​
​”ஆஹா அந்த ஏழு நாட்கள்….!!- நங்கநல்லூர்  J K  SIVAN

கீதை என்றாலே  ஏதோ ஒரு  தயக்கம், தர்மசங்கடம், உடல் நெளிகிறார்களே. ஏன்?  ஒரு தவறான அபிப்ராயத்தால் தான்.  அது தேவர்களுக்கோ, உயர்சாதி என்று ஒருகாலத்தில் சொல்லப்பட்ட  யாருக்கோ எழுதப்பட்டதல்ல, பகவானால் நம் அனைவருக்கும் அருளப்பட்ட அற்புத  உபதேசம்.  ஒரே ஒரு ஸ்லோகம் சொல்கிறேன். பொறுமையாக படியுங்கள். என்மேல் கோபம் வேண்டாம்.
கடைசி அத்யாயம், 66வது ஸ்லோகம், அர்ஜுனனுக்கு  குருக்ஷேத்ரம் எனும் யுத்த பூமியில்  கொடுக்கப்பட்ட  காரண்டீ இது.


18.66   सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज ।  अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः ॥
Sarva-dharmān parityajya mām ekaṁ śaraṇaṁ vraja  Ahaṁ tvāṁ sarva-pāpebhyo mokṣayiṣyāmi mā śucaḥ
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:

”அர்ஜுனா,  தொண்டை, நா வரள  இத்தனை நேரம் நான் உனக்கு சொன்னதை உன் காதில் கேட்டாய், எத்தனை உள்ளே சென்றதோ, மறு  காது வழியாக  குருக்ஷேத்ரத்துக்குள் சென்றதோ தெரியாது., இது ஒன்றையாவது நன்றாக நினைவில் பதிவு செய்து கொள் ;

”எந்த தர்மம், கடமை, நீ மேற்கொள்ள வேண்டுமென்றாலும்  அதெல்லாவற்றையும் தூர  தள்ளிவிட்டு. என்னிடம்  ”கிருஷ்ணா, நீ யே கதி என்று என்னிடம் பூரணமாக சரணடைந்துவிடு, அதாவது உன் மனதை என்னிடம் தந்துவிடு, அதன் பிறகு உன் கடமை, தர்மம், அதன் பயன் எல்லாம் எது உன்னிடம் சேரவேண்டுமோ அதை உன்னிடம்வடிகட்டி தருவது, உன்னைப்   பாதுகாப்பது, உன்னை துன்பம், துயரம் அணுகாமல் பார்த்துக் கொள்வது  என்னுடைய பொறுப்பாக ஆகிவிடுகிறது. உன் பாபங்களிலிருந்து உன்னை விடுவிப்பதுஎன் கடமையாகிறது. அப்புறம் உனக்கு என்னடா கவலை?”

நம்பிக்கை அளிக்கும் சக்தி வாய்ந்த இது மாதிரி இன்னொரு சர்வ வல்லமை, வலிமை  பொருந்திய  ஸ்லோகத்தை  நான் பார்க்கவில்லை.

கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு மட்டும் இதை உபதேசிக்கவில்லை. அவனோடு நமக்கும் சேர்த்து தான் இந்த காரண்டீ.
பஞ்ச பாண்டவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். கிருஷ்ணன் வாயினால் இதை நேரே கேட்டு அவனை கெட்டியாக பிடித்துக்கொண்டு மோக்ஷம் அடைந்தவர்கள்.
அர்ஜுனன் மகன் அபிமன்யு போரில் இளம் வயதில் பரிதாபமாக துரோகிகளால் கொல்லப்பட்டான். அவன் மகன்  தான்  பரீக்ஷித் மஹாராஜா,   ரிஷியின் சாபம் காரணமாக  இன்னும் ஏழு நாளில் தக்ஷன் எனும் கொடிய நாக விஷத்தால் மரணம் நிச்சயம் என முன்கூட்டியே தெரிந்தவன்.

