​சாணக்ய  நீதி ஸாஸ்த்ரம்

​சாணக்ய  நீதி ஸாஸ்த்ரம் –  நங்கநல்லூர்   ஜே. கே. சிவன் 
 
அத்யாயம் 1.  ஸ்லோகங்கள் 1-5 வரை.
​இது நடந்து ஆறு ஏழு மாதங்கள்  ஆகிவிட்டது.  அப்போது  பொது தேர்தல் நடந்த சமயம்.   எல்லோரும் ஒட்டு போட்டு விட்டு வந்தோம்.  வீட்டில்  சற்று அசதியாக படுத்தேன். என்னை யாரோ தொட்டு உலுக்கினது போல் இருந்தது.  என் மார்பில் கவிழ்த்து வைத்திருந்த பி புத்தகத்திலிருந்து  ஆஜானுபாகுவாக ஒரு மொட்டை தலை, உச்சி குடுமி  கூந்தல் நீளம்..சிவப்பு நிறம், பட்டை பட்டையாக நெற்றியில் விபூதி, வெறும் தங்கநிற மார்பில் பூணல், உத்தரீயம். கூரிய  நாசி, உயர்ந்த நெற்றி… யார் இவன்… அட புத்தகத்தின் அட்டையில் இருந்த கௌடில்யன் எனும் சாணக்யன்  மாதிரி இருக்கிறானே…
 
​இன்னும்  சில வாரங்களில்  ​நமது தமிழகத்துக்கு  ஏதோ ஒரு புது அரசு ​ பதவியேற்று ஆளப்போகிறது. பழையதே புதிதாக வருமா?அல்லது புதியது பழசைப் போலவே  ஆளுமா??  எதுவானாலும் நம் நிலைமை எப்போதும் மாறாததாகவே தான் இருக்கிறது. பல அரசுகளை பார்த்துவிட்டதால் ​, வானளாவிய விலைவாசி இறங்காத  என்ற நப்பாசையோடு சரி….
இப்படி ஒரு விரக்தி.
 
​”நீங்கள்  சாணக்யரை போல் இருக்கிறீர்களே…..
​”அவனே தான் நான்”
” உன் கையில் என்ன  நீல மை?
”ஒட்டு போட்டேன்.  மறுபடியும் ஏமாற்றி போடாத படிக்கு ஒரு அடையாளம்”’
​”இப்படி தான் உங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வழக்கமோ, ஒட்டு போடாதவர்களே  ஒட்டு போட்டதாக காட்டும் வஹாக்கத்தை இது எப்படி மாற்றும்?
​”ஐயா  உமது தீர்க்கமான கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது”
‘​ என் காலத்தில் நான் வகுத்த திட்டங்கள் வேறே.’
”’தெரியும்  உன் அர்த்தசாஸ்திரம் இப்போது செல்லாது”
”ஏன், நல்லது பிடிக்காதா?
”’மக்களுக்கு பிடிப்பது மக்களை ஆள்பவர்களுக்கு பிடிக்குமா”?  இருந்தாலும் ​உமது  அரசியல் திட்டத்த்தை விட நீர் எழுதிய நீதி ஸாஸ்த்ரம்  எனக்கு ரொம்ப பிடிக்கும் ” 

