
உபநயனம் என்றால் என்ன?- நங்கநல்லூர் J K SIVAN
பிள்ளைக்கோ, பேரனுக்கோ பூணல் போடணும் …பூணல் போடுவது 5, 7, 9 அல்லது 11 வயதுக்குள் பூணல் போடுவதை உபநயனம் என்கிறோம். பையனுக்கு ”வடு ‘ ப்ரம்ம சாரி’ என்று பெயர்.
”உபநயனம்” என்றால் கண்ணுக்கு எதிரே என்று ஒரு அர்த்தம். கொஞ்சம் ஆழமாக யோசித்தால் ”எவர் உன் கண்ணைத் திறந்து எல்லாவற்றையும் புரிந்துகொண்டு பார்க்க செய்கிறாரோ அவர் அருகில் அமர்” என்றும் பொருள் கொள்ளலாம். குருவின் உதவியோடு தான் வேத சாஸ்திரங்களை அறிய இயலும். தக்க வயது வந்ததும் ஒரு ப்ராமண சிறுவனை மாணவனை குருவிடம் அனுப்ப தயார் செய்வது தான் உபநயனம். அவன் வாழ்வில் அது முதல் திருப்பு முனை.
ஒவ்வொருவனும் உலகில் பிறந்ததும் அவனுக்கு 3 நித்ய கர்மா. கடன்கள். ஒன்று ரிஷி கடன். ரெண்டாவது தேவ கடன். மூன்றாவது பித்ரு கடன். அதை செலுத்தி னால் தான் பின்னர் அவனுக்கு மோக்ஷம். ரிஷிகடனுக்கு வேதம் கற்பது, தேவ கடனை நிறைவேற்ற யாக யஞங் களை புரிவது, பித்ரு கடனை தீர்க்க வம்சாவளியாக தொடர்வது. ஹிந்து சனாதன தர்மத்தின் ஆணிவேர் தர்மம். பிரபஞ்சத்தை நிலை நாட்டுவது . மாணவன் முதலில் கற்கவேண்டியது காயத்ரி மந்த்ரம். உபநயனம் அன்று அவனுக்கு ப்ரம்ம உபதேசமாக செய்யப்படும் மந்திரம். அப்பா, குடும்ப வாத்யார், இருவரும் அவனுக்கு உபதேசிப்பது.
“न गायत्र्याः परो मंत्रः (Na Gayatryah Paro Mantraha). மந்திரங் களில் ராணி காயத்ரி மந்திரம். எண்ணற்ற பெண்களுக்கு காயத்ரி என்று பெயர் வைக்கிறோம். முதன் முதலில் விஸ்வாமித்ர ரிஷி காதால் கேட்ட மந்திரம். அதில் தான் பரப்ரம்மா உறைகிறார். உபநயனம் நடைபெறும்போது மாணவனின் தாய் சாவித்திரி தேவி. தந்தை குரு ஆகிறார். அதனால் தான் ஒவ்வொரு பிராமணனுக்கு உபநயனம், பூணல் போடுவது ரெண்டாவது பிறப்பு. அவன் ‘த்விஜன் ‘ஆகிறான்.
காயத்ரி மந்த்ரம் உச்சரிக்கும்போது, தியானம் பண்ணும்போது அவன் மனம் வாக்கு காயம் எல்லாம் புத்துணர்ச்சி பெறுகிறது.
மனம் தான் ஒருவனின் முதல் எதிரி, அதே சமயம் அவன் பெற்ற சக்தி வாய்ந்த ஆயுதம். காயத்ரி மந்த்ரம் மனதை அடக்கி கட்டுப்பாட்டில் வைக்க உதவும் சக்தி வாய்ந்தது.
ராமனைக்கூப்பிட்டு ”உனக்கு நாளை பட்டாபிஷேகம் என தந்தை தசரதன் கூறியபோதோ” அன்றே பிற்பகலில் அவன் சிறிய தாய் கைகேயி கூப்பிட்டு ”உனக்கு பட்டாபிஷேகம் இல்லை, நீ பதினான்கு வருஷம் வனவாசம் செய்ய போகவேண்டும் என்பதுவும் தந்தையின் கட்டளை ” என்றபோது ராமன் ஒரு உணர்ச் சி யும் காட்டவில்லை. வசிஷ்டரிடம் யோகம் பயின் றவன். காயத்ரி மந்திரம் தியானம் செய்பவன் என்பதால் ”மனம் வாக்கு காயம் ” என மூன்றுமே புனிதமாக கொண்டவன். புலன்களை வென்றவன் ராமன்.
ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि; तन्नो रुद्रः प्रचोदयात्॥ Om! Tatpurushaya Vidmahe, Mahadevaya Dhimahi, tanno Rudra Prachodayath. காயத்ரி மந்த்ரம்; ” भूर्भुवः स्वः । तत्स॑वि॒तुर्वरेण्यं॒ भर्गो॑ दे॒वस्य॑धीमहि । धियो॒ यो नः॑ प्रचो॒दया॑त् ॥ Om! Bhur-Bhuvah-Suvaha, Tat-savitur-varenyam, Bhargo-Devasya dhimahi; Dhiyoyo-na Prachodayaat.
இது தான் காயத்ரி மந்த்ரம். ”சூர்ய தேவா, பிரபஞ் சத்தை படைத்த பிரம்மத்தின் அருளை பெற்றுத்தா. என் மனது ப்ரம்ம ஞானம் பெற அருள்வாயாக’
ஓம் எனும் ப்ரணவ மந்த்ரம் சர்வ சக்தி படைத்தது. சகல பாபங்களையும் அழிப்பது. ”தத் ஸவிதுர் வரேண்யம் ” என்பது ரிக் வேதத்திலிருந்து வந்த மந்த்ரம். ” பர்கோ தேவஸ்ய தீமஹி” என்பது யஜுர் வேத மந்த்ரம். ”தியோ யோன ப்ரசோதயாத்” என்பது சாமவேத மந்திரம். மூன்று சேர்ந்தது காயத்ரி மந்த்ரம். தினமும் மூன்று வேளையும் பண்ண வேண்டிய ஜபம்.
சூர்ய உதயம் முன், சூர்யா அஸ்தமன சமயம், உச்சி வேளையில். மனத்தின் இருளை அகற்றி நேர்மறை சக்தி அளிக்கும் ஜபம்.இந்த மந்திரம் ஆரம்பிக்கும் நாள் தான் உபநயனம்.
உபநயன சடங்குகள்;
முதல் நாள்; உதக சாந்தி; (போதாயன ரிஷி துவக்கி வைத்தது). பூர்வாங்கம் என்று பெயரில் அவனை சுத்தப்படுத்திக் கொள்வது. கணேச பூஜையோடு ஆரம்பிப்பது. பூஜா உபகரணங்களை உபயோகித்து வழிபட பகவான், பெற்றோர் முன்னர் ஆசி பெறுவது. கலசங்களில் 131 பஞ்சாதி மந்த்ரங்கள் சொல்லி வருண ரூப ஜலத்தில் மந்த்ர சக்தியை பிரயோகித்து உபநயனத்தின் போது அந்த மந்த்ர ஜலத்தை அபிஷேகம் செய்விப்பது.
நாந்தி ச்ராத்தம், அங்குரார்ப்பணம், பிரதி சர பந்தனம் என்ற சடங்குகளை வாத்தியார் பண்ணி வைக்கிறார்.
நாந்தி ச்ராத்தம் – மற்ற திதி ச்ராத்தம் போல் அல்ல இது. சோபன ச்ராத்தம். ஹோமம் கிடையாது. எள் கிடையாது. மங்களாக்ஷதை மட்டும். கோலம் போடுவது சுப கார்யம் என்பதால். பித்ருக்களை வணங்கி திருப் திப் படுத்தி அடுத்த தலைமுறை, அவர்களது ஆசியைப் பெறுவது.
அங்குரார்ப்பணம் போது சுமங்கலிகள் நவதானிய பாலிகை தெளிப்பார்கள். இது வம்ச வ்ருத்திக்காக.
பிரதி சர பந்தனம் என்பது காப்பு. சிறுவன் கையில் ரக்ஷை கட்டுவது. உபநயனம் ஒரு இடையூறும் இன்றி சுபமாக நடைபெற வேண்டிக் கொண்டு அணிவது.
பூணல் போட்டுக்கொள்ளும் உபநயனம் அன்று
சொவ்ளம் – கொஞ்சமாக முன் தலையில் க்ஷவரம் செய்விப்பது.யக்னோபவீதம் – மந்திரம் சொல்லி பூ நூல் அணிவிப்பது. இந்த நூலை அணிந்த பிறகு தான் அந்த ப்ரம்மச்சாரிக்கு யஞம் பண்ண அதிகாரம் கிடைக்கிறது.
குமார போஜனம்; பிரம்மச்சாரி, உபநயனம் செய்யப் படாத மற்றொரு பையனோடு சேர்ந்து உணவருந்துதல். அதில் உப்பு குறைவு. லவணாவர்ஜ்யம், ‘Lavanavarjyam, என அதற்கு பெயர். பொங்கல் வடாம் எல்லாம் அதனா ல் இருக்காது.
திக் வபனம் -Digvapanam – ப்ரம்மச்சாரியின் அப்பா வடுவின் தலை மேல் 3 தர்ப்பைகளை வைத்து நான்கு திசைகளிலும் பிரார்த்தனை செய்தபின் அவனது புது வாழ்க்கை பயணம் அவர்கள் அருளால் தொடர வேண்டுவது.அப்பா அவன் சிகையிலிருந்துஒரு துளி கத்திரிக்கோலால் துண்டிப்பார். சிகையை மொட்டையடிப்பது தவறு. அது காணிக்கையாக வேண்டிக்கொண்டு ஆலயங்களில் செய்வது. இது வபனம்.இது சிகை.