பரீக்ஷித் யோசித்தான். தாத்தாக்களோ அப்பாவோ இல்லை. சுகரை எப்படியோ வரவழைத்து பாண்டவ சரிதம், பாரதம், பாகவதம் எல்லாவற்றையும் இதுவரை படிக்கவோ தெரிந்து கொள்ளவோ இல்லை. ஆகவே  இனிமேல்  தான் வாழ இன்னும் இருக்கும் ஏழுநாளும் தனக்கு உபதேசிக்க  ஒரு  ”சப்தாஹம்” செய்ய வைத்தான்.

கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளை சுகப்பிரம்ம ரிஷி வாயால் காதார கேட்டான். கிருஷ்ணனை மனதால் அனுபவித்து  கெட்டியாக இருத்திக் கொண்டான்.  மோக்ஷம் அடைந்தான். அவனைப்போலவே நாமும் மோக்ஷம் அடைய வழியும்  காட்டிய  மஹானுபாவன்  பரிக்ஷித்.

கிருஷ்ணன் எனும் நாராயணனை கடைசி காலத்தில் பிடித்துக் கொள்வது தான் ”அந்தே நாராயண ஸ்ம்ரிதி” எனும் நாராயணனை பற்றி ஸ்மரித்தல். இப்போதும் நாம்  சிலருடைய  அந்திம  காலத்தில்  அவர்கள் காதில் விழும்படியாக விஷ்ணு சஹஸ்ரநாமம்,பகவத் கீதை  படிக்கிறோம்.  ஒரு சில நண்பர்கள் குழுவாக
ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக சென்று  அங்குள்ள நோயாளிகளுக்கு இப்படி பாராயணம் செய்ய அனுமதி பெற்று பிரசாதம் அளிக்கிறார்கள்.  நானும் அவர்களோடு ஒரு சில இடங்களுக்கு சென்ற அனுபவம் உண்டு.

கிருஷ்ணன் பாண்டவர்களை மட்டுமா காப்பாற்றியவன். இதே பரிக்ஷித் சிசு வாக உத்தரையின் கர்ப்பத்தில் இருந்தபோது அஸ்வத்தாமன் எய்த பிரம்மாஸ்திரம் அவனைக் கொல்லாமல் தனது சுதர்சன சக்ரத்தால்  தடுத்து உயிர் பிச்சை அளித்தவன் அல்லவா. பரீக்ஷித் இதை அறிந்து தான் நன்றியோடு கடைசி ஏழு நாட்களை கிருஷ்ணனைப்   பற்றி ஸ்மரித்துக்கொண்டு கேட்கிறான். கடைசி காலத்தில் க்ரிஷ்ணனை நினைப்பவன் அதிர்ஷ்டக்காரன்.

மதுரா நகர  ராஜா மாமன் கம்சன் கிருஷ்ணனை எதிரியாக கருதி கெடுதல் செய்தவன். இருந்தும் அவனைக் கொன்றபின் அவனுக்கு மோக்ஷம் அளித்தான் கிருஷ்ணன். ஏன்?

ஒரு  பக்தன் கிருஷ்ணனை எப்போதுமா நினைக்கிறான்? ஆனால்  கிருஷ்ணனின் ஜென்ம  வைரி ,எதிரி கம்சன் இரவு பகல் தூங்காமல் கிருஷ்ணன் எங்கே இருக்கிறான், எப்படி அவனைக் கொள்வது, யாரை அனுப்புவது என்று​ தேர்வு செய்து,  பல​மிக்க  ராக்ஷஸர்களை  கோகுலத்துக்கும் பிரிந்​தாவனத்துக்கும் அனுப்பியவன், கிருஷ்ணனுக்கு முன்னால் பிறந்த குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்றவன், தோல்வி மேல் தோல்வி அடைந்தும் விடாமல் ​  கராய்சியில் தானே அவனைக்  கொல்ல ,கிருஷ்ணனை எப்படி மதுராவுக்கு  வரவழைப்பது என்று திட்டம் போட்டு , கிருஷ்ணன் வருகையோடு தனது மரணத்தையும் வரவழைத்துக் கொண்டவன்.   எனவே​  கம்சன் இரவும் பகலும்,   தான் சாகும் வரை கிருஷ்ணனை யே பற்றி எண்ணியவன்.
நண்பர்களே,  கிருஷ்ணனை நினைப்பவன் ஆஸ்திகனாக இருக்க அவசியமே இல்லை. கிருஷ்ணன் கிடையாது, அவன் கெட்டவன், கல், துரோகி என்று நாள் தோறும் வாய் ஓயாமல் சொல்பவனுக்கும் கூட மோக்ஷம் உண்டு. அதைத்தான் இன்றும் பார்க்கிறோம், கேட்கிறோம்.

