
”ஈரேழு புவனங்கள் படைத்தவனை..” – நங்கநல்லூர் J K SIVAN
மூவுலகங்கள் என்று சொல்கிறோம். ஈரேழு பதினான்கு உலகங்கள் என்று சொல்கிறோம். அவை இருக்கிறதா? என்னென்ன? எங்கே இருக்கின்றன. யார் அங்கே வாழ்கிறார்கள்? விஞ்ஞானம் அது பற்றி என்ன சொல்கிறது?
ஒரு கேள்வியை உரக்க கேட்கிறேன்.
”இந்த மூன்று உலகத்துக்கும் அதிபதி’, மூவுலகங்களும் நடுங்கியது, கிடுகிடுத்தது. நாரதர் திரிலோக சஞ்சாரி” என்றெல்லாம் படிக்கிறோம், கேட்கிறோமே, அந்த மூன்று லோகங்கள் எது?
அதே சமயம் அநேக வேத மந்திரங்களில், உபநிஷதங் களில் ஈரேழு பதினான்கு உலகங்கள் என்றும் வருகி றதே? மேலே சொன்ன மூன்றும் அந்த பதினான்கு உலகங்களில் சேர்ந்தவையா? அந்த பதினான்கு உலகங் கள் எங்கே இருக்கிறது? இதெல்லாம் என்றாவது ஒருநாள் சிந்திக்கிறோமா? ஏன் இல்லை?
சரி, முதலில் ஒரு உலகத்தை எடுத்துக் கொள்வோம். அது நாம் இப்போது வாழும் உலகம். இதை பூமி, பூலோகம் என்கிறோம். மீதி ரெண்டு? தினமும் நாம் சொல்லும் காயத்ரி மந்திரம், உபநிஷத் மந்த்ரங்கள் சொல்கிறது;
ॐ भूर्भुवः स्वः …. Om Bhūr Bhuvaḥ Svaḥ.. ஓம் பூர் புவஃ ஸ்வஃ
மூன்று லோகங்கள் பேர் வருகிறதல்லவா?
Bhūr (பூ) → பூலோகம் (Earth) இது நாம் வாழும் உலகம். ரொம்ப ரொம்ப முக்கியமானது. கர்ம பூமி. நாம் கர்மாக்களை நிறைவேற்ற முடியும்.
மற்ற லோகங்களை ஸயன்ஸ், விஞ்ஞானம் கண்டு பிடிக்க முடியவில்லை, கண்ணுக்கு தெரியாததை இல்லை என்பது நமது வழக்கம். பழக்கம். கண்ணுக்கு தெரியாதது இல்லைஎன்றாகாது. காற்று, மணம் , ஒளி ஆகாசம்நீர் எனும் பஞ்ச பூதங்கள் நிறமற்றவை, உருவ மற்றவை எதை சார்ந்திருக்கிறதோ அந்த உருவம், நிறம், தான் கண்ணுக்குத்தெரியும். அவை இல்லையா?
மேலும் ரமண மஹரிஷி போன்றவர்கள் இந்த உலகமே மாயை, இல்லாதது. மனதால் உருவாவது என்கிறார் களே. அப்படியென்றால் மற்ற பதின்மூன்றும் கூட அப்படி தானே. எல்லாம் மனதில் உருவானதை ரிஷிகள் , மஹான்கள், துணிவார்கள் தவசிகள் அறிவார்கள். நாம் தியானம், தவம், தபஸ் அறியாதவர்கள் என்பதால் நமக்குத் தெரிய, அறிய வழியில்லை. ஆகவே தான் ரிஷிகள் சொன்ன மந்திரங்களை ஏற்கிறோம். பதினான்
கு லோகங்களை அறிகிறோம். நம்புகிறோம்.
பதினான்கு லோகங்கள் என்ன என்பதை ஸமஸ்க்ரித ஸ்லோகம் சொல்கிறது;
भूर्लोकः भुवर्लोकः स्वर्लोकः महर्लोकः जनर्लोकः । तपोलोकः सत्यलोकश्च अधोलोकाः प्रकीर्तिताः ॥
अतलः वितलः सुतलः तलातलः महातलः । रसातलः पातालश्च लोकाः सप्ताधः स्मृताः ॥
Bhūrlokaḥ Bhuvarlokaḥ Svarlokaḥ Maharlokaḥ Janarlokaḥ, Tapolokaḥ Satyalokaś ca adholokāḥ prakīrtitāḥ
Atalaḥ Vitalaḥ Sutalaḥ Talātalaḥ Mahātalaḥ Rasātalaḥ Pātālaś ca lokāḥ saptādhaḥ smṛtāḥ
பூர்லோகஃ புவர்லோகஃ ஸ்வர்லோகஃ மஹர்லோகஃ ஜனர்லோகஃ தபோலோகஃ சத்யலோகஶ்ச அதோலோகாஃ ப்ரகீர்திதாஃ
அதலஃ விதலஃ சுதலஃ தலாதலஃ மகாதலஃ ரஸாதலஃ பாதாளஶ்ச லோகாஃ ஸப்தாதஃ ஸ்ம்ருதாஃ
மேலே சொன்ன ஸ்லோகங்கள் சொல்லும் லோகங்கள்.
