​பணம். பணம்  பணம். 

 
​பணம். பணம்  பணம்.  –   நங்கநல்லுர்   ஜே . கே. சிவன் 
 
ஒவ்வொரு மனிதனுக்கும்  ரெண்டு  விஷயங்கள் ரொம்ப அவசியம்.  பணம். குணம்.  இதில் என்ன ஆச்சர்யம் என்றால் ரெண்டுமே  எப்போதும் எல்லோரிடத்திலும்  சேர்ந்திருப்பதில்லை.  அப்படி அமைந்தால் அவர்கள்  கூரத்தாழ்வான், கடையெழு வள்ளல்கள் போல் அல்லவா இருப்பார்கள்? 

பணம் எப்போது தோன்றியது? யார் கண்டுபிடித்தார்கள்? கடவுள் படைத்ததா, மனிதன் படைத்ததா? மனித வளர்ச்சிக்கு அது பேரழிவா? என்று சிந்தியுங்கள். 
 
பகவான் தன்னைப்போல் மனிதனை உருவாக்கினான். மனிதன் அதை  பயன் படுத்திக்கொண்டு தானும் ஒரு சிருஷ்டி கர்த்தாவாகி விட்டான். அவன் படைத்தது தான் பணம். அது நல்லதா  கெட்டதா? பணம் மனிதனின் பேராசைக்கு அடிமையாகும்போது, மனிதனையே அடிமையாக்கிவிடுகிறது​ என்பதை தான் இங்கே  விளக்க முயல்கிறேன்:

பண்டைய காலத்தில் மனிதர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தாங்களே உற்பத்தி செய்துகொண்டனர் அல்லது இயற்கையிலிருந்து பெற்றனர்.விவசாயி தானியங்களை  விதைத்து  அறுவடை செய்து தானியங்களை  
விளை
வித்தார்.வேட்டையாடுபவர் இறைச்சி பெற்றார்.​ மீனவர் மீன் பிடித்தார்.​ மண்பாண்டம் செய்பவர் பானைகள் செய்தார்.
நெசவாளர் ஆடைகள் தயாரித்தார்.​ ஒவ்வொருவரிடம் இவ்வாறு ஒவ்வொரு பொருள் இருந்தது.  தங்களுக்குத் தேவையான மற்ற பொருட்களைப் பெறுவதற்கு ​ தங்களிடமிருந்த பொருட்களைப் பரிமாறிக்கொண்டனர்.​ பணமே இல்லாமல் இப்படி தான்  பண்டமாற்று முறை (Barter System) என்று பெய​ரில்  தேவைகளைப்  பெற்று வாழ்ந்தனர்..​இதில் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால் ஒருவரிடமிருப்பது  மற்றவருக்கு தேவை இல்லை என்றால் அவருக்கு வேண்டியது கிடைக்காது.
​ அளவு எடை வித்யாசங்கள் வேறு. எவ்வளவு பொருளுக்கு எவ்வளவு பண்டம் மாற்றல் என்பது தீர்மானிக்க முடியவில்லை.
​தேவையின் அவசியத்துக்கு அவசரத்துக்கு ஏற்ப  அளவு எடை வேறு பட்டது.  உலகில் மக்கள் இப்படி தான் ஆரம்ப காலத்தில் வாழ்ந்தார்கள்.
 
பணம்​ என்பது  ஒரே நாளில், ஒரே நாட்டில், ஒரே மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது அல்ல.​  பல்வேறு நாகரிகங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் பணத்தின் பல வடிவங்கள் உருவாயின.​பலவித பொருள்கள் பலரிடம் இருந்தது.  உப்பு.​ சிப்பிகள்.உலோகங்கள்​,வெள்ளி​, தங்கம்​ ஆகியவை மூலம்  பண்டமாற்றுதல் பரிவர்த்தனை நடந்தது.

