DEFEATED KAMSA J K SIVAN

தோற்றுப்போன  கம்சன்  –        நங்கநல்லூர்  J K  SIVAN
தங்கையின்  கல்யாணத்தை  சிறப்பாக  கொண்டாட  எல்லா ஏற்பாடும் செய்தவன்  தானே  அவளையும்  அவள் கணவனையும்  அலங்கரித்து   ஊர்வலமாக  அழகிய  தேரில் அமரச் செய்து, தானே  அந்த தேரை  ஒட்டி வந்தான். அப்போது தான் அவனுக்கு  அந்த அசரீரியின்  குரல்  எச்சரித்தது. ” முட்டாள்  கம்சா,  உன்  சகோதரியின்   எட்டாவது குழந்தை  தான் உனக்கு யமன். ஜாக்கிரதை”    அன்று முதல் தூக்கத்தை  இழந்த  கம்சனை  துக்கமும் பிடித்துக்  கொண்டது .   சகோதரி தேவகியையும் அவள் கணவன் வசுதேவரையும்  சிறையில் வைத்தான்.  அவர்களுக்கு பிறந்த  ஆறு குழந்தைகளை பிறந்ததுமே கொன்றான்.  கருவிலேயே ஏழாவது குழந்தை   பலராமன் கோகுலத்தில் ரோகிணி வயிற்றுக்கு மாற்றப்பட்டு எட்டாவது குழந்தையாக   யோகமாயா அவதரித்தாள்   “முட்டாள் கம்சா, உன்னுடைய யமன் வேறு ஒரு இடத்தில் வளர்கிறான்” என்று எச்சரித்தாள்.  கம்சன் பல  அசுரர்களை எல்லா இடங்களுக்கும் அனுப்பி அவன் ராஜ்யத்தில் இருந்த சிறு குழந்தைகளை எல்லாம் கொன்றான்.  கிருஷ்ணன் அவன் அனுப்பிய  ராக்ஷஸர்களை, அசுரர்களை எல்லாம் பிருந்தாவனத்தில்  கோகுலத்தில்  அழித்தான்.   செய்வதறியாமல் தவித்த  கம்சன்  அக்ரூரரை  அனுப்பி   பலராமனையும்  கிருஷ்ணனையும்  மதுராவுக்கு  அழைத்துவர  திட்டமிட்டான். அவர்களும்  அக்ரூரரோடு  கிளம்பி மதுராபுரி வந்தார்கள்.
ஒரு காவலாளி ஓடிவந்து கம்சனிடம் முறையிட்டான்:”மகாராஜா,  இரண்டு வெளியூர் பையன்கள்   நேற்று  நமது  தனுஷ் யாக  வில்லை உடைத்து விட்டார்கள். தடுத்து நிறுத்திய ஆயுதம் தாங்கிய  நமது எல்லா காவலாளிகளையும் கொன்று விட்டார்கள்”
யாராலும் எளிதில் தூக்க முடியாத  அந்த தனுசு கிருஷ்ணனால்  தூக்கப்பட்டு  கண் இமைக்கும் நேரத்தில் ஓடிக்கப்ப ட்ட தல்லாமல் எதிர்த்த  பெரிய வீரர்களும் சுலபமாக கொல்லப்பட்டார்கள் என்ற  விஷயம்  கம்சனுக்கு  எதிரி  சாமான்யனல்ல. நாரதர்  சொன்ன வாக்கு  பலித்துவிடும் போல்  இருக்கிறது.  பதினான்கு வருஷங்களாக எடுத்த அத்தனை  முயற்சிகளும்
தோல்வி. அனுப்பிய அத்தனை  ராக்ஷசர்கள், அரக்கி, அரக்கர்கள் அனைவருமே  கொள்ளப்பட்டு விட்டார்கள். கோகுலம் போய் கொல்ல முடியாததால் மதுராவிற்கு  அழைத்து  கொல்லலாம்  என்ற  எண்ணத்திலும் மண் விழுமோ?” என்ற பயம் பிடித்துக் கொண்டது.
 ”பலராமனும்  கிருஷ்ணனும்  நந்த கோபன் பிள்ளைகள்  என்று தானே  கேள்விப்பட்டேன்.  கிருஷ்ணன் உண்மையிலேயே  நாரதர் சொன்ன  தேவகியின்  எட்டாவது பிள்ளையாகிய என்னுடைய  யமனோ? இவ்வளவு  ஜாக்ரதையாக   இருந்தும்  எப்படி தவறிவிட்டேன் ?   வரட்டும்  இன்று  தான் முடிவு  அவர்கள் இருவருக்கும்.”