பூலோகம், புவர் லோகம், , ஸ்வர்க லோகம், , மஹர்
லோகம், , ஜனலோகம், , தபோலோகம், , சத்யலோகம்.
மேல் தட்டில் அடியில் முதலில் இருப்பது நமது பூலோகம், மேலே மற்ற ஆறு லோகங்கள்.
பூலோகத்தட்டுக்கு கீழே இருக்கும் 7 லோகங்கள்;
அதல, விதல, சுதல, தலாதல, மகாதல, ரஸாதல, பாதாள லோகங்கள். நாம் SANDWICH மாதிரி நட்ட நடுவிலே உள்ள லோகம்.
தைத்ரிய உபநிஷத் இதை மீண்டும் சொல்கிறது; भूर्भुवः सुवरिति वा एतास्तिस्रो व्याहृतयः, Bhūr Bhuvaḥ Suvar iti vā etās tisro vyāhṛtayaḥ, பூர் புவஃ ஸுவரிதி வா ஏதாஸ் திஸ்ரோ வ்யாஹ்ருதயஃ
அதாவது “பூர், புவ, ஸுவர் — இவை மூன்று உலகங்
களை குறிக்கும் புனித உச்சரிப்புகள். காயத்ரி மந்திரம் சொல்வதை தான் மீண்டும் குறிப்பிடுகிறது. உபநிஷத் களும் இதை தான் குறிப்பிடுகிறது.
புவர்லோகம் (Bhuvarloka) – ஆகாயம் / இடைநிலை (பித்ருக்கள் உள்ள உலகம் )
ஸ்வர்கலோகம் (Svargaloka) – தேவர்களின் உலகம், இந்திரன் வாழும் இந்திர லோகம்.
சத்யலோகம் (Brahma Loka) – பிரம்மா வாழும் உலகம்.
தபோலோகம் – கடுமையாக தவம் புரியும் தவசிகள் வாழும் உலகம்.
ஜனலோகம் – முனிவர்கள், யோகிகள், மஹான்கள் வாழும் லோகம்.
மஹர்லோகம் – தியானத்தில் திளைக்கும் மஹரிஷிகள் வாழும் உலகம்.
ஸ்வர்கலோகம் – தேவர்கள் (இந்திரன்)
நமக்கு கீழே உள்ள உலகங்கள் லிஸ்ட்;
அதல,விதல,சுதல,தலாதல,மகாதல,ரஸாதல,பாதாளம்
இவை அசுரர்கள், நாகர்கள் போன்றவர்கள் வாழும் உலகங்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.
பதினான்கு லோகங்களுமே மனதால் அறிபவை, ஆத்ம ஞானத்தால் உணரப்படுபவை. அறிவுநிலை என்று சொல்லலாம். ஆன்மீக அலைகளின் வரிசையாக, உலகங்களாக வெளிப்படுத்தப்படுபவை.
இந்த பதினான்கில் நாம் எல்லோரும் இருக்க விரும்புவது ஸ்வர்க லோகம். மனதளவில் மிக உயர்ந்த ஞான ஆத்மானுபவ நிலை.
நாம் செய்யும் கொடிய பாபங்களால் கர்மவினையால் அடைவது பாதாளம் தாழ்ந்த ஆத்ம அனுபவ நிலை
மிக உன்னத கருவிகளை வைத்துக்கொண்டு கோட்டு போட்டுக்கொண்டு AC ரூமில் நிறைய படித்த விஞ்ஞா
னிகளால் இதெல்லாம் கண்டுபிடிக்க முடியாது. ஆத்மாவுக்குஅங்கே அனுபவம் இல்லையே.
அவர்கள் சொல்வது Multiverse Theory – பல பிரபஞ்சங்கள் இருக்கலாம் Dimensions (String Theory) – 3D க்கு மேல் பரிமாணங்கள் இருக்கலாம் Energy levels / frequency – வேறு நிலைகள் இதற்கெல்லாம் வழ வழா, கொழ கொழா, விளக்கங்கள் கொடுக்கலாம். புரிந்து கொள்ள தலை சுற்றும். ஆத்மா இதை ஏற்காது. ஆகவே விஞ்
ஞான பரிமாணங்கள் மூலம் பதினான்கு லோகங்களை அடையாளம் காணமுடியாது.
