
கருட புராணம். நங்கநல்லூர் J K SIVAN
ஒரு வருட அலைச்சல் பசி தாகம்.
சிலர் சந்தேகம் இன்னும் தீரவில்லை . ஒருவன் இறந்துவிட்டால் அவன் உடலை அடுத்த நாளுக்குள் புதைத்தோ,எரித்தோ விடுகிறார்களே, அப்படியென்றால் அப்புறம் உடம்பு ஏது ? அது தான் இல்லையே.. அதற்கு எப்படி தண்டனை கொடுக்க முடியும்?சித்ரவதை செய்யமுடியும்? எதை எமதூதர்கள் பிடித்துக் கொண்டு போகிறார்கள்? கேள்வியிலேயே பதில் இருக்கிறது. அழிந்து எரிந்து போன ஸ்தூல சரீரத் த்தைப் போல கண்ணுக்குத் தெரியாத சூக்ஷ்ம சரீரம் ஒன்று நமக்குள்ளே இருக்கிறது. ஒரு கட்டை விரல் அளவு தான் அதன் உருவம். அதைத் தான் பிடித்துக் கொண்டு போய் இத்தனை தண்டனை. கர்ம பலனுக்குத் தக்கவாறு.
இறந்து போனதும் முதல் 12 நாள் அந்த வீட்டிலேயே சுற்றிக்கொண்டு இருக்கும். அதைத்தான் தீட்டு என்கிறார்கள். சாஸ்த்ர பிரகாரம் அதற்கு உணவு தண்ணீர் கொடுக்க தான் மந்திரங்கள். ஒருவருஷம் வரை இறந்தவனின் மகனுக்கு கடமை யிருக்கிறது. அப்புறம் மாத, அமாவாசை, கிரஹண மஹாளய தர்ப்பணங்கள் வருஷ திதி ஸ்ராத்தங்கள் என்று பித்ருக்கடன் தொடர்கிறது.
இறந்த பின் 17வது நாள் அந்த ஜீவன் பிரயாணம் செய்வதிலிருந்து நடப்பதிலிருந்து தொடர்கிறேன். எமதூதர்கள் பிடியில் உள்ள சூக்ஷ்ம சரீரம் காற்றில் பறக்கிறது. 18 வது நாள் ஸௌம்யா எனும் நகரத்தை அடைகிறது. அங்கே இதற்கு முன் இறந்த வர்களின் சூக்ஷ்ம சரீரங்கள் உண்டு. அங்கே புஷ்பபத்ரா நதியும் அத்தி மரங்களும் உறவுகள் கண்ணில் படுகிறது. அங்கே சற்று சூக்ஷ்ம சரீர ஜீவன் ஓய்வெடுக்கிறான். அவனுக்கு யமதூதர்கள் காவல். பூலோகத்தில் அவனோடு வாழ்ந்த மனைவி மக்கள் ஞாபகம் வருகிறது. சம்பாதித்த செல்வம் எங்கே? செல்லம் கொடுத்த குழந்தைகள் எங்கே?ஆசை மனைவி எங்கே? சொத்து எங்கே? உற்றார் உறவினர் நண்பர்கள் எங்கே?
”முட்டாளே தினை விதைத்தவன் தினை தான் அறுக்க முடியும். உன் கர்ம வினைப்பயனை அனுபவி. கட்டுச்சோறு தண்ணீர் தீர்ந்து விட்ட பிரயாணி பாலைவனத்தில் தவிப்பது போல் ஜீவன் தடுமாறுகிறான் . எமதூதர்கள் அடி பின்னுகிறார்கள் அவனை. கயிறால் பிணைத்து இழுக்கிறார்கள். ஓடுகிறான். அவனுக்கு ஒரே உணவு மாசாமாசம் அவன் பிள்ளைகள் பேரன்கள் இடும் எள்ளும் நீரும் பிண்டமும் தான். அங்கிருந்து ஓடி அடுத்த ஊர் சௌரிபுராவை அடைகிறான். அந்த ஊர் ராஜா ஜங்கமன். யமனைப் போலவே காட்சி அளிப்பவன். பார்த்தாலே நடுங்குகிறான் ஜீவன். அவனுக்கு அவன் மகன்கள் இட்ட பிண்டம் எள் ஜலம் உணவாகிறது. அங்கிருந்து மேலே பிரயாணம் தொடர்கிறது.
