

ஆதி யோகி – நங்கநல்லூர் J K SIVAN
கோயம்புத்தூரில் ஆதி யோகி என்று பெரிய சிவபெருமான் முகத்தை தரிசிக்கும் பாக்யம் கிடைத்தது. என்னை அழைத்து சென்ற நண்பர் என்னை நிற்க வைத்து ஒரு போட்டோ எடுத்தார்.
நம் எல்லோருக்குமே கடவுள் என்றால் தெரியும். அதாவது அவர் இருக்கிறார் என்று பலரும் கடவுள் என்று ஒரு ஆளே கிடையாது, வெறும் கப்ஸா, என்று சிலரும் சொல்வதும் தெரியும். அது அவரவர் கருத்து சுதந்திரம். எவரும் தலையிடமுடியாது.
சரி, நாம் கடவுள் உள்ளார், ”கட உள்” என்ற பெயரிலிருந்து அவர் நமக்கு ‘உள்ளே கிடைக் கிறார், கிடக்கிறார்” என்று நம்புபவர்கள். யார் அந்த கடவுள்? எங்கே எப்போதிலிருந்து அறியப்பட்டவர்? இந்த கேள்விக்கு பல வித மதங்கள், மக்களிடமிருந்து ருசிகரமான தகவல்கள் பல நூற்றாண்டுகளாக நம்மிடையே உள்ளது. எத்தனையோ பிரதேசங்கள், சமவெளி நாகரீகங்கள் எத்தனையோ விதமான கடவுள்களை வணங்கி தொழுது நம்பிக்கையோடு வாழ்ந்ததை, இன்றுவரை வாழ்வதை சரித்திரம் சொல்கிறது.
பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்பு சுமேரியர்கள், மெசபொடோமியாவில் ”அனு ” என்ற தெய்வத்தை ஆகாய ரூப கடவுளாக, தந்தையாக, ராஜாவாக, வணங்கியவர்கள். நமது வாயு பகவான் போல் அவர்களுக்கு என்லில் என்று ஒரு தெய்வம். இருப்பதற்குள்ளேயே அனு தான் ரொம்ப பழைய கடவுளோ? எகிப்தில் ”அதும்” என்று ஒரு கடவுள். நமது ப்ரம்மா மாதிரி சிருஷ்டி கர்த்தா. இன்னொரு பழைய கடவுள் ”ரா”.நமது பழைய கடவுள் பரம சிவன். ஆதி பகவன், ஆதி தேவன், மஹா தேவன், என்ற பெயர் கொண்டவர். வள்ளுவரும் ‘ஆதி பகவன்’ முதற்றே உலகு என்று தான் திருக்குறளை ஆரம்பிக்கிறார். சிந்து வெளி நாகரீக ஆராய்ச்சி பரமேஸ்வரனை சிவனை ஸ்வயம் புவாக முழுமுதற் கடவுளாக காட்டுகிறது. பிரபஞ்ச சிருஷ்டிக்கு முன்பே இருந்தவர் பரமேஸ் வரன். ஆதி அந்தமில்லாமல் காலத்திற்கெல் லாம் முற்பட்டதால் அவருக்கு ‘மஹா காலன் ” என்று ஒரு நாமம்.லிங்க ரூபத்தில் வழிபடப்படுபவர். ரிக் வேதம் இவரை ”நம சிவாய ” என்கிறது.
சம்ஹார மூர்த்தி என்று சிவனுக்கு பெயர். ஜடாதாரி, ருத்ராக்ஷம், நாகம் அணிபவர். பிறைச்சந்திரனை யம், கங்கையையும் சிரத்தில் சூடியவர். புலித்தோல் ஆடை, விபூதி பூச்சு, நெற்றிக்கண் கொண்ட திரிசூல தாரி, ரிஷப வாஹனர் என்று தான் நம் அறிவோம். ருத்ரன் என்று வேதங்கள் சொல்வது இவரைத்தான். கைலாச வாசி. உடுக்கை அடித்து இடதுகால் தூக்கி நடனமாடு பவர். சிவனை லிங்க வடிவத்தில் தெய்வமாக வழிபடுப வர்கள் சைவர்கள்..சைவமதம் சார்ந்தவர்கள்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




