SURDAS POEMS J K SIVAN

ஸூர்தாஸ்​ – நங்கநல்லூர் J K SIVAN

உன்​ மேலே​ சத்தியம்…

​உலகத்திலேயே மிகவும் கடினமான ஒரு வேலை எது வென்றால், மூன்றுமுதல் ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது தான். அம்மா டான்ஸ் ஆடவேண்டும், பாடவேண்டும், பழையகாலத்தில் சந்திரனை, நக்ஷத்ரத்தை பிடித்து கையில் தரவேண்டும், கதை சொல்லவேண்டும்..தெருவில், மொட்டை மாடியில் மரத்தடியில் காக்கை, குருவி, கிளி கூட்டம் சேரவேண்டும்….இதில் ஏழை பணக்காரன், ஜாதி, ஆண் பெண் வித்யாசம் எதுவும் கிடையாது. நாமெல்லாரும் இப்படி வளர்ந்தவர்கள் தான். ​அதுவும் கண்ணனைப் ”போல” குழந்தை என்றால் கேட்கவே வேண்டாம். இங்கே நடப்பது ”போல” அல்ல, கண்ணன் படுத்தும் பாடு மட்டுமே. யசோதை திண்டாடுகிறாள். இதில் எத்தனையோ மடங்கு கொஞ்சமாவது நமது அம்மாக்கள் பட்ட அவஸ்தை… ஸூர்தாஸ் நம்மைப் போல் கண்ணுள்ளவர் இல்லை. பிறவிக் குருடு. ஆனால் அவர் மனக்கண் ரொம்ப சக்தி கொண்டது. பிருந்தாவனம், கோகுலத்துக்கே சென்று அங்கே நடப்பதைப் பார்ப்பதோடல்லாமல் நமக்கு விளக்கவும் செய்கிறதே.

​கண்ணன் ஒருநாளாவது அம்மா பக்கத்தில், எதிரில் மடியில் அமர்ந்து தட்டில் சாப்பிட்டவனா? ஹுஹும்.
அம்மா​ யசோதை மடியில் ஆடிக்கொண்டு, அசைந்து கொண்டு, அவள் முடியை பிடித்து இழுத்துக்கொண்டு, புடவையை அவிழ்த்து இழுத்துக் கொண்டு ஓடுபவன் . அவனைத் துரத்தி, ஓடிப் பிடித்து, பொறுமையாக அவனுக்கு கொஞ்சமாவது ஆகாரம் உள்ளே போக வைப்பவன் யசோதை.
​பொறுமையின் பூஷணம் அவள். ஒருவாய்​ ரெண்டு​ வாய்​ சாதம்​ ஊட்டுவதற்குள்​ அவள்​ படும்பாடு… அப்பப்பா.. என்னால்​ சொல்லவோ​ எழுதவோ​ முடியாத​ ஒருகாரியம். பாதி​ உள்ளே​ போகும். பாதி
துப்பி​ விடுவான். ஒவ்வொரு​ வேளையும்​ யசோதை​ புடவை​ யெல்லாம்​ பருப்பு​ சாதம்.​ சாத அபிஷேகம் அவள் மேல்.
எத்தனை​ கதை​ சொல்ல​ வேண்டும். எத்தனை​ மரம், செடி, காக்கை​, குருவி,​சூரியன்​, சந்திரன்​, நக்ஷத்​
ரம்​ எல்லாம்​ காட்ட​ வேண்டும். ஆட​ வேண்டும். பாட​ வேண்டும்.
என்னதோணுமோ? வாயிலிருந்து​ கொஞ்சம்​ சாதத்தை​ எடுத்து​ எதிரே​ அப்பா​ நந்தகோபன்​ வாயில்
போடுவான். எதிரே​ நந்த​ கிராமம்​ கோபியர்​ எவள்​ வாயிலாவது​ கொஞ்சம். ​ எவ்வளவு புண்யம் பண்ணியவர்கள், பாக்கியசாலிகள்! அதில்​ தான் ​ அவனுக்கு​ எத்தனை​ சந்தோஷம். காக்கும்​ கடவுள்​அல்லவா? மற்றவர்​ சாப்பிட்டால்​ அத்தனை​ திருப்தி. கடவுள்​ கொடுத்த​ உணவை​ வாங்கி​ சாப்பிட்டவர்கள்.
ஒரு​ கையில்​ எப்போதும்​ கொஞ்சம்​ வெண்ணை​ இருக்கும். அப்பப்போ​ அதை நக்கி​ விழுங்குவான். ஒரு​சட்டியில்​ கெட்டி​த் தயிர்​ அருகே​ இருக்கும். அதில்​ ஒரு​ கை​ துழாவிக்​ கொண்டிருக்கும்.

