
ஜென்ம லக்ஷியம் – நங்கநல்லூர் J K SIVAN
ரொம்ப காலமாக எல்லோரும் கேட்கும் கேள்வியை இன்று ஞாபகப்படுத்துகிறேன்.
எதற்கு நல்லவர்களையே துன்பம், சோதனை தொடர்ந்து தாக்குகிறது?. கெட்டவர்கள் சுகமாக ஒரு குறையும், குறைவும் இன்றி ஆனந்தமாக வாழ்கிறார்களே கடவுளுக்கு கண்ணில்லையா? . இது நியாயமா? தர்மமா? புராணங்கள் சரித்திரங்களைப் படித்தால் எத்தனையோ நல்ல சாது பக்தர்கள் அநேக கஷ்டங்களை அனுபவித்ததையும் , கெட்டவர்கள் ஒரு தடங்கலும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்ததும் அறிகிறோம்.
ஏன் இப்படி கடவுள் பாரபக்ஷத்தோடு, இதயத்தில் அன்பில்லாமல் நடந்து கொள்கிறார்?
பீஷ்மர் குருக்ஷேத்திர யுத்தகளத்தில் ரத்த வெள்ளத்தில் அம்பு படுக்கையில் கிடக்கிறார். அழுகை வருகிறது? ஏனப்பா அழுகிறாய் என்று ஒரு குரல் கேட்டது. பீஷ்மன் சொன்னார்;
”பாண்டவர்கள் தர்மங்கள், நியாயவாதிகள், பகவானே அவர்களோடு இருந்தும் அநேக கஷ்டங்களை அனுபவித் தார்கள். துஷ்டர்கள், கெட்டவர்கள் உலகத்தி ல் சுகமாக வாழ்வது போல் தோன்றினாலும் அவர்கள் துன்பத்தி லிருந்து விடுபடவில்லை. கஷ்டத் தை அனுபவிக்கா மல் இல்லை. காரணம் அங்கே மனதில் அமைதி இல்லை, கருணை, இரக்கம் பக்தி இல்லை. என்னதான் கஷ்டம் அனுபவித்தாலும் நல்லவன், பக்தன் மனதில் இறைவன் அமைதி ஸ்வரூபமாக இருக்கிறான். மனதில் நியாயம், தர்மம் எண்ணம் நிறைத்திருந்தால் அதுவே சுகத்தின் அடையாளம். உடம்பு கஷ்டப்படுவதால் தப்பாக எடை போடக்கூடாது.”
அவரவர் கர்ம வினைக்கேற்பவே அவரவர் வாழ்க்கை அமைகிறது. வாழ்க்கை என்பது தண்டனை அனுப விக்க கொடுக்கப்பட்டதல்ல.அதே போல் சுகமாக இருப்பதற்கும் படைக்கப்படவில்லை. பிரபஞ்சம் எவரையும் தண்டிப்பதுமல்ல, சுகப்படுத்துவதுமல்ல. செய்வினை பயன் ஒன்றே வாழ்க்கையை நிர்ணயிக் கிறது. ஒரு நல்ல வன், இரக்கம் , கருணை கொண்டவன் உடல் அவனுக்கு உதவாமல் இருக்கிறது. கெட்டவனுக்கு அவன் நினைக்கும் காரியங்கள் இடையூறு இன்றி உள்ளமும் உடலும் ஒத்துழைத்து நிறைவேறுகிறது. நல்லவனாக இருப்பது கட்டாயமோ நிர்பந்தமோ இல்லை. மனதின் தன்மை. . மனதில் நல்ல எண்ணத் தை ,நடத்தையை விதைத்தால் சுகம் சந்தோஷம் தானாகவே மலரும்.
கெட்ட நடத்தை, குணம் எண்ணம் அற்ப சுகத்தை, நிரந்தரமில்லாத இன்பம் மட்டுமே தரும் . அது வெறும் மாயை.. சுயநலம், அநியாயம், அநீதி, மனசாட்சிக்கு விரோதமான செயல் எண்ணம். தவறு, தப்பு எதற்கும் அஞ்சாமல், காரியம் புரிபவர்கள் சாஸ்வத இன்பத்தை என்றும் அடைய முடியாது. அவர்கள் சுகமாக இருப்பதாக தோன்றினாலும், உள்ளூர ஒரு பயம், சஞ்சலம், சந்தேகம், பொறாமை அவர்களை வாட்டி வதைப்பது மற்றவர்களுக்கு தெரியாது.
நல்லவர்கள் ஏழ்மையில் இருந்தாலும், தளராத குணம் கொண்டு பிறருக்கு சேவை செய்பவர்கள். இதயத்தில் அன்பு கொண்டவர்கள். வாழ்க்கை எடுத்த காரணமே படைத்த அந்த பகவானை மறக்காமல் தொழுது, பணிந்து, அவன் அம்சமான பிறருக்கு நம்மாலான உதவி, சேவைகளை கைங்கர்யங்களை புரிந்து அவன் ஆசியோடு பிறவிப்பயன் காரணமாக அவனையே கடைசியில் அடைதல். எங்கிருந்து வந்தோமோ அங்கே யே செல்வது. அவனுக்கு நம்மை எப்படி உபயோகித்துக் கொள்ளவேண்டும் என்பது நன்றாகவே தெரியும். அவன ருளால் தான் அவன் தாளை வணங்க முடியும்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