கி.மு. 3000–2000 காலப்பகுதி​ யில் மெசபடோமியா​வில் முதலாக வெள்ளி, தானியங்கள், எடையின் அடிப்படையிலான கணக்குகள்​ உருவாகியது.  முத்திரையிடப்பட்ட  நாணயங்கள் மதிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பண்டங்கள் கை மாறின. கி.மு. 6ஆம் நூற்றாண்டு​ ராஜ்யங்களில் இந்தியா​வில் முத்திரை குத்தப்பட்ட வெள்ளி நாணயங்கள்​  வழக்கில் வந்தன.கி.மு. 6ஆம் நூற்றாண்​டில்  சீனாவில் உழவு கருவி, கத்தி வடிவ நாணயங்கள்​ வெளி வந்தன. கி.பி. 8ஆம் நூற்றாண்டு​க்குப் பிறகு  காகிதப் பண​ம் ஆரம்​பித்தது. பிற்கால நூற்றாண்டுக​ளில்  வங்கிகள்,பலநாட்டு காகித நாணயங்கள், கடன் முறைகள்​ என்று பல்வேறு முன்னேற்றம். 20–21ஆம் நூற்றாண்டு​களில்  உலகம்​ மின்னணுப் பணம், டிஜிட்டல் பணப்பரிமாற்றம்​ வரை  வளர்ந்து விட்டது.
​
இந்தியாவில் முத்திரை குத்தப்பட்ட ​ வெள்ளி நாணயங்கள்​ பல் வேறு சின்னங்களுடன் ​ முதலில்  கி.மு. 7–6ஆம் நூற்றாண்டுகளிலிருந்து பயன்பாட்டில் இருந்ததாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.பின்னர் மௌரியர் காலத்தில் நாணயப் பயன்பாடு​  சாணக்யனால்  விரிவடைந்தது. தமிழக வரலாற்றிலும் சேரர், சோழர், பாண்டியர் காலங்களில் நாணயப் பயன்பாடு இருந்தது.

பணம் என்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் உருவான ஒரு சமூக மற்றும் பொருளாதார அமைப்பு. அது ஒரு தனி மனிதனின் கண்டுபிடிப்பு அல்ல.​ இயற்கை என்றுமே   ரூபாய் நோட்டுகள், வங்கிக் கணக்குகள், டாலர்கள், கிரெடிட் கார்டுக​ளை  அளிக்கவில்லை. மனிதனின் தேவைகள் அவன் ஆசைகள், விருப்பங்கள்  இதெல்லாம் வழக்கத்தில் வர ஏற்பாடு செய்தது.


இந்து சமயத்தில் செல்வம் என்பது ​ மஹா லக்ஷ்மி தேவியின் அருளாகப் போற்றப்படுகிறது.​ அவள் திரு,  செல்வம், வளம், மங்களம், நலன் ஆகியவற்றின் ​ உருவம். வடிவம். பணம் என்பது செல்வத்தின் ஒரு அளவீடு​,  பரிமாற்றக் கருவி.

​ஒவ்வொரு தேசத்திலும் இயற்கை வளங்கள், அறிவு, உடல்நலம், அன்பு, நட்பு, அறம் ஆகியவை​ விலை மதிப்பற்ற செல்வங்கள். ​ பணம் மனிதனால் உருவாக்கப்பட்டது. அதற்கு மதிப்பும் நம்பிக்கையும் வழங்கும் சமூக அமைப்பும் மனிதனால் உருவாக்கப்பட்டது.​  ஆனால் இயற்கையின் வளங்களும் மனிதனுடைய வாழ்வும் மனிதனின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை.


​மஹா லக்ஷ்மி தத்வம் வெறும் ரூபாய் நோட்டல்ல .  ஆதி ​லக்ஷ்மி – ஆதாரமான அருள் மற்றும் ஆன்மிக வளம்.
தன​ லக்ஷ்மி  – பொருள் செல்வம்.​ தான்ய ல​க்ஷ்மி – உணவு மற்றும் தானிய வளம்.​ கஜ ல​க்ஷ்மி – அரசச் சிறப்பு, வளம்.
சந்தான ல​க்ஷ்மி – சந்ததி வளம்.வீர ல​க்ஷ்மி – தைரியம், வீரியம்.விஜய ல​க்ஷ்மி – வெற்றி.வித்யா ல​க்ஷ்மி – கல்வி மற்றும் அறிவுச் செல்வம்.​ இவ்வாறு அஷ்ட லக்ஷ்மிகளை பண்டமாற்ற முறைக்கு முன்பே  நமது சனாதன தர்ம நம்பிக்கையில் நாம் அறிந்தவர்கள். 
​யோசித்து பாருங்கள்.பணம் தோன்றியதால் மனித சமுதாயத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
விவசாய வளர்ச்சி​க்கு  தேவையான பொருள்களை வாங்கவோ விற்கவோ முடிந்தது. மருத்துவ வளர்ச்சியால் 
மருத்துவ​
மனைகள், மருந்து உற்பத்தி, மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு நிதி கிடைத்தது.. கல்வி வளர்ச்சி​யடைந்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உருவா​கியது. அறிவியல் வளர்ச்சி​ மூலம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஊதியம், ஆய்வகங்கள், கருவிகள், ஆராய்ச்சி நிதி கிடைத்தது.​  உலக வர்த்தகம் பெருகியது. சில நாடுகள் செல்வத்தில் செழித்தது. தோழி நுட்பத்தில் பேர் பெற்றது. மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, கணினி, இணையம் போன்ற துறைகளின் வளர்ச்சியில் முதலீடு முக்கியப் பங்கு வகித்தது.​  பணம் இந்த வகையில் மனித குலத்துக்கு தீமையான ஒன்று என்று முடிவு கட்ட முடியாது.