”என் காலத்திலும்  கணக்கு காட்டுவதில் மோசடி இருந்தது. வருவாயை உண்மையாக  கணக்கில்​ காட்ட
 மாட்​ டான்.
 வந்ததை பதுக்கி வைப்பான்.  உண்மையான  வருவாயை  மறைத்து  குறைவான அளவில் பதிவு செய்வான்.  செலவினங்களை அதிகப் படுத்தி  காட்டுவான். செலவு செய்யாமலே  செலவு  .கணக்கு காட்டுவான்.  ஒரே செலவை  ரெண்டு வித கணக்கில் காட்டுவான். உண்மையான கணக்குகளை சீக்கிரமே  அழித்து விடுவான்.  தன்னுடைய  அதிகாரம், பதவியை சாதகமாக்கிக்கொண்டு  எவ்வளவு அட்டூழி யம், அக்கிரமம் பண்ணமுடியோ அவ்வளவும் சுயநலத்துக்​ 
காக பண்ணுவான். தன்னுடைய கடமையை செய்வ தற்கு கூசாமல் லஞ்சம் கேட்டு வாங்குவான்.  தரமில்லாத பொருள்களை வாங்கி மக்களுக்கு கொடுத்து விட்டு  காசு பார்ப்பான்.  மேலே ஒரு அளவு, உள்ளே ஒரு அளவு என்று பொட்டலங்கள் இருக்கும். கலப்படம் செயது  காசு சம்பாதிப்பான். தனக்கு சாதகமான  போலி ஊழியர்கள், திருட்டு ஆசாமிகளை வேலைக்கு வைத்துக் கொள்வான்.  ஆட்களை நியமிக்காமலேயே​ அவர்கள் இருப்பதாக கணக்கு காட்டி சம்பளம் கொடுத்த தாக  ஆவணங்கள் தயார் செய்வான்.  அதன் மூலம் பெருத்த லாபம் சம்பாதிப்பான். டெண்டர் விடுவதில் நிபுணன். 
தனது ஆட்களுக்கே  டெண்டர் கிடைக்கும்​ படியாக செய்வான். முக்கியமான  பணிகளை  தனக்கு சாதகமாகும் வரை  ஆறப்போடுவான்.. தாமதப் படுத்துவான்.   சட்டத்தை எவ்வளவு  தூரம் துஷ்ப்ரயோகம்பண்ணமுடியுமோ அவ்வளவு
 பயன் படுத்துவான்.  அரசு ரஹஸ்யங்களை விற்பான். கூட்டு மோசடிகளில்  ஈடு படுவான்.  நீதி மன்றங்களில் தனக்கு சாதகமான  ஆட்களை வைத்து அநீதியான தீர்ப்புகளை அளிப்பான்.   பெரிய வியாபாரிகளோடு கூட்டு சேர்ந்து விலை ஏற்றி  அக்ரமமாக பணம் சம்பாதிப்பான்.  பொய் கையெழுத் து போடுவான். கண் பார்த்த நிலங்களை அபகரிப்பான்.
இப்படிப்பட்ட  அதிகாரிகளை பற்றி நான் என்ன சொல்லி இருக்கிறேன் தெரியுமா?

“நீரில் மீன் குடிப்பதைப் பார்க்க முடியாதது போல இந்த மாதிரி அதிகாரிகள்  திருடுவதை கண்டுபிடிக்க கடினம்”  என்று  அதீத புத்திசாலியே  தலையை ஆட்டி ஒப்புக்கொள்கிறான்.

”சாணக்யா,   நீ  இப்படி  யோசிக்க காரணம் என்ன?

”நான் மனிதனை நம்பவில்லை, ஒரு நல்ல  ஒழுங்கான​  கட்டமைப்பையே  நம்பி திட்டமிட்டேன். தண்டனை களை கடுமையாக்கினேன்.இரக்கம் காட்டவில்லை. பயத்திலே தான் அவர்களை கொஞ்சமாவது கட்டுப் படுத்த முடியும் .  வரி வசூலிக்க வேண்டியவனே​  திருட்டுப் பயலாக  இருந்தால் எப்படி நேர்மையாக பனி புரிய முடியும்? எல்லாம் அதிகாரம் கொடுக்கும் சலுகை அல்லவா? லஞ்சம் வாங்கிக் கொண்டு குறைந்த வரி போடுவான். வசூலிப்பான் .

