
வண்டானம் எனும் தமிழறிஞர். – நங்கநல்லூர் J K SIVAN
எக்காலத்திலும் எல்லோரும் அறிந்த ஒரு உண்மை எது? பணமில்லாதவனை பிணமாக கருதுவது. ”இல்லானை ” (பணம் இல்லாத படித்த ஏழையை) அவன் மனைவி, இல்லாளும். வேண்டாள், ஈன்றெடுத்த தாய் வேண்டாள் , செல்லாது அவன் வாயில் சொல்.. ஆம் அப்படி ஒரு ஏழைப்புலவன் ஒருவன் பற்றிய விஷயம் இது. இது போன்று எத்தனையோ அறிஞர்களை, வித்தகர்க
ளைப் பற்றி நாம் அறிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது நமது துரதிர்ஷ்டம். தமிழ் தாத்தா சொன்ன விஷயம் இது. இருநூறு வருஷங்களுக்கு முன்பு, எத்தனையோ கல்விமான்கள், புலவர்கள், கவிஞர்கள் நமது தமிழ் நாட்டில் சமூகத்தில் மற்றவர்களின் மரியாதை அங்கீ காரம் எதுவும் இல்லாமல் வாழ்ந்து மறைந்தவர்கள். வெகு சிலர் மட்டுமே பிரபுக்களாலும் குறுநில மன்னர்களாலும் சமஸ்தானங்களாலும் கௌரவிக்கப் பட்டவர்கள்.
திருநெல்வேலியிலே வண்டானம் என்கிற ஒரு ஊரிலே முத்துசாமி ஐயர் என்கிற ஒரு ஸ்மார்த்த பிராமணர், சிறந்த அறிஞர், கல்விமான். வடமர் வகுப்பை சேர்ந் தவர், குள்ளமாக சிகப்பான மேனி உடையவர். எப்போதும் குனிந்த தலை நிமிரா தவர். அகன்ற நெற்றி, விசாலமான கண்களை உடையவர். முகத்தில் சந்தோஷம், துக்கம் எதுவுமே காண முடியாது.விருப்பு வெறுப்பு தெரியாது. இளம் புன்னகையுடன் இருப்பார். அதிகம் பேச மாட்டார். வித்வான்களிடம் பாடங்கள் கேட்பதிலும் கேட்டவற்றைப் பற்றி சிந்திப்பதிலுமே காலத்தை தனிமையில் போக்குபவர். திருவாவடுதுறை ஆதீனத்தில் தமிழ் பாடங்கள் கற்காத நேரத்திலே தோட்டத்தில், மரத்தடியில், குளக்கரையில், ஆற்று மணலில், தனியாக உட்கார்ந்து கொண்டு மண்ணிலே ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார். தனக்கு தானே கவிதைகள் பாடல்கள் இயற்றிப் பாடிக் கொண்டிருப் பார். இப்படி ஒரு சீடரை நமது தமிழ் தாத்தா சாமிநா தையர் ஞாபகம் வைத்துக் கொண்டு நமக்கு சொல்கிறார்.
திருவாவடு துறை மடத்துக்கு மேலே சொல்லிய பிராமணர் பாடம் கேட்க வந்தார் அப்போது அவருக்கு 20 -22 வயது இருக்கும். அப்போது திருவாவடுதுறை மடத்துக்கு சுப்பிரமணிய தேசிகர் ஆதீன கர்த்தா. திருசிரபுரம் மஹா வித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை ஆதீனத்திலே தமிழ் வித்வான். அவர் சிபாரி சினால் ஆதீனத்தில் பல ஏழை மாணவர்களுக்கு சாப்பாடு உடை, தங்க வசதிகள் எல்லாம் கிடைத்தது. பிற்காலத்தில் திருப்பனந்தாள் காசி மடம் தலைமை வகித்த குமாரசாமி தம்பிரான் என்பவர் அப்போது மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டு வந்தார். அவர் பிறந்த ஊரும் வண்டானம் என்பதால் அவருக்கு முத்துசாமியை ஏற்கனவே பழக்கம் இருந்ததால் அவரிடத்திலேயே முத்துசாமி ஐயர் பாடம் படிக்க வந்தார்.
