
பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு… நங்கநல்லூர் J K SIVAN
சிலர் பிள்ளைக்காக வரம் கிடந்து பெற்றவர்கள். சிலர் ஆசையோடும் பாசத்தோடும், எதிர்கால கனவுகளோ டும் பிள்ளைகளை வளர்க்கிறவர்கள். எல்லோருக்கும் நல்ல பிள்ளைகள் வாய்ப்பதில்லை. சிலர் அல்ல, பல துரதிர்ஷ்ட பெற்றோர்கள் வடிக்கும் கண்ணீர் கதைகள் எழுத்தில் வரைய முடியாதது. நிறைய சம்பவங்கள் பற்றி நாம் கேட்கும் போது நிலை குலைகிறோம். இதயம் வெடிக்கிறது. உங்களுக்கே அநேக நிகழ்வுகள் தெரியும். நான் ரெண்டு மூணு சம்பவங்கள் பற்றி மட்டும் இப்போது சொல்கிறேன்.
இதெல்லாம் முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள் சிலரின் சரித்திரங்கள். அறிந்தபோது உணர்ச்சி வசப்பட்டேன். என்னதான் கஷ்டம் தாம் அனுபவித் தாலும் அநேகமாக எல்லா பெற்றோர்களுமே தமது குடும்பங்களுக்கு, தன்னலம், சுயநலமில்லாமல் செய்யும் காரியங்கள் தியாகம் என்று தான் சொல்லவேண்டும். எவ்வளவு குறைகள் இருந்தாலும் தமது பிள்ளைகளுக்கு எப்போதும் சாபமிடமாட் டார்கள். அதிக பக்ஷம் அவர்கள் நடத்தைக்கு மனம் வருந்துவார்கள். போதும் போதும். அவர்கள் சிந்தும் கண்ணீர், உடைந்த மனம் இதுவே சாபமாகிவிடும்.
பெரும்பான்மையான பெற்றோர்கள் இன்று முதுமையில் ஆறுதல், உதவி இன்றி, தனிமையில் வாடும் அனாதைகள் என்று சொல்லும் அளவுக்கு அவர்களின் நிலை தாழ்ந்துள்ளதை எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே போகும் முதியோர் இல்லங்கள் நிரூபிக்கிறது.
பிள்ளைகளுடன் மனஸ்தாபம், நிராதரவு, பொருளாதார நிலை, பாசமற்ற அடுத்த தலைமுறை இவையே தான் முக்கியமாக முதியோர்களின் துயரங்கள்.
சில உண்மை சம்பவங்களை பெயர் இடம் மாற்றி சொல்கிறேன்.கண்ணீர் என்னோடு சேர்ந்து நீங்களும் விடவேண்டாமா?
79 வயது ராமசந்திர நாய்டு ஊருக்கு ஒதுக்குப்புற முதியோர் இல்லத்தின் வாசலில் கல் மேடையில் அமர்ந் திருக்கிறார். சுள்ளென்று காலை 10மணி வெயிலை லக்ஷியம் பண்ணவில்லை. ஒவ்வொரு ஞாயிறு காலை யும் வாசல் கேட் அருகே இந்த கல்லில் பகல் பன்னி ரண்டு வரை கூட சிலநாள் உட்கார்ந்து வாசலையே பார்த்துக் கொண்டிருப்பார்.நாலு வருஷம் முன்பு “அப்பா நீங்க இந்த இல்லத்தில் கொஞ்ச நாள் இருங்க. நான் ஒவ்வொரு ஞாயிறும் வந்து உங்களை பார்ப்பேன்”என்றவன் முதல் சில ஞாயிறுகளில் வந்தான். பழம் இனிப்பு எல்லாம் கொண்டு வருவான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் குறைந்தது. பையன் மேல் உயிரையே வைத்திருந்த நாய்டு ஒவ்வொரு ஞாயிறும் அவன் வருகைக்காக வாசலில் காத்திருக்கிறார். தோய்த்து வெள்ளையாக ஜிப்பா வேஷ்டி பாக்கெட்டில் முருகன் விபூதியோடு காத்திருக்கிறார்.