”சாணக்யா,  இதை நீ எப்படி கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிந்தது?’
‘அதை ஏன் கேட்கிறாய். பணம்  மனித இயல்பை மாற்றி​ விடும்.  நான் பல  நம்பகமான  ஆட்களை ரஹஸ்ய​ உளவாளி​ 

களாக  நியமித்தேன்  சாமியார்களாக,  பாடகர்களாக,  பிச்சைக்காரர்களாக,  பண்டாரங்​ களாக,  பிரவசனம்​
  பண்ணுபவர்களாக, புலிவேஷம், மயிலாட்டம் ​, ஒயிலாட்டம், தெருக்கூத்து   ஆடுபவர்களாகி,  மாட்டு வண்டி குதிரை வண்டிக்காரர்களாக,  வேலைக்காரர்களாக,  நடன, நாட்டிய,  நாடக அவர்கள் மூலம்  நாட்டில் நடப்பது பூராக உடனே எனக்கு தெரிந்துவிடும்.

கடுமையான தண்டனை விதிப்பேன். அபராதங்கள் ஜாஸ்தி விதிப்பேன். கருணையே காட்டமாட்டேன். எங்கு தப்பு தண்டா  சமாச்சாரங்கள் நடந்தாலும் உடனே என் காதுக்கு எட்டி விடும் என்ற பயத்திலேயே  அவர்களை​ கண்காணித்தேன்.

 அதிகாரிகளை பொறுப்பில்  நியமிக்குமுன்பாக அவர்கள் பூர்வோத்தரங்களை விசாரித்து தகுதியானவனா என்று தீர்மானிப்பேன். அவர்கள் குடும்ப வளர்ச்சியை, சூழ்நிலையை அடிக்கடி கண்காணிப்பேன்அடிக்கடி  அதிகாரிகளை இடம் மாற்றுவேன். பதவி மாற்றுவேன். ஒரே இடத்தில்  ஊன்றி விட்டால், ஊறி விட்டால்  அவனது  ராஜ்ஜியம் பலம் வாய்ந்த​ தாகிவிடுமே.   எலியை  மசால் வடை வைத்து பொறிக்குள்  பிடிப்பது போல   மனசாட்சி மதிக்காத  அதிகாரி களை , எனக்கு சந்தேகம் வலுப்படும்போது,  சரியான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்து வகையாக அவர்கள் சிக்கும்போது கையும் களவுமாக பிடிப்பேன். தண்டிப்பேன். அவர்கள் என் பிடியிலிருந்து தப்பவேமுடியாது.   எதிர் பா​ராத நேரங்களில்  கணக்கு
 சரி பார்ப்பேன். நேரே சென்று விசாரிக்க  ஆள் அனுப்புவேன்.”

”சாணக்யா, நீ ரொம்பவே  கஷ்டப்பட்டு  நேர்மையை, நீதியை பாதுகாத்தாய். எங்களுக்கு அவ்வளவு சிரமம் இல்லை.  எங்களிடம் இப்போது விஞ்ஞான வளர்ச்சி யால், cctv  காமிராக்கள், ஆதார், pan, வருமான வரி சோதனை கள், போன்ற வசதிகள் இருப்பதால், மேம்பட்டு இருக்கிறோம்.”

”சரி தம்பி,என் கேள்விக்கு பதில்சொல்.?  உங்கள் ஆட்கள் யோக்யமானவர்களா? லஞ்சம் விட்டதா? அவர்களும் வேறு வழிகள் வைத்திருப்பதை நீ அறிவாயா? அதற்கு என்ன செய்யப்போகிறாய்?”

”சாணக்யா, நாங்கள் கொடுத்தால் தானே  அவர்கள் வாங்குவார்கள்? கொடுக்​கா விட்டால்??

”ஓஹோ  உங்களில் அவ்வளவு பேருமே  யோக்யர்களா?  சந்தோஷம். …முன்கை நீண்டால் தானே  முழங்கை நீளும்??  எல்லோருமே  ஒழுங்கானவர்களா? நீதிக்கு, நேமைக்கு புறம்பாக எதையும் செய்யாதவர்களா? பலே பலே !!.’

​கனவு கலைந்தது என்னால் சாணக்யனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. கனவில் மட்டும் அல்ல. நினைவிலும் இதற்கு யார் பதில் சொல்ல முடியும்… நாம் யோக்யர்களா??​ என்னையே  கேட்டுக் கொள்கிறேன்..