இனி இந்த கட்டுரையில் வண்டானம் எனப்படுவது முத்துசாம ஐயரைத் தான். ஊரில் இருந்த பொழுது நிகண்டுவையும் சில பிரபந்தங்களையும் படித்தவர் ஆதலின் தமிழ் பயிற்சியிலே இவர் திறந்து விளங்கி னார். இரவிலும் பகலும் எல்லோரும் சாப்பிட்டு படுக்கும் நேரத்திலே இவர் தனியாக சென்று யாரிடமும் சேராமல் தனியாக இருப்பார் ரொம்ப அழுக்கான ஆடைகளை உடுத்திக் கொண்டிருப்பார் இப்படி பரம சாதுவாக நாகரிகம் இல்லாதவராக இருப்பதனால் மற்ற மாணவர் களுக்கு இவரிடத்திலே நல்ல மதிப்பு கிடையாது. ‘வண் டானம் வந்தது வண்டானம் போச்சு’ என்று அஃறி ணையாகவே முத்துசாமி ஐயரைப் பற்றி பேசுவார்கள். இப்படி ஒருவர் இருப்பது ஆதின தம்பிரான் சுப்பிர மணிய தேசிகருக்கோ தமிழ் ஆசிரியர் வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கோ தெரியாது.
எவரேனும் சிலேடையாக பேசினால் வண்டானத்துக்கு மகிழ்ச்சி உண்டாகும். முகத்திலே சந்தோஷத்தை காட்டுவார்.
ஒரு நாள் மாணாக்கர் ஒருவர் முத்துசாமியைப் பார்த்து வண்டு என்ன செய்கிறது? என கேட்டபோது ஐயர் புன்சிரிப்போடு ‘ சிவப்புத் தேள்’ என்று சிலேடையாக பேசினார். சிலேடைக்கு இரு பொருள். ”நீங்கள் சிவனா கிய தேவன்” என்று ஒரு அர்த்தம். ”சிவப்பு நிறம் பொருந் திய தேள்” என இன்னொரு அர்த்தம்.
இன்னொரு நாள் ஒருவர் இவரை நோக்கி ”வாரும் இரும் படியும்” என்றபோது ஓஹோ ” நான் கொல்லனாக வந்து இரும்பை அடிக்கவேண்டுமா?” என்று கேட்டார் .
ஒருநாள் மடத்தில் ஒரு மாணவர் துணி துவைத்துக் கொண்டிருக்கும்போது சிலேடையாக வண்டானம் ”நீர் என்ன வேஷ்டியை துவைக்கும் கல்லில் அடிக்காமல் தண்ணீரில் கசக்கி பிழிந்து துவைக்கின்றீரோ?” என பொருள் படும்படி ”கலையைச் சிலையில் கலையாமல். தோயத்தில் தோய்த்து துவைக்கின்றீரோ?” தோயம் என்றால் நீர். சிலை என்பது தோய்க்கிற கல். கலை யாமல் என்றால் துணியைப் பிரித்து அலசாமல்” என்று பொருள்.
ஒருநாள் ஒரு மாணவர் வண்டானத்திடம் ”நீர் என்ன உண்டு வந்தீரோ?” சாப்பிட்டாச்சா, என்று கேட்டபோது இந்த சாப்பாட்டை ” உண்டு உவந்தீரோ?” என்றா கேட்கி றீர்கள் என்று பிரித்துக் கூறி மகிழ்வித்தார்.
ஒரு நாள் சாப்பாட்டு விடுதியில் சுவரிலே ஒரு பாடல் மாக்கல்லால் எழுதியிருந்தது.
“இந்தவறச் சாலைதனி லேயிரவும் பகலும்
வந்தவரி முதன்மதிதம் வரைவாங்கிக் கொண்டே
அந்தணரு க் கடி சிலிட யாதுமிலை யெனலாற்
சுந்தரசுப் பிரமணிய தேவனிடஞ் சொன்மீன்.”
இதற்கு என்ன அர்த்தம்?இந்த தர்மசாலையிலே ராத்திரியிலும் பகலிலும் சமைத்து பிறருக்கு விடுவதற்காக மடத்திலிருந்து வரும் அரிசி முதல் மோர் வரையில் உள்ள பொருள்களை பெற்றுக்கொண்டு உண்ண வருகின்ற பிராமணர்களுக்கு உணவளிப் பதற்கு ஒன்றும் இல்லை என்று இங்கு உள்ளோர் சொல்வதால் இந்தச் செய்தியை அழகிய சுப்பிரமணிய தேசிகரிடம் சொல்லுங்கள்”
சுப்ரமணிய தேசிகர் ஆகிய ஆதின தலைவர் அவரிடம் இந்த நிலைமையை யாரவது தெரியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த கவிதை.