பணம் மனிதனுக்குச் சேவை செய்யாமல், மனிதன் பணத்திற்குச் சேவை செய்யத் தொடங்கும்போது ஆபத்து உருவாகிறது.
​அணு ஆயுதப்போரில் இன்று நாடுகள் சிக்கி   உலகில் நிம்மதி அமைதி குலைந்து விட்டது. செல்வ செழிப்பு என்ற பெயரில் பணம் பூதாமாகி  இந்த நிலையை உருவாக்கி விட்டது. காரணம்;  பேராசை, ஊழல், அதிகார துஷ்ப்ரயோகம், சுரண்டல்,
லாபத்திற்காக இயற்கை வளங்களை அளவுக்கு மீறிச் சுரண்டுதல்.​   பேராசை பொறாமை வேண்டாம் வேண்டாமென்று நமது நீதி நூல்கள், சாஸ்திரங்கள் படித்து படித்து சொல்கிறதை ஏற்காததன் விளைவு.
 
​ஈசாவாஸ்ய உபநிஷத்;   ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत्। तेन त्यक्तेन भुञ्जीथा मा गृधः कस्यस्विद्धनम्॥
ஈசாவாஸ்யமிதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் |​ தேன த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத: கஸ்யஸ்வித் தனம் ||

இந்த உலகில் உள்ள அனைத்தும் இறைவனால் சூழப்பட்டுள்ளன. நமக்குக் கிடைத்தவற்றைத் தன்னடக்கத்துடன் அனுபவித்து வாழ வேண்டும். பிறருடைய செல்வத்தின் மீது பேராசை கொள்ளாதே.​ 

உலகில் எதுவும் சாஸ்வதமில்லை.  இயற்கையின் வளத்தை அனுபவிக்கலாம் தவிர அபகரிக்க கூடாது.
 
பணம் சம்பாதிப்பது தவறல்ல. ஆனால் ​தேவைக்கானது போதும். அளவற்ற பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை மனிதனின் மன அமைதியையும் ஒழுக்கத்தையும் அழிக்கலாம்.​ அவனையே  அழிப்பதை கண்கூடாக இப்போது நிறைய பார்க்கிறோம்.

பொருளை உருவாக்குதல், சம்பாதித்தல், பாதுகாத்தல், பாதுகாத்த செல்வத்தை நியாயமாகப் பகிர்ந்தளித்தல் ஆகியவற்றில் திறமை கொண்டதே சிறந்த அரசு.​ வள்ளுவர் இதை தான் சொல்கிறார்.

​”அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்​ ”
நேர்மையான வழியில், பிறருக்குத் தீங்கு செய்யாமல் சம்பாதிக்கப்பட்ட செல்வம் அறத்தையும் இன்பத்தையும் தரும்.
ஒரு நல்ல அரசு​ செல்வத்தை உருவாக்க வேண்டும்.​  உற்பத்தியை வளர்க்க வேண்டும்.மக்களின் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டும்.​ வருவாயை நியாயமாகப் பயன்படுத்த வேண்டும்.பொதுமக்களின் நலனுக்காகச் செலவிட வேண்டும்.
பணத்தைச் சேர்ப்பது மட்டுமல்ல; அதை நியாயமாகப் பகிர்வதுதான் நல்ல நிர்வாகம்.
 
​”இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு.​”-  அதாவது பொருளை உருவாக்குதல், சம்பாதித்தல், பாதுகாத்தல், பாதுகாத்த செல்வத்தை நியாயமாகப் பகிர்ந்தளித்தல் ஆகியவற்றில் திறமை கொண்டதே சிறந்த அரசு.
​அட, இன்றைய  இன்றைய பொருளாதார நிர்வாக​  எதிர் பார்ப்புக்கு ​ வள்ளுவர் வாக்கு பொருந்துகிற​தே .
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;