
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
மஹா பெரியவா அனுக்ரஹித்த அக்ஷராப்யாஸம்
மஹா பெரியவா வாழ்ந்த காலத்தில் சென்னையிலிருந்த பெரியவா பக்தர்களுக்கு வரப்பிரசாதம், நிறைய பஸ், ரயில் காஞ்சிபுரம் செல்வதற்கு வசதி. சிலர் காரில், van ல் கூட்டமாக தரிசிக்க்க வருபவர்களும் உண்டு. வெளியூர்காரர்களுக்கு லீவு ரெண்டு மூணு நாள் கிடைத்தால் சென்னைக்கு ஓடிவந்து காஞ்சிபுரம் செல்வார்கள். தசரா சமயத்தில் எப்படியும் தொடர்ந்தாற்போல் 3 , 4 நாள் லீவு கிடைக்குமே. அதை விடுவார்களா?
நவராத்ரிக்கு முந்தின வாரம். பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு தம்பதிகள், தங்கள் ஐந்து வயதுக் குழந்தையோடு டில்லியிலிருந்து சென்னை வந்து காஞ்சிபுரம் ஓடினார்கள். பெரியவா மடத்தில் இருப்பது தெரியாது. ஆகவே அவர் தரிசனம் கிடைக்கும் என்ற ஆனந்தம் போனஸ். அவரை தரிசிக்க காத்திருந்து அருகே வந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.
குடும்ப தலைவர் பஞ்சகச்சம், கழுத்தில் ருத்ராக்ஷம், நெற்றியில் விபூதி இடுப்பில் வேஷ்டிமேல் அங்கவஸ்திரம்.
“பெரியவாகிட்ட ஒரு ப்ரார்த்தனை… கொழந்தைக்கு விஜயதஸமியன்னிக்கி அக்ஷராப்யாஸம் பண்ணணும்… நவராத்ரி டைம்-ங்கறதால ஆத்தை விட்டு வரது கொஞ்சம் கஷ்டம்… கொழந்தை நன்னா படிச்சு, நன்னா வரணும்…. அதுக்கு பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்…”
பெரியவா எதிரே பார்த்தபோது, அந்த குழந்தை அதன் அப்பா, அம்மாவைப் போலவே கை கூப்பிக் கொண்டு, அம்மாவையும், தன்னையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நிற்பதை கவனித்தார். …
“பெரியவாளோட திருவாக்கால, கொழந்தைக்கு எதாவுது வார்த்தை சொல்லித் தரணும்….”
“இங்க வா……” காமாக்ஷி அம்பாளே குழந்தையை வாக்தேவி ஸரஸ்வதி யாக அழைத்தாள் பெரியவா ரூபத்தில்.
குழந்தை மெதுவாக அருகில் வந்தது.
“நா…..சொல்றதை நீ திருப்பி சொல்றியா?…”
“சொல்றேன்..உம்மாச்சி தாத்தா!…”
“சொல்லு….வாக்குண்டாம்!…..”
“வாகுந்தாம்…..”
“நல்ல மனமுண்டாம்”
“நல்ல மனமுந்தாம்”
“மாமலராள் ….”
“மாமலரால் ..”
“நோக்குண்டாம்….”
“நோக்குந்தாம்..”
“மேனி…”
“மேனி..”
“நுடங்காது….”
“நுங்காது…”
“பூக்கொண்டு…”
“பூக்கொந்து…”
“துப்பார்….”
“துப்பார்….”
“திருமேனி……”
“தியுமேனி….”
“தும்பிக்கையான் பாதம்”
“தும்பிக்கியான் பாதம்”
“தப்பாமல்…”
“தப்பாமல்”
“சார்வார் தமக்கு….”
“சார்வார் தமக்கு….”
குழந்தைக்கு கொள்ளை ஸந்தோஷம்! உம்மாச்சித் தாத்தா சொன்னதை, தான் அப்படியே ‘கரெக்டாக’ சொல்லிய பெருமை!
“வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம், மாமலராள் நோக்குண்டாம், மேனி நுடங்காது….பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு!…..”
“….ஒனக்கு ஔவைப்பாட்டின்னா தெரியுமா?…”
“தெரியும் தாத்தா!… அப்பா சொல்லி இருக்கா.”
“இது….ஔவைப்பாட்டி பாடினது….தெரியுமோ? தெனோமும் சொல்லு….நன்னா படிப்பே!…”
“செரி…தாத்தா!…”
அதிர்ஷ்ட குழந்தை. வாக் தேவி சந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி இடமிருந்து வாய்க்கு கல்கண்டும், அறிவுக்கு , புத்திக்கு ஞானக் கல்கண்டும் கிடைத்ததே.
அந்த சமயம் பெரியவா அருகே சில தமிழ் அறிஞர்களும் பண்டிதர்களும் இருந்தார்கள். பெரியவா, ஸமஸ்க்ருதத்தை மட்டுந்தான் போஷிப்பார்; ஆதரிப்பார்; என்ற தவறான கருத்து அப்போது பரவியிருந்ததால், இந்த பெற்றோர் வந்து அக்ஷராப்யாஸம் செய்து வைக்க வேண்டி, பெரியவாளிடம் ப்ரார்த்தனை செய்ததும், அங்கிருந்த தமிழ் அறிஞர்கள் மஹா பெரியவா ஏதாவது ஒரு ஸமஸ்க்ரித ஸ்லோகம் தான் சொல்வார் என்று எண்ணினார்கள். ஸர்வ ஶக்தியான ‘ஸரஸ்வதி’க்கு மொழி பேதம் ஏது?
“வாக்குண்டாம்…..” என்று பெரியவா ஆரம்பித்ததும், அவர்களுக்கு ஆஸ்சர்யம்! ஸந்தோஷம்!
“பெரியவா கொழந்தைக்கு மட்டும் உபதேஸிக்கல……எங்க எல்லாருக்குந்தான் இந்த அருமையான உபதேஸம்! இனிமே எங்க வீடுகள்ளயும், வாக்குண்டாம்-தான் மொதல் பாடம் !…” என்று மஹா பெரியவாளிடம் கை கூப்பி சொன்னார்கள்.
உண்மைதான்! இன்றைய பள்ளிக்கூட பாட திட்டங்களில் ஒளவையாரைக் காணோமே. “வாக்குண்டாம்……” ஸ்தோத்ரத்தில் சொல்லிய ஏதாவது ஒன்றையாவது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பள்ளிக்கூடம் தந்திருக்கிறதா? என்று மூளையை குடைந்து குடைந்து யோஜித்தாலும், “இல்லை” என்றுதான் ஸத்யமான பதிலாக வரும். இது பெரியவா நம் அத்தனை பேருக்குமே அனுக்ரஹித்த அக்ஷராப்யாஸம்!
இந்த சரஸ்வதி பூஜை தினத்திலாவது நாம் நல்ல, உயர்ந்த ஸத்யமான வார்த்தைகள், நல்ல தர்மங்களை எடுத்துக் கொண்டு கடைப்பிடிக்கும் தாராள மனது, இந்த ரெண்டையும் அனுக்ரஹிக்க “ஜகத்குரு” காட்டிய விக்னேஶ்வர மூர்த்தியின் பாதங்களை பணிவோம். குழந்தைகள் இதை தினமும் சொல்லி வந்தாலே, மனஸும் ஶுத்தமாகும், அதனால் வாக்கும் ஶுத்தமாகும், தெளிந்த நல்லறிவும் உண்டாகும் என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


