​அன்பெனும் பிடியில் அகப்படும் மலை

 

​அன்பெனும் பிடியில் அகப்படும் மலை.   நங்கநல்லூர்  ஜே .கே.சிவன் 

​லவ்  எனப்படும்  அன்பு மூன்று தினுஸு .   நிறைய  காசு வாங்கிக்கொண்டு  ஒரு கிழவன் இன்னொரு கிழவியை இளம்வயது சிறுசுகளாக  ரெண்டு பெரும்  வேஷம் கட்டிக்கொண்டு  மரங்களை சுற்றி சுற்றி வருவது சினிமாவில்  காதல் எனப்படுகிறது. சும்மா  சுற்றாமல் ஒரு பாடல் ஒலிக்க அவனும் அவளும் பாடுவது போல காட்சியை முட்டாள்களாக நாம் பார்த்து கை  தட்டுகிறோம். வெளி வேஷம், நமக்கு பிடிக்கிறது. இல்லாததை இருப்பதாக நினைத்து சந்தோஷப்படும் அறிவிலிகள். பொய்யை நிஜமென நம்பும் பேதைகள். உண்மையான  பாசமும் நேசமும் கொண்ட வர்கள் தான் காதலர்கள். இது பிரேமை பாவம். (BHAVAM )


​உயர்ந்த பண்புகள், தன்மைகள், அறிவு, ஞானம் கொண்ட பெரியோர்களிடம் நாம் செலுத்தும்  அன்பு ரெண்டாம் வகை.  சிறந்த குணநலன்களைக் கொண்டவர்கள், வாய்மை தவறாதவர்கள், பிறருக்கு உதவும் மனப்பான்மை உடையவர்கள், ஞானிகள், அருளாளர்கள்​, ஆசிரியர்கள்  ஆகியோரிடம் நாம் கொண்டிருக்கும் அன்பு.​ இது மதிப்பும் மரியாதையும் கலந்தது. 

நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நெருங்கிப் பழகுவதால் அவர்களிடமும் நம்மிடமும் ​இயல்பாகவே ஏற்படும் பாசமும் அன்பும் ​ மூன்றாம்  வகை. ​ இது உறவு எனப்படும் பிணைப்பு. 

​ஏதாவது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக,  நமக்கு ஏதேனும் நன்மை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சிலரிடம் நாம் காட்டும் அன்பு​  உண்மையில் துரோகம்.  உதாரணமாக, நமது வியாபாரத்திற்கோ அல்லது வேறு ஏதேனும் முயற்சிக்கோ உதவி செய்வார் என்ற நம்பிக்கையில் ஒரு செல்வந்தரிடம் நாம் அன்பு காட்டலாம். அதுபோல, நமக்கு ஊதியம் வழங்குகிறார் என்பதற்காக நமது முதலாளியிடம் அன்பு காட்டலாம்.​ அது சுயநலம் கலந்தது. எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால்  அதுவே விரோதமாக,கோபமாக மாறக்கூடியது.
​மேலே சொன்ன எதுவுமே  உண்மையான அன்பும் அல்ல; ​ அது நிலையான​தும் இல்லை. 

முதலாளி ​ஒருநாள்  ஏதோ கோபத்தில் நம்மை வேலையிலிருந்து நீக்கிவிட்டால், அவர் மீதுள்ள மரியாதையும் அன்பும் நம்மிடம் குறைந்துவிடும் அல்லது மறைந்துவிடும். நம்முடன் நெருங்கிப் பழகியவர்கள் தொலைதூரத்திற்குச் சென்றுவிட்டாலோ, இறந்துவிட்டாலோ அல்லது அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டாலோ, நாளடைவில் அவர்களை நாம் மறந்துவிட வாய்ப்புள்ளது. அவர்களைப் பிரிந்த ஆரம்பத்தில் நாம் அனுபவித்த துயரம்கூட காலப்போக்கில் மறைந்துவிடும். அது உண்மையான அன்பாக இருந்திருந்தால், அந்தப் பிரிவினால் ஏற்பட்ட துயரமும் என்றும் நிலைத்திருக்க வேண்டு​மல்லவா? அதைக் காணோம். 

ஒரு பெரிய மனிதரிடம் நாம் கொண்டிருக்கும் அன்புகூட நிரந்தரமானதல்ல. அவரிடம் உள்ள உயர்ந்த பண்புகள் குறைந்துவிட்டாலோ, அல்லது நாம் முன்பு நினைத்த அளவிற்கு அவர் சிறந்தவர் அல்ல என்று நமக்குத் தோன்றினாலோ, அவரிடம் நாம் கொண்டிருக்கும் அன்பும் அதற்கேற்பக் குறைந்துவிடும்.

