
ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN
வெண்ணையா?? நான் பார்க்கவே இல்லையே…
கண்ணனைப் பற்றி ஒவ்வொரு நாளும் வரும் புகார்கள், யசோதைக்கு பெரிய தலைவலி ஆகிவிட்டது. அந்த சிறிய பிருந்தாவன கிராமத்தில் இருப்பதோ சில கோபர்களின் வீடுகள் தான். ஒவ்வொரு வீட்டிலும் நிறைய பசுக்கள், எல்லோருமே பால், தயிர், வெண்ணெய் ,நெய் சேகரித்து அண்டை கிராமங்களில் நகரங்களில் வியாபாரம் செய்பவர்கள். அவர்கள் ஜீவனம் அது தான். ஆனால் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வீட்டில் வெண்ணெய் சட்டியை காணோம், அல்லது சட்டி இருந்தால் அதில் வெண்ணெய் இல்லை. சில வீடுகளில் மேலே உறியில் கட்டி வைத்திருந்தாலும் எந்த மனித பூனையோ அதை எப்படியாவது கீழே தள்ளி அதில் உள்ள வெண்ணையை காலி செய்து, சட்டி காலியாக இருக்கிறது, அல்லது உடைந்து போய் இருக்கிறது… எல்லா கோபியரும் இதற்கு சொல்லும் விடை கண்ணனும் அவன் நண்பர்களும் தான் வீடு புகுந்து வெண்ணெய் திருடுபவர்கள்… அவர்களை கண்டிக்க வேண்டும். அதுவும் கண்ணன் தான் இந்த திருட்டு கும்பலுக்கு தலைவன். அவனை முதலில் அவன் தாய் கட்டுப்பாட்டில் வைத்தால் இனி வெண்ணெய்க்கு கிராமத்தில் ஆபத்து வராது. ஆகவே தான் யசோதை வீட்டை படையெடுத்து கண்ணன் மேல் புகார்கள் வந்து கொண்டிருந்தன. யசோதை கேட்கும்போதெல்லாம், விசாரிக்கும்போதெல்லாம், ”அத்தனையும்பொய் , தனக்கு ஒன்றுமே தெரியாதுஎன்று கிருஷ்ணன் அம்மாவிடம் தான் நிரபராதி என்று நம்பும்படியாக நடிப்பான்” அவளும் எவ்வளவோ கண்டித்து பார்த்தாள் . அவள் பாச்சா அவனிடம் பலிக்கவில்லை. இதோ இன்று நடந்த சமாச்சாரம். இப்போது தான் ஒரு கோபி தனது வீட்டில் வெண்ணை திருடு நடந்ததை விவரித்து விட்டு அழுது கொண்டே போனாள் . யசோதா கண்ணனை பிடித்து எதிரே உட்கார வைத்துக்கொண்டு விசாரிக்கிறாள்.
”கிருஷ்ணா இங்கே வா”’
‘இதோ வரேன் மா” குரல் தான் வந்தது. அவன் வரவில்லை.
”கிருஷ்ணா எவ்வளவு நேரமா உன்னை கூப்பிடுறேன், உடனே வா இங்கே”
யசோதை குரல் உயர்ந்தது. அதில் உஷ்ணம் இருந்தது.
”இதோ வரேன் மா.”
மெதுவாக சாதுவாக கண்ணன் அம்மா எதிரே உட்கார்ந்தான். அவனது களங்கமற்ற முகத்தை, பால் வடியும் முகத்தை, சாந்தமான கண்களை பார்க்கிறாள். இவானா வீடு வீடாக சென்று வெண்ணெய் திருடு பவன்?
”கிருஷ்ணா கோடி வீட்டில் போய் வெண்ணை எடுத்து சாப்பிட்டாயா? சொல்’
‘இல்லையென்று தலை ஆட்டினான். மயில் பீலி , காது குண்டலங்கள் ஆடியது. அவன் இதழோரத்தில் புன்ன கை இழையோடியது.
”உண்மையை சொல்லு கிருஷ்ணா.. பொய் சொல்லாதே”’
‘அம்மா என்னம்மா நீ இப்படி சொல்றே. நான் நம்ம வீட்டிலேயே வெண்ணெய் எடுத்து சாப்பிடுவதில்லை, இன்னொருத்தர் வீட்டில் போய் எதற்கு வெண்ணெய் திருடி சாப்பிடணும்”
”எதிர் கேள்வி கேட்காதே . உண்மையை மறைக்காமல் சொல். வெண்ணெய் திருடினாயா சாப்பிட்டாயா?”’
