
ஐத்ரேய மகரிஷி – நங்கநல்லூர் J K SIVAN
ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முன்பு ஒரு காட்டில் பல ரிஷிகள் ஆங்காங்கே தனியாகவும், தமது பத்தினியோடும் பர்ணசாலைகள் அமைத்துக்கொண்டு காய் கனி இலை வர்க்கங்களை உண்டு கொண்டு அருகே உள்ள ஓடை, ஆறுகள், சிற்றாறுகள், நதிகளில் ஸ்னானம் பண்ணிக்கொண்டு மரங்களடர்ந்த அந்த வனப் பிரதேசங்களில் தியானம், ஜெபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். காடெங்கும் வேத ஒலி எங்கும் எதிரொலிக்கும் காலம்.
அப்படி வாழ்ந்த ரிஷிகளில் ஒருவர் விஷால முனிவர். அவருக்கு பல மனைவிகள். அவர்களில் ஒருவள் இதரா .மற்ற மனைவிகளை விட தாழ்ந்த நிலையில், எளிமையாக இருந்ததால் அவள் மீது அதிக விருப்பம் இல்லை. அவள் மூலம் பிறந்த மஹிதாச ஐத்ரேயன் மேல் அவ்வளவு பாசம் இல்லை (மஹி; பூமி
தாயின் பெயரால் மகன் அழைக்கப்படுவது மரபு. குந்தியின் மகன் அர்ஜுனன் கௌந்தேயன், ஜபலா மகன் ஜாபாலி, ராதையின் மகன் ராதேயன், அது போல் இதரா என்கிற ரிஷி பத்தினி மகன் ஐத்ரேயன். அவர் ரிக்வேதத்தை சேர்ந்தவர்.
விஷால முனிவர் ஒரு பெரிய யாகம் நடத்திய போது மற்ற புத்ரர்களுக்கு மதிப்பு கொடுத்தவர் ஐத்ரேய னை புறக்கணித்தார். தந்தையின் இத்தகைய போக்கு மஹிதாஸ ஐத்ரேயனையும் அவன் தாய் இதராவையும் மனம் நோக செய்தது. இதரா பொறுமையானவள்.பூமாதேவி உபாசகி. தனது இஷ்ட தெய்வத்தை பிரார்த்தித்தாள்.அவள் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து பூமாதேவி ப்ரசன்னமானாள் .”உனக்கென்னம்மா வேண்டும் கேள்?””தாயே, என் மகன் யாராலும், முக்கியமாக பெற்ற தந்தையாலும் கூட மதிக்கப்படவில்லையே.. அவன் முன்னேறவேண்டும். உயரவேண்டும் அம்மா”
பூமி தேவி அருளால் ஐத்ரேயன் ஞானம் பெற்றான், தெய்வீக சிம்மாசனத்தில் அமர்ந்தான். எல்லோராலும் போற்றப்பட்ட மஹரிஷியானார்.. வேதங்களை விளக்கினார் அவரால் நமக்கு கிடைத்தது ஐத்ரேய பிராமணம் , ஐத்ரேய உபநிஷத், மஹாவாக்யம் ”ப்ரஞ்ஞானம் ப்ரம்மம்”
ஐத்ரேய மகரிஷி தவமிருந்து பரமாத்மாவை வணங்கி அற்புதமான ஒரு உபநிஷதத்தை அளித்தார். ஐத்ரேய உபநிஷத். அதில் பிரபஞ்ச சிருஷ்டி, பரமாத்மாவின் மூலம்தோன்றிய உயிரினங்கள், ஞானம், பக்தி எல்லாம் அழகாக சிந்திக்கப்பட்டு எளிமையாக புரிகிறது.ஐத்ரேய உபநிஷதம் மூன்று அத்யாயங்களை. மொத்தமே 33 ஸ்லோகங்கள்.
வேதங்களின் அந்தம் எனப்படும் வேத கோட்பாடுகளின் சாராம்சம் வேதாந்தம் எனப்படும். அப்படி ஒவ்வொரு வேதத்திலும் அவற்றின் சிறப்பு அம்சத்தை அந்தந்த ரிஷி வெளிப்படுத்துவது தான் உபநிஷத். இன்னும் அவற்றை பிழிந்து சாரமாக நான்கு வேதங்களின் சாரமாக நான்கு வாக்கியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உலகில் எங்குமே இல்லாத அற்புத படைப்புகள் அவை. அவற்றை சிறந்த வாக்கியங்கள் , மிக உன்னத, தெய்வீக வாக்கியங்கள் என்று அடையாளம் காட்ட அவை ” மஹா வாக்கியங்கள்” எனப்படும். அவற்றில் ஒன்று இந்த ஐத்ரேய மகரிஷி உருவாக்கிய ஐத்ரேய உபநிஷதத்தின் சாரம். அவற்றை அடுத்த பதிவில் விளக்குகிறேன்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