கம்சன்  குமுறினான். நெருப்பாக  மூச்சு விட்டான்.  இதோ வந்து விட்டார்கள்  கம்சன்  மாளிகைக்கு.  மாளிகையில்   நுழைந்ததுமே கூட்டத்தில்  மதயானை  காத்திருக்கிறது  அவர்களை மிதித்து  தூக்கி ஏறிய. அதற்கு போதை ஏற்றி  வெறியை அதிகமாக்கி இருக்கிறானே .    சரியான  கூட்டம்  கம்சனின்  அரண்மனை  மைதானத்தில். அனைவரும்  கூடியிருந்தனர்.
 கிருஷ்ணனை  பார்த்தால்  என்ன  தோன்றியது?. பெற்றோருக்கு  கிடைக்க  வொண்ணா  குழந்தை,  பெண்களுக்கு  வச்ச கண்ணை வாங்காம பார்க்ககூடிய  ஆணழகன். ரிஷிகளுக்கும்  வேதாந்திகளுக்கும்  கற்றோர்க்கும்  பண்டிதர்க்கும் ஞான விளக்கு.  நண்பர்களுக்கும்  யது குலத்தொருக்கும்  காக்கும் குல விளக்கு.  கம்சனுக்கோ “வார்னிங்”  முன்னறிவிப்புடன் கொடுக்கப்பட்ட எமன்!!  

கிருஷ்ணன் பலராமன் இருவரும்  இருக்கும்  பக்கமாக  கூட்டம்  அதிகமாக அதிகமாக  அவர்களுக்கு  நடக்க கூட முடியவில்லை அந்த அளவு  மக்கள்  ஆவலோடு அவர்களை  சூழ்ந்துகொண்டு வரவேற்றார்கள்.  திடீரென்று வானைப் பிளக்கும்  ஒரு  பிளிறல். புழுதி பொடிபட  பலத்த  சப்தத்துடன்  ஒரு மலை  ஓடி வருகிறது அந்த பக்கமாக.  மலையல்ல  கரிய மதயானை. அதன் பெயர்  குவலயாபீடம். கம்சன்  ஆவாலாக  உப்பரிகை மீதிருந்து பார்த்துகொண்டிருக்க  குவலயாபீடம் கிருஷ்ணனை நெருங்கிவிட்டது. தும்பிக்கையை   உயரே  தூக்கி  அவன் தலையில் அடிக்க இறங்கிவிட்டது. அவன்  மார்பருகே  பெரிய  தந்தம் கூர்வாள்  போல்  நெருங்கி அவனை  இதோ பிளக்க போகிறதே. ஐயோ!  கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே அனாயாசமாக  அதன் தந்தத்தை இரு கைகளாலும் பிடித்து  இழுத்து  முழு பலத்துடன்  அந்த யானையை அலாக்காக  தூக்கினான்.  யானை   இப்போது அவன் தலைக்கு  மேல்  உயரத்தில்  கர்ணம் சுற்றிக் கொண்டி ருக்கிறது.  சில சுற்று சுற்றி அதை வீசியெறிந்தான். சில  கடைசி மூச்சுகளை  பெரிதாக  விட்டு  குவலயாபீடம்  பூலோக  வாழ்க்கையை சந்தோஷமாக  முடித்துகொண்டது. கிருஷ்ணனால் மரணம் கிட்டியதில் அதற்கு  மகிழ்ச்சியோ!?”
 திரண்டிருந்த கூட்டத்தார்கள் அனைவரும்  கிருஷ்ணா  கிருஷ்ணா  என்று  போற்ற  அடுத்த  நிகழ்ச்சியாக  மல்யுத்தம்.  கிருஷ்ணனோடு  மோத  சாணூரன்  முஷ்டிகன் என்று இரு  ராக்ஷச  மல்லர்கள் வந்துவிட்டனர். கிருஷ்ணன் அவர்களை  விரைவில் கொல்ல வில்லை. சற்றுநேரம் அவர்களோடு  விளையாடிவிட்டு  கடைசியில்  எலியோடு விளையாடிவிட்டு பூனை  அதைக்  கடைசியில் கொல்வது போல் சானூரனையும்  முஷ்டிகனையும்   கொன்றான்.  கம்சனைத்  தவிர  அனைவரும்  கிருஷ்ணனைப்  பாராட்டி வாழ்த்த  கிருஷ்ணன்  கம்சனை  நெருங்கினான்.  என்னோடு மல்யுத்தத்துக்கு வா  என்று  அழைத்தான்.  தயங்கிய  கம்சனை  தலை முடியை  பிடித்து  இழுத்து வந்தான்.
