HINDUS’ BELIEF – J K SIVAN

ஹிந்துவின்  நம்பிக்கை  –  நங்கநல்லூர் J K  SIVAN
உயிரோடு இருக்கும்போது  எத்தனையோ  பழக்கங்கள், வழக்கங்கள், கடன்கள், பண்டிகைகள், விழாக்கள், காரியங்கள்நடக்கிறது.  ஆனால் உடலை விட்டு ப்ராணன்  பிரிந்தபின்  கடைசியாக  உடலுக்கு  செய்யும் ஒரே  கடன்  ஈமக்கடன். அந்திம ஸம்ஸ்காரம். இது மதத்துக்கு மதம்  வேறு படும்,
உடல்  புதைப்பதற்கு, எரிப்பதற்கு, கழுகுக்கு  போடுவதற்கு   முன்  அந்தந்த மதத்தின்  கொள்கைக் கேற்ப, பின்பற்றப்படுகிறது.
ஹிந்துவைப் பொறுத்தவரை  இறந்தவனுக்கு அடுத்த பிறவி உண்டு, இன்னொரு உலகம், வாழ்க்கை  உண்டு. அது உயர்வானது.
எவனும் மரணத்தை விரும்புவதில்லை. என்றும்  இருக்கவே ஆசைப்படுவான். ஆனால் அது சாத்தியமில்லை. அதற்கு லஞ்சம் கொடுக்க முடியாது, சிபாரிசு செல்லாது. அதிகாரம் நடக்காது.
ஹிந்துவைப் பொறுத்தவரை  அவன் உடலில் இருந்து பிரிந்த ஆத்மா  அழிவற்றது. இன்னொரு உடலில் அவன் வேறு பெயரில், உருவத்தில் தோன்றுவான். அவன் கர்ம வினைப்பயனாக அவனது  அடுத்த  பிறவி  நேரும்.விளையும்.ஜீவன் ஒரு தடவை பிரிந்தால் அதே உடலை மீண்டும் அணுகாது.
ஹிந்துவுக்கு அக்னி, வாயு, ஜலம், ஆகாசம், மண், புனிதமானது. இறந்தபின் பதினோரு நாள் அவன் ஜீவன்  அந்திம  கார்யங்கள் முடிந்த பின் வேறு பிரயாணம் துவங்குகிறது.
”அக்னி தேவா, இந்தா,  இதை உடலை எடுத்துக்கொண்டு அதை புனிதப்படுத்தி, அதில் உறைந்திருந்த ஜீவனை சாந்தி அடையச் செய்” என்று  ஸூக்ஷ்ம சரீரத்தோடு அந்த ஜீவனை அடுத்த உடலுக்கு அனுப்புவது தான் ஈமக்கடன் மந்திரம்.
எகிப்தியர்கள் நம்பிக்கை வேறே மாதிரி.  இறந்த பிறகும் உடலுக்கு சகல மரியாதை, உதவி, உணவு, பணியாளர்கள், தாகத்திற்கு தண்ணீர்  எல்லாம் வைத்து உடலை வெகுகாலம்  இருக்க பக்குவம் செய்து  பாதுகாத்ததை தான்  பிரமிடுகளில் புதைத்து வைத்ததை சரித்திரம் வாயிலாக நாம் அறிகிறோம்.
இஸ்லாமியர்கள்  இறந்தபின்  உடலை அல்லாஹ்  மீண்டும் உயிரூட்டி,அந்த ஜீவனுக்கு  அவன் செய்த காரியங்களின் பலனாக தண்டனையோ பரிசோ கொடுத்து ஸ்வர்கம் அனுப்புகிறார் என்ற நம்பிக்கையால்  எரிக்கும் வழக்கம் இல்லை. எரிப்பது அல்லாஹ்வை அவமதிப்பதாகும் என்ற  கோட்பாடு.   மெக்கா மதீனா  அரேபிய நாடுகளில் பாலைவன பூமியாக இருப்பதால்  தாவரங்கள் இன்மையால் எரிக்க மரம் இல்லாததால் புதைக்கும் வழக்கம் மட்டுமே  இருந்தது  என்றும் சொல்கிறார்கள். அவரவர் நம்பிக்கை மதிக்கத் தக்கது.
மரணம் வயோதிகத்தால் மட்டும் நேர்வதில்லை, அகால மரணத்துக்கு  எத்தனையோ காரணங்கள் உள்ளது.  வியாதி, விபத்து காரணமான அகால மரணத்தால்  இறந்த உடலில் இருந்து எண்ணற்ற கிருமிகள் வெளியே பரவி  இறந்தவன் வியாதி, நோயைப் பரப்பாமல் எரிப்பது ஒரு விதத்தில் நல்லது என்கிறார்கள். இதனால் தான் கொரோனாவில் மறைந்த எண்ணற்ற  உறவினர்கள் நண்பர்கள் உடலைக் கூட  கொடுக்கவில்லை.
ஹிந்துவைப்  பொறுத்தவரை  பஞ்ச பூதங்களில் இருந்து தோன்றியவன் கடைசியில் அதையே அடைய வேண்டும் என்று நம்புபவன். ஆகவே உடலை எரித்து அதன் சாம்பலை  புனித நீர், கடல் ஆகியவற்றில்  கரைத்து கலந்து விடுகிறான்.
உடல் இருக்கும் வரை அதற்குள் உறைந்திருந்த  ஜீவனுக்கு ஊரார் உற்றார் பெற்றோர்  மீதுள்ள பந்த பாசம் தொடருந்து இருக்கும் என்பதாலும்  உடலை அழிக்க எரிப்பது  ஒரு  காரணம்  என்ற நம்பிக்கை  ஹிந்துவுக்கு  உண்டு.
பழங்காலத்தில் நதிக்கரைகளில் தான் ஸ்மஸானம் நடைபெற்றது.காலப்போக்கில்  கட்டையை வைத்து எரிப்பது  நின்று கரன்ட்டில் நிமிஷ நேரத்தில் சாம்பலாக்கும் முறை அமுலுக்கு வந்துவிட்டது.   காசியில் இறந்தால் மோக்ஷம் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது.  ஒவ்வொரு  இறந்தவன் காதிலும்  காசி விஸ்வநாதர் தாரக மந்திரம் உபதேசித்து மோக்ஷம் அனுப்புகிறார் என்ற நம்பிக்கை உள்ளதால் ஒவ்வொரு ஹிந்துவின்  மனதிலும்  காசி-மரண ஆசை  இன்னும் எத்தனையோ  பேர் மனதில் இருக்கிறதே.
 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;