visit to THIRUVARANKULAM J K SIVAN

இன்று  கொஞ்சம்  தமிழ் … –  நங்கநல்லூர்  J K  SIVAN 

இந்த வருஷம்  பராபவ வருஷ  தமிழ் புத்தாண்டு தினத்தில்  என் தாய் வழி தாத்தா  ப்ரம்ம ஸ்ரீ  புராண சாகர வசிஷ்ட பாரதிகள் எழுதி வைத்திருந்த சில குறிப்புகளில் ஒன்றிரண்டு மட்டும் படிக்க நேர்ந்தது.

சென்னையில் பல காலம் பிற்காலத்தில் வாழ்ந்தாலும், அதற்கு முன்பு  அடிக்கடி புதுக்கோட்டை சமஸ்தானம் செல்ல நேரிட்டது. கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அல்லவா? அதுவும் அவர் ஜென்ம ஸ்தலம் உள்ள ஜில்லா என்பதால் புதுக்கோட்டையில் நல்ல பரிச்சயம் அவருக்கும் அவர் சகோதரர்  சீதாராம பாகவதருக்கு உண்டு.  தாத்தா வசிஷ்ட பாரதிகளுக்கு கண் பார்வை மங்கிக்  கொண்டே வந்ததால்  அவரோடு எங்கும்  அவர் அண்ணா சீதாராம பாகவதர் உடன் செல்வார். பாகவதர் சிறந்த சங்கீத வித்துவான்.  தாத்தா எழுதும் புராணங்கள், செயல்களுக்கு  இசை அமைத்து பாடுவார்.  எந்த ஊர்  சென்றாலும் அங்குள்ள  கோவில்களுக்கு சென்று பகவானை தரிசித்து  பாடல்கள்  பாடி  பிரசாதம் பெரும் வழக்கம் உண்டு.
புதுக்கோட்டையின் கிழக்கு பக்கம், நாலு மைல்  தூரத்தில்   ஆலங்குடி தாலுக்காவில் திருவரங்குளம் என்று  ஒரு ஊர்.   சிவன்  அரங்குளநாதர்  ஸ்வயம்பு. சமஸ்க்ரிதத்தில் அவர் பெயர்  ஹரிதீர்த்தேஸ்வரர். அம்பாள் பிரஹந்நாயகி எனும் பெரியநாயகி.  ஸ்தல விருக்ஷம்  பொற்பனை. இங்குள்ள திருச்சிற்றம்பல உடையார் காசி விசுவநாதருக்கு இணையானவர். இவரை வழிபட்டால் காசியில் விஸ்வநாதரை வழிபட்ட புண்ணியம்.
கோயிலின் ராஜ கோபுரம் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. ப்ராஹாரத்தில் தக்ஷிணாமூர்த்தி வீணையுடன் காணப்படுகிறார். வீணை தக்ஷிணாமுர்த்தி வேறு சில கோவில்களிலும் தரிசித்திருக்கிறேன். அம்மன் தனி
கோவில் புராணம் ஒரு ஸ்வாரஸ்யமான கதை. இவ்வூரில்  பெரியநாயகி என்னும் பெண்ணுக்கு ஹரிதீர் த்தேஸ்வரர்  மேல் அதிக  பக்தி, பாசம்,  இங்கே வந்தவள்  ஆச்சர்யமாக  இறைவனோடு கலந்துவிட்டாள். ப்ரஹதாம்பாள் ஆகிவிட்டாள். இங்கு வந்த ஒரு வேடன் பசிக்கு உணவு தேடச்சென்றபோது அவன்  மனைவி காணாமல் போனாள் . அங்கு வந்த முனிவர் உதவியால் மனைவி கிடைத்தாள் .அவர்களின் வறுமை, பசியை அறிந்து அந்த முனிவர்  அங்கே  ஒரு பனை மரத்தை உண்டாக்கி அதிலிருந்து பொற்பனம் பழம் அவர்கள் பசி தீர கிடைக்க  செய்தார்.
