

கிருஷ்ணா பதில் சொல்லுடா ?
நங்கநல்லூர் J K SIVAN
”கிருஷ்ணா நீ எல்லாம் தெரிஞ்சவன், எல்லாத்தையும் ஆட்டி வைச்சு வேடிக்கை பார்க்கிறவன். உன் மேலே ரொம்ப வருத்தமாவும் கோவமாவும் இருக்காடா ?” நான் பாட்டுக்கு சொல்லிண்டே இருக்கேன் புல்லாங்குழல் ஊதிண்டு நிக்கிறியே?’
”’சரி என்ன கோவம் உனக்கு, என்ன கேக்கணுமோ கேளு இப்போ?”
”’ஏன்னு கேக்கறியா. சொல் றேன் கேளு. இதுக்கு பதில் சொல்லு. இப்போ எல்லாம் அடிக்கடி மின்சாரம் தடை ஏற்படுகிறது. அணில் கடிச்சுடுத்து என்கிறான். அணில் எங்க வீட்டு மா மரத்திலே ஒவ்வொரு பழத்திலேயும் ஒரு வாய் தான் கடிக்கிறது. எதுக்கு அது எலக்ட்ரிக் வயரை கடிக்கணும். ஏன் மனுஷனை மாதிரி அதுக்கு புத்தி கெட்டு போய்டுத்து?
வீட்டிலே ஒரு புகைச்சல். அடுப்பு எரியாததாலே இல்லை. அடுப்பே இல்லையே இப்போ. புகை எப்படி வரும்? காஸ் விக்கிற விலை தெரியுமா உனக்கு. நீயும் தான் ராஜாவா இருந்தே இப்படியா மனுஷா கஷ்டப்பட வெச்சே? எதை தொட்டாலும் ஷாக் அடிக்கிறது. கரெண்ட் ஷாக் இல்லை. கரெண்ட் தான் இல்லையே. ”விலை..” அது மேலே போற வேகத்துக்கு ராக்கெட் கூட போகாது .பாதி சமையல் பண்ணும்போது, மிக்சி நின்னுடுத்து. வாஷிங் மெஷினில் அம்பாரம் துணி சுத்தும்போது ஸ்டாப். போர் தண்ணி 400 அடிக்கு பாதாளம் வரை தோண்டி தண்ணி தேடறோம்.. அது குழையிலே மேலே ஏறும் போதும் சரி, பாதி சோப் போட்டு கண்ணை மூடிண்டு குளிக்கும்போதும் எப்போ வேணுமானாலும் கரண்ட் கட்
. சே. எப்போது இந்த சனி வரும் போகும்னே தெரியல. இதுதான் வழக்கமாக எல்லா வீடுகளிலும் இப்போ தெல்லாம்கம்பளைண்ட் .
உன் காலத்திலேயே நீ ஊர் முழுதும் கருடன் மேலே தேரிலே போயிட்டே. இப்போ அடுத்த தெருவுக்கு போனாக் கூட 100 ரூபா இல்லாம ஆட்டோ கிடைக்க லே. மந்திரிகள் அரசாங்க உயர் அதிகாரிகள் எல்லாம் சௌகர்யமா ராஜாக்கள் மாதிரி இருக்காள் னு சொல்றா. லஞ்சம் னு ஒண்ணு ஏண்டா இப்படி உயிரே வாங்கறது.? எதுவுமே மேஜைக்கடியிலே கொடுக்கலீன்னா நகர மாட்டேங்கர்தே.”
”டேய் நிறுத்து உன் பாட்டை?
நான் உங்களை தான் படச்சேன், எல்லோருக்கும் ஒரே அளவு தான் இருதயம் ,மூளை புத்தி கொடுத்தேன். நீங்க பணத்தை படச்சு, அதை சிலர் சேர்த்து வைச்சுக்க நானா சொல்லிக் கொடுத்தேன். நீங்க பண்ணினதுக்கு நீங்க தானே அவஸ்தை படணும்.
தர்ம புத்ரன் ஹரிச்சந்திரன் மாதிரி உங்க கிட்டே ஏன் ஒருத்தனும் இல்ல? ஊருக்கு நல்லது செய்யணும் எல்லோருக்கும் உதவி பண்ணனும் அதுக்கு தான் பதவின்னு ஏன் ஒருத்தனும் முன் வரலே. எவ்வளோ கொடுத்து எவ்வளவு சம்பாதிக்கலாம் னு மக்கள் சேவை யை ஒரு சம்பாதிக்கிற உத்தின்னு இருக்கிறவனா பார்த்து நீங்க ஏத்துண்டு அவன் கெட்டவன்னு அப்புறம் திட்றது கத்தறது, அழறது தப்பு.