”இல்லவே இல்லை மா’
அவன் பொய் சொல்வது யசோதைக்கு தெரிந்து விட்டது. அவன் முகத்தை குனித்து உற்று பார்த்தாள் . வெண்ணை வாசனை. கன்னத்தில் ஆங்காங்கே வெண்மையான வெண்ணெய் துளிகள் அவன் நீல கன்னத்தில் அவனை காட்டிக் கொடுத்துவிட்டது’
‘எப்படி உன்மேலே வெண்ணை வாசனை வருது? எப்படி உன் கன்னத்தில் வெண்ணை துளிகள் ஒட்டிக் கொண்டி ருக்கிறது? உண்மையை சொல்கிறாயா இல்லையா?”
”ஐயோ என்னம்மா இது அக்கிரமம்.. நான் வெண்ணை சாப்பிடவே இல்லை. என்னோடு விளையாடும் பையன் கள் வெண்ணை கொண்டுவந்து சாப்பிட்டுவிட்டு எனக்கும் கொடுத்தார்கள்.
” நான் வேண்டவே வேண்டாம்” என்று மறுத்துவிட்டதால் என் கன்னத்தில் கொஞ்சம் அந்த பொல்லாத பையன் கள், என்னைவிட பெரியவர்கள், பூசினார்கள். நான் அழித்தும் அது முழுதாக போகவில்லை.
”வெண்ணைய் சட்டியை மேலே உறியில் இருந்து எடுத்தாயா?”
”ஐயோ அம்மா இது என்ன மறுபடியும் மறுபடியும் என்னையே சந்தேகப்படுகிறாய்” நான் அவ்வளவு உயரமானவனா? நான் எப்படி மேலே கட்டியிருக்கும் உறியில் இருக்கும் வெண்ணை சட்டியை தொட முடியும்?’
‘ சொல்லும்போதே அவன் சிறு கைகள் கன்னத்தில் எஞ்சியிருந்த வெண்ணை துளிகளை நாசூக்காக துடைத்ததை கவனித்தாள் யசோதை.
அவனைப்பற்றி அவளுக்கு மட்டுமல்ல ஊருக்கே தெரியுமே!
எவ்வளவு சாமர்த்தியம் இந்த சின்ன வயதிலேயே!மலங்க மலங்க அவன் விழித்ததை கண்கொட்டாமல் வெகு நேரம் பார்த்துக் கொண்டே இருந்தாள் . அவனும் அவளை உள்ளும் புறமுமாக ரசித்தான்.
அவள் கொடுத்து வைத்தவள்..
அவனை அப்படியே ஆற அமர தழுவிக் கொண்டாள்.
கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது. இந்த விஷமம் எல்லோருக்கும் ஊரில் பிடித்திருந்தது. வெண்ணையை அவன் திருடுவதை அவர்கள் நஷ்டமாக கருதவில்லை.
விஷமமாக தான் ரசித்தார்கள் என்றும் புரிந்தது.
ஆஹா கண்ணற்ற ஸூர்தாஸ் எப்படி இந்த காட்சியை கண்டு வர்ணிக்கிறார்!!
”मैया मोरी, मैं नहीं माखन खायो।
ख्याल परे ये सखा सब मिलि, मोरे मुख लपटायो॥
देखि तुही सींके पर भाजन, ऊँचे धरि लटकायो।
हौं जु कहत नान्हें कर अपने, मैं कैसे करि पायो॥
मुख दधि पोंछि बुद्धि इक कीन्ही, दोना पीठ दुरायो।
डारि साँटि मुसुकाइ जसोदा, स्यामहि कंठ लगायो॥
Maiyā morī, main nahīn mākhan khāyo
Khyāl pare ye sakhā sab mili, more mukh lapaṭāyo
Dekhi tuhī sīṅke par bhājan, ūñche dhari laṭkāyo
Haun ju kahat nānhe kar apne, main kaise kari pāyo
Mukh dadhi ponchhi buddhi ik kīnhī, donā pīṭh durāyo
Ḍāri sāṇṭi musukāi Yasodā, Syāmhi kanṭh lagāyo
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