வேடன் அதை விற்க போனபோது  கடைக்காரர் குறைந்த விலையே தந்தார். அதன் மதிப்பு வேடனுக்குத் தெரிய வரவே, வணிகரிடம் தனக்குரிய பங்கினைத் தர வேண்டினார். இந்தப் பிரச்னை மன்னரின் முன்பு கொண்டு செல்லப்பட்டது. மன்னரின் ஆணைப்படி அந்த மரத்தைப் பார்க்க அரண்மனையாட்கள் வந்தபோது அங்கு லிங்கத் திருமேனியைக் காணமுடிந்தது. மன்னன் அவ்விடத்தில் இந்த  சிவாலயத்தை கட்டினான்.
மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் சூரியன், நால்வர், வீரபத்திரர், சப்தமாதர், விநாயகர், 63 நாயன்மார், கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், சரஸ்வதி, ஜேஷ்டாதேவி, கஜலட்சுமி, சுப்பிரமணியர், நடராஜர், சிற்றம்பலம் உடையார், சந்திரன் ஆகியோர் உள்ளனர். கோயிலின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக பலிபீடம், நந்தி, கொடி மரம் ஆகியவை உள்ளன. அம்மன் சன்னதி கருவறைக்கு முன்பாக வலப்புறம் விநாயகர் உள்ளார். அடுத்து பள்ளியறை உள்ளது. இரு புறமும் துவார சக்திகள் உள்ளனர்.

மேலே சொன்ன சிவாலயத்துக்கு  எங்கள் தாத்தா, அவர் அண்ணா பாகவதர்  சென்ற பல ஆண்டுகளுக்கு முன்பு  உ.வே. சா அவர்களின்  ஆசிரியர் திருசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் சென்று  தரிசித்து முதல் துதியாக பாயிரம் கூறி நாட்டு படலத்தில்  ஆரம்பித்து  39 பாடல்கள் எழுதி நிறுத்தி விட்டார்கள்.
புதுக்கோட்டை கீரனூரில் திருவரங்குளத்திற்கு அடிமைகளாகிய வல  நாட்டு செட்டிகள் வர்க்கத்திலே அடைக்ககப்ப  செட்டியார்  என்பவர் ஒருவர்.  தமிழ் ஆர்வம் கொண்ட செட்டியார்.  மிக்க செல்வம் படைத்தவர் தவிர  நல்ல கல்வி அறிவுடையவர்.  ரொம்ப மிருதுவாக  நிறுத்தி நிதானமாக பேசும் குணம்.பேச்சில் இனிமையும் நயமும் எப்போதும் இருக்கும். எதை பேசும்போதும்  திருக்குறள் ஏதாவது ஒன்றை மேற்கோள் காட்டி பேசுபவர்.  செட்டியாருக்கு புதுக்கோட்டையில் அநேக தமிழ்  வித்வான்களைத் தெரியும்.  திருவரங்குளம் க்ஷேத்ரத்தை பற்றி ஒரு ஸ்தல வரலாறு தமிழில் வேண்டும் என்று செட்டியாருக்கு ஆர்வம். வெகுகாலமாக நிறைவேறாத ஏக்கம். மீனாட்சி சுந்தரம்  பிள்ளை அவர்கள் ஒரு 39 பாட்டு பாடி நிறுத்திவிட்டாரே மேற்கொண்டு யாரால் இதை முடிக்க முடியும்? என்ற ஒரு ஆதங்கம்  செட்டியார்  மனதிலேயே இருந்தது.  அந்த ஸ்தலத்தை பற்றி சம்ஸ்க்ரிதத்தில் சில  விவரங்களை தேடி சேகரித்துவைத்திருந்தார். அவற்றை தமிழ் படுத்தி முழுமையாக எண்ணம் நிறைவேறவில்லை.
