
நள்ளிரவில் வந்த சுதந்திரம் – நங்கநல்லூர் ஜே .கே. சிவன்
இந்தியாவுக்கு சுதந்திரம் எளிதாக வந்துவிடவில்லை. அதில் அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் ரெண்டுமே நிறைய கலந்து இருக்கிறது.
எண்ணற்ற தேசீய வாதிகள் இந்தியா அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்று ஆரவாரம், போராட்டம் செய்து, வெள்ளைக்கார போலீஸ்காரனிடம் அடிபட்டு, பலர் உயிரிழந்தனர்.
நாடு முழுதும் வெள்ளைக்கார ஆட்சிக்கு எதிர்ப்பு பலமாக துவங்கியது. வெள்ளை அரசாங்கம் கலவரப்பட்டது. அதன் போறாத காலம் ஜெர்மனியில் ஹிட்லர் ரூபத்தில் பெரிதாக வந்த சமயம். ஹிட்லர் இங்கிலாந்தை கபளீகரம் செய்ய திட்டமிட்டு முக்கால்வாசி வெற்றியும் பெறும் வகையில் இருந்தது. இங்கிலாந்தின் மிகப்பெரிய ஆதிக்க காலனி இந்தியா. அதில் அதன் பெரும் படை இந்திய வீரர்களால் ஆனது. அவர்களை விரோதித்துக்கொண்டு எதிரிகளை ஜெயிக்க உடையாது. ஆகவே பிரிட்டிஷ் அரசாங்கம் இறங்கி வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்தது. 1947ல் சுதந்திரம் கொடுக்க தீர்மானித்தது. அப்போது தான் ரெண்டாம் உலக போர் முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக பல நாடுகள் சுதாரித்துக்கொண்டு எழுந்து நிற்க ஆரம்பித்த சமயம். காங்கிரஸ் தலைவராக காந்தி பிரபலமாக இருந்தார்.
உண்மையில் 1947 இந்தியசுதந்திரம் வெள்ளைக்காரனின் ஒரு தந்திரம். பழி வாங்கல் என்று கூட சொல்கிறார்கள். இந்தியாவை மூன்று துண்டாக்கி வலதுபக்கமும் இடதுபக்கமும் இதுவரை ஒன்றாக இருந்த இஸ்லாமியரை தனி நாடாக, பாகிஸ்தானாக அறிவித்து நமக்கு ரெண்டு பக்கமும் கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் என்று பிரிவினை ஏற்படுத்தியது நமது நாட்டின் ஒரு வரலாற்றுப் பேரழிவு. அது தவிர்க்க முடியாத இயற்கையான விளைவு அல்ல. பிரிட்டிஷாரின் பிரித்தாளும் ஆட்சி, முஸ்லிம் லீக்கின் தனிநாட்டுக் கோரிக்கை, காங்கிரஸின் அரசியல் முடிவுகள், தலைவர்களுக் கிடையிலான நம்பிக்கை யின்மை, அவசரமான அதிகார மாற்றம் ஆகிய அனைத்தும் இணைந்து இந்தத் துயரத்தை உருவாக்கின.
1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆனால் அந்தச் சுதந்திரம் ஏராளமான இரத்தக் கறைகளுடன் வந்தது. ஒரு அமைதியான நாட்டை திடீரென்று மூன்றாக பிரித்தால் எத்தனை பேர் வாழ்க்கை பாதிக்கப்படும்? அதுவும் உலகத்திலேயே அதிக ஜனத்தொகை கொண்ட ஒரு நாட்டில்/? சுமார் 2 கோடி மக்கள் தங்கள் வீடு வாசல், சொத்து உறவுகளை எல்லாம் அப்படியேவிட்டு விட்டு அகதிகளாக வெளியேறினர். பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். உயிரிழப்புகளின் துல்லியமான எண்ணிக்கை இன்றும் விவாதத்திற்குரியது. மேற்கே பெரிய மாகாணமான பஞ்சாப், கிழக்கே வங்காளம் ஆகியவை நிற்தாக்ஷண்யமாக துண்டாடப்பட்டன. பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்துக்களும் முஸ்லிம்களும் சீக்கியர்களும் ஒருவருக்கொருவர் எதிரிகளாக வெள்ளைக்கார அரசால் திடீரென்று
மாற்றப்பட்டனர்.பெண்கள் கடத்தப்பட்டனர், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர்; குடும்பங்கள் சிதறின. காஷ்மீர் பிரச்சினை, இந்தியா–பாகிஸ்தான் போர்கள், எல்லைப் பதற்றம் ஆகியவற்றுக்கு விதை போடப்பட்டது. இன்றும் பூதாகாரமாக இந்தியா பாகிஸ்தான் விரோதம், தீவிரவாத பிரச்னை தீரவில்லை.
1940-ல் லாகூரில் முஸ்லிம் லீக் தனி முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளுக்கான அரசியல் கோரிக்கையை முன்னிறுத்தியது. பின்னர் அது பாகிஸ்தான் என்ற தனிநாட்டுக் கோரிக்கையாக வலுப்பெற்றது.
ஆகவே, இந்தியப் பிரிவினை ஆரம்பத்திலிருந்தே தீர்மானிக்கப்பட்ட திட்டம் அல்ல. அரசியல் நிகழ்வுகளின் தொடர்ச்சியில் உருவான முடிவு.
