DONT WORRY HE IS THERE. J K SIVAN

கவலை வேண்டாம்.  — நங்கநல்லூர்  J K SIVAN
ஒவ்வொரு கணமும்  யுத்த பயம், அதன் விளைவு  நம்மை  அதிர்வடையச் செய்கிறது.  யார் அமைதியை இப்படி  குலைப்பது?. ஒருவர் மேல் மற்றவர்  கூடை மண்ணை வாரி கொட்டுகிறார்களே? ஏன், எதற்கு?எத்தனையோ  உயிர்கள், பொருள்கள்,  நாசமாகிறதே.. ஏன், யாருக்கு லாபம்?   நாம் ஒவ்வொரு கணமும் ஒற்றுமையாக, ஆனந்தமாக வாழ, அனைத்தையும் பகவான் பரிசளித்த இந்த அழகான பூமியில் , இயற்கைக்கு மாறாக, நாம் ஏன் நாமாகவே  அவஸ்தையை உண்டாக்கிக் கொண்டு அல்லல் படவேண்டும்?  நம்மை சுற்றி ஆபத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்?  இது இதில் கொண்டு விடப்போகிறதோ?.
ஒரு பக்கம் நாம் நமக்கு  ஒரு புதிய அரசைத்  தேடுகிறோம். இன்னும்  8  நாட்களில்  தேர்வு செய்ய போகிறோம்? யாரை ?. இதுவே ஒரு புதிராக  இருக்கிறதே? எல்லோரும் நம்மை ஆள்வதற்கு  போட்டி போடுகிறார்களே?  ஆஹா , நம்ம  சந்தோஷமாக வாழ, சகல நன்மைகளும் பெற்று ஒவ்வொரு வினாடியும் ஆனந்தமாக வாழ்வதற்கு  இத்தனை பேர்  போட்டியிடுகிறார்களா?  ஆனால் இந்த  போட்டியில் ஏன் ஒருவரை ஒருவர்  நாராசமாக, அநாகரீகமாக  வசை பாடுகிறார்கள்? . அவர்கள் ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்வதை பார்க்கும்போது  யாருக்குமே  நம்  மேல்  அக்கறை இல்லையோ?   நம்மை ஆள்வதற்கு  தகுதியில்லாதவர் களோ? என்று அபிப்ராயப் பட வைக்கிறது. எல்லோரும் ஒரு மனதாக  ஒரு நல்ல ஆட்சியாளரை தேர்ந்தெடுக் கும் மனம் யாருக்குமே இல்லையோ? அப்படியென்றால்,  நம்மை ஆள்வதற்கு அவர்கள் ஆசைப்படுவதன் நோக்கம் என்ன?  நமது நலனுக்காக  இல்லையோ? அதை சாக்கிட்டு வேறு எதுவோ?  என்று அல்லவா புலப்படுகிறது? நமது  நலனுக்காக என்றால் எல்லோரும் இனைந்து தகுதி பெற்றவர்களை  நியமிக்கலாமே  எது தடுக்கிறது?  எவர் தடுப்பது?  என்று புரியவில்லையே.
எது எப்படியோ போகட்டும். வருவதை எதிர்கொள்ளடா.. என்று இருப்போம். நடப்பது நடந்தே தீரும். நாம் கடந்து வந்த பாதை அவ்வளவு சுகமானதா?  இனியும் அப்படி தொடர பழகிக் கொள்ள மாட் டோமா என்ன?
நாம் ஒவ்வொருவரும் பிறவி  எடுத்ததன் பலனை அனுபவித்தே தீரவேண்டும். இது வரை எத்னை  பிறவி கடந்ததோ, இனி எவ்வளவு பாக்கி இருக்கிறதோ? எதையும் நாம் அறிந்து கொள்ளாமல் வைத்திருப்பது  பகவானின் காருண்யம்.  நமக்கு நாம் பட்ட துன்பங்கள், இனி படப்போகும் துன்பங்கள் தெரிந்து விட்டால்  டிவியில் நாம்  பட்டி மன்றம் ரசிக்க முடியுமா? சீரியலில் யாரையாவது பார்த்து பல்லைக் கடிக்க முடியுமா? சிரிக்க முடியுமா? 14 வயது சூர்யவன்ஷி சிக்ஸர்களை ரசித்து கை தட்ட மனது இடம் கொடுக்குமா?
நமக்கு ஞானம் கண்டிப்பாக வேண்டும். மனதில் சாந்தி அவசியம். அப்போதும் தான் உள்ளே இருக்கும் பரமாத்மாவை உணர்வோம்.  அவன் நேரம், காலம், இடம்,  நாமம், பேதம்  இல்லாத  அருவமான சம்ரக்ஷகன்..
தில்லை நடராஜனும், ஸ்ரீரங்கநாதனும்  ஒன்றே. மனதில் சாந்தி அளிப்பவர்கள். கால ஸம்ஹார மூர்த்தி என்ற அவன் பெயர்  அவன் காலத்தை வென்றவன் என உணர்த்துகிறதே.
நமக்கும் முக்கண்  உள்ளது.  இரு கண், சிலது கண்ணாடி போட்டுக்கொண்டு கூட,  வெளிப்பார்வைக்கு.  நெற்றியின் மத்தியில்  வெளியே தெரியாத ஒரு கண். அதன் மேல் மனதை செலுத்தி அங்குள்ள  மானசீகமான  முக்கண்ணால் உள்நோக்கி  பயணித்தால் பரமன்  தென்படுவான்.  பிறைச்சந்திரன் குளுமை மோகத்தீயின் வெப்பத்தை அகற்றும். சிரத்தில் கங்கையை நினைத்தால் நமது பாபங்கள் கறைகள் அகன்று உள்ளும் புறமும், பரிசுத்தமாவோம்.
 அவனல்லால் ஓர் அணுவும் அசையாது என்ற  நம்பிக்கை இருந்தால் எல்லாமே  நல்லதாக நடக்கும்.என்னிடம் உன் சுமையை இறக்கு. நான் உன்னையும் உன்னுடைய சுமையும் கூட  என் தோளில்  தாங்கி, உன்னை வழி நடத்துகிறேன் என்று சொன்னவனும் அவனே தானே.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;