ஒரு மாணவர் அதை ஞாபகப்படுத்திக் கொண்டு பிற்பகலிலே மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இடம் பாடம் கேட்பதற் காக வந்திருந்த போது தன் நண்பர் களிடம் தனியாகச் சொல்லி பேசிக் கொண்டிருந்தார். அது பிள்ளை காதுக்கெட்டியது. அந்த மாணவரைக் கூப்பிட்டு மீண்டும் அந்த பாடலை சொல்லச் சொலி கேட்டு மகிழ்ந்து இதை யார் எழுதியிருக்கக்கூடும்?என் அறிய அந்த விடுதியில் உண்பவர்கள் ஒவ்வொரு வரையும் குறிப்பிட்டு வினவினார். அப்பொழுது குமாரசாமி தம்பிரான் ”என்னிடம் பாடம் கேட்டுக் கொண்டு வரும் வண்டானம் இதை எழுதியிருக்கலாம் ‘அது’ பெரும்பாலும் அகாலத்திலேயே தான் சென்று ‘அது ‘உண்ணும் . தனக்கு ஆகாரம் சரியானபடி கிடைப்பதில்லை என்று சில சமயங்களில் என்னிடம் சொல்லி இருக்கிறது . அது எழுதியிருக்கலாம், கூப்பிட்டு அதை விசாரிக்க வேண்டும்” என்றார்
பிள்ளை அவர்கள்விரும்பியடியே செய்ய, உடனிருந்த வர்கள் பல இடங்களில் தேடி வண்டானம் வடபால் உள்ள ஒரு தோட்டத்திலே ஒரு மரத்தடியிலே உட்கார்ந்து ஏதோ யோஜனையில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்தார்கள் அப்போது நண்பகல். ”வண்டானம், உமக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. வாரும். பிள்ளை அவர்கள் உங்களை அழைக்கிறார்கள்” என்று கூறி அவரை பிள்ளைகளிடத் திலே அழைத்துக் கொண்டு வந்தார்கள்
வண்டானம், யாதும் அறியாதவராக எதற்காக நம்மை அழைத்தார்களோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந் தார் . பிள்ளை அவர்கள் அவரை உட்கார சொல்லி ”இந்த பாடலைச் செய்தது யார்?” என்று அன்புடன் கேட்ட போது ”நான் செய்ய வில்லை?” என்று கூறிவிட்டார்.
அப்பால் ஒருவரை உண்ணும் கூடத்துக்கு அனுப்பி அப்பாடலை எழுதியது யார் என்று விசாரிக்கச் செய்ததில் அப்பாடலின் விஷயத்தை அறியாத சமையல்காரர் ஏதோ ஒரு நாள் வண்டானம் வந்த சிறிது நேரம் நின்றுவிட்டு எழுதிக் கொண்டிருந்தது” என்றார். விஷயம் பிள்ளைக்கு சென்றவுடன் அவர்கள் பின்னம் வற்புறுத்தி கேட்டபோது பதிலே சொல்லவில்லை வண்டானம் . அப்போது அங்கிருந்த குமாரசாமி தம்பிரான் வண்டானத்திடம் ”நீ எல்லோரும் உண்ணும் சமயம் மடப்பள்ளிக்கு செல்லாமல் அகாலத்தில் போனால் உனக்கு உண்பதற்கு எல்லாமும் எப்படி கிடைக்கும்.? உன்னுடைய தவறு தான் அது?” என்று கோபத்துடன் சொல்லுகையிலே பிள்ளை அவர்கள் குறுக்கிட்டு ” ஐயா நீர் சும்மாயிரும்” என்று கை அமர்த் தி விட்டு ”இந்த அருமையான பாடலை செய்தவர் இவரே என்று தெரிகிறது இந்த செய்யுளின் நடையை பார்க்கும்போது இதற்கு முன் கூட இவர் பல பாடல்கள் செய்து பழகி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது அதை பற்றி எல்லாம் விசாரிக்க வேண்டும்” என்றார்கள்.