எங்கள் தாத்தா வசிஷ்ட பாரதிகளும் அவர் சகோதரரும் அங்கே சென்றபோது செட்டியார் அவர்களை வரவேற்று உபசரித்தார்.  அவர்களிடம் பிள்ளை அவர்கள் பாடி நிறுத்திய அந்த 39 பாடல்களை பற்றி சொன்னார்.  தாத்தாவும் அந்த சுவடிகளை கொண்டுவந்து  பாடச் சொல்லி கேட்டார். ஆஹா  பிள்ளையவர்களின் தமிழ் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?
திருவரங்குளத்திலேயே சில காலம் தங்கி  அந்த ஸ்தலத்தை பற்றிய மீதி பாடல்களையும் பாட வேண்டும் என்ற ஒரு எண்ணம்  தாத்தாவின் அடி மனதில் இறங்கிவிட்டது.  பிள்ளையவர்கள் பாடல்களை சுவடிப்படுத்தி  ஏற்கனவே  தமிழ் தாத்தா  உ.வே.சா. ஐயர்  (அவரும் எங்கள் உறவினர் தான்) அவர்கள் பதிப்பித்திருந்த  புத்தகயித்தை  நண்பர்  ராம ரத்தின ஐயர்  தருவித்து பாடல்களின்  விபரங்களை தந்தார்.   அடைக்கப்பட்ட செட்டியாருக்கும்  தாத்தாவுக்கும்  நல்ல சிநேகம். அதைத் தவிர   திருவரங்குள  ஸ்தலத்தின் மேலே  தாத்தாவுக்கு தனியாக ஒரு பாசம்.
அப்போது  அவருக்கு  கண் பார்வை மங்க ஆரம்பித்து விட்டதால்   திருவரங்குள க்ஷேத்ரத்தில் ஒரு மண்டலம் விரதமிருந்து தரிசித்ததில் பார்வை கொஞ்சம் மீண்டது. பார்வை  கொஞ்சம் அனுகூலமான காரணம் பற்றி அடைக்கப்ப கூறிய பொது அவருக்கும்  ரொம்ப  சந்தோஷம் . பகவான் அருள் உள்ளவர் நீங்கள், என் எண்ணத்தையும் பூர்த்தி செய்யவேண்டும் என்று தாத்தாவை கேட்டுக்கொண்டார்.
”நாங்கள் அந்த மீதி ஸ்தல புராண பாடல்களையும்  பாடி தருகிறோம்.  இதற்கு ஸ்ரீ ஹரிதீர்த்தேஸ்வரர்  அனுகிரகம் கிடைக்கட்டும்.   நீங்கள் முதலில் வடநூலில் எங்கிருந்தோ இந்த க்ஷேத்திரத்தை பற்றி சேகரித்ததை  தமிழ் படுத்தி  எழுதிக் கொடுங்கள்” என்று தாத்தா சொன்னார்.
அந்த ஊரிலே சிகப்பு ஹரி ஹர   சாஸ்திரிகள் என்று ஒரு பிரம்மச்சாரி சமஸ்கிருத வித்துவான் இருந்தார். அவரை வேண்டி,அந்த ஸம்ஸ்க்ரித பாடல்களை தமிழில் மொழி  பெயர்த்தத்தில் 12 அத்தியாயங்களாக 400 ஸ்லோகண்களின் தமிழ்  வசனமாக  அவர் சுவடியில்  எழுதிக் கொடுத்தார்.  அதற்கு  ”அர  தீர்த்த  மகாத்மியம்” என்று பெயர் சூட்டியிருந்தார். இந்த  சுவடியை  தாத்தாவும்  பாகவதரும்   இரவு பகலாக  பாதிக்கு மேல்  படித்து விட்டு மறுநாள் காலை  அடைக்கப்ப செட்டியாரை போய் பார்க்கலாம் என்று தீர்மானித்தார்கள்.  போகும்போது  அவரிடத்திலே ஒரு காப்பு செய்யுளை எழுதிக் கொண்டு போய் காட்டுவோம் என்று தாத்தா  ஒரு  காப்பு செய்யுளை எழுதினார் .