நாகேந்திரபுவனம் அடுத்த ஊர். கருமை நிறம் கொண்ட காடுகள் காற்றுகள் பேய்போல் ஆடும் மரங்கள். பயந்து அலறுகிறான் ஜீவன். இழுத்துச் செல்லப்படுவதால் வலியில் அலறுகிறான். அழுகிறான். ரெண்டு மாசம் இப்படி அவஸ்தை. அப்புறம் அதை விட்டு நகர்கிறான். உறவுகள் கொடுத்த எள்ளும் தண்ணீரும் பிண்டமும் வஸ்திரம் கிடைக்கிறது. அதை அனுபவிக்கிறான்.
அவனைக் கட்டியிருக்கும் கயிற்றை இழுத்து எம தூதர்கள் அவனை மேலே நகர வைக்கிறார்கள் . மூன்று மாத காலம் ஓடி விட்டது அல்லவா. இப்போது ஜீவன் கந்தர்வர்கள் வாழும் நகரத்தை அடைந்து விட்டான். அங்கேயும் பிண்டங்கள் கிடைத்து கொஞ்சம் இளைப்பாறுகிறான். எங்கே எப்படி ஒய்வு கிடைக்கும்? அடியும் உதையும் தொடர இழுத்துச் செல்லப் படுகிறான். அடுத்த மாதம் சைலாகம நகரம் எனும் இடத்தை அடைகிறான். ஐயோ, இங்கே கல்மழை தொப் தொப் என்று அவன் மேலே விடாமல் மேலே இருந்து விழுகிறது.
நான்காவது மாத பிண்டம் கிடைத்தபின் சற்று தெம்பு. இதோ இழுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள் அடுத்த இடத்துக்கு. ஐந்தாம் மாத பிண்டம் கிடைத்த இடம் க்ரௌஞ்ச நகரம். ஐந்தாம் மாத பிண்டம் கிடைத்து மேலே நகர்கிறான். இதோ க்ரூரபுரம் வந்துவிட்டதே. இங்கே என்ன நடக்குமோ? ஐந்தரை மாத காலம் தான பிண்டங்கள் இதுவரை ஜீவன் அனுபவித்தது. ஆறாம் மாதம் காரியங்கள் பூமியில் அவன் மகன் சாஸ்த்ரோக்தமாக பண்ணுகிறான். அப்பாடா, என் மகனே, என்று வாழ்த்தி அவனளித்த பிண்டங்களை உண்கிறான். தண்ணீர் கிடைத்து குடிக்கிறான்.
‘என்ன சௌகர்யமாக உட்கார்ந்துவிட்டாய் எழுந்து ஓடு’…. யமதூதர்கள் அடியோடு கயிற்றால் இழுக்கப்பட்டு மேலே ஓடுகிறான். இன்னொரு நகரம் வந்துவிட்டது. இதற்கு பெயர் சித்ரபவனம். அதன் ராஜா விசித்ரன். யமதர்மராஜனின் தம்பி. பருத்த ஆகிருதியான அவன் உருவத்தை பார்த்து ஜீவன் நடுங்குகிறான். பயந்து ஓடுகிறான். யார் இவர்கள்? மீன்பிடிக்கும் ஓடக்காரர்கள்.