​ஆகவே இந்த  அன்புகளுக்குப் பின்னா​ல் ஏதோ ஒரு காரணமோ, நோக்கமோ மறைந்திருக்கிறது.

 அதனால்தான் அவை நிலையான​தாக, சாஸ்வதமாக இல்லை.  அன்பாக இருப்பதில்லை.

ஒரு பெரிய மனிதரிடம் நாம் அன்பு செலுத்துவதற்குக் காரணம், அவரிடம் சில உயர்ந்த பண்புகள் இருப்பதுதான். அவர்களிடம் நாம் கொண்டிருக்கும் அன்பில்கூட ஒருவித சுயநலம் கலந்திருக்கிறது. அவர்கள் நமது முன்னேற்றத்திற்கு உதவியாக இருப்பார்கள் என்று நாம் கருதுவதால்தான் அவர்களை நேசிக்கிறோம்.
​

​ஓஹோ அப்படியானால்   ஒரு உண்மை இதிலிருந்து  புரிகிறது.  ”தூய அன்பிற்கு எந்தக் காரணமும் தேவையில்லை; எந்த எதிர்பார்ப்பும் கிடையாது.​”ஒருவரிடம் நாம் எப்போது உண்மையான அன்பு கொண்டிருக்கிறோம்​? அவரிடம் நாம் கொண்டிருக்கும் பாசம் என்றும் மாறாமல், குறையாமல் இருக்கும்​  போதுதான் அது உண்மையான அன்பாகும்.​  தாய் தந்தை மேல் பலருக்கு  இப்படிப்பட்ட  அன்பு இன்றும் இருக்கிறது. பகவானிடம் நாம் கொண்டுள்ள  அன்பும் இப்படி பட்டது தான். ஞானிகள்  தாய் தந்தை, அப்பன் அம்மை நீ என்று பகவானை அப்படி தான் கொண்டாடி போற்றி மகிழ்கிறார்கள்.

​பகவானுடன் நாம்  நெருங்கிப் பழக​ முடியாது. அவரிடம் சிறந்த உள்ளார்ந்த பண்புகள் இருப்ப​து நமக்கு தெரியாது. எந்த நன்மையும் செய்யக்கூடியவராக​ இல்லையே, அவரோடு தொடர்பு கொள்ளமுடியவில்லையே என்றால், அவர் யாருக்கும்  எந்தவிதமான சுயநல ஆதாயமும் ​ அளிப்பவரல்ல என்ற  நிலையிலும், அவரிடம் நமது அன்பு மாறாமல் இருந்தால் அதுவே உண்மையான அன்பு.​ அதன் இன்னொரு பெயர்  பக்தி, சரணாகதி.  ”உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்று பாடுவது” 
ஆம்! ஒருவர் மட்டுமே​ இப்படிதான் எல்லோரிடத்தியும் அன்பு கொண்டவராக  இருக்கிறார். அவர்தான் ஈசுவரன். அவரிடம் மட்டுமே இத்தகைய மாசற்ற, காரணமற்ற, எதிர்பார்ப்பற்ற அன்பு இருக்கிறது.​நம்மை பரிபூர்ணமாக  ஒரு காரணமும் இல்லாமல் நேசிப்பவன் பகவான்.
 நமது எல்லாத் தவறுகளையும் மன்னித்து, நம்மைக் காப்பாற்று​ம் பரமேஸ்வரனேஅன்பின் முழு வடிவம்.
அன்பு என்பது எதிர்பார்ப்பதில் இல்லை; பிறரைப் புரிந்துகொண்டு, அவர்களின் குறைகளையும் பொறுத்து, அவர்களை நல்வழிப்படுத்த முயல்வதில்தான் அதன் உண்மையான உயர்வு இருக்கிறது.
 
​நான் சொல்வது ஏதோ அர்த்தமில்லாத உளறலாக தோன்றினால் அது தப்பே இல்லை.  நானும் பல வருஷம் அப்படித்தான் நினைத்தவன். ஆகவே  கொஞ்சம் கொஞ்சமாக  முன்னேற இதெல்லாம் நன்றாக  அமைதியாக தனியாக யோசிக்கவேண்டும். அப்புறம் என்னை திட்டமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;