
இலவச மருத்துவ அட்வைஸ் – நங்கநல்லூர் J K SIVAN
என்னதான் படித்தாலும், பேசினாலும், கேட்டாலும், எழுதினாலும், உடம்பை பற்றி நினைக்காமல் இருக்க முடிகிறதா? ஏன் இடது காலில் பாதம் புஸு புஸு வென்று இட்லி மாதிரி வீங்கி இருக்கிறது?.
”காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு மணிக்கணக்காக கம்ப்யுட்டர் முன்னால் உட்கார்ந்தால் கால் வீங்காமல் என்ன பண்ணும்?’ — ‘ டாக்டராக மனைவி கேட்கும் கேள்வி?
நடராஜா மாதிரி இடது பாதம் தூக்கி உட்கார்ந்து பார்த்தேன். ஹுஹும் நாட்கள் தான் நகர்ந்தது.மருந்து கடைக்கார நண்பன் சொன்னது போல் வெந்நீரில் எப்சம் உப்பு போட்டு காலை வைத்தும் பிரயோஜனம் இல்லை.காரணம் தெருக்கள் தான். எந்த தெருவிலும் விழாமல் ஆடாமல் நடக்க முடியவில்லை. ஏதோ காரணம் சொல்லி பாதாளம் வரை நோண்டிப் போட்டுவிட்டு மஞ்சள் தடுப்பு தகடுகள் வைத்து விட்டு மறந்து போய்விடுகிறார்கள். மூன்று தெரு சுற்றி நடப்பதற்கு பதில் இண்டு இடுக்கில் சர்க்கஸ் பண்ணி அந்த பக்கம் போகும்போது எங்கோ கால் இடறி பாதம் சற்று புரண்டு போயிருக்கலாம். எலும்பு முறிவாக இருந்தால் வலி கொன்று விடும். வலது கை முறிந்து நான்கு மாசம் நான் பட்ட கஷ்டம் எனக்கு இன்னும் நினைத்தாலே வலிக்கிறதே.”உடம்பு பருத்து விட்டதா, பெருத்து விட்டதா?” ஒரு பட்டி மன்றம் வைக்கும் அளவு விஷயம் இருக்கிறது அதில்.
”உடம்புலே உப்பு ஜாஸ்தி சேர்ந்துட்டுதா?” என்று ஒருவர் கேட்டபோது என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ”உப்பு இல்லாமல் சாப்பிடுங்கோ”. இன்னொருவர். சொல்வது ஈஸி. ”நிறைய நடக்கணும் சுவாமி” ஏற்கனவே ரோட்டில் நடந்து தான் காலே பிசகி இருக்கிறது. எங்கே எப்படி நடப்பது ?சம்பந்தமே இல்லாமல் ஒருவர் முதுகில் தட்டி ஒரு நாளைக்கு ரெண்டு சிக்ரெட்டுக்கு மேல் குடிக்கா தேங்கோ” நான் சிகரெட்டை சரியாக பார்த்தது கூட கிடையாது. சின்ன வயதில் பத்து பதினொன்று இருக்கும்போது, பேயாக சுற்றி passingshow , wills , scissors, capstain, players navy cut ,என்று பலவிதமான சிகரெட் பாக்கெட் அட்டைகளை சேர்த்திருக்கிறேன். பண்ட மாற்றுதல் மூலம் நண்பர்களிடம் வேறு அட்டைகளை மாற்றி இருக்கிறேன். அதோடு என் சிகரெட் சம்பந்தம் தலை முழுகியது.ஸ்ட்ராங் காப்பி வேண்டாம்” இந்த அட்வைஸ் சொன்ன நண்பரை அதற்கப்புறம் என் மனைவி வீட்டில் சேர்ப்பதில்லை.ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிளாவது சாப்பிடுவது நல்லது என்று யாரோ சொன்னதன் பின் விடாமல் ஆப்பிள் சாப்பிட பத்தே நாளில் ஆப்பிள் பிடிக்காமல் போய்விட்டது.”