

அருட்புனல் ராமகிருஷ்ண பரமஹம்சர் – நங்கநல்லூர் ஜே.கே. சிவன்
வினோத அர்ச்சகர்
ராமகிருஷ்ண பரம ஹம்சருக்கு ஒரு அண்ணா. அவர் ஒரு பண்டிதர். சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் தெரிந்த அர்ச்சகர். தம்பியைத் தன்னோடு கல்கத்தாவுக்கு அழைத்துக் கொண்டு போனார்.அங்கே தன்னிடம் கல்வி கற்கட்டும் என்று எண்ணம்.
ராமகிருஷ்ணருக்கு பள்ளிப்படிப்பு என்பதே உலக வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க, சுகமாக வாழ, என்பதற்கு தான் என்று புரிந்து விட்டது. அவர் மனது முழுதும் ஆன்மீக சிந்தனைகள் நிரம்பி இருந்தன. அப்பா இல்லாத குடும்பம் வறுமையில் வாடியது. ராமகிருஷ்ணன் இனி தனக்குத் தானே வாழ்ந்து கொள்ளவேண்டும் என்ற நிலைமை. கல்கத்தாவில் ஒரு சிறிய கோவிலில் அர்ச்சகராக வேலை கிடைத்தது.
பெரிய நகரங்களில் சில கோவில்கள் பிரபுக்களால் கட்டப்பட்டு அவர்கள் சொந்த பராமரிப்பில் இருந்த காலம். கிருஷ்ணன் கோவில், ராமர் கோவில், சிவன் கோவில், அம்பாள் கோவில், காளி கோவில், பிள்ளையார், முருகன், ஹனுமார், பெருமாள், என்று பல தெய்வங்களுக்கு தனித்தனியாக அவரவர் விருப்பப் படி கோவில்கள் நிர்மாணித்து பக்தர்கள் பலர் வழிபட்டார்கள்.
ஹிந்துக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு சிறிய அறையோ, அலமாரியோ, மாடப்பிறையோ ஏதோ ஒன்றில் ஒரு இஷ்ட தெய்வ விக்ரஹம் வைத்து, விளக்கேற்றி, வஸ்திரம் புஷ்பங்கள் சாத்தி, ஸ்லோகம், ஸ்தோத்ரங்கள் பாராயணம் பண்ணி, சுத்தமாக உணவு தயாரித்து நைவேத்யம் பண்ணி, கற்பூர தீப ஹாரத்தி காட்டி வணங் கி விட்டு அப்புறம் சாப்பிடும் வழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு ஹிந்துவின் வீடும் ஒரு கோவில்.
கோவிலில் ஸ்வாமியை அர்ச்சனை செய்து அலங்கரித்து ஸ்தோத்ரம் செய்வது கூட காசு சம்பாதிக்கும் ஒரு உத்யோகமா? என்ற எண்ணம் சிறுவன் ராமகிருஷ்ணன் மனதில் உறுத்தியது. அக்காலத்தில் தெருவில் தினமும் நிறைய பஜனை பாடல்கள் கூட்டமாக பாடிக்கொண்டு போவார்கள். ஒவ்வொரு மனிதனும் பகவானை அறிந்து கொள்ளவேண்டும், உணரவேண்டும், பார்க்க வேண்டும், தொட வேண்டும், அவரோடு பேசவேண்டும் என்பதே ஹிந்து பக்தி. ரிஷிகள் இப்படிப்பட்ட அனுபவம் பெற்ற பிறகே வேத உபநிஷதங் களை அளித்திருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் இந்த பிறவியிலேயே மோக்ஷம் அடைய வழி உண்டு என்று காட்டியவர்கள் நமது ரிஷிகள், மஹான்கள்.
ராமகிருஷ்ணன் அர்ச்சகராக சேர்ந்த கோவிலில் அம்பாள் தான் மூல தெய்வம். காலை மாலை இரு வேளைகளிலும் ராமகிருஷ்ணன் அவளை வழிபட்டு பூஜை பண்ணுவான். இந்த அம்பாள் , காளி , வெறும் கற்சிலையா அல்லது அதையும் தாண்டி ஏதோ ஒன்றா? இந்த பிரபஞ்சத்தில் அம்மா, அம்பாள் என்று ஒருவள் உண்டா? அவள் தான் பிரபஞ்சத்தை காப்பவளா? மதம் என்கிறோமே அது உண்மையா? நான் அவளை பார்க்க முடியுமா? இந்த எண்ணங்கள் ராமகிருஷ்ணன் மனதில் முளைவிட்டு வளர்ந்தன. பல ரிஷிகள், முனிவர்கள், மஹான்கள் பல காலம் காடுகளில் குகைகளில் தவமிருந்து கடவுளைத் தேடி தரிசனம் பெற்றிருக்கிறார்கள்.