रोहिण्यास्तनयः प्रोक्तो रामः सङ्कर्षणस्त्वया ।​ देवक्या गर्भसम्बन्धः कुतो देहान्तरं विना ॥
Rohiṇyās tanayaḥ prokto Rāmaḥ saṅkarṣaṇas tvayā​ Devakyā garbha-sambandhaḥ kuto dehāntaraṁ vinā
ரோஹிண்யாஸ் தனயः ப்ரோக்தோ ராமः சங்கர்ஷணஸ்த்வயா​ தேவக்யா கர்ப சம்பந்தः குதோ தேஹாந்தரம் வினா

நாராயணன் அவதாரமாகிய கிருஷ்ணன் அம்சத்தில் நாலு பேர் உண்டு. சங்கர்ஷணன் எனும் பலராமன், அநிருத்தன் எனும் கிருஷ்ணன் பேரன், ப்ரத்யும்னன் எனும் கிருஷ்ணன்-ருக்மிணி மகன், கிருஷ்ணன் ஆகியோர் தான் இது. தேவகி கர்ப்பத்திலிருந்து ரோஹிணி கர்ப்பத்துக்கு மாற்றப்பட்டு நந்தகோபன் அரண்மனையில் வளர்ந்தவன் பலராமன்.
யமுனையின் ஒரு கரையில் மதுரா. அங்கே சிறையில் வசுதேவர் தேவகி மைந்தனாக பிறந்த கிருஷ்ணன் யமுனைஆற்றின் மறுகரையில் கோகுலத்திற்கு, பிறந்தவுடனேயே செல்கிறான். அங்கே நந்தகோபர்-யசோதை மகனாக வளர்கிறான். மதுரா செல்கிறான். கம்சனைக் கொன்றபிறகு தாய் தந்தையரை விடுவித்து ​துவாரகை செல்கிறான்.
 
பரீக்ஷித் நிறைய கேள்விகளை சுகரிடம் கேட்கிறான். ஏன் கிருஷ்ணன் மாமனைக் கொன்றான்? ஏன் கம்சன் சொந்த சகோதரி தேவகியையும், அவள் புருஷன் வசுதேவரையும் சிறை வைத்தான். ஏன் அவர்கள் குழந்தைகளைக் கொன்றான்? ” சுகதேவரைத் துளைக்கிறான் பரீக்ஷித்.

கிருஷ்ணன் நம்மைப்போல நம் கண்ணுக்கு உருவில் தோன்றினாலும் அவன் உருவமற்றவன். சச்சிதானந்த விக்ரஹம் — ஆன்ம ஸ்வரூபம், மனிதன் போல் உரு தேவைப்பட்ட போது அமைத்துக் கொண்டவன்.

”சுகப்பிரம்ம ரிஷியே,எனக்கு க்ரிஷ்ணனைப் பற்றிய சகல விஷயங்களையும் அறிந்த தாங்கள் தான் ஒன்றுவிடாமல் அனைத்தையும் சொல்லவேண்டும்” என்கிறான் பரீக்ஷித்.

”ஏழு நாளே வாழப்போகும் நான் நீர் அருந்துவதை தவிர்த்து விட்டேன். ஆனால் என்ன, சுகப்பிரம்ம ரிஷியே உங்கள் மூலம் அம்ருதமான கிருஷ்ண சரிதம் காதால் பருகுகிறேனே. அது போதுமே. பசியும் தாகமும் என்னை என்ன பண்ணும். பரீக்ஷித் நீரும் பருகுவதில்லை, ஆகாரம் உண்ணுவதையும் கடைசி ஏழுநாட்கள் நிறுத்திவிட்டான். பரிக்ஷித்தின் நிர்ஜல உபவாசம் அவன் உடலைத் தளரச்செய்யவில்லை.