தேளு பாம்புன்னா விஷம் இருக்கும். தெரிஞ்சு அது கிட்டே போவானேன். கடி படுவானேன்.?
சரி சரி உன்னை மாதிரியே எல்லா பயலும் என்கிட்டே வந்து அழாதேங்கோ, இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்த மும் இல்லை. என்னை நம்பினா நான் சொன்ன படி வாழ கத்துக்கணும். அது இல்லாத போது , நீங்க செய்யற துக் கெல்லாம் நீங்க தாண்டா பொறுப்பு.போ போ.”
++
எப்படி நமது வாழ்க்கை மாறி விட்டது? என்று யோசிக்கிறேன்.
SSLC படிக்கிற வரையில் கரண்ட் னா என்னன்னு தெரியாது. ஹரிக்கேன் லைட் மாதிரி பிரகாசமா சூரியன் மாதிரி வேறே வெளிச்சம் வேறே தெரியாது. கல்யாணத்திலே சுவாமி ஊர்வலத்திலே புஸ்ஸ்ஸ் ன்னு சத்தம் பண்ணிண்டு காஸ் லைட் என்போமே அந்த பெட்ரோமாக்ஸ் விளக்கு தலையிலே சும்மாடு கட்டி அது மேலே நிக்கவைச்சு தூக்கிண்டு வரும்போது நிழலிலே விளையாடுவோம். ராத்திரி பூரா பனந் தோப்பிலே கூத்து, அல்லி அரசாணி, அர்ஜுனன், ஹரிச்சந்திரன் கதை டிராமா தெருக்கூத்து ஆம்பளை பொம்பளை வேஷம் கட்டிண்டு பாடிண்டு வட்டமா சுத்திசுத்தி வந்து ஆடுவா பாடுவா. எல்லாம் தீவட்டி வெளிச்சத்திலே தான். கமர்கட், பொறி,கடலை, பீடி சுருட்டு எல்லாம் நிறைய வியாபாரம் ஆகும். எல்லாரும் தரையிலே உட்கார்ந்து பார்த்து ஒன்ஸ் மோர் கத்துவா. எந்த வீட்டிலேயும் வாஷிங் மெஷின், குழா, பேன், FAN ,பிரிட்ஜ், FRIDGE , ரேடியோ, டிவி மிக்ஸி GAS அடுப்பு மோட்டார் சைக்கிள், கார், கிடையாத காலம். சுகமாக வாழ்ந்தது மட்டும் தான் இப்போ ஞாபகம் இருக்கு. வாழ்க்கைலே எந்த இன்பமும் குறையல.
சாப்பாடு பக்ஷணம் தோசை, சட்னி, வடை, அடை எதுவுமே குறைவில்லாம கிடைச்சுது. ரெடிமேட் டிரஸ் தெரியாது. துணி கஜத்திலே வாங்கி சத்தார் தைச்சுக்கொடுக்கிற நிஜார், சட்டை தான். வருஷத் துக்கு ஒன்னு. தீவுளிக்கு தீவுளி. மின்சாரத்தை எதிர் பார்க்கலே. இப்படியே வருஷக்கணக்காக வாழ்ந்தவன் இப்போ ஒரு நிமிஷம் கரண்ட் இல்லமே இருக்க முடியலே. வாழ்க்கை எதனாலே இப்படி மாறிடுத்து? என் குணம் என் தேவை மாறினாதுனாலே தானே. இன்னும் சிலர் ரிஷி மாதிரி அப்படியே இதெல்லாம் இல்லாம இருக்கா தெரியுமா உனக்கு?
மாற்றம் மனசிலே தான் இருக்கு. இப்படி மாறி மாறி போயிண்டே இருக்கும்போது எது முடிவு? யாருக்குமே தெரியாது.
ஆத்தங் கரையிலே கட்டை அடுக்கி சிதை வைச்சு விரட்டி அடுக்கி எரிச்ச உடம்பு இப்போ முன் கூட்டி ரிஜிஸ்டர் பண்ணி வரிசையிலே சொன்ன நேரத்தி லே தான் மின்சாரத்தில் எரிக்க காத்திருக் கிறோம். ஒரு மணி நேரத்திலே அப்பா அம்மாவை, தாத்தா பாட்டியை சாம்பலா கையிலே டப்பாலே எடுத்துண்டு வரலாம். மறுநாள் காலையில் அல்ல, அன்னிக்கே, கையிலே எலும்பு குத்தாமல் பால் தெளிச்சு, மணிக் கட்டில் கண்டங்கத்திரிக்கா கட்டிண்டு மந்திரம் சொல்லிண்டு , கொஞ்சம் பெரிய எலும்பா நாலு அஞ்சு பொறுக்கி கடலில் கரைச்ச சஞ்சயனம் இப்போ வேறே லெவல்.
