
ஏகாதசி நோன்பு… நங்கநல்லூர் J K SIVAN
இன்று ஏகாதசி. அதைப் பற்றி முழுமையாக எத்தனை பேர் அறிந்துள்ளோம்?
ஏகாதசி மாதத்திற்கு ரெண்டு முறை வரும். அமாவாசைக்குப்பிறகு 11வது நாள். அதேபோல் பௌர்ணமிக்கு பிறகு 11வது நாள். வருஷத்தில் 24 ஏகாதசி. அதிக பக்ஷம் 26 கூட வரும்.
பத்ம புராணம் இந்தநாளில் தான் விஷ்ணுவின் சக்தியாக ஏகாதசி தேவி தோன்றி அவள் மூலமாகத்தான் விஷ்ணு முரன் என்கிற ராக்ஷஸனை வதம் செய்தார் என்று சொல்கிறது. ஆகவே ஏகாதசி பாப நாசினி (பாவங்களை நீக்கும் நாள்) என்று கூறப்படுகிறது.
விஷ்ணு தானே கிருஷ்ணன். அவரும் சொல்லாமல் இருப்பாரா? யுத்தகளத்தில் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும்போது இதைப் பற்றியும் நடுவே சொல்கிறார்;
‘युक्ताहारविहारस्य युक्तचेष्टस्य कर्मसु | युक्तस्वप्नावबोधस्य योगो भवति दु:खहा || CH 6.17||
yuktāhāra-vihārasya yukta-cheṣhṭasya karmasu yukta-svapnāvabodhasya yogo bhavati duḥkha-hā
But those who are temperate in eating and recreation, balanced in work, and regulated in sleep, can mitigate all sorrows by practicing Yog.
யுக்தாஹார விஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு | யுக்தஸ்வப்னாவபோதஸ்ய
யோகோ பவதி து:கஹா ||
அர்ஜுனா, உனக்கு தெரியுமா? ஒரு முக்யமான விஷயம். சொல்கிறேன் கேள்: எவன் உணவு, பழக்கம், வேலைகள், தூக்கம் விழிப்பு, ஆகியவற்றில் குறைந்த, மிதமாக, அளவோடு, கட்டுப்பாடோடு இருக்கிறானோ, அவன் யோகி. பகவானை, ஆத்மாவை, நினைப்பவன். இது அவனது துன்பங்களைப் போக்கி, துயரத்தைக் குறைக்கும். யோகத்துக்கு எதிர்மறை போகம். மூக்கைப்பிடிக்க சாப்பிடுவது.தூங்குவது. போகம் ரோகத்தை (வியாதியை) தான் பரிசாக தரும்.
சுகபோக வாழ்க்கையில் ராஜகுமாரனாக இருந்த கௌதமன் எனும் சித்தார்த்தன், குடி, சாப்பாடு, எல்லாவற்றையும் துறந்து தியானம் செய்த போது உடல் சக்தி இழந்து மயக்கம் வந்து வாடும்போது யாரோ ஒரு காட்டு வாசிப் பெண் பாடிக்கொண்டு போகிறாள்; ”வீணை நாதம் பெற தந்திகம்பியை முடுக்கு. அதிகமாக முடுக்கினால் அறுந்து போகும்” ஆகவே உபவாசம் முழுக்க முழுக்க பட்டினியாக இருந்தால் தற்கொலை. மிதமான ஆகாரம் உள்ளே தேகத்துக்கு தேவை.. அது தான் நமக்கு ஏகாதசியாக உதவுகிறது. அதாவது, உணவில் ஒழுக்கம் இருந்தால் தான் ஸார், மனம் கட்டுப்படும். ஸ்கந்த புராணம் ஏகாதசி விரதம் அனைத்து விரதங்களிலும் உயர்ந்தது என்கிறது.
மனித உடலில் 70% நீர் உள்ளது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கடல் கொந்தளிக்கும். அலைகள் அதிகம் போல,11வது நாள் மன அழுத்தம, அலைகளாக ஆர்ப்பரிக்கும், அதிகமாகும் — நான் சொல்லவில்லை. ஆகமங்கள் சொல்கிறது. அன்று விஷ்ணு வழிபாடு இருந்தால் எவ்வளவு சிறப்பு! பாபமும் நிவர்த்தியாகும். உடல் உள்ளம் ரெண்டுமே நலம்பெறும். அது தான் மோக்ஷம். உபவாசம் ஜீரண அமைப்புக்கு ஓய்வு கொடுத்து ரிலாக்ஸ் RELAX பண்ணிவிடும். குடல் சுத்தமாகும். DETOXICATION , விஷ விஷயங்கள் அகலும்.
ஏகாதசி என்பது சுருக்கமாக சொன்னால் மன கட்டுப்பாடு,ஆன்மீக உயர்வு, உடல் சுத்திகரிப்பு, குடலுக்கு ஒய்வு, கர்ம நிவாரணம் கிடைக்கும். இதைத்தவிர ஒரு போனஸ் கிடைக்கிறது. அதாவது மூளை செயல்பாடு Brain Function, அதிகமாகும். BDNF (Brain Derived Neurotrophic Factor) அதிகரிக்கிறது என்று வெள்ளைக்கார டாக்டர்கள் இங்கிலீஷில் சொல்கிறார்கள். ஏகாதசி விரதம் இரு என்கிறார்களா? தெரியவில்லை. இது நினைவாற்றலை மேம்படுத்தும்.கவனம் அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும்.
நல்லது தானே. ஏகாதசி அன்று வித்யாசமாக, கொஞ்சம் உணவை மறப்போமே ! உடல் எடை, ஆசை எல்லாம் குறையும் என்கிறார்களே.அன்று நிறைய நீர் குடிப்போமே.சாப்பிடும் நேர்மை மிச்சமாவதால் கொஞ்சமாவது அன்று கிருஷ்ணனை நினைக்க டயம் கிடைக்குமே .
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