.”ஆமாம், சட்டத்தை மதிப்பேன், விதிகளை மீறமாட் டேன், உண்மையாக நடந்து கொள்வேன்….  என்று என் மனஸாக்ஷி  சொல்லுமா? அது சொன்னதாக  கூசாமல் பொய்  சொல்லப் போகிறேனா?
 
​சாணக்யரின்  நீதி சாஸ்திர ஸ்லோகங்களை பேசாமல் முதலில் படிப்போம்;
முதல் அத்தியாயத்தில் பொதுவாக 17 ஸ்லோகங்கள் இடம்பெறுகின்றன. ​ சமஸ்க்ரிதம், ஆங்கிலம், தமிழில் ஸ்லோகம், அப்புறம் தமிழில் அதன் அர்த்தம் தருகிறேன்;

1. प्रणम्य शिरसा विष्णुं त्रैलोक्याधिपतिं प्रभुम् । नानाशास्त्रोद्धृतं वक्ष्ये राजनीतिसमुच्चयम् ॥ १ ॥
Praṇamya śirasā viṣṇuṃ trailokyādhipatiṃ prabhum, nānāśāstroddhṛtaṃ vakṣye rājanītisamuccayam.
ப்ரணம்ய ஶிரஸா விஷ்ணும் த்ரைலோக்யாதிபதிம் ப்ரபும், நாநாஶாஸ்த்ரோத்த்ருதம் வக்ஷ்யே ராஜநீதிஸமுச்சயம்.​ 
 
​”நான் யார்?  ஒரு பொம்மை,  இயந்திரம், என்னைச் செலுத்துபவன் அந்த சாக்ஷாத்  மஹா விஷ்ணு, மூவுலகுக்கும் அதிபதி, லோக காரணன்,  அவனை வணங்கி நமஸ்கரித்து என் மனதில் தோன்றியதை ஓலைச்சுவடியில் வடிக்கிறேன்.  ராஜரீக கொள்கைகள் கோட்பாடுகள், நீதி நெறி  பற்றி சொல்கிறேன்​” என   ஆரம்பிக்கிறான் சாணக்யன்..

2.  अधीत्येदं यथाशास्त्रं नरो जानाति सत्तमः । धर्मोपदेशविख्यातं कार्याकार्यं शुभाशुभम् ॥ २ ॥
Adhītyedaṃ yathāśāstraṃ naro jānāti sattamaḥ, dharmopadeśavikhyātaṃ kāryākāryaṃ śubhāśubham.
அதீத்யேதம் யதாஶாஸ்த்ரம் நரோ ஜாநாதி ஸத்தமஃ, தர்மோபதேஶவிக்யாதம் கார்யாகார்யம் ஶுபாஶுபம்.

இந்த நீதி​ ஸாஸ்த்ரத்தை கற்றறியும் அறிவுடைய மனிதன், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எது நன்மை, எது தீமை என்பதை எவன் நன்றாக அறிந்துகொண்டு,  சாஸ்திரம் சொல்வதை புரிந்துகொண்டு, தனது கடமையை சாஸ்திரம் சொல்லும் வகையில், வழியில் கடைபிடிக்கிறானோ,  எதை பின்பற்றவேண்டும், எது கூடாது என்று பகுத்தறிகிறவனோ, அவனே சிறந்த மனிதருள் மாணிக்கம்..அறிவு என்பது புத்தகங்களைப் படிப்பதோடு முடிவதில்லை. சரியான முடிவுகளை எடுக்கும் திறனையும் வளர்க்க வேண்டும்.

3. तदहं सम्प्रवक्ष्यामि लोकानां हितकाम्यया । येन विज्ञातमात्रेण सर्वज्ञात्वं प्रपद्यते ॥ ३ ॥
Tad ahaṃ sampravakṣyāmi lokānāṃ hitakāmyayā,yena vijñātamātreṇa sarvajñatvaṃ prapadyate.
ததஹம் ஸம்ப்ரவக்ஷ்யாமி லோகாநாம் ஹிதகாம்யயா, யேந விஜ்ஞாதமாத்ரேண ஸர்வஜ்ஞத்வம் ப்ரபத்யதே.

