NARASIMMAA J K SIVAN

உங்களுக்கு ஒரு நரசிம்மர் படம் –   நங்கநல்லூர் J K  SIVAN              2026 மார்ச்  7ம் தேதி  சனிக்கிழமை என்பதால்  நாங்கள் சென்ற புனித பயணத்தில் தரிசித்தது கட்டவாக்கம் லக்ஷ்மி  நரசிம்மனைத்தான்.  நங்கநல்லூரிலிருந்து  ஒரகடம் போகும் பாதையில்  ஒரு மணி நேரத்தில்   கட்டவாக்கம் நரசிம்மர் கோவில் அடையலாம்.  அமைதியான  சாந்த நரசிம்மர் ஸ்தலம். அமர்ந்த திருக்கோலம். இடது தொடையில் மஹா லக்ஷ்மி தாயார்.   முகத்தில் கருணை உக்ரம்  ரெண்டுமே கலந்து எப்படி தான் சிற்பி வடித்திருக்கிறாரோ ஆச்சர்யமாக இருக்கிறது.  ஆலய பட்டாச்சாரியார் எனக்கு  நரசிம்மர் படத்தை கொடுத்ததை ஸ்கேன்  scan  பண்ணி உங்கள் எல்லோருக்கும் என் பரிசாக அளிக்கிறேன்.  “பயம் நீக்கும் நரசிம்மர்” . இவரை வணங்கி  பில்லி, சூனியம், திருஷ்டி, கடன், பண நெருக்கடி, குடும்ப சந்திகள், வேலை தடைகள்  போன்றவை நீங்கியவர்கள் பல பக்தர்கள்.
”என்னை மாதிரி கோபப்படாதே. ஒருகாலத்தில் தான் என் கோபம். இப்போது சாந்தஸ்வரூபி. அதுபோல் உன் மனமும்  அமைதியாக  அன்பு பிரகாசிக்க  இருக்கட்டும்” என்று ஆசி வழங்குகிறார்.
நரசிம்மர் என்பது மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நான்காவது. அவர்களின் 4-வது அவதாரம்.மனித உடல் + சிங்க முகம் ஏன்?  காரணம் இது தான்;ஹிரண்யன் கடுந்தவம் இருந்து ஒரு விசித்திரமான வரம் பெற்றான்.” எனக்கு மரணம்  மனிதனாலோ, மிருகத்தலோ, பகலிலோ, இரவிலோ, வீட்டுக்குள்ளோ , வெளியிலோ, மண்ணிலோ, விண்ணிலோ, எந்த ஆயுதத்தாலுமோ நேரக்கூடாது.’
ஹிரண்யன் இந்த வரம் பெற்று மிகுந்த பலம் பெற்று, மூவுலகும் ஆண்டும், விண்ணவரையும் மாணவரையும் வதைத்தான். தானே இறைவன். நாராயணன் இல்லை என்று கொக்கரித்தான். அவன் மகன் ப்ரஹ்லாதன் சிறந்த நாராயண பக்தன். சிறுவன், பெற்ற மகன் என்றும் பாராமல் அவனைக் கொல்ல  பல வழிகளிலும் முயன்ருதோற்றான்.  ப்ரஹ்லாதனின் விஷ்ணு பக்தி அதிகரித்துக் கொண்டே வந்ததே தவிர குறையவில்லை. அவனோடு ஒருநாள் வாக்கு வாதம் அதிகரித்து எங்கே இருக்கிறான் உன் நாராயணன் என்று கேட்க. ”அவன் சாணிலும் உளன், அணுவை சதகூறிட்டால் அதன் ஒவ்வொரு கூரிலும் எங்கும் உள்ளான் என்று கூறவே, எதிரே இருந்த தூணைக்  காட்டி
”இதிலும் உள்ளானா உன் நாராயணனன்?” என்று ஹிரண்யன் கேட்டபோது பகலுமில்லைஇரவுமில்லை. அந்தி நேரம். ”ஆமாம் இந்த தூணிலும் உள்ளான்” ஆத்திரத்தோடு தூணைப்  பிளக்கிறான் ஹிரண்யன். அதிலிருந்து சிங்க முகம், மனித உடலோடு, நாராய ணன் புறப்பட்டு, ஹிரண்யனை அப்படியே தூக்கி மடியில் வைத்துக் கொண்டு, வீட்டிலும் வெளியேயுமில் லாமல்  கை  நகங்களாலேயே அவனை கீறிக் கொன்றார்.
காலை: 6:00 AM – 11:00 AM  மாலை: 5:00 PM – 8:30 PM தரிசனம் பெறலாம்.
+++ஒரு  போனஸ் செய்தி;
திருவதிகை  பண்ருட்டியிலிருந்து 3 கி.மீ. திருவதிகை  பாடல் பெற்ற சிவஸ்தலம். இங்கே சர நாராயண பெருமாள் கோவில் என்று ஒரு புராதன ஆலயம் உள்ளது.  ஒரு அற்புதம் , அதிசயம், நமக்காக, காத்திருக்கிறது. உலகில் எங்கும் காண முடியாத   தெற்கு நோக்கிய சயன கோல  நரசிம்மர் இங்கே இருக்கிறார். பாதத்துக்கு அருகே மகா லக்ஷ்மி தாயார்.
திரிபுரன்  எனும்  அசுரனை வெல்ல சிவன் யுத்தம் செய்தபோது மஹா விஷ்ணு சிவனுக்கு அம்புகளை ஒவ்வொன்றாக கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.  வகராசுரன் என்ற அசுரனை வதம் செய்த பின்நரசிம்மர் சோர்வடைந்து இங்கு படுத்து ஓய்வெடுத்து “சயன நரசிம்மர்” என அழைக்கப்படுகிறா.
திருப்பாவை 23-வது பாசுரத்தில்   “மாரி மலை முழைஞ்சில்  மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம்…”
எனப் போற்றப்படும்  “உறங்கும் சிங்கம்”  இந்த  திருவதிகை சயன நரசிம்மர் எனலாம்.
மூலவர்: சரநாராயண பெருமாள் (நின்ற திருக்கோலம்)
தாயார்: ஹேமாம்புஜவல்லி
சிறப்பு: தனி சன்னதி – சயன நரசிம்மர்
இந்த வடிவம் மிகவும் அரிதானது
தரிசனம் பெற்றால் மன அமைதி, பயம் நீங்குதல், ரக்ஷை கிடைக்கும் என்று நம்பிக்கை
சயன நரசிம்மர் என்ன சொல்கிறார்?
இந்த சின்ன  வைகளை மனப்பாடம் பண்ணி நரசிம்மரை வணங்கலாம்:

‘உக்ரம் வீரம் மகாவிஷ்ணும்  ஜ்வலந்தம் சர்வதோ முகம்   நரசிம்ஹம் பீஷணம் பத்ரம்  ம்ருத்யோர் ம்ருத்யும் நமாம்யஹம்”
”கொடிய. சீற்றம் கொண்ட, வீரமான,  மஹா விஷ்ணு ஸ்வரூப, அக்னி போல்  சிவந்த ஜ்வாலை,  திசைகளிலும் வீசும் ஒளி கொண்ட நரசிம்மரே, பயங்கர தோற்றம் கொண்டாலும் பாதுகாப்பும், மங்களமும் தருபவரே, மரணத்துக்கு மரணம் தருபவரே, உங்களை வணங்குகிறேன்.” வீட்டில் நரசிம்மரை வழிபடலாம். மிகவும் நல்லது. பயம், தீய சக்திகள் நெருங்காது. தைர்யம், பாதுகாப்பு கிடைக்கும். சாந்த  ஸ்வரூபியான லக்ஷ்மி நரசிம்மர்,யோக யோக நரசிம்மர்,சயன நரசிம்மர் படங்களை வைத்து வழிபடுகிறார்கள். கிழக்கு, வடக்கு நோக்கி பீடத்தில் வைத்து வழிபடுகிறார்கள். 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2565

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;