”எதிரே பார்த்தாயா? வைதரணி ஆறு. நீ நல்லவனாக இருந்தால், நல்ல கர்மங்கள் புரிந்து பலன் கொண்டவனாக இருந்தால் எங்கள் படகில் இடம் உண்டு. அக்கரை செல்லலாம். கோ தானம் பண்ணினவனா நீ? அல்லது வெட்டி விற்றவனா? தின்றவனா? நீ கோ தானம் பண்ணவில்லையே. மற்றதெல்லாம் பண்ணினவன்….அல்லவா?’ ஜீவன் ஓவென்று கதறுகிறான். நீரில் பிடித்து தள்ளப்பட்டு முழுகுகிறான். மீனுக்கு தூண்டில் போல் அவன் வாயில் தூண்டில் முனையை அவன் வாய் உதடுகளில் துளைத்து, பொருத்தி அவனை நீரில் இழுத்துக்கொண்டு வானில் பறக்கிறார்கள் யமதூதர்கள்.ஆறாம் மாத பிண்டம் தான் அவன் கடைசியாக உண்டது. வாயில் தூண்டில் முள். பிண்டம் கிடைத்தாலும் எப்படி உண்பது?ஏழாவது மாதம் நெருங்கி விட்டது. அவன் இப்போது பஹ்வாபத நகரத்தில் இருக்கிறான். ஏழாம் மாத பிண்டம் எள்ளும் நீரும் கிடைக்கிறது. மகிழ்கிறான். இதோ மேலே பயணம் தொடர்கிறது. துக்கவாடா நகரம் வந்துவிட்டது. காற்றில் பறக்கிறான் சூக்ஷ்ம சரீர ஜீவன்.
”கருடா நான் சொல்வதெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டார் ஸ்ரீமந் நாராயணன்.”பிரபு நான் என்ன சொல்வது என்றே தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறேன்”. என்றான் கருடன்.
எட்டு மாதங்கள் ஓடிவிட்டது. எட்டு மாச பிண்டங்களும் அவனுக்கு பிள்ளைகள் மூலம் கிடைத்துவிட்டது. மேலே மேலே நகர்ந்துகொண்டே போகிறான். ஒன்பதாவது மாத கடைசி . நானாக்ரந்தா நகரம் வந்துவிட்டான் ஜீவன். எங்கும் அவனைப் பல ஜீவன்கள் அவஸ்தையில் அலறி துடிப்பதை பார்க்கிறான். ஓவென அவனும் அழுகிறான். இழுத்துச் செல்லப்பட்டு அழுதுகொண்டே பிரயாணம். பத்தாவது மாதம் சுதாப்தபவனம் என்னும் நகரம் வந்து சேர்கிறான். தானங்கள், பிண்டங்கள் எள்ளும் நீரும் வஸ்திரமும் அவன் பிள்ளைகள் அளிப்பதன் பலனாக உணவாக உண்கிறான். பதினோரு மாதங்கள் முடிந்துவிட்டதா. என்ன? ரௌத்ரம் என்னும் நகரமா நரகமா? அங்கே இப்போது ஜீவன் இருக்கிறான்.
பதினோராவது மாத பிண்டம் நீர் கிடைத்தது. மேலே பயணித்து 11வது மாத கடைசியில் பயோவர்ஷணம் எனும் நகரத்துக்கு வந்து சேர்கிறான். இடியும் மின்னலும் வாட்ட கஷ்டங்கள் அனுபவித்ததவாறு அவன் வ்ருஷாப்தீக ஸ்ராத்தத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். வருஷம் முடிந்து பிண்டம் கிடைத்து சித்தத்தியா எனும் நகரம் அடைகிறான். ஹிமாலய பனி, குளிரை விட நூறு மடங்கு அதிக குளிரில் நடுங்குகிறான். பசி களைப்பு. எல்லா திசைகளிலும் நோக்குகிறான். என் உறவு யாராவது கண்ணில் பட மாட்டார்களா? என் துன்பம் தீர்க்க மாட்டார்களா ?
எமதூதர்கள் சும்மா இருப்பார்களா? ”நீ என்ன நல்ல காரியம் செய்தாய் உனக்கு உதவி கிட்ட? உன் பிள்ளைகள் உனக்கு வருஷாப் தீக பிண்டம் போட்டதே உனக்கு அதிர்ஷ்டம்”
ஒரு வருஷகாலம் முடிந்தபின் எம பட்டணம் அருகே வந்துவிட்டான். இந்த நகரத்தின் பெயர் பஹு பீதி. (ரொம்ப பயங்கரம், பயம் ) இனி தண்டனைகள் ஆரம்பம்.
தொடரும்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