இப்படி​ அவனுக்கு பாடிக்கொண்டே​ ஊ​ட்டும்​ போது​ யசோதையின்​ சந்தோஷத்துக்கு​ மூன்று​ உலகைக்
கொடுத்தாலும்​ ஈடாகாது.

​”அந்த​ சந்திரன்​ எனக்கு​ விளையாட​ வேணும்​. அப்போ​ தான்​ சாப்பிடுவேன்” என்பா​ன் .​ ஏதாவது சால்ஜாப்பு சொல்வாள் யசோதை. அதெல்லாம் முடியாது என்று தரையில்​ விழுந்து​ புரளுவான்.
”போ​ உன்​ மடியில்​ உட்கார​ மாட்டேன்” என்று​ கோபிப்பான்.
”கிட்ட​ வராதே, தலை​ வாரி​ பின்னிக்க​ மாட்டேன்”
”நான்​ உனக்கு​ குழந்தே​ இல்லை​. நீ​ வேண்டாம்​ போ”
”அதோ​. அந்த​ அப்பாவுக்கு​ மட்டும்​ தான்​ புள்ளை” என்று​ நந்த​ கோபனை​ கை நீட்டி காட்டுவான்.
”இல்லேடா​,கிருஷ்ணா​, வா​,​ உனக்கு​ ஒரு​ நல்ல​ கதை, ரகசிய​மா சொல்றேன் வா. சாப்பிடு.” என்பாள்​ யசோதை
”என்ன​ ரகசியம்​ இப்பவே சொல்லு?”
”ஒரு​ அழகான​ பொண்ணு​ உனக்கு​ கல்யாணம்​ பண்ணி​ வைக்கப்​ போறேன்”
”சீக்கிரம்​ சாப்பிட்டா​ வா?”
”ஆமாம்​ டா​ கண்ணா”
”சரி​ எனக்கு​ கல்யாணம்​ பிடிக்கும்.
‘அப்படின்னா​ சாப்பிடறியா”
”உன்​ மேலே​ சத்யம்​ ஒழுங்கா​ அப்படின்னா​ சாப்பிடறேன்” என்று​ வாயை​த் திறப்பான்

​ஸூர் தாசரை மிஞ்சிய​ கற்பனா​ சக்தி​ எனக்கு​ இல்லையே!!
​मैया! मोहे चाँद खिलौना दे दे।​ मैं तो लोटूँ धरती पर, तेरी गोद न लेऊँ रे॥​ ना मैं खाऊँ, ना मैं पीऊँ,
ना मैं तेरी चोटी बनवाऊँ॥​ मैं तो बाबुल नंद का बालक,​ तू न कहियो मोहे अपनाऊँ॥​ मुसकाय जसोदा मन ही मन,
कहैं दूँगी तुझे नई दुल्हन॥​
​​खेलत खात गिरावत दधि ​ मैया की गोद में कान्हा​ कुछ मुख में, कुछ धरती डारत, हँसत ब्रज की नारी ॥
कुछ खाय, कुछ नंद मुख देत​ आनंद कहत न आवत ॥ ​जसोदा हरि पालने झुलावे​ हलरावे दुलरावे, लोरी गावै ॥
कबहुँक दूध पियावे, कबहुँक माखन खावै​ कबहुँक अंचल धरि मुख पोंछै ॥

Maiyā! mohe chānd khilona de de Main to loṭūn dhartī par, terī god na leūn re
Nā main khāūn, nā main pīūn Nā main terī choṭī banvāūn
Main to bābul Nand kā bālak Tū na kahiyo mohe apnāūn
Muskāy Yasodā man hī man Kahen dūṅgī tujhe naī dulhan
Maiyā morī, main nahīn mākhan khāyo Khyāl pare ye sakhā sab mili, more mukh lapaṭāyo
Dekhi tuhī sīṅke par bhājan, ūñche dhari laṭkāyo Haun ju kahat nānhe kar apne, main kaise kari pāyo
Mukh dadhi ponchhi buddhi ik kīnhī, donā pīṭh durāyo Ḍāri sāṇṭi musukāi Yasodā, Syāmhi kanṭh lagāyo

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;