வண்டானமோ பயத்தில் தான் யாதொன்றும் செய்த தில்லை என மென்று விழுங்கினார். ”உமக்கு பாடுகிற பழக்கம் உண்டு ” என்பதை இந்த பாடலே தெரிவிக் கிறது அப்படி ஏதாவது பாடல்கள் செய்திருந்தால் அதை என்னிடம் சொல்லும் எனக்கு விருப்பம் உண்டு ” என்று பிள்ளையவர்கள் வண்டானத்தின் முதுகைத் தட்டிக் கொடுத்து வற்புறுத்தி கேட்டார்கள்
அப்புறம் தான் முன்னமே செய்திருந்தவற்றுள்ளே சாதாரணமான சில பாடல்களை ஒன்று ஒன்றாக சொல்ல ஆரம்பித்தார் வண்டானம் . அதை கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அளவு கடந்த ஆச்சரியம் ஏற்பட்டது. அப்பால் சிறிது ஊக்கம் வந்துவிட்டதால் வண்டானம் முத்துசாமி ஐயர் தாம் இயற்றிய திருபு எமகம் சிலேடை முதலியன அமைந்த சில செய்யுள் களை சொல்லிக் காட்டினார். தமது ஊருக்கு அருகில் உள்ள பசுவந்தனை என்னும் ஸ்தலத்தை பற்றி தாம் இயற்றிய பசுவந்தை அந்தாதி என்பதில் உள்ள சில பாடல்கள் எல்லாம் பற்றியும் வண்டானம் சொன்னார். அதை ரொம்ப ரசித்துக் கேட்ட பிள்ளையவர்கள், சுவையாக இருக்கிறது என்று ரொம்ப ஸ்லாகித்து பாராட்டினார்.
பின்பு பிள்ளை அவர்கள் சுப்பிரமணிய தேசிகன் மீது ஏற்றி உள்ள துங்கஞ்சார் என்கிற கீர்த்தனத்தின் மெட்டி லே தம்மை ஆதரித்த பிச்சு வயர் என்பவர் மேல் இயற்றிய கீர்த்தனை மூன்றையும் சொன்னார் தமிழ் தாத்தா இதை நினைவு கூறும்போது …..வண்டான துறை பிச்சு ஐயர் தயாநிதியே…. என்ற அந்த பல்லவி மட்டும் இப்போது என் ஞாபகத்தில் இருக்கிறது..என்
கிறார்.
வண்டானம் சொன்ன செய்யுள்களை எல்லாம் கேட்ட பிள்ளை அவர்கள் அவரைப் பார்த்து ”மிகவும் வறுமையோடு வருத்தத்துடன் இங்கே இப்படி ஒருவர் இருப்பது இதுவரையிலும் நமக்குத் தெரியாமல் போய்விட்டதே, எவ்வளவு அழுக்கான வஸ்திரத்தை இவர் கட்டிக்கொண்டு தமிழ் சுவையை அறிந்த இந்த ஊரிலே ஏனென்று கேட்பார் இல்லாமல் எல்லாரும் பரிகசிக்கும்படி இருப்பது என் மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. உங்களுடைய அலட்சியத் துக்கு இடையிலே இவர் இவ்வளவு சுவையுள்ள செய்யுள்களை பாடினார் என்றால் நீங்கள் அன்புடன் அவரை ஆதரித்து வந்திருந்தால் இன்னும் எவ்வளவு பிரகாசித்து இருப்பார்? இவர் சாதுவாக இருக்கிறார் என்று நீங்கள் புறக்கணித்தால் தமிழையே புறக்க
ணித்தவர்களாகிவிடுவீர்கள். இனியாவது இவருடைய அருமையை நன்கு அறிந்த பாராட்ட வேண்டும். படித்தவர்களை படித்தவர்களே அறிந்து கொள்ளா விட்டால் வேறு யார் அறியப் போகிறார்கள்?
திருவாவடுதுறை சன்னிதானத்திற்கும் தெரிவிக்க வேண்டும்” என்று மனம் கனிந்து கூறினார்.
அருகில் இருந்த மாணவர்களுக்கெல்லாம் அப்போது தான் வண்டானம் முத்துசாமி ஐயரின் கல்வித்திறன் நன்றாக விளங்கிற்று. தாங்கள் அவர் பால் காட்டிய அவமதிப்பை நினைத்து ரொம்பவும் வருத்தப்பட் டார்கள். மடத்தில் ஆதீன தலைவர்களை இவ்வாறு வணங்குதல் மரபு பில்லை, சன்னிதானம் உமது செய்யுள்களை கேட்டால் மிகவும் திருப்தி அடைவார்.