வாழ்க்கையே ஒரு அற்ப, சொற்ப கால சமாசாரம். செல்வந்தன், ராஜா, பிச்சைக்காரன் யாராயிருந்தாலும் இதில் வேறுபாடு கிடையாது. உடல் ஆரோக்யமாக இருந்தாலும் சரி, வியாதியஸ்தனாக இருந்தாலும் சரி, நல்லவன் கெட்டவன், யாராக இருந்தாலும் ஒன்று தான். இருக்கும் வரை அதை ஆனந்தமாக வாழ்பவன் அதிர்ஷ்டக்காரன். இதில் கடவுள் என்ற ஒன்று இருப்பதை உணர்ந்தால் கடவுளை அனுபவிக்க முடியும். கடவுளைத் தேடுபவன் அடைவான்.
கல்கத்தாவில் ஒரு கமார்புகுர் கிராம சிறுவனாக இருந்த ராமாக்ரிஷ்ணன் இவ்வாறு கல்கத்தா
பவதாரிணி கோவிலில் பூசாரியானார். மனம் அந்த காளியையே சுற்றி சுற்றி வந்தது. அவளையே மனமார தேடி ”நீ என் முன் வா, உன்னைக் காண வேண்டும்” என்று அழுதார் , அவளோடு பேசினார்.
”அம்மா , நீ இருப்பது உண்மையா? வெறும் ஸ்தோத்
ரத்தில் மட்டும் தான் நீ இருக்கிறாயா? ”
அவர் புத்தகத்தை நம்பி இல்லை, முழு மனதோடு அந்த விக்ரஹத்தை அவளாகவே பார்த்தார். அவர் படிக்காதவராக இருந்தாலும் நம்மைப்போல் மனதில் குப்பையை அடைத்துக் கொள்ளாத பரிசுத்தன். அவளை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்பதிலேயே அவர் மனம் லயித்ததால், வேளா வேளைக்கு மற்றவர்கள் செய்வதுபோல் அவரால் பூஜைகளை, விதி ப்ரஹாரம், செய்ய இயலவில்லை. காளிக்கு நைவேத்தியம் வைப்பதையே கூட மறந்து
விடுவார். சிந்தை பூரா ஒரே எண்ணம். ‘அம்மா, நீ இருப்பது உண்மையா? நீ ஏன் இன்னும் என்னிடம் பேசவில்லை? நீ இருக்கிறாயா, இல்லையா?’
நாம் சில சமயங்களில் எல்லாவற்றையும் வெறுத்து, ”எதுவுமே பிடிக்கவில்லை, சே, என்ன வாழ்க்கை இது?’ என்று சலிப்படைகிறோம் அல்லவா? அது போல் ராமக்ரிஷ்ணரும் அவளைக் காணாத வாழ்க்கை வியர்த்தம் என்ற நிலை அடைந்தார். இருட்டில் தடுமாறும் எனக்கு யாராவது ஒளி காட்டமாட்டார்களா ? அம்மா, ஏனிந்த பாராமுகம்? நீ வரவில்லை என்றால் உன் சார்பில் யாரையாவது அனுப்பேன்? நான் உன்னையே நம்பி வாழும் சிறு குழந்தை அல்லவா, தாயே நீ வா” என்ற ஏக்கம் தான் சதா அவருக்குள்ளே.
ராமக்ரிஷ்ணரால் கோவிலில் பூசாரி வேலை செய்ய முடியவில்லை. கோவிலை விட்டு வெளியேறினார் . அருகே ஒரு மரம் சூழ்ந்த வனம் . அதில் போய் அமர்ந்தார். சூரிய உதயம், அஸ்தமனம் எதுவும் தெரியவில்லை. எப்படி வாழ்கிறோம் என்ற எண்ணமும் இல்லை. அன்ன ஆகாரம் எதுவுமில்லை. யாரோ பார்த்துவிட்டு வாயில் ஏதாவது உணவை அடைத்தால் மிஷின் மாதிரி விழுங்கினார். இரவு பகல் வித்தியாச மில்லாமல் இப்படி இருந்தார் . கோவில் மணி அடித்தால் ”அம்மா, அம்மா, வா” என்று கதறுவார் . எல்லாவற் றையும் உதறித் தள்ளினால் தான் அவள் கிடைப்பாள் என்று நம்பினார். வீடு வாசல் சொந்தம் பந்தம் எல்லாம் துறந்தார். பணத்தைத் தொடவே இல்லை. ஆசை, பேராசை எதுவுமே எதிரி. மனிதன் என்றால் ஆத்மா மட்டும் தான். ஆண் பெண் வித்யாசமற்றது. இதை உணர்ந்தால் அம்மா தெரிவாள் என்று நம்பினார். பெண் உருவம் எல்லாமே அம்மா தான் அவருக்கு. அவளை வேறு எப்படி பார்க்க முடியும் என்னால்?” என்பார் . வாழ்க்கை இவ்வாறே சென்றது.
”இப்படிப்பட்ட உன்னத புருஷர் தான் என் குருநாதர். ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் என்கிறார் சுவாமி விவேகானந்தா.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