ஆகவே, இந்தியப் பிரிவினை ஆரம்பத்திலிருந்தே தீர்மானிக்கப்பட்ட திட்டம் அல்ல. அரசியல் நிகழ்வுகளின் தொடர்ச்சியில் உருவான முடிவு.
பிரித்தாளும் அரசியலும், பிரிவினையை அவசரமாகச் செயல்படுத்திய விதமும் பிரிட்டிஷாரின் சூழ்ச்சி யில் மிகப்பெரிய பொறுப்பை வெளிப்படுத்துகின்றன.
1857 சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பிறகு பிரிட்டிஷார் இந்தியாவில் தங்களது ஆட்சியைப் பாதுகாப்பதற்காகப் பல்வேறு சமூக, மத, அரசியல் வேறுபாடுகளை அரசியல் நிர்வாகத்தில் பயன்படுத்தினர்.
1909 மிண்டோ–மார்லி சீர்திருத்தத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு தனித்தொகுதி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் மத அடையாளத்தின் அடிப்படையில் அரசியல் பிரதிநிதித்துவம் வலுப்பெற்றது.
1942ல் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் கொண்டு வந்த திட்டம், எதிர்காலத்தில் மாகாணங்கள் இந்திய ஒன்றியத்தில் சேராமல் இருக்கக்கூடிய வாய்ப்பைத் திறந்துவைத்தது.இதன் மூலம் இந்திய ஒற்றுமைக்கு மாற்றான அரசியல் வாய்ப்புகளுக்கு பிரிட்டிஷ் அரசு இடமளித்தது.
1947-ல் பிரிட்டன் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பொருளாதார ரீதியாக பலவீனமடைந்திருந்தது. இந்தியாவில் ஆட்சியைத் தொடர்ந்து நடத்துவது கடினமாகியது. அட்ட்லீ அரசு 1948 ஜூன் மாதத்திற்குள் அதிகாரத்தை மாற்றுவதாக அறிவித்திருந்தது. ஆனால் மவுண்ட்பேட்டன் இந்தியா வந்த பின்னர், 1947 ஆகஸ்ட் மாதத்திலேயே சுதந்திரம் வழங்கும் முடிவுக்கு வந்தார். எல்லைகளை நிர்ணயிக்க ராட்கிளிஃப் தலைமையிலான குழுவுக்கு மிகக் குறுகிய அவகாசமே வழங்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 17 அன்றுதான் எல்லை விவரங்கள் அறிவிக்கப்பட்டன!
இந்திய சுதந்திர விவகாரம் நிர்வாகத் தோல்வி மட்டுமல்ல; மனித உயிர்களின் பாதுகாப்பை போதிய அளவு கருத்தில் கொள்ளாத மிகப்பெரிய அரசியல் தவறு. முதலில் ஹிந்துக்கள் முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்திருந்த இந்தியாவின் சுதந்திரத்துக்கு ஒத்துழைத்து போராடிய ஜின்னா திடீரென்று தனியாக பாகிஸ்தான் என்ற முஸ்லீம் நாடு சுதந்திரமாக இந்தியாவிலிருந்து பிரிய வேண்டும் என்று போராடி இந்தியாவை வெள்ளைக்காரர்கள் சந்தோஷமாக மூன்றாக துண்டித்தார்கள். இது தான் சுதந்திரம்.
கிழக்கே இருந்த பாகிஸ்தான் பின்னால் பங்களா தேஷ் என்ற தனிநாடாக அவர்கள் கையைவிட்டு போய்விட்டாலும் நமக்கு ரெண்டு பக்கமும் வெவ்வேறு நாடுகளாக ஆகிவிட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்த நேரம் இந்தியா ஒரு தனித்துவ நாடாக இல்லை. பல குட்டி குட்டி பெரிய பெரிய ராஜாக்கள் ஆண்ட ராஜ்யங்களாக இருந்தது. ஐம்பதுக்கு மேல். இவற்றை ஒன்றிணைத்த பெருமை ஒரே ஒரு இரும்பு மனிதனுக்கு தான் சொந்தம். சர்தார் வல்லபாய் படேல்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மத அடிப்படையில் இந்தியாவை வெள்ளையர்கள் பிரித்து சுதந்திரம் அளிப்பதை, நாட்டை உடைத்துப் பிரிப்பதை எதிர்த்தார்.அவருடைய இந்திய தேசிய ராணுவத்தில் (INA) இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து போராடினர்.அவருடைய அரசியல் நோக்கம் மத அடிப்படையிலான நாடு அல்ல; சுதந்திரமான, ஒருங்கிணைந்த இந்தியா.1930-களிலும் 1940-களின் தொடக்கத்திலும் அவர் இந்து–முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தினார். முஸ்லிம் லீக்குடனும் இந்து மகாசபையுடனும் அரசியல் சமரசம் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார்.
நமது தேச சுதந்திரத்தின் வரலாற்றை ஆராயும்போது அவற்றுக்கான ஆவணங்களையும் ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.நமது முன்னோர்கள் தவறுகள் செயதிருந்தால் அதன் விளைவால் நேரிட்ட பாடத்தை நாம் இனி ஒருபோதும் தவறு செய்யாமல் கற்றுக்கொள்வதே அவர்களுக்குச் செய்யக்கூடிய உண்மையான மரியாதை.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