ஆதி சங்கரர் போன்ற ஆத்ம ஞானிகள் இவை வெளியில் நமது ஊனக்கண்ணுக்குத் தெரியாதவை, ஆத்மானுபவம் எனும் உள்ளுணர்வு தான் இதை காட்டும் என்கிறார்கள். எழுதி வைத்திருக்கிறார்கள். உபநிஷதங்களும் உயர்ந்த காயத்ரி மந்திரங்களும் சொல்கிறது. இவற்றை உதாசீனப்படுத்த கூடாது, புறக்கணிப்பது தவறு. நமது அஞ்ஞானம் இதை பொய்யாக்காது .
சுலபமாக புரிந்து கொள்ள சில உதாரணங்கள் கொடுக்கிறேன்; கோபம் → பாதாள லோகம்.
சந்தோஷம் → ஸ்வர்க லோகம். ஞானம் → சத்யலோகம். ஆத்மானுபவம் தான் ப்ரம்ம ஞானம் கொடுக்கும்.
தபஸ் என்பது நமது ஆன்மீக சக்தியின் சேமிப்பு. ஜனலோகம் என்பதை சனகாதி முனிவர்கள் வாழும் உலகம் என புரிந்து கொள்ளலாம். அதாவது ஆத்ம, ப்ரம்ம ஞானம் பெற்றவர்கள் வகுப்பு.
மஹர்லோகம் மஹரிஷிகள், பிருகு போன்றவர்கள் உபதேசிக்கும் லோகம். பிரளயத்தின் பொதுஇவர்கள் மேலே உள்ள லோகங்களுக்கு செல்வார்கள். ஸ்வர்கலோகம் எனும் இந்திர லோகத்தில் தான் தேவர்களும் கந்தர்வர்கள், கின்னரர்கள், அப்ஸரஸ்கள் வாழ்வதாக படிக்கிறோம். நல்ல கர்மா செய்தவர்களுக்கு கிடைக்கும் போனஸ் இந்த உலகத்தில் வாழ்வது என ஏற்றுக்கொள்வோம். இது resort மாதிரி, நல்ல கர்மாக்களுக்காக கிடைக்கும் அனுபவம். காசு முடிந்ததும் காலி செய்யவேண்டும். நிரந்தரமானது இல்லை.
புவர்லோகம் என்பது நமது முன்னோர்கள், பித்ருக்கள், யக்ஷர்கள் வாழ்வது. நாம் கொடுக்கும் ஸ்ராத்தம் , திதிகள் மூலம் எள்ளும் நீரிலும் வாழ்பவர்கள்.
கீழ் லோகங்கள் சுகமானவை அல்ல. அசுரர்கள், அரக்கர்கள், ராக்ஸர்கள், கொடிய நாகங்கள், வாசம் செய்பவை. விதல உலகம் செல்வம் நிறைந்தது. மறையக்கூடியது. சுதல லோகத்தில் தான் மஹாபலி அரசராக வாழ்கிறார். வருஷம் ஒருமுறை ஓணத்தன்று பூமிக்கு அதிலும் முக்கியமாக கேரளாவில் அவரை வரவேற்கிறோம். அசுரர்களுக்கு ஸ்வர்கம் இந்த லோகம்.
தலாதலம் ; மாயா சூரர்கள் வாழ்வது. இதை நமது தர்க்கம் தொழில் நுட்பம், AI , மந்திர தந்திர சக்தி நிறைந்த கணினிலோகம் எனலாம்.
மகாதலம் நாகர்கள் அதிகம் காணப்படுவது. ரஸாதலம் அசுரர்கள் வாழுமிடம். பாதாளம் ஆதிசேஷன் வாழும் இடம் . ஆபத்தானது அல்ல, அழகானது. அஞ்ஞானம் உருவகம். அதனால் தான் ஆதிசேஷன் விஷ்ணு லோகத்தோடு சம்பந்தப்பட்டவர். கீழே இருந்து மேலே… உலகம் உருண்டை…!!!
ஐயா வாசகரே, முடிக்கும் முன் ஒரு வார்த்தை. இதை ஆதாரமாக கொள்ளவேண்டாம். பால பாடமாக, ஆரம்ப வகுப்பு ஒண்ணாம் க்ளாஸ், அனா , ஆவன்னா வாக எடுத்துக்கொண்டு நீங்களே கொஞ்சம் கொஞ்சமாக உயோசியுங்கள் பல முடிச்சுகளை அவிழுங்கள். உண்மை புலப்பட்டால் எனக்கும் சொல்லுங்கள்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