”ஒரு தடவை காட்டில் வேட்டையாட சென்ற எனக்கு பசியும் தாகமும் வாட்ட அருகே இருந்த ஒரு முனிவர் ஆஸ்ரமம் சென்றேன். சமீகர் என்ற ரிஷி அங்கே தவம் செயது கொண்டிருந்தார். குடிக்க ஜலம் கேட்டேன். கண் திறந்து கூட பார்க்கவில்லை. குடிக்க நீர் கொடுக்கவோ என்னை மதித்து பேசவோ இல்லை. நான் செய்த தவறு அருகே இருந்த ஒரு செத்த பாம்பை என் வில் நுனியால் தூக்கி அவர் கழுத்தில் மாலையாக போட்டு விட்டு திரும்பினேன்.

அவர் மகன் ஸ்ரிங்கி பிறகு ஆஸ்ரமம் வந்தவன் இதைக் கண்டு தன் தந்தையை இவ்வாறு அவமானப்
படுத்தியவன் நான் என அறிந்து ஏழு நாளில் நான் கொடிய விஷ நாகம் தக்ஷனால் மரணம் அடைவேன்” என்று சபித்தான். நான் பசியோ தாகமோ இப்போது இல்லாதவன். உலகவாழ்க்கையில் தான் பசியும் தாகமும் துன்பமும் இன்பமும். ஆன்மீக வாழ்வில் இவை எதுவுமே கிடையாது என புரிந்துகொண்டேன்.இப்போது எனக்கு ஆன்மீக தாகம் தான். உலகில் ஒவ்வொரு ஜீவனும் ப்ரம்மம். பரப்ரம்மத்தின் ஒரு அம்சம்.

மாறாத அழியாத உண்மை சத்யம் ஸ்ரீ கிருஷ்ணன் உணர்வு. ஸ்ரீ கிருஷ்ண கதாம்ருதம் ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி வாயினால் கேட்க கொடுத்து வைத்தவன் பரீக்ஷித்.

புலனடக்கம் இன்றி, பொருள் தேடும் உலக வாழ்க்கையில் சிக்கி நரகத்தில் உழல்பவர்கள் கிருஷ்ணனை நினைப்பதில்லை. கனி இருப்ப காய் கவர்ந்தவர்கள். தானாகவோ, பிறர் மூலமாகவோ அறிவு சுடர் விடுமானால், உண்மை புரியும். அதற்கு தக்க காலம் வரும்.(கீதை 7.5.30) அதுவரை அரைத்த மாவையே அரைக்கிறோம். பிறப்பு இறப்பு தொடர்கிறது. நமக்கெல்லாம் ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி வாயினால் ஸ்ரீ கிருஷ்ண கதாம்ருதம் கேட்க வாய்ப்புண்டா?. கிருஷ்ணனை நாமே அறிவோம். படிப்போம்,கேட்போம். சொல்வோம். ஸ்ரீ கிருஷ்ணன் அருளால் அதற்கு எல்லா வசதிகளும் தான் இப்போது இருக்கிறதே.

சுதர் என்னும் மஹரிஷி, பரிக்ஷித்துக்கு சுகப்பிரம்ம ரிஷி சொன்ன க்ரிஷ்ணகர்ணாம்ருதத்தை முழுதும் கேட்டு பரீக்ஷித்தை வாழ்த்துகிறார்.
 
 கலியுகத்தில் பாவம் தீர அதை மற்றவர் அறிய உபதேசிக்கிறார். வைசம்பாயனர் பிறகு பரீக்ஷித் மகன் ஜனமேஜயனுக்கு சொல்லி அதையே வியாச பாரதமாக நாம் அறிகிறோம்.
கலியுக தீமைகளுக்கு துன்பங்களுக்கு ஒரே மருந்து ஸ்ரீ கிருஷ்ண சரிதமும் மந்திரமும் தான்.
கிருஷ்ண பக்தி உலக வாதனைகளை குறைக்கும். சத்தியத்தை உணரவைக்கும். கலியுகத்திற்கு அவசியம் இது தேவை நீங்கள் சொல்லுங்கள் என்று நாரத ரிஷி சொல்லி தானே வேத வியாசர் மஹா பாரதம், ஸ்ரீமத் பாகவதம் சொல்லி இருக்கிறார்.​
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2563

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;