
எங்கே கங்கை ஓடுகிறாள்? நங்கநல்லூர் J K SIVAN ஜிஸ் தேஷ் மே கங்கா பஹதி ஹை?
நமக்கே தெரியும். உலகெங்கும் எத்தனையோ கங்கா என்ற பெயர் கொண்ட பெண்மணிகள் உள்ளனர். கங்கை ஒரு புண்ய நதி. பாரதத்திலும் ராமாயணத்திலும் பங்கேற்பவள் . ஹிமாசலத்தில் கங்கோத்ரியில் அவதரித்து 2500 கி.மீ. தூரம் பாரதம், பங்களாதேஷ் தேசங்களில் பிரவேசித்து வங்காள விரிகுடாவில் கலப்பவள். வாரணாசி, ஹரித்துவார், பிரயாகை, கொல்கத்தா,உஜ்ஜைன், நாசிக் போன்றவை அவளால் மேம்படும் நகரங்கள். கங்கா மாதா ஒரு சாதாரண ஆறோ நதியோ, அல்ல. தெய்வம். பகீரதனால் பூமிக்கு வந்தவள். பரமேஸ்வரன் ஜடாமுடியில் குடிகொண்டவள். வடக்கே பல பிரதேசங்களை செல்வச் செழிப்பாக்கி வளமை தருபவள்.அவள் கரையில் பரிமளிக்க புகழ் பெற்ற புராதன சாம்ராஜ்யங்கள் மகதம்,கோசலம்,,மௌரிய, குப்த வம்சங்கள். பாப நாசினி. கங்கைக்கரை கும்பமேளா உலக ப்ரஸித்தம்.
ஹிந்துக்களின் வாழ்வில், சாவில், கங்கைக்கு பெரும் பங்கு உண்டு. பிறந்தவுடன், புண்யாஹ வசனம் முதல் கல்யாணம், சுப காரியங்கள், விழாக்கள், பூஜைகள், 60, 70, 80, 100 வயது வைபவங்களில் கங்காஜல அபிஷேகம் ஸ்ரேஷ்டமானது. இறந்ததும் சாம்பல் கரைக்க, இறந்தவனுக்கு புண்யம் சேர்க்க, பாபம் அகல கங்கையை தேடுகிறோம்., தெய்வங்களின் போற்றுதல், அதிர்வலைகள் நிறைந்த கங்கை பற்றி சில விவரங்கள்;
ஜூபிடர் எனப்படும் வியாழன், குரு, க்ரஹத்தின் அனுக்ரஹம் பாதிப்பு அதிகம். பரமேஸ்வரனின் அருள் பெற்றவள்.1896ல் M.E. Hankin, ஹான்கின் எனும் ஆங்கிலேயர், கிருமிகள் ஆராய்ச்சிநிபுணர், பல நதி நீர்களை பரிசோதித்தவர், கங்கா ஜலத்தை பரிசோதித்து ‘அட, இது எப்படி கங்கா ஜலம் மட்டும் புனிதத்தில் புனிதமாக இருக்கிறது. ஒரு தோற்று கிருமியை கூட காணோமே” என்று அதிசயித்தார்.
ஹைரல் என்ற பிரான்ஸ் நாட்டு மருத்துவர் பல நோய் கிருமிகளை கங்கா ஜலம் மருந்தாக அழிக்கிறது என்று சொன்னவர்.
1947ல் கோஹிமன் எனும் ஜெர்மன் தண்ணீர் ஆராய்ச்சியாளர் இந்தியா வந்து, வாரணாசியில் கங்கா ஜாலம் சாம்பிள் நிறைய எடுத்துக் கொண்டு போய் பரிசோதித்தார். சோதித்ததில் கங்கை ஜலம் விசேஷமானது. பல வியாதிக்
கிருமிகளை நாம் செய்யும் கிருமி நாசினியாக இருக்கிறது. அதனால் தான் ஹிந்துக்கள் இறந்த உடல்கள் தகனம் செய்தபின் சாம்பலை இங்கே கலக்கிறார்கள். அதனால் இறந்தவர்கள் செய்த பாபங்களும் இறந்து போகிறது. மற்றவர்கள் இங்கே ஸ்னானம் செய்து பாபம், வியாதி ரெண்டையுமே போக்கிக் கொள்கிறார்கள்” என்று எழுதினார். விடாமல் கங்கை ஜலம் பருகுபவர்கள், ஆன்மீக வளர்ச்கை அடைகிறார்கள்.
இப்படிப்பட்ட கங்கையை நாம் அசுத்தம் செய்வதில் வல்லவர்களாக இருக்கிறோம். ஹரித்வார், கங்கோத்ரி முதலே, நமது அசுத்த கைங்கர்யம் தொடர்கிறது. தபாலாபீஸ் களில் கங்காஜலம் விற்கிறார்கள்.
வேப்ப மரம், அரசமரம்,துளசி, வில்வம் போன்றவை அதேபோல் புனிதமானவை. கிருமி நாசினிகள். ஒவ்வொருவர் வாழ்விலும் சம்பந்தப்பட்டவை.காற்றில் எதிர்மறை எண்ணங்கள் கலந்திருந்தால் அவற்றை அகற்றுபவை. பழைய காலத்தில் நடு வீட்டில் முற்றத்தில், வேப்ப மரம், துளசி செடிகள் வளர்த்தார்கள். வீட்டுக்குள் தீய சக்தி நுழையாமல் தடுப்பவை அவை. பிராணவாயுவை தருபவை. ரிஷிகள் முனிவர்கள் வேப்ப , அரசமரத்தடியில் தான் சிஷ்யர்களும் ஞானம் போதித்தார்கள். கங்கை யமுனை, போன்ற நதிகளும், ஆரவல்லி, ஹிமாசலம் போன்ற மலைத்தொடர்களும் அதே போல் ஞானசக்தியை வளர்ப்பவை . இறைத்தன்மை கொண்டவை.
அரசமரத்தடி என்றால் அங்கே பிள்ளையார் நிச்சயம் குடி கொண்டிருப்பார். ஞான விநாயகன் அல்லவா?
சகல திசைகளுக்கும் நாயகன்.
வடக்கே விநாயகனுக்கு ரெண்டு மனைவிகள் ரித்தி, சித்தி, ரெண்டு பிள்ளைகள், சுபம் லாபம். நாம் பிள்ளையார் சுழி போட்டு எதையும எழுத துவங்குவதைப் போல வடக்கே கணக்கெழுதும்போது சுப லாபம் என்று தான் துவங்குவார்கள்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