பிள்ளையவர்கள் வண்டானத்திடம் நீர் ஒரு செய்யுள் எழுதி உமது வறுமையை விளக்கி வஸ்திரம் ஏதாவது கொடுக்க வேண்டும் எனும் கருத்து வரும்படியாக ஒரு வெண்பா உடனே புனையும், அதை அவரிடம் அனுப்பு கிறேன்” என்றார். ஐந்தே நிமிஷத்தில் வண்டா னம் முத்துசாமி ஐயர் ஒரு பாடலை இயற்றிவிட்டார்.
“மாசாரக் கவிநுவல்வோர் குறைகடமை யடியோடே
மாற்ற வெண்ணித்
தூசார நிதியழண வடிகடா றெரிந்துபெறத்
துணிந்து வந்தேன்
ஏசார வறுமையெனுங் கொடும்பிணியா னெடுந்துயருற்
றிருக்கின் றேற்கின்
றுசார மளித்தருள்சுப்பிரமணிய தேசிகமெய்
யறிஞ ரேறே’
இதன் அர்த்தம் என்னவென்றால் ” சுப்பிரமணிய தேசிகரே, உண்மை அறிவுடைய அருள் மேம்பட்டவரே, மிக்க சுவை பொருந்திய செய்யுள்களை கூறுபவர்
களுடைய குறைகளை முற்றிலும் ஒழிக்க நினைந்து உடை, ஹாரம், பொருள், உணவு என்பவற்றை அடிகள் வழங்குதல் அறிந்து யானும் ஒன்றைப் பெற துணிந்து வந்தடைந்தேன் ஆதலின் வறுமை என்னும் கொடிய நோயால் மிக்க துன்பத்தை அடைந்திருக்கும் எனக்கும் இன்று ஆடை வழங்கி அருளல் வேண்டும் . இதனைக்
கேட்ட பிள்ளை அவர்கள் மிக மகிழ்ந்து சன்னிதானத்
திடம் இவரை அழைத்துச் சென்று இந்த பாடலை சொல்லி காட்டிவிட்டு இங்கு நிகழ்ந்தவைகள் எல்லாம் தெரிவிக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள் அப்படியே நான் அவரைத் தேசிகர் பால் அழைத்துச் சென்று நிகழ்ந்தவற்றை எல்லாம் கூறி அந்தச் செய்யு ளை சொல்ல செய்தேன். இதை கேட்ட தேசிகர் அவர்கள் அந்தப் பாடலின் சுவையை அறிந்து இன்புற்றதோடு அன்றி சரிகை கரை உள்ள ரெண்டு ஜோடி வஸ்திரங் களை அளித்து இதை உடுத்திக் கொண்டு பிள்ளையவர் களிடம் சென்று காட்டுங்கள் என்று கட்டளையிட்டார் அப்படியே வண்டானமும் புத்தாடை உடுத்திக்கொண்டு
பிள்ளை அவர்களிடம் வந்தார். பிள்ளையவர்களும் மற்றவர்கள் எல்லோருமே மகிழ்ந்தார்கள்.
அன்று முதல் மாணாக்கர்கள் எல்லோரும் அவரிடம் பிரியதோடு நடக்க ஆரம்பித்தார்கள்.அவரும் எல்லோரி டமும் பேசி பழகி வந்தார். நூல்களில் உள்ள பாடல்க ளைப் பற்றி அவருடைய அபிப்பிராயத்தை கேட்டால் முதலாவது இது இரண்டாவது இது என்ன பாகம்? என்ன சுவையுடையது? என்றெல்லாம் பிரித்து அர்த்தம் கூறுவார். செய்யுட்களின் சுவையை அறிந்து தரம் கூறுவதில் அவர் வல்லவராக இருந்ததை நான் பலமுறை கேட்டு அறிந்திருக்கிறேன்.