ஸ்னானம் ஆன பிறகு வடுவுக்கு பட்டு வேஷ்டி கட்டி, தங்க சங்கிலி அணிவிப்பார்கள். விபூதி, சந்தனம், குங்குமம் நெற்றியில் திகழும். அத்தை போன்ற பெரிய பெண்டிர்கள் அவனுக்கு மையிட்டு, கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைப்பார்கள்.
அக்னி முகாண்டம்: Agnimukhantam: அக்னி பிரதிஷ்டை பண்ணி ஹோமாக்னி வளர்ப்பார்கள். வடு மந்திரங்கள் சொல்லி சமித்துகளை அக்னியில் நெய்யோடு அர்ப்ப ணிப் பான். ஒரு கல் மேல் அவனை நிற்க வைப்பது அவன் மனம் வாக்கு காயம் மூன்றிலும் கல்போல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக. காற்றிலும் மழையிலும், வெயிலிலும் கலங்காமல் குருகுல வாசம் முடிக்க அருள் வேண்டுவது.
வஸ்த்ரதாரணம் – Vastradharanam இதற்கு முன் வஸ்தி ரம் வேஷ்டி அணியாத பையன் இனி வஸ்திரம் அணிகிறான். பல தேவதைகளால் உருவாவது பருத்தி வஸ்திரம். அவர்கள் அருள் கிடைக்கட்டும்.
மு ஞ்சி; தர்பை புல்லால் ஆனது. மேகலா; Mekhala (मेखला) . துணியை உருட்டி சுற்றி பெல்ட் மாதிரி அணிவ து
ஆஜினம்: புள்ளிமான் தோல். வேதங்களின் அம்சம் மான். பிரம்மச்சாரி வேதங்களை நன்றாக கற்க அவை அருள்வதற்காக பூணலில் ஆஜினம் கட்டுவார்கள். யோகிகள், முனிவர்கள், ரிஷிகள் மான் தோல் மீது அமர்ந்து தான் தியானம் ஜபம் செய்வார்கள்.
உபநயன ஹோமம் – பையனை குருவிடம் கற்க அனுப்புவதற்கு முன் அவன் அப்பா, வடுவின் கையைப் பிடித்துக் கொண்டு இந்திரன், யமன், ம்ரித்யு, சரஸ்வதி, அக்னி, சவிதா , ப்ரித்வி, சோமன், வருணன், ஓஷதிகள் அனைவரையும் வேண்டி அவனுக்கு தீர்க்காயுள் பெற வேண்டுவார்.
குருபூஜா; வடு அப்பாவை கும்பிட்டு ”எனக்கு காயத்ரி மந்திரம் சொல்லித்தா” என கேட்பான்.
ப்ராம்மோபதேசம் ; அப்பா வாத்யாரோடு, வடுவோடு ஒரு பட்டு வஸ்திரத்துக்குள் அவன் வலது காதில் காயத்ரி மந்த்ரம் உபதேசிப்பார். வாத்யார் தான் ப்ரம்மா. அப்பா குரு.பையன் கையில் பலாச இலை குச்சியோடு குருகுலம் கிளம்புவான்.
சமிதாதானம் – Samidadhanam –புண்யம் சேர்த்து எதிர்காலத்தில் சுபிக்ஷமாக வாழ சமித்து குச்சி கட்டைகளை அக்னியில் வடு போடுவான்.
பிரம்மோபதேசம் ஆனவுடன் பையன் இனி ‘ ப்ரம்ம சாரி” கல்யாணம் ஆகுவரை.
பிக்ஷை Bhiksha – பிரம்மச்சாரி தான் யார், தன் குலம் , கோத்ரம், தந்தை, ரிஷி, ஆகியோரை அறிவித்துக் கொள்ளும் மந்திரம் அபிவாதயே, இதை சொல்லி தான் பெரியோரை நமஸ்காரம் பண்ணுவான். பிக்ஷை வாங்கி தான் அவன் உண்ணவேண்டும்.
ஆசீர்வாதம் ஆரத்தி ஆகியவை உபநயனத்தில் கடைசி காட்சிகள் பெரியோர்கள் அவனை வாழ்த்தி பரிசளிப்பார்கள். மத்தியானம் மாத்யான்ஹிகம் எனும் காயத்ரி மந்திரம் சொல்லி பிறகு தான் உண்பான்.
சகபோஜனம் SahaBhojana (सहभोजन) – எல்லோருக்கும் விருந்துடன் உபநயன சடங்கு முடிவு பெறும்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