 ”இந்திரனா வலன் பகை ஏற்று மீனாட்சி சுந்தரனா வலன் முதல் சொல் எடுத்து விட்டது வந்திரனா வலன் என்றிருப்பினும் கருங்கந்திரனா வலன் அரன்குள  சடை கூட்டும் காணீரே”
வலன்; வலாசுரன்.  இட்டது; விட்டது.  அலன்: அல்லன்.கந்திரன்: கழுத்தை உடையவன் நாவலன் என்றால் நாவல் மரத்தின் கீழ் இருப்பவன் .
இப்படிப்பட்ட திரிபு வடிவமான இந்த விருத்தத்தை கேட்டதும் அடைக்கப்ப செட்டியாருக்கு ரொம்ப திருப்தி. நூலுக்கு  அவை அடக்கமாக நன்றாக அமைந்துள்ளது. இதை கேட்க மனதிற்கு மெத்த சந்தோஷம் உண்டாகிறது.  இன்றைய தினம் நாள் நன்றாக இருக்கிறது. காப்புச் செய்யுளாக  பாயிரக் கவிகள் ஐந்தாவது செய்து கொண்டு  இன்று மாலை வாருங்கள் பார்க்கலாம்” என்றார் அடைக்கப்பட்ட செட்டியார்.தாத்தா சொல்வது;
”உடனே வீட்டுக்கு வந்து நானும் என் அண்ணாவும் போஜனம் செய்துவிட்டு 3 மணி நேரத்தில் பாயிர கவிகள் 26-யும்  இயற்றி முடித்துக் கொண்டு 5 மணிக்கு அடைக்கப்ப செட்டியார் ஜாகைக்கு போய் சேர்ந்தோம் அப்பொழுது அவர் கையிலே ஒரு தேங்காயை வைத்துக்கொண்டு நின்றார் விநாயகர் காப்பு கொண்டு வந்திருக்கிறீர்கள் எனவே விநாயகருக்கு தேங்காய்  உடைப்போம் என்று  சூறைத்தேங்காய் உடைத்தார்.
 சீர்மேவு கதிரவநம்சம்  அங்குச பாசம் கோடு சேருமாழி  கார்மேவும்  இரு கரனும்  கரும்பாம்பும் அம்புலியும் காட்டிஎன்றும்  ஏர்மேவு உமை மால்  எம் சங்கரனார் வடிவமெல்லாம் ஏற்பரூ வுத்தாள் நார்மீவு குஞ்சரச்   செஞ்சரண மலர் நெஞ்சகத்து நாட்டுவோமே”
சிவ ஆகமத்திலே பஞ்சாயதன பூஜை என்பது ஒரு வழிபாட்டு. இதையே  சிவா தர்மோத்திரத்திலும் காணலாம் ‘ஆதித்யம் அம்பிகாம் விஷ்ணு கணநாதம் மகேஸ்வரம்’  என்ற   இந்த ஐந்தையும் ஒருங்கமைத்து பூஜிப்பது தான் பஞ்சாயதன பூஜை முறை .
மேலே சொன்ன இந்த காப்பு செய்யுளில் விநாயகரே மற்ற நான்கு வடிவங்களுடன் ஒருவகத்தினால் உருவாக அணியால் கூறியது ஈண்டு கவனிக்கத்தக்கது. கதிரவன்: சூரியன். சூரியனுக்கு கதிரும் தாமரையும் உரித்த .து உமை அங்குச பாசம்.  மால்:   கோடும் ஆழியும்:  சங்கு சக்கரம் என்று அர்த்தம்..
நூறு வருஷங்களுக்கு முன்  தாத்தா  எழுதி வைத்தது இப்போது இல்லை  எவரும் பாதுக்காக்க வில்லை.. இப்படி தான் ஒவ்வொரு இல்லத்திலும்   எத்தனையோ அற்புதங்கள் அழிந்து மறைந்து விட்டன.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;