம் கொடுப்பவர்களை எண்ணிச் சொல்லமுடியுமா?)
”பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ! ”
( ஐயா பசி என்றபோது ஏன் நமக்கு காதே கேட்கவில் லை ?)
”இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!”
(சோறு கீறு கிடையாது. போ போ” என்பவர்களோ நாம்)
‘கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!’
(கோள் மூட்டி குப்புசாமிகள் எண்ணற்றவர்கள் உண்டா இல்லையா?)
”நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!’
( நம்பினவனை கை விடுவது கைவந்த கலைஅரசியலில்
. இல்லையா?)
”கலங்கி யொளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!”
( எட்டப்பர்கள் ஒருவரா இருவரா?)
”குருவை வணங்கக் கூசிநின்றேனோ!”
(வாத்யாரை மதிப்பதை விடு, அடிப்பதை நிறுத்துங்க என்கிறோமா?இல்லையா ?)
”குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ’
‘(பீஸ் கொடுக்காமல் வாத்யாருக்கு நாமம் போடுவோ ரை தெரியுமா,தெரியாதா?)
”கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!”
(அவன் என்ன பெரிசா படிச்சுட்டான், படிச்ச முட்டாள். என்கிறோமா இல்லையா?)
”பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ! ”
(நாம் எத்தனையோ சமயம் நமக்கே அர்த்தம் தெரியா விட் டாலும், நக்கீரர் ரோல் போடுகிறோமா இல்லை யா?)
”பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!”
(பறக்கும் பறவையை பிடித்து கூண்டிலிட்டவர்கள், வெளிநாட்டுக்கு திருட்டு தனமாக அனுப்புவோர்கள் உண்டா இல்லையா?)
”கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ!””
(பசுவின் பாலை கறக்க அதன் கன்றுக்குட்டியின் தோலை வைக்கோல் அடைத்து பசுவை ஏமாற்று கிறோமா இல்லையா?)
”ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!”
(எத்தனை ஓட்டல்கள் வாசலில் பிச்சைக்காரர்கள் போல் உள்ளே சாப்பிட டேபிள் கிடைக்க காத்திருக்கிறோம்?)’
‘கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!”
(பருப்பில் தானியங்களில் கல், பிளாஸ்டிக் கலைப்படம் ஒரு பெரிய பிஸினஸா இல்லையா?)’
‘அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!’
‘(அன்பாக இருந்தவர்களுக்கு துன்பம் தருவது வாடிக் கையா இல்லையா?)
”குடிக்கின்ற நீருள்ள குளந் துர்த்தேனோ!
(குளம் ஏரிகள் இப்போது நமது வீட்டு அஸ்திவாரம் அடியிலே தானே இப்போது இருப்பது வழக்கம்?)’
‘வெயிலுக்கு ஒதுங்கும் விருக்ஷம் அழித்தேனோ!’ ‘(மரங்களை வெட்டி பிளாட் போட என்றே படா படா கம்பெனிகள் இருக்கிறதா இல்லையா?)
”பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!”
(அடுத்தவன் சொத்துக்கு பேயாக பறந்து ஆக்கிரமிப்பு நடக்கிறதா இல்லையா? கோர்ட்டுக்கு போய் பாருங்கள்)
”பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!”
(பேப்பரில் படித்தது ஒன்றா இரண்டா?)
”ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!”
(இதற்கு என்றே ஒரு பெரிய கூட்டம் இருக்கிறதா
இல்லை யா?)
”சிவனடியாரைச் சீறி வைதேனோ!”
(மனு நீதி சோழா, நீ இப்போ இருந்தால் உனக்கே புரிந்தி ருக்கும் நீ பாபம் செய்யவில்லை என்று)’
‘தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! ”
(மேலே சொன்னது தான் சோழா)
”சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!”
(இதுக்கும் மேலே சொன்னது தான் ditto )
”தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!”
( தாய் மொழி பேசாமல் தடுக்கும் பெற்றோர்களே இப்போது இருக்கிறார்களே சோழா)
”தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!”
(சாமி இல்லை போடா என்ற கர்வம் கொண்டவர்கள் நடுவில் நாங்கள் இருக்கிறோமே சோழா)’
‘என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறி யேனே!”
(நான் எப்படிப்பட்டவன் என்னென்ன பாவம் செய்தேன் என்று தெரியவில்லையே என்று பாவம் மனுநீதி சோழன் அழுகிறான்.
++
மேலே சொன்ன பாப லிஸ்ட் போட்டவர் வள்ளலார். ”மனு முறை கண்ட வாசகம்” என்று பெயர் அதற்கு பெயர்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