பிள்ளை அவர்கள் காலத்துக்கு பின்பும் கூட அவர் ஆதினத்த்தில் சிலரிடம் அவர் பாடம் கேட்டு பிறகு திருவாவடுதுறை மடத்திலிருந்து தனது ஊருக்குத் திரும்பிச் சென்றார். பிரபுக்களையும் ஜமீன்தார்களையும் கண்டு அவர்கள் மீது பாடி அவர்களை உவப்பித்து பழைய நூல்களில் உள்ள சுவையை எடுத்துக்காட்டி காலம் கழித்து வந்தார்.இடையே சில சமயம் திருவாவடுதுறைக்கும் வந்து செல்வார்
தமிழ் தாத்தா கும்பகோணத்திற்கு ஒரு முறை வேலை யாக சென்ற பின், ஒரு சமயம் திருவாவடுதுறைக்கு வந்து தேசிகரை சந்திக்க ஆதீனத்தின் உள்ளே செல்லும் சமயம் வாசலில் வண்டானம் நிற்பதைப் பார்த்தார். ”இன்னும் கல்யாணம் ஆகவில்லையா? ”என்ற தாத்தாவிடம் ”கல்யாணம் இல்லை கலியாணம் ஆகவில்லை ”என்றார். இதல் அந்த விடையிலேயே மணமாகவில்லை என்ற பொருளும் பணம் இல்லை என்ற பொருளும் சிலேடையாக அமைந்துள்ளது. கல்யாணம் என்றால் விவாகம் என்றும் பணம் என்றும் அர்த்தம்.
ஊற்றுமலை ஜமீன்தார் ஹிருதயாலய மருதப்ப தேவரிடம் ஒரு சமயம் சென்று ஜமீன்தாரிடம் சில செய்யுட்களை பாடிக்காட்டிவிட்டு ”எனக்கு விவாகம் ஆகவேண்டியிருப்பதால் அதற்குரிய பொருளுதவி செய்யவேண்டும் என்று கேட்டார்
ஜமீன்தார், “நீர் முகூர்த்தம் வைத்துக் கொண்டு வந்தால் நான் நூறு ரூபாய் தருவேன் என்றார். அதற்கு பின் சில காலம் கழித்து வண்டானம் ஊர் சென்று திரும்பி வந்து ஜமீன்தாரிடம் பேசியதை சம்பாஷணையாக கொடுக்
கிறேன்.
”வண்டானம் ; ”பிரபு, நான் ஊர் சென்று வந்து விட்டேன். எனக்கு கலியாணம் நிச்சயமாகிவிட்டது.
ஜமீன்தார்; ”நான் எவ்வளவு தருவேனென்று முன்பு சொன்னேன்
?வ; ” நானூறு ரூபாய் தருவே னென்றீர்கள்”.
ஜ: -” இராதே; அப்படிச் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லையே”.
வ: ”முந்நூறு தருவேனென்றீர்கள்”.
ஜ: ”அப்படியும் சொல்லவில்லையே”.
வ – ‘ இல்லை; இருநூறு தருவேனென்றீர்கள்”.
ஜ ” என்ன,புலவரே பொய் சொல்லுகிறீரே!
வ; ” பொய் இல்லை ஐயா, நூறு ரூபாய் தருவதாகச் சொன்னீர்கள்.
ஜ ” பின் எதற்காக நானூறு, முந்நூறு, இருநூறென்று ஏமாற்றுகிறீர்?
வ; ” நான் உள்ளதைத் தானே சொன்னேன். நீங்கள், “நான் நூறு தருவேன்” என்று சொல்லவில்லையா? ”அதை தான் ” நான் நூறு” என்று சொன்னீர்கள் என்றேன். முன்பு நான் வந்த போது நூறு தருவதாகச் சொல்லவில்லையா? அதை தான் ”முன் நூறு”” என்றேன். இரு உனக்கு நூறு தருகிறேன் என்றீர்கள் . காத்திரு. நூறு தருகிறேன் என சொன்னதை ”இரு நூறு ” என்றீர்கள் என்றேன். நூறு தருகிறேன் என்று நீங்கள் சொன்னதும் பொய்யில்லையே, நானும் பாடலாக
அதை சொன்னதும் பொய்யில்லை. ”
வண்டானத்தின் சாதுரியமான விடை யில் மகிழ்ந்த
ஜமீன்தார் தாம் வாக்களித்த நூறு ரூபாயோடு, மற்றொரு நூறு ரூபாயும் சேர்த்து இருநூறாக பரிசளித் தார்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