ஆரம்பத்தில் கொஞ்ச நாள் வாசல் செக்யூரிட்டி பாலன் ”எதுக்குங்க பெரியவரே வாசலில் வெயிலில் காயறீங்க, உள்ளே போய் இருங்களேன்…” என்று கேட்டபோதெல் லாம் ஒரே பதில்.
“இன்னிக்கு நிச்சயம் பையன் வருவான்பா. அவனுக்கு ஞாபகம் இருக்கும் என்னை பாக்கோணும்னு. அதுக்கா க தான் ஆவலா அவனுக்காக காத்திருக்கேன் பா. ‘
ஐந்தாவது வருஷம் நாலாவது ஞாயிற்றுக்கிழமை பகல் பன்னிரெண்டரை மணிக்கு நாயுடு வாசலில் கல் மேடை யில் அமர்ந்தவாறே மாரடைப்பால் காலமா னார். முதியோர் இல்லம் பையனுக்கு விஷயம் தெரிவித் த போது அப்பாவை அடக்கம் பண்ண அவர்கள் கேட்ட பணம் அனுப்பியதோடு சரி.
ஒரு முதியோர் இல்லத்தில் சாவித்ரி அம்மா மற்றவர் களிடம் பெருமையாக பல வருஷமாக சொல்லிக் கொண்டிருப்பாள்;
”அமெரிக்காவிலே வேலை பண்றான் குப்புசாமி. லீவே குடுக்காமே அவனை சக்கையா முதலாளி பிழிஞ்சா, பாவம் குழந்தை என்ன பண்ணுவான்? எப்படி வரு வான்?”.
ஒரு பழைய கசங்கிய கருப்பு வெளுப்பு போட்டோவில் அவள் பையன் குப்புசாமி 20 வயதில் டிகிரி வாங்கிய கருப்பு ட்ரெஸ்ஸோடு காட்சி அளித்ததை பெருமையாக எல்லாரிடமும் காட்டுவாள். அவள் பையன் வருகைக் காக 8 வருஷம் 9 மாதம் மதம் 21நாளாக காத்திருக் கிறாள். முதியோர் இல்லத்துக்கு பணம் வந்து விடுவ தால் மணியடித்தால் சாப்பாடு போடுகிறார்கள்.
‘நான் இந்தியா வரமுடியாது என்பதை அம்மாவிடம் சொல்லவேண்டாம் என்று நிர்வாகி களிடம் சொல்லி இருந்தான் மகன்.ஆகவே சாவித்ரி அம்மாவிடம் எவரும் அவன் வரமாட்டான் என்று சொல்வதே இல்லை. பையன் சான்பிரான்ஸிஸ்கோவில் இருப்பதாக பள்ளிக் கூடம் போகாத அம்மா எல்லோரிடமும் சொல்லிக் கொண்டி ருந்தாலும் குப்புசாமி சைதாப்பேட்டையில் தான் ஹிந்திக்காரியோடும் மூன்று குழந்தைகளோடும் வசிக்கிறான். அம்மாவை அவன் செங்கல்பட்டில் இல்லத்தில் சேர்த்ததற்கு காரணம் குஸுமாவுக்கு (அவன் மனைவிக்கு) கிழவியை பிடிக்கவில்லை..அவள் வீட்டில் இருக்கக்கூடாது என்று ஆர்டர் போட்டு கிட்டத் தட்ட எட்டு வருஷம் ஆகிவிட்டது. ஆனால் ஒருநாளும் சாவித்ரி அம்மா பையனையோ அவன் மனைவியை யோ ஒரு வார்த்தை குறை சொல்லாம லேயே ஒருநாள் எரிந்து போனாள்.