பத்து மணி நேரமாவது தூங்குங்கோ” என்று சொன்னவருக்கு எதிராக அதிகமாக தூங்கினால் இன்னும் தேகம் பருத்துவிடும்” என்று சொன்னவரும் ஒரே நாளில் அட்வைஸ் கொடுத்தார்கள். படுப்பது வேறு தூங்குவது வேறு. கண்ணை மூடினால் ஆயிரக்கணக்கான எண்ண குதிரைகள் ஓடுகிறதே.எப்படி தூங்குவது?ஆச்சர்யமாக ஒருவர் உபதேசம் செய்தார். ” தலை முடியை ஜெயிலில் திருடன் போல் குட்டியாக வெட்டிக் கொண்டு விடுங்கள். தூக்கம் வரும்” என்றார். அவரை நான் தூரத்தில் பார்த்தாலே வேறு பக்கமாக நகர்ந்து ஒளிந்து கொள்கிறேன்.”ஜிம்முக்கு போகலாமே” என்று ஒருகுரல்.. ஜிம்முக்கு வேஷ்டி ஜிப்பாவோடு போகமுடியுமா?. அதற்கு என்று அரைக்கால் நிஜார், காலில் ஷூ சாக்ஸ், ஒரு டீ ஷர்ட் வேண்டும். நண்பர்களோடு ஓடவேண்டும். ஐந்தாவதுக்கு அப்புறம் அரைக்கால் காக்கி நிஜாரை துறந்துவிட்டேன். நாலுமுழம் வேஷ்டி தான் அப்புறம்.இதற்கெல்லாம் ஆத்மா இடம் தரவில்லை. ஜிம்மு க்கு பதிலாக வாசலில் தினமும் வரும் ஜிம்மிக்கு பிஸ்கட் போடுவதோடு நிறுத்திக் கொண்டேன்.
மெண்டல் ஸ்ட்ரெஸ் தான் காரணம் என்று ஒரு நண்பன் கண்டுபிடித்து சொன்னபோது எனக்கு மனதில் கிருஷ்ணனை தவிர வேறு அதிகமாக எவருக்கும் இடமில்லையே. ரமணரைப் படித்தபிறகு மனதின் ஆட்டமும் ஓட்டமும் குறைந்து விட்டதே. ஸ்ட்ரெஸ் என்று எதைச் சொல்கிறான்? என்று தான் தோன்றியது.”பஜார் தெருவில் எண்ணெய்க்கடை எதிரே பிள்ளையார் கோவில் பக்கத்து கட்டிடம் மாடியில் குப்புசாமி டாக்டர் கிட்டே போ” என்று ஒருவன் அவன் சொந்தக்கார டாக்டர் ஒருவரிடம் அனுப்பினான்.
குப்புசாமி என் குறை , வியாதி கேட்பதற்கு முன் என் உத்யோகம், என்ன சேமிப்பு, எவ்வளவு நாள் ஆஸ்பத்திரியில் தங்கமுடியும் என்று எல்லாம் கேட்டபோதே குப்புசாமியின் எண்ணம் புரிந்து விட்டதால் நாளைக்கு வருகிறேன் என்று சொன்னபின் ”நாளை” இதுவரை வரவே இல்லை. ”நாயோடு விளையாடு, சைக்கிள் ஒட்டு, வயலின் தபேலா கத்துக்கோ. புல் பிடுங்கி செடி நடு, மாடிக்கும் கீழுக்கும் பத்து தடவை நட என்று எல்லாம் கூட பல ஆலோசனைகள் நான் கேட்காமலேயே வலிய வந்தன.
எனக்கு தேக ஆரோக்யம் அட்வைஸ் கொடுக்க வருபவர்களை நைசாக அனுப்ப நான் ஒரு யுக்தி வைத்திருக் கிறேன். ”கமாஸ் ராகத்தில் இந்த பாட்டு தெரியுமா, காம்போதியில் இந்த கீர்த்தனை தெரியுமோ, பைரவியில் இந்த பாட்டை கேளுங்கோ” என்று ஏதாவது ஒரு பாட்டு அவிழ்த்து விடுவேன். ரெண்டு நிமிஷம் கேட்டவுடனேயே, கொஞ்சம் அவசர வேலையாக போகவேண்டும் மறந்து போய்விட்டேன் என்று ஓடிவிடுகிறார்கள் . என் பாட்டினால் எவ்வளவு நன்மை எனக்கு?
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