வாசல்லே ஹெர்குலஸ், ராலி, பிலிப்ஸ் சைக்கிள் நிக்கும். மணி அடிச்சுண்டு ரோடுலே மிதிச்சுண்டு போனவன். திருவல்லிக்கேணியிலேருந்து கூடுவாஞ் சேரி வரை ராலி சைக்கிள் மிதிச்சுண்டு போய்ட்டு வந்திருக்கிறேன். கூடு வாஞ்சேரிலே ரெண்டு கிரவுண்ட் அறுநூறு ரூபாக்கு என் தலைலே கட்டினா . அங்கே ஸ்டேஷன், ஹாஸ்பிடல், காலேஜ் ஸ்கூல் எல்லாம் இதோ வருதுன்னு சொல்லி தான் ஏமாந்தேன். நாப்பது வருஷத்துக்கு அப்புறம் வந்த விலைக்கு பணம் கிடைச்சதிலே பெருமூச்சு விட்டேன். இப்போ அந்த நிலம் இருந்தா கோடிக்கு மேலே வருமா. எனக்கு கவலையே இல்லை. வந்ததே போதும் என்கிறதுலே இருக்கிற சந்தோஷம் இன்னும் எதிர்பார்ப்பதில் கிடைக்காதுன்னுதெரியும். மணி கடையிலே வாடகைக்கு 40 பேஜ் நோ ட்டிலே பென்சில்லே பேர் எழுதிண்டு டைம் போட்டு வாடகை சைக்கிள் கொடுப்பான். ஒரு மணிக்கு ஒரு அணா . இப்போ சைக்கிள் லே ஏற பயமா இருக்கு. கீழே விழுந்துடு வோமோன்னு ஒரு பயம். குறுக்கே BAR வச்ச சைக்கி ளிலேயே மூணு நாலு பேருடன் போனவன் நான் தானே. இப்போ லேடிஸ் சைக்கிள்லே ஏறவே பயம்.
உதைச்சு ஸ்டார்ட் பண்ற மோட்டார் சைக்கிளை விட உதைக்காம வலது கட்டை விரல் பிரெஸ் பண்ணி னாலே டுர்ர்ர் என்று ஓடும் கியர்லெஸ் ஸ்கூட்டர், ஸ்கூட்டி, ரொம்ப சௌகர்யமாக ஆயிடுத்து. ஆளில்லாமே தூக்கிண்டு போற பல்லக்கு. என்னை மாதிரி கிழடுக்கு கம்பு ஊன்றிண்டு நடக்க வேண்டாமே.
வெயில் காலத்திலே ஈரத்துணி பிழிந்து மேலே போட்டுண்டு பனை ஓலை விசிறி யில் சில்லுனு கிடைச்ச சந்தோஷத்தை விட கூடவே இப்போ ஒய்ங் னு ஒரு மெல்லிய ஷட்ஜம சப்தத்தில் கதவெல்லாம் சாத்திண்டு AC குடுக்கிற சுகம் வேறே தினுசு. அதுக்கு காசு வேண்டாம். இதுக்கு ரொம்பவே ஜாஸ்தி.
இப்ப இன்னும் ஒரு படி ஜாஸ்தி மேலே போயாச்சு. வீட்டிலே மிக்சி கிரைண்டர், காஸ், ஓவன், பிரிஜ் எல்லாம் இருந்தும் போன் பண்ணினா சாப்பாடு வீட்டுக்கு வந்துடுறது. காசு ஜாஸ்தி தான். யாரைப் பாத்தாலும் ஐந்து லக்கத்திலே சம்பளம் என்கிறான். மூணு லக்கத்தில் சம்பளம் வாங்கின நான் தான் ராஜா அப்போ.. அந்த சுகம் இப்போ இல்லையே?
இப்படி எல்லாம் புத்தியை மாத்தி அதை வசதின்னு நிச்சய சந்தோஷ பட வைக்கிறியே இதை தான் ”மாயை” என்கிறதா ? கலிகால மாயையா இது.”
அது சரி இதெல்லாம் வசதியா கொடுத்த கிருஷ்ணா, ஏண்டா நிம்மதியை , மன நிறைவை, போதும் என்கிற மனசை மட்டும் புடுங்கி எடுத்துண்டு போயிட்டே?. எல்லார் மனசுலேயும் உன்னால புகுந்து அதை நொடி யிலே கொடுக்க முடியுமே. செய்யேன்!
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