கமலா மாமிக்கு கணவன் சுப்பராமன் போய் ஆறு வருஷம் ஆகிறது. வண்ணாரப் பேட்டையில் ஒரு வீடு தான் அவள் ஆஸ்தி.சுப்பராமனின் சாம்ராஜ்யத் தில் இருந்த ஒரே சொத்து.
ஒருநாள் பையன் கோதண்டம் “அம்மா இந்த வீட்டை உன் பேரிலிருந்து என் பேருக்கு மாற்றிவிட்டால் என் பேங்க்ல எனக்கு வேலை நிரந்தரமாகிவிடும்” என்ற போது மறு வார்த்தை பேசாமல் யோசிக்காமல் அவனோடு போய் எங்கெல்லாம் அவன் கையெழுத்து கேட்டானோ அதிலெல்லாம் கையெழுத்து போட்டாள் .
ஒரு ஜனவரி திங்கட்கிழமை ரிஜிஸ்தர் ஆபிஸில் நாலு மணி நேரம் நின்றாள்.சுப்பராமன் கட்டிய வீடு கமலா பெயரி லிருந்து கோதண்டம் பேருக்கு மாறியது. அன்று வரும் வழியில் ஒரு ஹோட்டலில் ”இந்தா உனக்கு பிடித்த ரவா தோசை சாப்பிடு ”என்று வாங்கி கொடுத்த வன் அடுத்த நான்காவது மாதம், மே 18ம் தேதி ”அம்மா, எனக்கு அர்ஜண்டா அமெரிக்காவில் சில மாதங்கள் வேலை கொடுத்திருக்கிறார்கள். சீக்கிரம் முடித்துவிட்டு தீபாவளிக்குள் வந்துவிடுவேன்” என்று சொன்ன பையன், அப்புறம் பேசவே இல்லை…
ஆனால் ஜூன் 17ம் தேதி ஒரு முஸ்லீம் குடும்பம் வந்து வீட்டை காலி செய்ய சொன்னபோது அவளுக்கு தலை சுற்றியது. ” நிங்கள் பையன் எம்பளுக்கு இந்த வீடு வித்துட்டான். சாவி கொடுத்துட்டு கூட எதுக்கு நிங்கள்இஞ்சேயே இருக் கீங்க. நாளைக்கு காலை உங்க சாமான் எல்லாம் காலி பண்ணி டனும் . இல்லீன்னா, எம்பள் ஆளுங்க தூக்கி வெளியே கடாசுவாங்க..”
பையன் அமெரிக்கா போகவில்லை. அம்பத்தூரில் தான் இருந்தான். நல்ல விலைக்கு ஒரு வாரம் முன் ஒரு பாய்க்கு வீட்டை வித்துட்டான்..என்று அப்புறம் தான் கமலாவுக்கு தெரிந்தது.
அண்டை அசல் அவள் மேல் பரிதாபப்பட்டு அவளை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தார்கள். அவளிடம் இருக்
கும் சொல்ப நகையை விற்று இல்லத்துக்கு பணம் கட்டினார்கள். கமலா அப்போதும் மகனை விட்டுக் கொடுக்க வில்லை. வீடு போனதை லக்ஷியம் பண்ணவில்லை.
“செவுத்திலே அவன் வருஷா வருஷம் வளர்ந்த போதெ ல் லாம் கோடுபோட்டு அவன் உயரத்தை பென்சிலில் கோடு போட்டு வச்சிருந்ததை அவங்க அழிச்சிட்டா ங்களே என்று தான் அழுதாள்.
இது போல சேதியெல்லாம் இன்னும் சிலது இருக்குது. எதுக்கு ஒரேமுட்டா உங்களை அழவைக்கணும். தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கலாமேன்னு தான் அதை பத்தி எல்லாம் இப்போ சொல்லலே. அதை இன்னொரு நாள் செய்யறேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