மக்களின் நன்மையைக் கருதி இந்த நீதிகளை நான் விளக்குகிறேன். இவற்றை அறிந்துகொள்வதன் மூலம் மனிதன் பல்வேறு விஷயங்களைப் பற்றிய பரந்த புரிதலைப் பெறு​வான். வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கிடைக்கும் அறிவு, நம்மையும் பிறரையும் நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது.  அதை நான் நினைக்கிறபடியே புரிந்துகொண்டு கடைபிடித்தால் எல்லாம் இனிதாகவே, நல்லதாகவே  நடக்கும்” ​      ​– சாணக்யன் ..

4. मूर्खशिष्योपदेशेन दुष्टस्त्रीभरणेन च । दुःखितैः सम्प्रयोगेण पण्डितोऽप्यवसीदति ॥ ४ ॥
Mūrkhaśiṣyopadeśena duṣṭastrībhar aṇena ca, duḥkhitaiḥ samprayogeṇa paṇḍito’pyavasīdati.
மூர்க்கஶிஷ்யோபதேஶேன துஷ்டஸ்த்ரீபரணேன ச, துஃகிதைஃ ஸம்ப்ரயோகேண பண்டிதோப்யவஸீததி.

அறிவுரையை ஏற்காத மூடமான மாணவனுக்குக் ​கல்வி, ஞானம், கற்பிப்பதாலும், தீய குணமுடைய வாழ்க்கைத்துணையைப் பராமரிப்பதாலும், எப்போதும் துன்பத்தையும் சிக்கலையும் உருவாக்கும் சூழல்களில் சிக்குவதாலும் அறிவாளியும் துன்பமடைகிறான்.  எவ்வளவு தான் கற்றுணர்ந்த அனுபவ ஞானி என்றாலும்  ஒரு முட்டாள் சிஷ்யனுக்கு கற்பிக்கும்போது,  ஒரு  தவறான பெண்ணோடு வசிக்கும்போது,  துன்பப்படும்  வியாதியஸ்தர்கள் இடையே  இருக்கும்போதும், அவன்   மிகுந்த துக்கம் அடைகிறான். அறிவுரையை ஏற்கும் மனப்பக்குவம் முக்கியம். நம்முடைய ஆற்றலை எங்கு செலவிடு கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும்.

5. दुष्टा भार्या शठं मित्रं भृत्यश्चोत्तरदायकः । ससर्पे च गृहे वासो मृत्युरेव न संशयः ॥ ५ ॥
Duṣṭā bhāryā śaṭhaṃ mitraṃ bhṛtyaś cottaradāyakaḥ,sasarpe ca gṛhe vāso mṛtyur eva na saṃśayaḥ.
துஷ்டா பார்யா ஶடம் மித்ரம் ப்ருத்யஶ்சோத்தரதாயகஃ, ஸஸர்பே ச க்ருஹே வாஸோ ம்ருத்யுரேவ ந ஸம்ஶயஃ.

தீய குணமுள்ள வாழ்க்கைத்துணை, வஞ்சக நண்பன், கீழ்ப்படியாமல் எதிர்வினையாற்றும் பணியாள் அல்லது பாம்பு இருக்கும் வீட்டில் வாழ்வது ஆகியவை உயிருக்கு ஆபத்தான நிலைகளாகக் கருதப்படுகின்றன. நம்பிக்கை, பாதுகாப்பு, பரஸ்பர மரியாதை இல்லாத உறவுகளையும் ஆபத்தான சூழல்களையும் அலட்சியப்படுத்தக் கூடாது. இந்தப் பழமையான ஸ்லோகத்தில் பயன்படுத்தப்படும் குடும்பப் பாத்திரங்களை இன்றைய சூழலில் இருபாலருக்கும் பொருந்தும் வகையில் புரிந்துகொள்ளலாம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;