அனைவரும் பார்க்க   பல வருஷமாக  காத்திருந்த சான்ஸ் கிடைத்தை  எண்ணி  மகிழ்ந்து கிருஷ்ணன்  கம்சனை  வதைத்தான்.  ரத்தம் சொட்ட  சொட்ட  கம்சன்  உயிருக்கு போராடினான். அவன் மார்பில் மேல்  ஏறி அமர்ந்து  அவனை  கடைசியில்  தன கையாலேயே கொன்றான்  கிருஷ்ணன்.  கம்சன் மாண்டான். கம்சனின் முடிவு  அறிந்து  அவனது  எட்டு  சகோதரர்கள்  கிருஷ்ணன்  பலராமனைக் கொல்ல வந்து விட்டனர். பலராமன்  இதற்காகவே  காத்திருந்தது போல அவர்களை  எமனுலகிற்கு  அனுப்பினான்.
சிறைப்பட்டிருந்த  உக்ரசேன மகாராஜாவே  மீண்டும்  ராஜ்யபரிபாலனம் செய்ய  கிருஷ்ணன் கேட்டு கொண்டாலும் ” மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட  கிருஷ்ணா  நீயே  எங்கள்  தலைவன் மதுராபுரி மன்னன்  என்று  15 வயது கண்ணன்  அரசனானான். சிறையில்  வாடும்  தாய்  தந்தையரை  மீட்டான். பிறந்த மறுகணமே  பயத்தில்,  உயிர்  தப்ப  தாயிடமிருந்து பிரிந்த சேய் பதினைந்து வருடங்கள் கழித்து  அதே  சிறையில் நடந்தே சென்று  தாயைக்கண்டு  அவளை ஆரத்தழுவி கொண்டது.  குழந்தையின்  தலை முதல்  கால்வரை   அவளது ஆனந்த கண்ணீர்  குளிப்பாட்டியது.   குழந்தை தன் கடமையை செய்து முடித்தது. தாய்க்கு  வாயில்  வார்த்தை வரவில்லை. தாய்க்கு  மட்டுமா  எனக்கும்  தான்   மேலே எழுத  எதுவும் தோன்றவில்லை.!!
மகிழ்சிகடலில் அனைவரும்  மூழ்கினர்.   கண்ணெதிரே நடந்த  ஆச்சர்யம்  அதிசயம்   எல்லோரையும்  நாம்  காண்பது கனவா நினைவா  என்ற  சம்சயத்திலும்  அனைவரும் தத்தளிக்க  அடுத்த வார்த்தையின்றி  என்  கையும்  பேனாவை கீழே போட்டுவிட்டு  இரண்டு  கைகளும்  சேர்ந்து கொண்டு  விட்டனவே
” கிருஷ்ணா  உன்  மகிமை  யாரால்  முழுதுமே சொல்ல முடியும். அள்ள அள்ளக் குறையாத  அமுதக்கடலல்லவோ உன்  சரித்திரம்.  முடிந்தவரை தொடர்கிறேன்”
.கிருஷ்ணனை  இனி  நாம்  பாலகனாக  பார்க்க போவதில்லை.  அவன்  பொறுப்புள்ள  அரு  அரசனாச்சே.  ராஜ்ய பரிபாலனம்  ஏ ற்றுக்கொள்ளு முன்பு  நிறைய  சாஸ்திரங்கள்  கல்வி  கேள்விகளில் சிறந்து விளங்க ஒரு  குருவை நாடி செல்வதற்கு  ஏற்பாடு  நடந்தது. சாந்தீப முனி தான்  சரியான  குரு  அவரிடமே  இந்த  இருவரும்  சென்று  பயிற்சி பெற வேண்டும் என்று தீர்மானம் ஆகியது.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;